சித்திரங்கள்

Rosei Kajan

Administrator
Staff member
#1
சூரியன்! எங்கள் வீட்டுக் கடைக்குட்டி!

பன்னிரண்டு வயதுதான்; ஆனால்...என்னோடு வழக்காடத்தொடங்கினால் ...கடவுளே! வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் மனதில் அலற விடுவார்.(தலைகீழாக நின்றாலும் கடைசி வார்த்தை என்னுடையதுதான். அதற்குள்...அப்பப்பா!) மறுபுறம் அடாவடியான பாசக்காரன்.

அண்ணாக்களோடு போட்டி போட்டுக்கொண்டு படிப்பு, விளையாட்டு என்று மல்லுக்கு நிப்பார். அதுபோலத்தான் வரையத் தொடங்கியதும் . அவர்கள் சிறுவர்களாக இருக்கையில் 'கேம்' என்பதை நான் கண்ணிலும் காட்டவில்லை . தொலைக்காட்சி பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியிருந்தேன். நானும் வீட்டில் இருப்பதால் இதையெல்லாம் செய்யவும் முடிந்தது. அதனால், டென்னிஸ் விளையாட்டுத் தவிர்த்து, பொழுது போக்கு என்பதில் புத்தகம் வாசிப்பதும் வரைவதும் முக்கிய இடம் பிடிக்கும்.

பிள்ளைகள் மூவருமே வரைவார்கள். நிறைய வரைந்துள்ளார்கள் . இருந்தும் சூரியன் மட்டும் தொடர்ந்து மிக ஆர்வமாக இப்போதும் வரைகிறார் . அண்மையில் அவர் வரைந்த படங்கள் சில இங்கே போடுகிறேன் . தொடர்ந்து அவரது சித்திரங்களை இங்கே பதிவிடுவேன். 47041376_308411733103159_4168331125875277824_n.jpg 47077172_259458791417948_4419676430263123968_n.jpg 47232142_357924888300534_6069466122770448384_n.jpg 47236702_201953964056038_66739728740777984_n.jpg 47030025_258687528146196_3788077630842994688_n.jpg 46942704_2205742979637206_6345183914864148480_n.jpg 46814220_574923452921835_6324641657518030848_n.jpg
 
Last edited:

Ush

New member
#2
That's fantabulous Lil buddy!
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
அருமை அக்கா. சூரியண்ட சைன் சொல்லுது அவர் பெரிய ஆளா வருவார் எண்டு.
 
#4
நல்லா இருக்குது அக்கா. எனக்கெல்லாம் படம் வரைவது வரவே வராது. சூரியனிடம் என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் அக்கா.
 

Swathi

New member
#5
Amazing drawing. ..suriyanuku en vaazhukkal..sister
 

Swathi

New member
#6
Intha page mattum than padikka mudiyuthu sister. Vera ethume open agala
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
Intha page mattum than padikka mudiyuthu sister. Vera ethume open agala
மயூரியா ...என்ன என்று பார்க்கிறேன் . இப்படி யாரும் சொல்ல இல்லையே ...
 
Top