குறுநாவல் போட்டி-2019 விதிமுறைகள்

#1


‘செந்தூரம்’ இணையதளம் நடாத்தும் மாபெரும் குறுநாவல் போட்டி- 2019!
முதல் பரிசு 12000 இலங்கை ரூபாய்கள்

இரண்டாம் பரிசு 8000 இலங்கை ரூபாய்கள்

மூன்றாம் பரிசு 4000 இலங்கை ரூபாய்கள்

ஆறுதல் பரிசு தலா 2000 இலங்கை ரூபாய்கள் வீதம் மூன்று பேருக்கு'கற்பனைகள் கொடிகட்டிப் பறக்க, எண்ணங்களை எழுத்தாக்கி உங்கள் திறமையை வெளிப்படுத்த அருமையான சந்தர்ப்பம்!'

அனுப்பவேண்டிய இறுதித் திகதி 15.04.2019


போட்டிக்கான விதிமுறைகள்:

>>காதல், குடும்பம், மர்மம், திகில் என்று எப் பிரிவின் கீழும் எழுதலாம்.

>>கதைகள் 15000 தொடக்கம் 20000 சொற்களுக்குள் இருத்தல் வேண்டும். முழுமையாக அனுப்பப்படவும் வேண்டும்.

>>ஒருவர் அதிகபட்சம் இரண்டு படைப்புகள் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

>>உங்களுடைய சொந்தப்படைப்பாக இருத்தல் வேண்டும். கதை அனுப்பும்போது, உங்கள் சொந்தப் படைப்பு என்றும் , வேறு எங்கும் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தல் வேண்டும். உறுதிப்படுத்தாத படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

>>கதை, Word document இல் unicode எழுத்துருவில் இருத்தல் அவசியம்.

>>உங்களுடைய பெயர், மற்றும் முகவரி ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்!

>>அனுப்பவேண்டிய இறுதித் திகதி: 15 .04.2019

>>அனுப்பவேண்டிய முகவரி: senthuram.emagazine@gmail.com

>>போட்டிமுடிவுகள் sendhuram.com இணையதளத்தில் 15.5.2019 அன்று அறிவிக்கப்படுபடும்.

>>போட்டிக்கு அனுப்பப்பட்ட குறுநாவல்கள், முடிவுகள் வெளியாகும் வரை வேறு எந்த வலைத்தளத்திற்கோ, இணையத்திற்கோ, இதழுக்கோ அல்லது வேறு போட்டிகளுக்கோ அனுப்பக் கூடாது. அப்படி பிரசுரிக்கப்படுமாயின் அவை தகுதி நீக்கம் செய்யப்படும்.

>>போட்டி மூன்று கட்டங்களாக நடைபெறும். முதலில் தகுதியான குறுநாவல்கள் தெரிவுசெய்யப்படும். அதிலிருந்து தரமானவை பிரிக்கப்படும். அவற்றிலிருந்து வெற்றிபெறும் குறுநாவல்கள் தேர்வு செய்யப்படும்.

தகுதி நீக்கம் என்பதன் கீழே, அளவுக்கதிகமான எழுத்துப் பிழைகள், அளவுக்கதிகமாக ஆங்கிலம் கலத்தல், கதையில் தொடர்ச்சியின்மை போன்றவை கருத்தில் < கொள்ளப்படும்.

>>நடுவர்களின் முடிவே இறுதியானது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட மாட்டாது!


>>முதல் கட்டமாகத் தகுதியானவையாகத் தேர்வு செய்யப்படும் குறுநாவல்கள் அத்தனையும், மின்னிதழாக வெளியிடும் உரிமை செந்தூரம் இணையதளத்துக்கு மட்டுமே உண்டு! அத்தோடு, செந்தூரம் இணையதளத்திலும் பதிவிடப்பட்டு, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் வாசித்து உங்கள் திறமைகளை இனங்காண வழிவகுக்கப்படும்!

>>போட்டி முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்தின் பின்பு உங்கள் படைப்புக்களை நீங்கள் புத்தமாகவோ மாத இதழாகவோ வெளியிட்டுக்கு கொள்ளலாம். மின்னிதழ் உரிமை மாத்திரம் செந்தூரத்துக்கு மட்டுமே உண்டு! இதனை போட்டி முடிவுகள் வெளியான பின்பு, மின்னஞ்சல் மூலமாக படைப்புகளை அனுப்பிவைத்த ஒவ்வொருவருக்கும் செந்தூரம் முறையாக அறிவிக்கும்!

மேலதிக விபரங்களோ விளக்கங்களோ தேவை எனில் கீழே உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். தகுந்த விளக்கம் கொடுக்கப்படும்.


நட்புடன் செந்தூரம்
 
Last edited by a moderator:
Top