சாமி 2

NithaniPrabu

Administrator
Staff member
#1
படத்தின் ஆரம்பமே செயற்கையான காவல் நிலையம் சலிப்பை உண்டாக்கியது. அப்பா மினிஸ்டர். பாரின் ரிட்டர்ன் மகள்.. நாயகன் நாயகி சண்டை எல்லாமே அரைச்சிட்டோம் என்று மறந்துபோய் மீண்டும் அரைச்சமா. கீர்த்தி சுரேஷ் ஒருவித சோம்பலாகவே படம் முழுக்க வந்தார். அவரின் முழுமையான புன்னகையில் மட்டும் பூவைப்போன்ற மலர்ச்சி. மேக்கப் நல்லாவே இல்லை. விக்ரம்.. இத்தனை நீண்ட காலத்துக்குப் பிறகு சாமி 2 வந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது. சில இடங்களில் வயதாகிவிட்டது என்று தெரிந்தாலும் சில இடங்களில் அதே சாமி விக்ரமை பார்த்தது போலவே இருந்தது அவரின் திறமை. சண்டை காட்சிகளில் அற்புதமாய் நடித்திருந்தார். மற்றும்படி அந்தப் படத்தில் சொல்லப்பட்ட அல்லது சொல்ல வந்த கதை என்ன என்றே கடைசிவரைக்கும் எனக்கு விளங்கவில்லை.

இந்தப் படத்தில் வந்த ஈழத்துத் தமிழை கேட்டபோது இலங்கையின் நாட்டுப் பிரச்சனை தீராமலேயே இருந்திருக்கலாம் என்றுதான் நினைத்தேன். தீராமல் இருந்திருக்க எட்டியும் பார்த்திருக்க மாட்டார்கள், நம் தமிழை கொலையும் செய்திருக்க மாட்டார்கள் இல்லையா. கொழும்பு என்றதும், ஆகா நம் நாடு என்று ஒரு துள்ளல் உள்ளே உருவானது உண்மை. அதுவே தமிழ் பேசுகிறோம் என்று வேறு எதையோ அவர்கள் பேசியபோது சத்தியமா சிரிக்கவா அழவா என்று தெரியாமல் முழித்தேன். எதற்கு இந்த நுனிப்புல் மேய்தல்? உலகளாவிய ரீதியில் வெளியிடப்படும் விக்ரம் போன்ற நல்ல நடிகனின் படத்தில் இப்படி முறையற்ற பேச்சு வழக்கைக் கையாண்டிருக்க வேண்டாம். கமலின் படம். ஜோதிகாவுடன் நடித்தது. அவசரத்துக்கு நினைவில்லை. எல்லாம் பயம் என்பார். அந்த நாட்களில் நகைச்சுவை காட்சி என்றால் கமலின் அந்தப் படக் காட்சிகள் இல்லாமல் இருக்கவே இருக்காது. அதில் எத்தனை தத்ரூபமாக பேசியிருப்பார். நாமே நம் பேச்சு வழக்கில் உணர்ந்திராத அந்த இனிமையை சுவையை அதிலே உணர்ந்திருக்கிறேன். அந்தப் படத்தை எடுத்து ஒருமுறை பார்த்திருந்தால் கூட இந்தத் தவறினை தவிர்த்திருக்கலாம்.
மற்றும்படி வேறு என்ன சொல்லட்டும்? பிரபுவுக்கு நன்றாக வயது போய்விட்டது என்று தெரிந்தது. ராவணன் பாத்திரத்துக்கு ஏற்ற வயது அவருக்கில்லை. மொத்தமாக படத்தில் கதையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். விக்ரம் போன்ற அசாத்திய திறமை கொண்ட நடிகருக்கு ஏற்ற படம் இதுவல்ல. கதையும் போதாது. அவ்ளோதான்.
சாமி 2 ஓவர்!
 
#2
சரியாக சொல்லியிருக்கிறீர்கள் நிதனி.உங்களின் இனிமை தமிழில் உள்ள கதைகளை வாசித்த பின் நானும் அதை உணர்ந்தேன்.கமல்ஹாசன் நடித்த படத்தின் பெயர் தெனாலி.இந்த படத்தில் மிக அழகாகவே பேசியிருப்பார்.ஒன்றிரண்டு தவிர பெரும்பாலான படங்கள் அபத்த களஞ்சியமாக வே இருக்கிறது.
 
Top