கோடை கால அழகு மற்றும் ஆரோக்கியம் - பராமரிப்பு By சுருதி (செந்தூரம் மின்னிதழ் 11)

Rosei Kajan

Administrator
Staff member
#1
கோடை என்றாலே அக்னி வெயிலின் தாக்குதலுக்குப் பயந்தே அனைவரும் வெளிய செய்வதைத் தவிர்க்கின்றனர். கோடை வெப்பத்தால் நேரடியாகப் பாதிக்கப்படுவது நமது சருமம்தான். சிறிது நேரம் வெளியே சென்று வந்தாலே முகம் வாடியதுடன், கூந்தலும் பொலிவை இழந்து வறட்சியாகக் காணப்படும். இந்தக் காலத்தில்தான் சருமத்தையும் கூந்தலையும் அதிகம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.

இன்னும் பலர் உடல் சூட்டினால் அவதிப்படுவார்கள். கோடைகாலச சருமப் பராமரிப்பு என்பது அழகுடன் ஆரோக்கியத்துக்கும்தான்.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கு அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அழகு நிலையங்களுக்குச் சென்றுதான் பயன்பெற வேண்டுமென்ற அர்த்தமும் இல்லை. கொஞ்சம் கவனமும், தேவையான பராமரிப்பும் கடைபிடித்தாலே நம் மேனியைப் பாதுகாக்கலாம்.• அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்திற்கு முக்கியமானது கொழுப்பும், தண்ணீர் சத்தும். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வெப்பக்காலங்களில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், நீர் சத்துப் பற்றாக்குறை ஏற்படும். எனவே உடலுக்குத் தேவையான நீரை அடிக்கடி பருகி, உள்தேவையை சரிக்கட்ட வேண்டும். நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொண்டால், கோடையில் சருமம் அதிகம் பாதிக்காது.


• கோடை காலத்தில் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக தர்பூசணி, வெள்ளரி.

• உணவில் காரம், புளி, மசாலா பொருட்களைக் குறைத்து கொள்ளுதல் நல்லது. பொரித்த உணவுகளையும் தவிர்க்கவும்.

• வீட்டிலேயே தயாரித்த பானங்களைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். Tin Preserved ஜூஸ் வகைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

• முடிந்த வரை வெளியில் செல்வதை மாலை நேரங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.

• UV கதிர்களில் இருந்து கண்ணைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் போது கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள்.இப்போது கோடைகாலச் சருமப் பராமரிப்புக்கான குறிப்புகளைப் பார்க்கலாம்.
தயிர் – தயிரில் சிறிதளவு கடலை மாவைக் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமத்தில் ஈரப்பதமும் தக்கவைக்கப்படும்.

வெள்ளரிக்காய் – நீர் சத்து நிறைந்த வெள்ளரிக்காய் கண்களுக்கு மிகவும் நல்லது. குளிரூட்டிய வெள்ளரிக்காயை மெல்லிசாக நறுக்கி கண்களில் 10 நிமிடம் வைத்து வந்தால் கண்கள் புத்துணர்வு அடையும்.


வெள்ளரிசச்சாற்றை சருமத்தின் மீது பூசினால் முகம் குளுமை பெறுவதுடன், பொலிவுடன் பிரெஷ்ஷாகவும் இருக்கும். ஆகச்சிறந்த toner இது!


கற்றாழை – கற்றாழை ஜெல்லை கைகள், பாதங்கள், கழுத்து மற்றும் முகத்தில் பூசி வந்தால் உலர்ந்த சருமம் புத்துணர்வைப் பெறும்.


உருளைக்கிழங்கு - சூரிய கதிர்வீச்சால் கண்களைச் சுற்றி கருவளையம் வரும். இந்த கருவளையங்களைப் போக்கிட உருளைக்கிழங்கை மெல்லிசாக நறுக்கி கண்களின் மீது வைக்கலாம். இதன் சாறையும் கூட கண்களைச் சுற்றி தடவலாம்.கூந்தல் பராமரிப்பு :

ஊற வைத்த வெந்தயம், கற்றாழை ஜெல், செம்பருத்தி இலை - இவை மூன்றையும் அரைத்து பேக் போல கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனிமுடியின் வெடிப்பை(Split Ends) சரி செய்யலாம்.வெயிலின் தாக்கத்தால் வியர்வை அதிகமிருக்கும் என்பதால் வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசுவது நல்லது. வெயிலில் சொல்லும்போது எண்ணெய் வைக்க வேண்டாம். எண்ணைய்யுடன் வெளியே சொல்வதால் அழுக்கும் தூசியும் சேர்ந்து பொடுகு வர வாய்ப்பு அதிகம். எனவே, முதல் நாள் இரவே எண்ணெய் வைத்துக் காலையில் கூந்தலை அலசுங்கள்.தயிரில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதை அரைத்து, கூந்தல் முழுக்கத் தடவி ஊற வைத்துப் பின் குளித்தால் உடல் குளுமையாகுவதுடன் கூந்தல் ஆரோக்கியமும் பெறும்.தேங்காய் பாலைக் கூந்தலில் ஊற வைத்துக் குளிப்பது குளிர்ச்சியைத் தரும்.வெளியே செல்லும் போது தலைக்குத் தொப்பியோ துணியோ அணிந்து செல்லுங்கள். தவறாமல் குடையும் எடுத்துச் சொல்லுங்கள்.**முக்கியக் குறிப்பு :


கோடையில் சருமம் கருப்பதற்கு முக்கியக்காரணம் புறஊதாக் கதிர்கள்(Ultraviolet Rays). இக்கதிர்கள் சருமத்தைப் பாதிக்காமல் இருக்க, ‘சன்ஸ்கிரீன்’(Sunscreen) உபயோகிப்பது மிக அவசியம். இந்த சன்ஸ்கிரீன் லோஷனை(Sunscreen Lotion) உடலில் வெயில் படும் இடங்களில் பூசிக்கொள்ளுதல் வேண்டும். சன்ஸ்கிரீன் வாங்கும்போது SPF(Sun Protection Factor) PA+++ அளவு பார்த்து வாங்குவது முக்கியம்.

SPF 20 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் லோஷனை வாங்கிறோம் என்றால் அது (20X5) 100 நிமிடங்கள் நம் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கும். இந்தக் கோடை வெயிலுக்கு SPF 30 முதல் 50 கொண்ட லோஷனை பயன்படுத்துவது சிறந்தது.

வெளியே செல்வதற்கு 20 நிமிடங்கள் முன்பே சன்ஸ்கிரீன் லோஷனை முகம், கைகள், கழுத்துப் பகுதிகளில் பூச வேண்டும். தொட்டுத் தடவாமல், ¼ மேஜை கரண்டி (1/4th of tablespoon) அளவு சன்ஸ்கிரீன் லோஷனை முகத்தில் பூச வேண்டும். பூசிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பிய பின்பு அதனைக் கழுவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.ஆனால், ஒரு முறை பூசி வெளியே சென்று வந்துவிட்டு, மீண்டும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் வெயிலில் செல்லவேண்டியதிருந்தால், முதலில் பூசியதை கழுவி விட்டு, மீண்டும் பூசிக்கொள்ளதல் வேண்டும். அதிக நேரம் வெயிலில் தொடர்ந்து இருக்க நேர்ந்தால், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பூசிக்கொள்ளுதல் அவசியம். எனவே வெளியே சொல்லும்போது சன்ஸ்கிரீன் லோஷனையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
Top