Novel Discussion

Rosei Kajan

Administrator
Staff member
#1
செந்தூரத்தின் அங்கத்தவர்களுக்கு அன்பு வணக்கங்கள் !

நீங்கள் ரசித்து வாசிக்கும் கதைகள் தொடர்பான விவாதங்களுக்கு இப்பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கதையைப் பற்றிய விமர்சனத்தில், எழுத்தாளர்கள் பற்றிய விமர்சிப்புகளைத் தவிர்த்துக் கொள்வதும் மனத்தைக் காயப்படுத்தும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் செந்தூரத்தின் அன்புக்கு கட்டளை!


உங்கள் ரிவ்யூக்களை கீழே யுள்ள திரியில் பகிரலாம் .

 
#2
yazhvenba's ongoing novel "engiya natkal nooradi" is excellent. chandran and rohini characters are awesome. nan intha storya thirumba thirumba padikiren. enaku intha story romba romba romba pidichiruku. friends neengalum padithuparunga. full review story mudincha piragu.
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
yazhvenba's ongoing novel "engiya natkal nooradi" is excellent. chandran and rohini characters are awesome. nan intha storya thirumba thirumba padikiren. enaku intha story romba romba romba pidichiruku. friends neengalum padithuparunga. full review story mudincha piragu.

கட்டாயம் கதை முடிந்ததும் முழு ரிவியூ போடுங்கோ சித்ரா. உங்கள் மனதைக் கொள்ளை கொண்ட கதையைப் பற்றி அறியக் காத்திருக்கிறோம்.
 
#4
Recently read rosei UVEN, miga miga ganamaana kadhai kalam.cried in the last episode.myuran is an angel to every women. Especially love this site bcoz of eezhathamil.
 

Rosei Kajan

Administrator
Staff member
#5
Recently read rosei UVEN, miga miga ganamaana kadhai kalam.cried in the last episode.myuran is an angel to every women. Especially love this site bcoz of eezhathamil.
மிக்க மகிழ்ச்சி ஜெயா. நன்றி நன்றி
 

Rosei Kajan

Administrator
Staff member
#6
கிறுக்கனாம்...ம்ம்ம்... ஒருவகையில் சரிதான். தான் காணும் கனவுகளுக்குப் பார்த்துப் பார்த்துத் தெரிவு செய்து மிகப் பொருத்தமான வர்ணங்களைச் சேர்த்து, பளபளப்பாக பார்வைக்கு வைத்துப் பார்ப்போரையெல்லாம் தன் கனவுகளோடும் திறமையோடும் கட்டிவைத்துள்ளவன் , அவன் தான் வெற்றிப்பட இயக்குனர் என்று அடையாளப்படுத்தப்படும் விவி என்றழைக்கப்படும் விஜய் வர்மா.
அன்றொருநாள் ஒரு கனவு காண்கிறான். கனவோடு ஒரு உருவையும் பொருத்தியபடியே, அவளுக்கே அவளுக்கு என்று நகர்கின்றது அவன் கனவு.
தன்னில், தன் வெற்றியில் உள்ள நம்பிக்கையா? நான் கேட்டு இல்லை என்று சொல்வாளா ஒருத்தி என்ற மமதையா தெரியவில்லை, தன் கனவுக்கு உருக்கொடுக்க அவள் மறுத்துவிட்டால் என்ற சந்தேகம் எல்லாம் வரவில்லை அவனுக்கு.
அவளைச் சந்திக்கிறான்.
சாதாரணமாக எல்லோருக்கும் வாய்த்துவிடாத வாய்ப்பு உன்னைத் தேடி வருகின்றது பெண்ணே! நான் ரெடி நீ ரெடியா? என்றவனுக்கு, அவள் சொல்லும் பதில்?

நியதி...அவள் ஒரு அழகிய அருவி! மெல்லிய சலசலப்போடு நளினமாக நழுவி ஓடவும் தெரியும்; அதள பாதாளமா என்று தயங்காது சோவென்று கொட்டவும் முடிந்தவள்.
பெற்றோர் இல்லை , தந்தையின் நண்பர் அவர் மகன் ஆதவன், அவள் நண்பன் ஜேமி . இதுதான் இவளது சின்ன உலகம்.
மேற்படிப்புக்கு வெளியூர் செல்லவிருப்பவள் இப்போது கள ஆய்வொன்றில் இணைந்து வேலை செய்தபடியே வாகன ஓட்டுநர் பயிற்சியாளராகவும் இருக்கிறாள்.
இவள், தன் நண்பன் ஜேமிக்காக ஒரு குறும்படத்தில் நடித்துக் கொடுத்திருந்தாள்.
அந்தக் குறும்படம் அவளை நம் நாயகன் விவி பார்வை வட்டத்தில் விழ வைத்துப் புண்ணியம் சேர்த்துக் கொண்டது.
தன் முன்னால் வந்த வாய்ப்பு மிகப் பெரிதென்று தெரிந்தும் மறுத்துவிடுகிறாள் நியதி. விருப்பமில்லை அவ்வளவும் தான் .
அவளுக்காக என்றே எழுதப் பட்ட கதை இனி என்னாகும் ?
என்னென்னவோ ஆகி, ஒரு கட்டத்தில் அந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறாள். அதுவே அவள் வாழ்வில் மறைந்திருந்த பல முடிச்சுக்களை அவிழ்த்து விடுகின்றது .
இதன் மூலமே, தலைசிறந்த வெற்றிப்பட நாயகி மாயா , விக்ரம் என்று பலரின் பார்வை அவள் மீது விழவும் ஏதுவாகின்றது.
இந்த நாட்களில் விவி, நியதி ஒருவர் ஒருவரை விரும்பி ஒரு கட்டத்தில் அதுவும் கேள்விக்குறியாகிறது .

இனி நான் கதை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் .நீங்களே வாசித்து மகிழுங்கள்.

உஷாந்தியின் எழுத்து அத்தனையையும் வாசித்திருக்கிறேன். எனக்கு மிக மிகப் பிடித்த எழுத்துக்கள் சிலதுகளில் அவரதும் ஒன்று. ஒவ்வொரு கதைகளும் எனக்கு அவ்வளவு பிடிக்கும் .
சிலவருடங்களுக்கு முன்னர் வெளிவந்த 'உனக்கெனவே நான் உயிர் கொண்டேன்' வாசிக்கையில் கதை என்பதைக் கடந்து என்னையும் அறியாது ஒரு பெருமை என்னுள் உருவாகும். கூடவே ஆச்சரியமும். இற்றைக்கு 500 ஆண்டுகளுக்குப் பிறகு போய் வாழ்ந்துவிட்டு வரும் உணர்வைத் தரும் அந்தக் கதை.
'இதோ இதோ என் பல்லவி' அடுத்து 'ஆழி அர்ஜுனா' இவையிரண்டும் அடுத்து மிகப் பிடித்தவை ( எல்லாமே பிடிக்கும் என்றாலும் இவை மூன்றும் விசேசம்) .
கலகலப்பாக முறுவலோடு வாசிக்கும் வகையிலான இவர் கதைகளில் 'இதோ இதோ என் பல்லவி', 'ஆழி அர்ஜுனா' கதைகளிரண்டுமே எழுத்தாளரின் சற்றே அழுத்தமான எழுத்தை அறிமுகம் செய்திருந்தன. எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது . (இது நான் வாசிக்கையில் உணர்ந்த உணர்வு.)
அந்தவகையில் ஒரு இடைவெளியின் பின்னர் வெளிவரும் 'நியதி' மேலும் நிமிர்வான எழுத்து நடையில் வசியம் செய்கிறாள். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்போமே, அப்படி இப்படி இல்லை இப்படித்தான் என்று நகர்கின்றது.
லைட்டா எனக்கு 'ஜே'. (உண்மையை உரக்கச் சொல்ல வேணுமோ இல்லையோ!)
நான்வாசித்த அருமையான எழுத்துக்களை எப்படி ரசிக்கிறேனோ, அப்படியே, பார்த்துக் கொஞ்சமாகப் பொறாமையும் படுவேன். 'எப்படிப்பா இப்படியெல்லாம் எழுதுறீங்க? ம்ம்' என்று இந்தக் கதை வாசிக்கையில் அங்க அங்க இந்த உணர்வும் வந்தது .

இனி?
நியதின் மனம் எந்த வகையில் சமாதானம் அடைந்து நாயகனோடு சேரப் போகின்றது?
நியதி, கடைசியில் மின்னாமல் முழங்காமல் வெளியிட்ட உண்மை? அதனோடு தொடர்புபட்டவர்கள் நிலை? நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?


இவ்வார அத்தியாயங்கள் வருமாம்கதையை வாசிக்க ...


நியதி
 
Top