கிரந்தம் தவிர் தொடர்ச்சி - இதழ் 9

Rosei Kajan

Administrator
Staff member
#1
மருவுதமிழ் மறவாமல் காப்போம்!வி. குகநாதன் அவர்கள் எழுதிய ‘கிரந்தம் தவிர் தமிழ் பழகு’ எனும் ஏட்டிலிருந்து.தனித்தமிழ் பயன்பாட்டுக்குச் செய்ய வேண்டியவை:  1. முடியுமானவரை தமிழில் உள்ள 247 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
  2. கிரந்த எழுத்துக்களை ஸ, ஷ, ஜ, ஹ போன்றவற்றை தவிருங்கள். (எடுத்துக்காட்டாக ஹிந்து என்பதை இந்து எனவும் ரஸ்யா என்பதனை இரசியா எனவும் எழுதவும்.)
  3. கிரந்தச் சொற்களுக்குப் பதிலான தூய தமிழ்சொற்களைப் பயன்படுத்துதல்.(பட்டியல் இணைப்பைக் காணலாம்)
  4. புதிய சொற்களின் தமிழ் மொழியாக்கம் அறிந்து பயன்படுத்துதல். (எடுத்துக்காட்டு: Pen Drive-விரலி, Whatsapp- புலனம்)


கிரந்தம் தவிர் தமிழ் பழகு

சந்தானம் மகப்பேறு
சந்தேகம் ஐயம்
சந்தோசம் மகிழ்ச்சி
சபதம் சூளுரை
சம்சாரம் குடும்பம், மனைவி
சம்பந்தம் தொடர்பு
சம்பவம் நிகழ்ச்சி
சம்பாதி ஈட்டு/ பொருளீட்டு
சம்பிரதாயம் மரபு
சம்மதி ஒப்புக்கொள்
சரணாகதி அடைக்கலம்
சரித்திரம் வரலாறு
சரீரம் உடல்
சருமம் தோல்
சர்வம் எல்லாம்
சமீப காலத்தில் அண்மைக்காலத்தில்/ சமகாலத்தில்
சதுரம் நாற்கரம்
சக்தி ஆற்றல், வலு
சஞ்சிகை இதழ்
சத்தியம் உண்மை, வாய்மை
சத்து ஊட்டம்
சந்ததி வழித்தோன்றல்
சமதர்மம் பொதுமை, சமனறம் 
Top