உடலை சீராக்கும் சீரகத் தண்ணீர் - சுருதி - (செந்தூரம் மின்னிதழ் 11)

Rosei Kajan

Administrator
Staff member
#1
‘உணவே மருந்து’ என்ற கோட்பாடின்படியே உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் பொருட்களைக் கொண்டே நாம் உணவைத் தயாரிக்கிறோம். அப்படி உணவில் மணமூட்டியாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, சீரகம். சீரகம் என்ற பெயருக்குக் காரணமே சுவாரஸ்யமான ஒன்று. சீர் + அகம் = சீரகம்(Cheerakam). அகம் என்னும் நம் வயிற்றைச் சீராக்குவதாலேயே இதற்குச் சீரகம் என்ற பெயர். மணமூட்டியாக மட்டுமல்லாது செரிமானத்தன்மைக்காகவும் உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.அந்த காலத்தில் கிரேக்கத்தில் ‘வரிக்குப் பதிலாக சீரகம் செலுத்தலாம்’ என்ற அரசாணையே இருந்ததாம். கிரேக்கிலும் பிற நாடுகளிலும் மணத்திற்கும் சுவைக்கும் மட்டுமே உபயேகப்பட்ட சீரகம், ஆசியாவில் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பார்க்கப்பட்டதுதான் தனிச்சிறப்பு. இன்று சீரகம் உலகை ஆளும் ஒரு உன்னத மணமூட்டி, மருத்துவ உணவும் (Functional Food) கூட.ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ, “தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும்வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும்” என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு தே.கரண்டி சீரகத்தை தண்ணீரில்(இரண்டு கப் அளவு) சேர்த்துக் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானவுடன் குடிக்க வேண்டும். பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிக்கும் இயற்கை மருந்தாகச் சீரகம் இருக்கிறது.மேலும் இந்தச் சீரகத் தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பல.
• உப்பசம், அஜீரணம் போன்ற தொந்தரவுகளுக்கு சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் அஜீரணம், வாயுத் தொந்தரவுகள் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

• மாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கு, சீரகத் தண்ணீர் சரியான மருந்து. தொடர்ந்து அருந்தி வந்தால் அந்த நேரத்தில் ஏற்படும் வலி, தசைப் பிடிப்புகளிலிருந்து விடுபெற உதவும்.

• சீரகத் தண்ணீரை தினமும் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செல்கள் புத்துணர்ச்சியடைந்து ஞாபகசக்தி அதிகரிக்கும்.

• இரும்பு மற்றும் நார்ச் சத்துகள் அதிகம் இதில் உள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் உடலுக்குக் கூடுதல் பலத்தையும் தரும்.

• நீரிழிவு நோய் உள்ளவர்கள், வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். உடலில் ஏற்படும் புண்கள், காயங்களையும் வேகமாக ஆற்றும்.

• தொடர்ந்து காலை மாலை என இருவேளைகள் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், கருத்தரிப்பின் போது பால் சுரக்க உதவும்.

• உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு சீரகத் தண்ணீரையும் சிறிதளவு அருந்தி வந்தால் எடை நன்கு குறையும்.

• முடி வளர்ச்சி, சருமம் மற்றும் தோள் ஆரோக்கியத்திற்கும் சீரகத் தண்ணீர் உதவும்.
 
Top