வாழ்க்கை!

Rosei Kajan

Administrator
Staff member
#1
1542049029347.png
வாழ்க்கை

வாழ்க்கை, சட்டென்று உச்சரிக்கும் இச்சொல் மிக மிக ஆழமானது; பரந்து விரிந்தது; கண்ணைக்கூசச் செய்யும் ஒளியைத் தரவல்லது; அதே, இன்னொருகணம் கும்மிருட்டையும் காட்டிவிடும்!

வழியெங்கும் மெத்தென்ற மலர்களால் ஸ்பரிசிக்கவும் செய்யும்; நறுக்கென்ற கற்களின் கூர்மையும் பதம் பார்த்துவிடும்!

இதமான தென்றாலாக தழுவும் அது, மறுகணம், ஆக்ரோசமான சுழல் காற்றாகவும் மாறிவிடலாம்!

பல பல அற்புத கணங்களின் நுணுக்கமான சேர்கை அது!

அக்கணங்கள் ஒவ்வொன்றும் தரவிருப்பது, காட்டவிருப்பது, உணர்த்திவிடுவது பற்றி எவ்வித நிச்சயமும் அங்கில்லை; பாரபட்சமும் இருப்பதில்லை!

அதற்காக, அச்சொல்லை உச்சரித்து, புறக்கணிக்கும் உரிமையின்றி அவதரிக்கும் எவரும் அவற்றைப் பார்த்துப் பயப்படுவதில்லை.

காரணம், அவன் / அவள் அப்படியொன்றும் சாமான்ய தோற்றம் அல்ல!

நம்பிக்கை எனும் உரமான கயிறு அவன்/அவள் முன்னால், அதுவும் கைக்கெட்டும் தூரத்தில்!

கயிற்றைப் பற்றிக்கொள்ள, முயற்சியெனும் உத்வேகம் போதுமானது; அன்பு, பாசம், தீராத நேசம், சமயத்தில் கோபம், சாதிக்கும் வெறி இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ அற்புத சக்திகள் அவன்/அவள் வசமுண்டு!

அனைத்தும் ஒன்று சேர, மேலும் மேலும் வலுபெற்று, நம்பிக்கையின் கெட்டியான பற்றுதலில், வாழ்வெனும் பாதையில் வீறு நடை போடலாம்!

எதிர்ப்படும் மலர்களின் ஸ்பரிசத்தை ரசித்து, அதன் வாசத்தை நுகர்ந்து, கற்கள் மோதுகையில், சுர்ரென்று குத்துகையில் ஏற்படும் வலியைச் சகித்து, கண்கூசும் ஒளிவெள்ளத்தில் மயங்காது, திடமாக வீறுநடைபோட்டு, எதிர்ப்படும் கும்முருட்டில் முட்டி மோதி, அதற்குப் பழகி, மீண்டும் வழிதேடி….

எல்லை தெரியாத இடத்தை நோக்கிப் பயணப்படுவது என்பதிலும் மிஞ்சுவது அலாதியான சுகமே !


- ரோசி கஜன்
 
Top