என் இதயம் பேசுகின்றது - விடையில்லாத வினாக்கள்

#1
அவனுக்கு என்னுடன் எப்போதெல்லாம் கதைக்க வேண்டியிருந்ததோ அப்போதெல்லாம் நான் அவனுடன் இருந்தேன். ஆனால், அவன் எனக்கு தேவைப்படும் நேரம் அவன் எனக்காக இருக்கவில்லை! ஹ! சுயநலக்காரன்..அவன் ராவணன்! ராமர் தான் கதாநாயகன் என்று யார் கூறியது? சிவனின் அருள் பெற்று பத்து தலைகளைக் கொண்ட ராவணும் நாயகன் அல்லவா? சீதைக்கு அல்ல, மண்டோதரிக்கு! நான் மண்டோதரியாக இருக்க விரும்பினேன் அவனோ சீதையை அல்லவா தேடுகிறான்! பைத்தியக்காரன்!!

அவன் யார் என்று எனக்கு தெரியாது! பெயர் தவிர அனைத்துமே அவன் கூறிய விடயங்கள் தான். ஒரு வீதம் கூட நானும் அறிந்து கொள்ள முயலவில்லை..ஆனால் பொய்கள் அவனிடத்தில் இருக்கவில்லை என்பது எனக்கு உறுதி! ஒருவனின் உரையாடல் கூறிவிடாதா அவன் எப்படிப்பட்டவன் என?! பெண்ணின் மனதை வெல்ல பணமா முக்கியம்? நல்ல மனம் அல்லவா? பெண்ணின் மனதைக் குலைத்து அவர்களை அறியாமலே அவர்களின் மனதில் ஆசையை வளர்த்து தனக்கு தோன்றும் போது ஒரு வார்த்தை பேசாமல் விலகிச் செல்லும் ஆண்களின் எண்ணம் தான் என்ன? அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி கற்பைப் பறிகொடுக்கும் பெண்களுக்கு மட்டுமா நியாயம் கிடைக்க வேண்டும்? மனதைக் குலைப்பது அதை விட பெரும் பாவம் அல்லவா?

என்னுள் பல கேள்விகள்! நான் என்ன தவறு செய்தேன்? அவன் காதலைப் பகிரவில்லை.ஆனால் உணர வைத்தான். கண்ணுக்கு முன்னால் சோலையைக் காட்டி சடுதியாக பாலைவனமாக்கும் வித்தையை எங்கு கற்றான்? பெண்கள் ஏய்த்து விட்டார்கள் என கதறும் சமூகம் பெண்கள் ஏய்க்கப்படுவதையும் உணர்ந்து கொள்ளட்டும். அவனை சுற்றி எத்தனை பேர் வந்தாலும் என்னளவு அவனை அன்பு கொள்ள யாரும் இல்லை என்ற திமிரில் கூறுகின்றேன் எனை இழந்தது நீ செய்த முட்டாள்தனம்.

இந்தக் கணம் அவன் எனக்கு தேவையில்லை. ஆயினும் எனக்கு சில பதில்கள் தேவை! ஏன் வந்தான்? ஏன் சென்றான்? விடையறியாக் கேள்விகளுடனே விடபெறுவது தான் மனிதவாழ்வின் விந்தை போலும்!

- Heart of Maya
 
Attachments

Rosei Kajan

Administrator
Staff member
#2
விடை தெரியாது , அறிந்து கொள்ள விரும்பினாலும் முடியாது பல கேள்விகளும் சம்பவங்களும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்தேறிறியிருக்கும் .நம்மில் பலரும் அத்தகைய சம்பவங்கள் பற்றி ஆழ்ந்து யோசித்து அதை ஒரு வினாவாகவேனும் எழுப்பியும் இராது கடந்து வந்திருப்போம் .

இங்கு மாயாவின் இதயம் திறந்து, இப்படி வினா எழுப்புகையில் நம்மில் பலருள்ளும் பல கேள்விகள் எழுந்து விடை அறிய முயலலாம் . அந்தவகையில், மிக சுவாரசியமும் அருமையான பகுதி மாயா . தொடர்ந்து உங்கள் இதயத்துடன் உரையாட நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம் .

வாசகர்கள் தம் கருத்துக்களை இப்பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம் .

இதை வாசிக்கையில் என்னுள் தோன்றியது ஒன்றுதான் மாயா, அதையும் நீங்களே குறிப்பிட்டும் உள்ளீர்கள் .

'சுயநலக்காரன்'

<<<அவனுக்கு என்னுடன் எப்போதெல்லாம் கதைக்க வேண்டியிருந்ததோ அப்போதெல்லாம் அவனுடன் நான் இருந்தேன் >>>> இதுதான் . முற்று முழுதாய்த் தன் தேவையின் பொருட்டு ஒருத்தியின் உணர்வுகளுடன் நெருங்கியிருக்கலாம் . அத் தேவை நிறைவேறுகையில்/ மாறுபடுகையில் அவன் தேடலும் மாறிச் சென்று விடலாம் . அவன் தேடல் முழுமையாய் அவனுக்கானது. எதிரில் இருப்பவர் பற்றியெல்லாம் அவனுக்குக் கவலையே இல்லை .

'பைத்தியக்காரன்' என்று விளங்கிக் கொண்ட பின்னர் அவனைப் போன்றவர்களிடம் எத்தகைய நியாயம் கிடைத்துவிடும் ? முதல் அப்படி எதிர்பார்த்து நாமும் பைத்தியமாக வேண்டுமா?

ஒரு சுயநலம் பிடித்த பைத்தியக்காரனுக்காக நம் உணர்வுகளை மரிக்க வைக்காது நிமிர்ந்து திடமாக கடந்து வ்ருவதே மேல்!
 
#3
அருமையான கருத்து சகோதரி!

எவ்வளவு தான் அறிவு நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் போதும், சடுதியில் மாறும் மனிதர்களின் நிறங்களின் மூலம் நமக்கு எஞ்சுவது வலிகள் மட்டுமே! மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய் பெண்களின் மனது தகித்துக்கொண்டே தான் இருக்க வேண்டுமா? அவன் செய்த தவறு உணரவைக்க படவேண்டும்! மெலூகாவின் அமரர்கள் எனும் நாவலில் சிவன் குறிப்பிட்டு இருப்பார் "உன்னால் முடியும் என்று நீ நினைத்தால் நீயும் மகாதேவரே" ..எனவே கடவுள் மூலம் அவனது மூடத்தனம் அறியவைக்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டுமா? பெண்களின் கண்ணீருக்கு இக்கயவர்களிடம் பதில் வங்க வேண்டும்! ஆனால் தழைகள்!!!

#4
பெண்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்களின் மனதை கலைத்து பார்ப்பதும் ஆண்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகள். தன்னால் ஒரு பெண்ணின் மனதை கவர முடியும், அவர்களை தன்னை நினைத்து ஏங்க வைக்க முடியும் என்று மற்றவர்களுக்கு காட்டுவது ஆண்களின் ஆணவத்தின் வெளிப்பாடு.
 
#5

நிச்சயமாக! அதன் பிரதிபலன் மிகக் கொடூரமானது! ஆண்களுக்கு சில பெண்களால் இவ்வாறு நேர விளைவது கூட அவர்களின் கர்மாவாக இருக்கலாம்! யார் அறிவார்?! ஆனால் தனது போக்கில் செல்லும் ஒரு பெண்ணை அல்லது ஆணை நிலைகுலையச் செய்வது வேடிக்கையான விபரீதம்!
 
Rosei Kajan

Administrator
Staff member
#6
அருமையான கருத்து சகோதரி!

எவ்வளவு தான் அறிவு நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் போதும், சடுதியில் மாறும் மனிதர்களின் நிறங்களின் மூலம் நமக்கு எஞ்சுவது வலிகள் மட்டுமே! மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய் பெண்களின் மனது தகித்துக்கொண்டே தான் இருக்க வேண்டுமா? அவன் செய்த தவறு உணரவைக்க படவேண்டும்! மெலூகாவின் அமரர்கள் எனும் நாவலில் சிவன் குறிப்பிட்டு இருப்பார் "உன்னால் முடியும் என்று நீ நினைத்தால் நீயும் மகாதேவரே" ..எனவே கடவுள் மூலம் அவனது மூடத்தனம் அறியவைக்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டுமா? பெண்களின் கண்ணீருக்கு இக்கயவர்களிடம் பதில் வங்க வேண்டும்! ஆனால் தழைகள்!!!
நான் சொல்வது எந்தளவு சாத்தியம் என்ற கேள்வியையும் மீறி பெண்கள் உணர்வுகளை தம் அறிவால் கட்டுப்படுத்தும் சக்தியோடு வளர வேண்டும் என்பேன் . விழித்திருக்கும் அறிவு வலிகளை ஏற்படுத்தும் விசயத்தில் ஆரம்பத்திலேயே விழிப்போடு செயல்படும். வலியே கண்டாலும் அதிலிருந்து மீளவும் உதவும் . அவன் ஏற்படுத்தும் வலியில் கிடந்தது உழன்று அவனை வெற்றி கொள்ள வைப்பான் ஏன் என்பதை எடுத்துச் சொல்லும் .
 
Top