வாய்ப்பன் /வாழைப்பழப் பணியாரம் - ரோசி கஜன் -இதழ் 8

#1
வாய்ப்பன் /வாழைப்பழப் பணியாரம் - ரோசி கஜன்அம்மாவோடு இருக்கையில் வாழைப்பழம் கனிந்துவிட்டால் கட்டாயமாக வாய்ப்பன் சாப்பிடக் கிடைக்கும். இப்போதோ, சுவையும் மிருதுவும் வாழப்பழத்தின் வாசனையும் கொண்ட இந்தப் பணியாரத்திற்கு எங்கள் வீட்டில் உள்ள நால்வரும் அடிமைகள் என்றே சொல்லலாம்.இங்கு குளிர் காலத்தில், அதோடு குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகையில் அதாவது 31 திகதி இரவு ஆரம்பித்து நள்ளிரவு பன்னிரண்டுவரை நடக்கும் அனைத்து விருந்துகளிலும் olie bol (அதாவது எண்ணையில் பொரித்த உருண்டை என்ற பொருள் படும்) என்ற ஒரு பணியாரம் இடம் பிடித்திருக்கும். அது நம் வாழைப்பழப் பணியாரத்தின் சகோதர உருப்படி தான். கோதுமை மாவோடு வெவ்வேறு பழக்கலவைகள், காய்ந்த திராட்சை சேர்த்துச் செய்வார்கள்.நம் வாய்ப்பனோடு olie bol உம் எப்படிச் செய்வது என்பதை இந்த இதழில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

வாய்ப்பன்

1550858011063.pngதேவையான பொருட்கள்:கனிந்த வாழைப்பழம் 5

மா (All purpose ) 500/600 கிராம்ஒரு தேக்கரண்டி ஈஸ்ட் ( இதை, வெதுவெதுப்பான சுடு நீரில்...ஒரு 5 தேக்கரண்டி நீரில் போட்டு, கால் தேக்கரண்டி சீனியும் சேர்த்துக் கரைத்து இரு நிமிடங்கள் மூடிவையுங்கள். பொங்கி வந்திருக்கும். (மிக மிக மெல்லிய சூடு இருந்தால் சரி. இல்லையேல் ஈஸ்ட் நொதிக்காது.) )ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் . (ஈஸ்ட் கிடைக்காது என்றால் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் போட்டாலே சரி)தேவையான அளவு வெதுவெதுப்பான பசும் பால் ( இதுவும் மிக மிக மெல்லிய சூடு)100 கிராம் சீனி ( சீனி அதிகம் வேண்டும் என்றால் இதன் அளவை அதிகரிக்கலாம்)

செய்முறை:வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். கட்டிகள் இன்றிப்பிசைந்து எடுக்க வேண்டும். அதனுள் சீனி சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். சீனி கரைந்தால் நல்லது.பின், மா, பேக்கிங் பவுடர் போட்டுப் பிசையுங்கள். இவற்றைப் போட்டுப் பிசையும் போதே ஈஸ்ட் கலவையும் பாலும் சேருங்கள்.பாலின் அளவு நான் சொல்லவில்லை. இந்த மாக்கலவை இளகிய பதத்தில் இருக்க வேண்டும் . உருண்டை பிடிக்கவேண்டிய தேவையெல்லாம் இல்லாததால் கவலையே வேண்டாம். வாழைப்பழத்தின் ஈரலிப்பில் இளகிய பதம் வரவில்லையென்றால் அதற்கு ஏற்ப பசும் பால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1550858069420.png


கையில், சட்டியில் எல்லாம் ஒட்டாமல் இராது. நன்றாகப் பிசைந்து மேலே பொலித்தீன் போட்டு மூடி, குறைந்தது இரு மணித்தியாலங்கள் வெது வெதுப்பான இடத்தில் வையுங்கள். (குளிர்நாட்டில் உள்ளோருக்காக இந்த வெது வெதுப்பான இடம் குறிப்பிட்டுள்ளேன்)இரு மணித்தியாளத்தால் பார்க்கையில் நன்றாக ஊதி வந்திருக்கும் .நன்றாகக் கொதித்த எண்ணையில், நீரில் நனைத்த கையால் மாவை எடுத்து பொத்திக்கொண்டு பெருவிரல் ஆட்டக்காட்டி விரல்களின் இடுக்கால் மாவை எண்ணையில் விடுங்கள். அழகிய வட்டங்களாக அந்த மா எண்ணையில் விழும். விழுந்ததும் மேலே எழும். பிரட்டிவிடுங்கள். பொன்னிறமானதும் இறக்கி எடுத்து ஆறவிட்டுப் பரிமாறுங்கள்.சீனி குறைவாகச் சேர்த்துச் செய்தால் தேவையானவர்கள் பவுடர் சுகர் தூவிச் சாப்பிடலாம்.இது நம் வாய்ப்பன்சுவை சேர்க்க...50 கிராம் தேங்காய்ப். பூ / காய்ந்த தேங்காய்ப்பூ சேர்ப்பேன்; தனிச் சுவை தரும் .பிளம்ஸ் 50 கிராம் . நிச்சயம் ஒரு ரிச்சான சுவை கொடுக்கும்.சிலர் மாவில் அரைவாசி அவித்ததும் அரைவாசி அவிக்காததும் போடுவார்கள் . அதுவும் சுவையாக மென்மையான பணியாரம் தரும்பசும் பாலுக்குப் பதிலாக தேங்காய் பால் பாவிக்கலாம் .இந்தக் கலவைக்குள் இரு முட்டைகள் சேர்த்தும் செய்யலாம் .இனி நெதர்லாந்தில் செய்வதைப் பார்ப்போமா?

1550858105422.png

எல்லாம் நம் வாய்ப்பன் போலத்தான் . இவர்கள் ஈஸ்ட் , பேக்கிங் பவுடர் இரட்டிப்பாகப் பாவிப்பார்கள் . அதாவது, நான் இரு தேக்கரண்டி சொன்னதை இரண்டு என்று ஆக்குங்கள்.அடுத்து வாழைப்பழம் என்பத்துக்குப் பதிலாக வேறு வேறு பழக் கலவைகள் சேர்ப்பார்கள் உதாரணமாக துருவிய ஆப்பிள் .பிளம்ஸ் கட்டாயம் சேர்ப்பார்கள் .சீனி சேர்க்க மாட்டார்கள். பதிலாக, சுட்டு எடுத்த பணியாரத்தின் மீது பவுடர் சுகர் நன்றாகத் தூவி விடுவார்கள். அதில் தொட்டுத்தான் உண்பார்கள் .மிகவும் சுலபமாகச் செய்யலாம் .
 

emilypeter

Active member
#2
Maa yenbathu yenna porul yendru puriya villai ma
 

Rosei Kajan

Administrator
Staff member
#3
Maa yenbathu yenna porul yendru puriya villai ma
கோதுமை மா எமிலி
 
Top