பற்றீஸ் - (செந்தூரம் இதழ் 11)

Rosei Kajan

Administrator
Staff member
#1
1570902361193.png


தேவையான பொருட்கள்:

உள்ளே வைக்கும் கறி:

250g உருளைக்கிழங்கு

ஒரு பெரிய வெங்காயம்

3 பல்லு உள்ளி

சிறு துண்டு இஞ்சி

1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

2 தேக்கரண்டி தனி மிளகாய்த் தூள்

1 தேக்கரண்டி மிளகுத்தூள்

1/4 தேக்கரண்டி கடுகு

1/4 சீரகம்

கறிவேப்பிலை சிறிது

300 g tuna (டின் பிஷ். அதனுள் உள்ள நீரை வடித்துவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள் )

தேசிப்புளி ஒரு தேக்கரண்டி

தேவையான அளவு உப்பு

எண்ணெய் ( பொரிப்பதற்கு)


செய்முறை:

ஒரு பானில் ஒரு மேசைக்கரண்டி ஆலிவ் ஓயில் இட்டு(நீங்கள் சமயலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் எதுவென்றாலும் பாவிக்கலாம்) அது சூடானதும் கடுகு சேருங்கள்.

கடுகு வெடித்து வர சீரகம் சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.

வதங்கி வருகையில் சிறிதாக நறுக்கிய உள்ளி, இஞ்சி சேர்த்துக்கொள்ளுங்கள் .(உள்ளி , இஞ்சி பேஸ்ட் ஆக்கினாலும் சரிதான்)

பின் கறிவேப்பிலையும் இட்டு வதங்குங்கள்.

பொன்னிறமானதும் அதனுள் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறி அதனுள் டின் மீனையும், தேவையானளவு உப்பையும் இட்டுக் கிளறி மெல்லிய நெருப்பில் 3 நிமிடங்கள் மூடி வையுங்கள் .

பின் உருளைக் கிழங்கு மசியலை(அவித்து தோலை நீக்கிவிட்டு கையால் உதிர்த்து எடுக்கலாம்) இட்டு நன்றாகக் கலந்துவிட்டு இரு நிமிடங்கள் மெல்லிய நெருப்பில் மூடி வைத்துவிட்டு இறங்கி, அதனுள் மிளகுத்தூளை இட்டுக் கிளறி ஆற விடுங்கள்.

ஆறிய பின்னர் தேசிப்புளி கலந்து கொள்ளுங்கள்.பேஸ்ட்ரி செய்யத் தேவையானவை:300 g கோதுமை மா (All purpose flour)

3 மேசைக்கரண்டி உருக்கிய மாஜரின் அல்லது பட்டர் அல்லது நெய்

1/2 தேக்கரண்டி உப்பு

2 முட்டை ( அடித்து வைத்துக்கொள்ளுங்கள் )

தேவையானளவு பால்செய்முறை:

முதலில் மாவோடு உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள் . அதனுள் உருக்கிய மாஜரினை விட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். பின் முட்டடையையும் இட்டு நன்றாகக் கலந்து பிசையுங்கள் . சிறிது சிறிதாகப் பால் சேர்த்து மிக மென்மையாக ரொட்டிக்குப் போலவே மென்மையாகக் குழைத்து இரு மணிநேரம் சரி ஈரத் துணியால் மூடி வையுங்கள்.


பின்னர் மீண்டும் ஒரு முறை பிசைந்துவிட்டு மாவை நான்காகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் மெல்லிதாகத் தட்டி உங்களிடம் பற்றீஸ் அச்சு இருந்தால் அதில் விரித்து நடுவில் அளவாகக் கறி வைத்து நன்றாக மூடிவிட்டு நன்றாகக் கொதிக்கும் எண்ணையில் இட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால் சுவையான பற்றீஸ் தயாராகிவிடும்.

அச்சு இல்லையென்றாலும் வட்டமாக வெட்டி ஒரு பக்கப் பாதியில் அளவாகக் கறி வைத்து நன்றாக மூடி, அந்த ஓரத்துக்கு முள்ளுக்கரண்டியால் அழுத்திப் பல்லுப் பல்லாக அடையாளமிட்டுப் பொரித்தெடுக்கலாம் .மரக்கறியில் செய்ய விருப்பமென்றால், டீன் மீனுக்குப் பதிலாக இரண்டு மேசைக்கரண்டி காரட், இரண்டு மேசைக்கரண்டிஅவித்த பச்சைப் பட்டாணி 100 g சோயா பீன்ஸ் சேர்க்கலாம்.
 
Top