சங்க காலத்தில் தாலி அணிந்தது மணப்பெண் அல்ல - இதழ் 11 - திரு வி .இ . குகநாதன்

Rosei Kajan

Administrator
Staff member
#1

1574101563907.png👉சங்க காலத்தில் ‘தாலி’ காணப்படுகின்றது. அது ஆண்கள் அணிவது. திருமணத்தில் அல்ல, போரில். சான்று இதோ-இடைக்குன்றுர் கிழார் புறநானூற்றில் (77) ‘கிண்கிணி களைந்தகால்…’ எனத் தொடங்கும் பாடலில் செருவென்ற நெடுஞ்செழியனின் போர்க்கோலத்தை இவ்வாறு பாடுகின்றார்.

👇👇

‘யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,

தாலி களைந்தன்றும் இலனே, பால்விட்டு’

👆👆

எனவே தாலி என்பது போரில் அணியும் ஆண்களின் ஒரு அணிகலனாகவுள்ளது.👉👉ஆண்களைத் தவிர, சங்ககாலத்தில் தாலி அணிந்தவர்கள் சிறு குழந்தைகள் ஆகும். இதனை ‘ஐம்படைத்_தாலி’ என சங்க இலக்கியங்கள் குறிப்பிடப்படும் (புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும் இதற்கான சான்றுகளைக் காணலாம்).ஐம்படைத் தாலி என்பது சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு ஆகிய ஐந்து விதமான படைக் கருவிகளின் சிறு போல்மங்களைச் செய்து அவற்றை ஒரு மஞ்சள் கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் தாலியே ஆகும். இதன் எச்சமாக அரைஞாண் கயிற்றில் தாயத்து போன்ற ஒன்றை சிறுவர்களிற்கு கட்டுவதை இன்றும் சில ஊர்ப்புறங்களில் காணலாம்.8 மாதக் குழந்தை சங்கமருவிய காலத்தில் தாலி அணிந்திருந்த சான்றை மணிமேகலையில் காண்க.👇👇

‘செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை

சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப’ (மலர்வனம் புக்க காதை137-138)

👆👆

நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.தாலம்சங்ககாலத்தில் திருமணத்தின்போது தாலம் (தாலம் -பனை; பனை ஓலையால் செய்த அணி) பனை மரம் = பண்டைத் தமிழ் நிலத்தின் வாழ்வாதாரம்; ஆதலால், திருமணமும் வாழ்வாதாரமான ஒரு நிகழ்வு; அதுக்கும், “பனை” அணியே அணிவித்தார்கள் எனலாம். இது இரு பாலாரும் (மணமகன்-மணமகள்) அணியும் ஒரு அணிகலனே. மணநாளிற்கு மட்டுமே, அடுத்த நாளே வாடிவிடும், எறிந்துவிடுவார்கள். இதனையே சிலப்பதிகாரமும் மங்கலநாண் எனக் கூறுகின்றது.🕵️‍♀️🕵️‍♀️கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை என்கின்றார் தொ.பரமசிவன்.கீழடி, ஆதிச்ச நல்லூர் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்களில் ஒன்று கூட மணநாள் `தாலி` இல்லை. (வேறு சில தங்க அணிகலன்கள் உண்டு). எனவே மணநாள்-தாலியோ, வடமொழி மந்திரமோ தமிழர்களின் (சங்ககால) மரபு அன்று.👉👆அவ்வாறாயின் தாலி முதன்முதலில் மணநாளுடன் தொடர்புடையதாக் கூறப்படுவது எப்போது என்ற கேள்வி எழும்?“இது முதன்முதலில் 11-ம் நூற்றாண்டில் முதலாம் ராசராசன் காலத்தில் இருந்து ஆரம்பித்தது” என்று கூறுகிறார் வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை. தாலியை மணநாளில் முதலில் அணிந்தது ‘தேவடியாள்’ எனும் பொதுமகளிரே. பொட்டு கட்டுதல் எனும் சடங்கின் மூலம் கோவிலுக்கு சேவை செய்ய பெண்களை நேர்ந்துவிடும் சடங்கில் தேவதாசிப் பெண்டிருக்கு தாலி கட்டப்பட்டது. கோவில் நிலமெல்லாம் (நிலத்துடன் தேவடியாளும்) பார்ப்பன& கோயில் தர்மகர்த்தாக்கள் அனுபவித்த காலத்தில் தேவதாசிகள் பொட்டு (பொட்டு – தாலி) கட்டியபோது அவர்களுக்கு மானியமாக நிலம் எழுதிவைக்கப்பட்டது. நிலத்தோடு தொடர்புக்குள்ளானது, பொட்டு எனும் தாலி. தாலியை முதலில் மணக்கோலத்தில் அணிந்தது அவர்களே.பின்னரே தாலி மணப்பெண்ணிற்குரியதாக, மஞ்சள் கயிறாகத் தொடங்கி, இன்று பொன் நகையாக (புலம்பெயர் நாடுகளில் பொன் சுமையாக) மாறியுள்ளது.இன்றும் கூட கணவரல்லாதவர்களால் மணநாளில் தாலி கட்டும் வியப்பான சில முறைகள் கூட உண்டு. அவையாவன• கோமட்டி, கப்பேரர், குருபர், யாடர் ஆகிய சாதிகளில் புரோகிதன் தாலியைக் கட்டுவார்.• படகர் சாதியில் நான்கைந்து மனைவியை உடைய பெரிய மனிதர் வந்து பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார்.• காடர், காட்டுப்பட்டர், கோட்டை வெள்ளாளர், தொட்டியர், ஊராளி, வலையன் ஆகிய சாதிகளில் மணமகனின் உடன்பிறந்தவளோ, தாயோ தாலியைக் கட்டுவர்.• புலையன் சாதியில் மணமகனும் அவன் தோழனும் சேர்ந்து பெண்ணுக்கு தாலி கட்டுவர்.• உப்பரர் சாதியில் பெண்ணின் ஊரைச் சேர்ந்த சீர்க்காரி என்பார் தாலி கட்டுவாள்.• நாட்டுக்கோட்டைச் செட்டிகளில் தாலியை மண நாளன்று மணமகளின் கோவிலைச் சேராத பெரியவர் ஒருவரும், பெண்ணின் நாத்தனாரும் கட்டுவர்.நீலகிரியில் வாழும் மக்களாகிய தொதவர் & கோட்டர், கஞ்சம், விசாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள மலைவாழ் கொண்டர் & சவரர், நீலகிரியில் வாழும் கோட்டர் போன்ற மலைவாழ் மக்கள், பழங்குடி மக்களிடமும் இன்னமும் தாலி கட்டும் பழக்கம் இல்லை.🙏முடிவாகத் தாலி என்பது தமிழர்களின் மரபு அன்று, மணநாளின் போதோ அல்லது சிறப்பான நாட்களின் போதோ சங்கத்தமிழ் தாலம் போன்று அணிவதாயின் (சுமையாகவோ/ பகட்டாகவோ அல்லாமல்) அது பெண்ணின் விருப்பம். தாலி ஒரு தூய்மையின் அடையாளம் (புனிதம்) போன்ற புரட்டுகளை நம்பவேண்டாம்.🙏🙏🙏
1574101602729.png
 
Top