வலி மிகுதல்

NithaniPrabu

Administrator
Staff member
#1
இனி வரும் பகுதிகள் எல்லாமே வலைத்தளம் களஞ்சியத்திலிருந்தும் மகுடேஸ்வரன் அண்ணாவின் வலைப்பதிவில் இருந்தும் நான் கற்பவை.


வலி மிகுதல் என்றால் என்ன ?

'வல்லின மெய்யெழுத்துகள்' இரண்டு சொற்களுக்கு இடையே கூடுதலாக மிகுதியாகி அமர்ந்துகொள்வது.

வல்லின மெய்யெழுத்துகள் எவை?

க்,ச்,ட்,த்,ப்,ற் - ஆகிய ஆறும் வல்லின மெய்யெழுத்துகள் எனப்படும்.

'ட' விலும் 'ற'விழும் சொற்கள் இல்லாமல் இருப்பதால் இந்த இரண்டு எழுத்துகளும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் மிகுவது - மிகாதிருப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

ஆக, நமக்குத் தலைவலி தருபவை இந்த நான்கு எழுத்துகள் மட்டுமே!


அடுத்தகட்டமாக வலிமிகுதல் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பிக்க முதல் அறிந்துகொள்ள வேண்டிய மற்றுமொன்று உள்ளது. அதுதான் 'நிலைமொழி' மற்றும் 'வருமொழி' ஆகிய இரண்டும்.

ஏதாவது இரண்டு சொற்களை வைத்துக்கொண்டுதானே வலி மிகுமா மிகாதா என்று திணறுவோம். அப்படி நம்மைத் திணற வைக்கும் இரண்டு சொற்களில் முதலாவதாக வரும் சொல்லினை நிலைமொழி என்றும் இரண்டாவதாக வரும் சொல்லை வருமொழி என்றும் பயன்படுத்துவர்.

உதாரணம்: மல்லிகைப் பூ
இதிலே, மல்லிகை என்பது முதலாவதாக வருவதால் நிலைமொழி என்றும் பூ இரண்டாவதாக வருவதால் வருமொழி என்றும் சொல்லப்படும்.

இனி வலிமிகும் இடங்களைப் பார்க்கலாம்.

ஒன்று:

இரண்டு பெயர்ச்சொற்கள் வரும்போது, இரண்டாவதாக வரும் சொல் வல்லினமாக இருந்தால் வலி நிச்சயம் மிகும்.

இங்கே இரண்டு விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஒன்று: இரண்டும் பெயர்ச்சொற்களாக இருக்கவேண்டும்.
இரண்டாவது: இரண்டாவதாக வரும் சொல் வல்லினமாக அதாவது க்,ச்,த்,ப் வரிசையில் அமைந்திருக்க வேண்டும்.


அப்படி அமைந்திருப்பின் வலிமிகும்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#2
இரண்டு:

சொற்கூட்டங்களின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள சொல்லை அடுத்து வருவது வல்லினமாக இருந்தால்(க, ச, த, ப வரிசையில் வரும் சொல்லாக இருந்தால்) கட்டாயம் வலிமிகும். இந்த விதியைக் கேள்வியே இல்லாமல் பின்பற்றலாம்.

அ, இ, எ
அந்த, இந்த , எந்த
அங்கு, இங்கு, எங்கு
ஆங்கு, ஈங்கு, யாங்கு
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு, ஈண்டு, யாண்டு
அவ்வகை, இவ்வகை, எவ்வகை
அத்துணை, இத்துணை, எத்துணை
இனி, தனி
அன்றி, இன்றி
மற்ற, மற்றை
நடு, பொது, அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து,


சில உதாரணங்கள்:

“ஓரெழுத்துச் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும்.”

அதாவது முதல் வார்த்தை ஓரெழுத்துச் சொல்லாய் இருந்து, இரண்டாம் வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்தால் இரண்டுக்கும் இடையே க், ச், த், ப் ஆகிய ஒற்று மிகும்.

எடுத்துக்காட்டு:
பூ+பறித்தாள் – பூப்பறித்தாள்
தீ+ பிடித்தது – தீப்பிடித்தது
கை+ குழந்தை – கைக்குழந்தை

------------------------------------------------------------------

”அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய எண்களுக்குப் பின்னல் மட்டும் ஒற்று மிகும்.” மற்ற எண்களுக்கு மிகாது.

அதாவது முதல் வார்த்தை அரை, பாதி, எட்டு , பத்து என்று முடிந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.உதாரணம் : அரைப்பக்கம், பாதித் துணி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, எட்டுக்கட்டுகள், பத்துச்செய்யுள்கள்.


-----------------------------------------------------------------

அ, இ, எ + அந்த, இந்த, எந்த, + அங்கு இங்கு, எங்கு, +அப்படி, இப்படி, எப்படி, +அவ்வகை, இவ்வகை, எவ்வகை, + அத்துணை, இத்துணை, எத்துணை முதலிய சொற்கள் முதல் சொல்லாக இருந்து “க, ச, த, ப” ஆகிய எழுத்துக்கள் கொண்ட சொல் பின்னால் வந்தால் இரண்டுக்கும் இடையே க், ச், த், ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள்:

அக்குடம், இச்செடி, எப்பக்கம்
அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம்
அங்குச் சென்றான், இங்குப் போகாதே, எங்குக் கேட்டாய்
அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய்


ஆக மொத்தத்தில், மேற்குறிப்பிட்ட சொற்கூட்டங்களுக்குப் பின்னால் வல்லினம் வருமாக இருந்தால் வலிமிகும். 
Top