செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு அன்பான வணக்கங்கள்!

NithaniPrabu

Administrator
Staff member
#1
வாசிப்பினை நேசிக்கும் அன்பு உறவுகள் அனைவருக்கும் செந்தூரத்தின் அன்பான வணக்கங்கள்!


உங்கள் எல்லோரையும் செந்தூரத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!


உன்னை நீயே தோற்கடி!


இதுதான் செந்தூரத்தின் வாசகம்!


நீங்கள் தொட்டுவிட்ட இலக்கினை தோற்கடித்துவிட்டு, இன்னோர் இலக்குக்கு நகருங்கள்! உங்கள் வெற்றியை நீங்களே தோற்கடியுங்கள். அப்படித்தான் எங்கள் செந்தூரமும்! எட்டும் வெற்றியை தோற்கடித்துவிட்டு அடுத்த இலக்கைக் குறிவைத்து நகர்ந்துகொண்டே போகிறது!


சின்ன சின்ன தேடல்கள். அடுத்து என்ன என்கிற குட்டி குட்டி ஆர்வங்கள், ஒவ்வொரு படியாக நம்மை வளர்த்துக்கொண்டே போகிறது. ஆமாம்! வாசிப்பின்மீது ஆர்வம் கொண்டு வந்தவர்கள், இன்று பலரின் வாசிப்புத் தாகத்தினைத் தீர்க்கும் மருந்தாக சந்தோஷமாகவே மாறிப்போயிருக்கிறோம். முன்பின் அறிந்திராத இருவரை இணைத்துவைத்த இணையத்தின் துணை கொண்டு, கற்பனை எனும் சிறகினை விரித்து மெல்ல மெல்ல பறக்கத் துவங்கிய வேளையில், நமக்கே நமக்கென்று வாய்த்த ஓர் ஆலமரத்தடிதான் எங்கள் செந்தூரம்.


தாகம்கொண்டு வாசிப்பினைத் தேடிவரும் அழகான பறவைகள் இளைப்பாறிச் செல்ல ஏதுவாய் எங்கள் செந்தூரம் என்றென்றும் நிழல் கொடுக்கக் காத்திருக்கும்.


வருவீர்! உங்கள் பொன்னான மணித்துளிகளில் சிலதை இங்கே பரிசளித்துப் பயன்பெறுவீர்!


நட்புடன் செந்தூரம்.
 
Top