`கோள்` எனும் அறிவியல் தமிழ்ச்சொல்லும், `கிரகம்` எனும் மூடநம்பிக்கை வடமொழிச் சொல்லும் -இதழ் 9

Rosei Kajan

Administrator
Staff member
#1
1554065757721.png


கிரகம், நவக்கிரகம் போன்ற சொற்களைப் பலரும் தமிழ் எனத் தவறாக நினைத்திருக்கலாம், ஆனால் அவை தமிழ்ச் சொற்களல்ல, மாறாக வடமொழிச் சொற்கள். அவற்றுக்குரிய தமிழ்ச் சொற்கள் முறையே ‘கோள்’, ‘ஒன்பான்_கோள்கள்’ என்பனவாகும்.கோள் என்பது தமிழ் மட்டுமல்ல, அது ஒரு அறிவியற் சொல்லுமாகும். விண்ணில் மின்னுவன `மின்` எனப்பட்டு, `மீன்` ஆகியது. அதனாலேயே Star இனை தமிழில் ‘விண்மீன்’ என்கின்றோம். கோள்களைப் பொறுத்தவரை அவற்றுக்குத் தாமாக ஒளிரும் தன்மையில்லை, மாறாக விண்மீன்களிலிருந்தே ஒளியினைப் பெறுகின்றன. இவ்வாறு ஒளியினைக் கொள்வதால் `கோள்` எனப்படுகின்றது (மின்-மீன் போன்று கொள்-கோள்).இதனாலேயே `Planets` தமிழில் `கோள்கள்` எனப்படுகின்றது.இப்போது கிரகம் ( ग्रह ) என்ற வடசொல்லிற்கு என்ன விளக்கம் தெரியுமா? ஆளுகைப்படுத்தல். நவக்கிரகம் (नवग्रह ) என்பது `ஒன்பது ஆளுகைக்காரர்கள்` எனப் பொருள்படும். அதாவது சோதிட மூடநம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட விளக்கமே கிரகம் என்பதாகும்.• “சோதிடம்தனை இகழ்” என்கின்றார் பாரதியார்.• “பொதுவாகவே சோதிடம் இன்ன பிற மர்மமான விசயங்கள் குறித்த நம்பிக்கைகள் எல்லாம் ஒரு பலவீனமான மனதின் அடையாளங்கள். எனவே இத்தகைய விசயங்கள் உங்கள் மனதில் பிரதானமாக விளங்க ஆரம்பித்ததென்றால் உடனே நல்ல மருத்துவரை பார்த்து நன்றாக உணவருந்தி ஓய்வெடுங்கள்.” என்கின்றார் விவேகானந்தர்.• “நாளும் கோளும் அஞ்சத் தகுந்தன அல்ல” (ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல) என்கின்றார் சம்பந்தர்.இவ்வாறு சோதிடத்தை அறிவியல் மட்டுமல்ல, தமிழ் மெய்யியலுமே ஏற்றுக்கொள்ளமாட்டாது.


1554065802065.png
ஒன்பான்_கோள்கள் (நவக்கிரகம்) பற்றிய கருத்து பவுத்த மரபிற்கமைந்த அயந்தா ஒவியங்களிலேயே உண்டு.
சமண மதத்திலும் 9 தீர்த்தங்கரர்களாக ஒன்பான் கோள்களைக் கொள்ளும் மரபு உண்டு. பின்னர் வைதீகமதம் இதனை உள்வாங்கி முதன்முதலில் முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே (CE 11th cent) நவக்கிரகங்களிற்கு எனக் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்து. இது இன்று வரைத் தொடர்கின்றது. இன்றுவரை இந்துமதத்திற்கு `ஞாயிறு(sun) ஒரு கோள்(planet)`. அதாவது விண்மீன்-கோள்(star-planet) வேறுபாடு தெரியவில்லை. ஆனால், தமிழர்கள் 2000 ஆண்டுகளிற்கு முன்னரே மீன்-கோள்(star vs planet) வேறுபாட்டினை அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றாக `நீனிற விசும்பின் ..` என்ற பட்டினப்பாலை பாடல் உள்ளது.


1554065872823.png
>>>பார்தீர்களா! தமிழைப் (கோள்) பயன்படுத்தும்போது, நீங்கள் மொழித்தூய்மை பேணுவது மட்டுமல்ல, அறிவியல்- பழந்தமிழ் வாழ்வியலினையும் கண்டுகொள்ளலாம். மறுபுறத்தில் மூடநம்பிக்கைகளின் கூடாரமான சமற்கிரதத்தை பயன்படுத்துவதுதான் நாகரீகம் என எண்ணும் எம்மவரை என்ன சொல்வது!!!

👉தமிழ்ச்சொற்கள்👇👇👇

Star = விண்மீன்

Planet = கோள்

Nine planets = ஒன்பான் கோள்கள்

Sun = ஞாயிறு/ கதிரவன் ((சூரியன் வடமொழிச்சொல்)

Moon = மதி/ நிலா (சந்திரன் வடமொழிச்சொல்).


நன்றி : திரு வி .இ குகநாதன் .
 
Top