வெறுப்பரசியல் - உஷாந்தி கௌதமன்- இதழ் 8

#1

'ஹேட் ஸ்பீச்' என்பது ஆன்லைன் வாசிகளுக்கு மிகவும் பழக்கமானதொரு பெயரே. மிக மிகப் பிரபலமாக பல்லாயிரம் பின்தொடர்வோரைக் கொண்டிருக்கும் பிரபலங்களும் ஒரு கணநேர வழுக்கலால் தலைகீழாக வாழ்வையே மாற்றிப்போடும் இந்த ஹேட் ஸ்பீச்சுக்குள் விழுந்து விட முடியும்.பெரும்பாலான மனிதர்களின் சாதாரண குணமே அவர்களைத் தவிர மற்றவன் முன்னேறிவிடக்கூடாது என்பதே .ஏதாவது ஒரு வகையில் அவனை மட்டம் தட்டுவதற்குரிய காரணத்தைக் கண்டுபிடித்து, மனதுக்குள் அவனுடன் ஒப்பிடும் போது அந்த ஒரு விடயத்தில் நான் மேல் என்று சொல்லிக்கொள்வான். ஆனால், நேரடியாக அந்த மனிதரைப் புகழ்ந்து நான்காக எட்டாக மடிந்து போவதெல்லாம் நாமே கண்டிருப்போம். இந்த வெறுப்பைச் சுமக்கும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட நபருடன் கருத்து வேறுபாடோ பொறாமையோ, ஈகோ காயப்படலோ நடந்து விடுகிறது. அதன் பிறகு சரியான சமயத்துக்கு காத்திருப்பவர்கள் குழுவாகப் பலர் இணைந்ததும் சம்பந்தப்பட்ட பிரபலத்தை தாக்க ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் இவர்களால் தனியாக வெறுப்பைக்கக்க முடிவதில்லை. கூட்டத்தின் பின்னால் பத்தில் , நூறில், ஆயிரத்தில் ஒன்றாக மட்டுமே பெரும்பாலானவர்களால் நிற்க முடியும். எப்படியாவது சம்பந்தப்பட்ட நபரை பிறருக்கு தோலுரித்துக் காட்டி அவரின் மேல் இருக்கும் பிம்பத்தை கலைத்து விட வேண்டுமென்பதே அவர்களின் வெறியாக இருக்கும்.பேக் ஐடி என்பது இப்படிப்பட்டோரின் ஆகப்பெரும் வரப்பிரசாதம். தங்கள் முகம் தெரியாமல் தங்களுடைய ஆழ்மன வக்கிரங்களை எல்லாம் வெளிப்படுத்தி விட வசதியாக இருக்கிறதே!சமீபத்தில் நான் அதிர்ந்து போன விஷயம் என்னவெனில் ஒரு சகொதரமொழிப்பதிவர் ஒருவர் மிகவும் ஆழமான மற்றும் அதிரடியான கருத்துக்களைத் துணிச்சலாகத் தொடர்ந்து முன்வைத்து வருபவர். அவர் ஓடும் நீரோடு ஓடுபவர் கிடையாது. ஆகவே அவருடைய பக்கத்தில் வன்மமான கமண்ட்டுகள் காணக்கிடைக்கும். உச்சக்கட்டமாக, அன்றைக்கு யாரோ அந்தப்பதிவருடைய 10 வயதைக்கூட தாண்டாத பெண் குழந்தைகளைத் தாங்கள் துஷ்பிரயோகம் செய்தால் மட்டுமே அவருக்குப் புத்தி வரும் என்று ஒரு அரிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதிர்ந்து போனேன். அது பேக் ஐடி தான். ஆனால் அந்த முகமூடிக்கு பின்னால் இருக்கும் வக்கிர மனிதன் எப்படியிருப்பான்? அவன் வெறுமனே மிரட்டுவதற்காக அந்த கமண்டை இட்டான் என்று சொன்னாலும் எதிரியின் குழந்தைகளைக் கூட இவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இந்த வெறுப்பரசியல் எப்படி வளர்ந்து நிற்கிறது?செயலால் துன்புறுத்துவது எப்படித்தவறோ அதே அளவுக்கு வார்த்தைகளால் துன்புறுத்துவதும் தவறானதே. இத்தனைக்கும் அந்த நபர் செய்த ஒரே தவறு இவர்களில் சிலரை விட மாறுபாடான கருத்தைக் கொண்டிருந்ததும் அந்த கருத்துக்களால் அவர் பிரபலமானதும் தான்!எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது நம் உலகம்?சமீபத்தில் நான் கண்ட இன்னொரு உதாரணம் ஐநா நிறுவனம் ஒன்றின் தலைமை அலுவலகம் அவர்களின் அந்த வருடத்துக்கான பேசுபொருளாக பொதுப்போக்குவரத்தில் நடைபெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை எடுத்திருந்தது. அது தொடர்பான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்தவும் பாதிக்கப்பட்ட பெண்களை உடனடியாக வாய் திறந்து உதவி கேட்கும் படி ஊக்குவிக்கவும், கூடப்பயணிக்கும் பயணிகளை பாதிக்கப்பட்டவருக்காய் பேசும்படியும் ஊக்குவிக்க உள்ளூரில் இருந்து தைரியமாய் அது குறித்து பேச முன்வந்த பெண்களிடம் அவர்களின் அனுபவத்தை கேட்டிருந்தார்கள். அதைச் சமூக வலைத்தளத்தில் பகிரும்போது அதில் அந்த பெண் தன்னை பஸ்ஸில் உரசிய ஒருவனைக் கையில் வைத்திருந்த தண்ணீர் போத்தலால் பலமுறை அடித்ததாகவும் வன்முறை தவறென்று தெரிந்தும் தன்னால் அமைதியாக அப்போது செல்லமுடியவில்லை, கூட இருந்தவர்கள் யாரும் உதவவில்லை, இதே போல பிற பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக வாய்திறந்து குரல் கொடுக்க வேண்டும், அம்மாதிரியான துன்புறுத்தல்களைச் சகித்துக்கொண்டு தான் பயணிக்க வேண்டும் என்று எந்த வித அவசியமும் கிடையாது என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதைப் பார்வையிட்டவர்கள் அவர் சம்பந்தப்பட்ட குற்றவாளியை அடித்தது வரை பார்க்கப் பொறுமையின்றி, அவரை, அவரது நடத்தையைக் குறித்து ஏகப்பட்ட பின்னூட்டங்களை இட்டார்கள்; அந்தச் சர்வதேச முகப்புத்தகப்பக்கம் ஆடிப்போகும் வரை.அந்தப்பெண் நடந்ததை ஜாலியாகச் சகித்துக்கொண்டிருந்து விட்டு இப்போது வந்து பேசுவதாகக் கூட ஏகப்பட்ட பின்னூட்டங்கள் இருந்தன. பின்னர் தங்கள் தவறை அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்த பலர் உணர்த்தியதும் அவர்களுக்குத் தங்கள் முன்னர் அந்தப்பெண் குறித்து ஏற்படுத்திய அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளவோ மன்னிப்பு கேட்கவோ குறைந்தபட்சம் அங்கிருந்து விலகிச்செல்லவோ முடியவில்லை. வேறேதோ காரணங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.இதற்குப் பெண்கள் ஆண்களைக் குற்றம் சாட்டுவதை சகித்துக்கொள்ளாத மனோபாவம் கூட காரணமாக இருக்கலாம். சமூகத்தில் இல்லாத அளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆணாதிக்க மனப்பான்மையை பலர் வக்கிரமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிரார்கள்.பெண்ணியம் பேசுகிறோம் என்ற பெயரில் வெறுப்பரசியல் நடத்தும் பெண்களும் இங்கே இல்லாமல் இல்லை. வெறுப்பதும் ஒருவரைக் கூட்டமாகச் சேர்ந்து மட்டம் தட்டுவதும் சண்டையிடுவதும் ஒரு ரகசிய இன்பத்தைத் தருகிறது என்பது உண்மை. அஜித் விஜய் ரசிக சண்டைகளை எல்லாம் அதன் அடிப்படையில் தான் நடத்திக் கொண்டிருக்கின்றோம். நமக்கு ஒவ்வொரு இடத்திலும் ஏதோ ஒரு குழுவைச் சார்ந்தவன் என்ற அடையாளமும் அந்தக் குழுவின் போர்வாள் என்ற அடையாளமும் வேண்டியிருக்கிறது. பெண்ணியம், ஆணாதிக்கம், கலாச்சாரக்காவலர்கள், நடிகர்களின் ரசிகர்கள் என ஏதாவது ஒரு குழுவில் இல்லாத மக்கள் கிடையாது.இவர்கள் ஒரு பக்கமென்றால் இன்னொரு குழு இசையில் மொத்தமாய் மூழ்கிக்கிடக்கும். அவர்கள் கூட இசையமைப்பாளரோ, பாடகரோ, ஏதேனும் மொழி சார்பாகவோ ஒரு குழுவாக இருப்பார்கள். ஒரு சண்டை ஆரம்பித்ததும் நடந்தது என்ன என்று சுடச்சுட வீடியோ போட்டு வியூக்களை அதிகரித்துக்கொள்ளும் யூ டியூப் வர்த்தகர்கள் வேறு இன்னொரு புறம் அதை இன்னும் ஒரு லெவலுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இங்கு எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து கிடக்கிறது. சண்டை ஓய்ந்து சமூகம் இன்னொரு பிரச்சனைக்குக் கத்தி வீச ஆரம்பிக்க, அடுத்த பிரச்சனை ஆரம்பமாகும்.சமூக வலைத்தளங்கள் ஒரு மாய உலகம். கண நேரத்தில் ஒருவரின் வாழ்வை மொத்தமாக அழித்து விடவும் ஒரே கணத்தில் வானளாவ உயர்த்தவும் கூடியது அது. முதிர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஆராய்ந்து பார்க்கும் அறிவும் இருப்பின் மட்டுமே அந்த ஆழிப்பேரலையில் அடித்து செல்லப்படாமல் நம்மை காத்துக்கொள்ள இயலும்.
 
#2

Unmaidan
 
Rosei Kajan

Administrator
Staff member
#3
:D ம்ம் உண்மைதான்
 
Top