மாரி 2 -உஷாந்தி கௌதமன் -இதழ் 8

#1
1550858238749.png
மாரி 1 அவ்வளவு பெரிய சிறப்பான வெற்றி பெறாவிட்டாலும் அனிருத்தின் இசை, பாடல்கள் , தனுஷ் என பார்க்கும்படி தான் அமைந்திருந்தது.ஆகவே மாரி 2 அறிவித்ததும் கொஞ்சமே கொஞ்சம் எதிர்பார்ப்பு வந்தது உண்மை. காரணம், வழக்கமாக பெரு வெற்றி பெற்ற படங்களுக்குத் தான் பார்ட் 2 எடுப்பார்கள். ஆனால், மாரி முதல் பாகமே. சுமாரான வெற்றி பெற்ற படம் தான் . ஆகவே இதில் என்ன செய்யப்போகிறார்கள்? அதில் விட்டதையும் சேர்த்து பிடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.கூடவே சாய்பல்லவி, யுவன், முன்னரே வெளிவந்து ஹிட் ஆன பாடல்கள் என அதற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் பாகம் 2 வில் அப்படி நடக்கவில்லை. பார்ட் 2 எடுத்தால் மொக்கை தான் என்னும் விதிக்கு அமைய இதுவும் மொக்கையாகவே அமைந்தது.தனுஷ், சாய்பல்லவி வரும் காட்சிகள் புண்பட்ட மனதுக்கு ஆறுதலாக இருந்ததன. கூடவே இசையும். ஆனால், இலக்கற்று அலையும் திரைக்கதையினால் மனதில் பதிய முடியாமல் போய்விட்டது.

உண்மையில் இந்தப் படத்துக்கு பார்ட் 2 வுக்கான லீட் இருக்கவே இல்லை. எதற்காக இதில் இவ்வளவு மினக்கெட்டார்கள் என்று தான் புரியவில்லை.

இதற்கு மேல் இந்தப் படத்தைப் பற்றிப் பேச ஒன்றும் இல்லை. ஆனால், தமிழில் முழுமையான ஹீரோயினாக சாய்பல்லவிக்கு கதவை திறந்து விட்டிருக்கிறது இப்படம் என்றால் உண்மை. அவருக்காக மட்டுமே சகித்துக்கொள்ளலாம் என்று கூட தோன்றியது. நீண்ட காலத்தின் பின் தனுஷுக்குச் சரியான ஒரு ஜோடி. இருவரையும் திரையில் பார்க்க மிக நன்றாக இருந்தது. கூடவே மை டியர் மச்சான் விஷுவல்ஸ் அள்ளுது!


 
Top