கிராமம்

#1
கிராமம்

சொந்தங்கள் செறிந்து வாழும்
சொர்க்கத்தின் ஒத்திகை
பந்தங்கள் மகிழ்ந்து சூழும்
பாசத்தின் வேடிக்கை

பச்சை வயல் வெளிகளின்
பட்டுச்சேலை விரிப்பு
உச்சம் தரும் இன்பத்தின்
உயர்வான ஊற்று

நாட்டார் பண்புகள் கொண்ட
நாகரீகமான வடிவம்
காட்டில் கழனி செய்யும்
காரணத்தின் உருவம்

பாட்டில் உணர்வை சொல்லும்
பக்குவத்தின் கலையகம்
ஏட்டில் உள்ளதை அறிவால்
இரும்பும் பொக்கிஷம்

நாட்டின் பொருளாதார உயர்வின்
நாணயமான களஞ்சியம்
தோட்டங்கள் செய்து ஏழ்மையை
துரத்த கிராமம் Village-life-in-Jaffna-heading-home-along-the-paddy-fields-1024x540.jpg அவசியம்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#2
கிராமம்

சொந்தங்கள் செறிந்து வாழும்
சொர்க்கத்தின் ஒத்திகை
பந்தங்கள் மகிழ்ந்து சூழும்
பாசத்தின் வேடிக்கை

பச்சை வயல் வெளிகளின்
பட்டுச்சேலை விரிப்பு
உச்சம் தரும் இன்பத்தின்
உயர்வான ஊற்று

நாட்டார் பண்புகள் கொண்ட
நாகரீகமான வடிவம்
காட்டில் கழனி செய்யும்
காரணத்தின் உருவம்

பாட்டில் உணர்வை சொல்லும்
பக்குவத்தின் கலையகம்
ஏட்டில் உள்ளதை அறிவால்
இரும்பும் பொக்கிஷம்

நாட்டின் பொருளாதார உயர்வின்
நாணயமான களஞ்சியம்
தோட்டங்கள் செய்து ஏழ்மையை
துரத்த கிராமம் View attachment 308 அவசியம்.
அருமையான வரிகள் Mokanan. படத்தையும் சேர்த்துப் பார்க்கையில் ஊர் நினைவுகள் .... பகிர்விற்கு நன்றி
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
என்ன சொல்வது என்றே தெரியாத நினைவுகளை கீறிவிட்டது போலிருக்கு தம்பி. இதையெல்லாம் இழந்து நிற்கிறோமே என்று வருந்துவதா இல்லை, இதையெல்லாம் கட்டிக்காப்பவர் நிலை என்ன என்று எண்ணி வருந்துவதா? மனதை தொட்ட வார்த்தைகள்..
 
Top