இது நீயிருக்கும் நெஞ்சமடி-5

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம்-5ஆர்கலிக்கு தாயின் மீது மிகுந்த கோபம். அங்கு போனதிலிருந்து அவர் கதைத்தவையெல்லாம் நினைவில் வந்து சினமேற்றின. அதுவும் கடைசியாக அவனுடைய வீட்டிலேயே மரத்தில் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு தனியாக அவன் அமர்ந்திருந்த காட்சி மிகவுமே பாதித்திருந்தது. அதனால் தான் முத்தமிட்டதைச் சொல்லிச் சிரிக்க வைத்துவிட்டு வந்தாள். வீட்டு வாசற்படியை மிதித்ததுமே திசைக்கொன்றாக ஷுக்களைக் கழற்றி எறிந்துவிட்டு விடுவிடு என்று மாடிப்படி ஏறி தன் அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டாள்.

சுந்தரேசனும் கோபத்தை அடக்கிக்கொண்டு தானே வந்திருந்தார்.

“உனக்குக் கதைக்கப் பேசவே தெரியாதா லலிதா? தமயந்தியை வச்சிக்கொண்டே கலியாணம் ஆகேல்ல எண்டு சொல்லுறாய். ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர மனதை நோகடிச்சு அப்படி என்ன சந்தோசம் காணப்போறாய்?” வீட்டுக்குள் வந்ததுமே கேட்டார்.

“நான் என்ன பொய்யா சொன்னனான்? உண்மைதானே. சும்மா வக்கில்லாத உங்கட நண்பர் குடும்பத்துக்காக சப்போர்ட்டுக்கு வராதீங்க.”

லலிதாவின் எள்ளல் பேச்சில் ஆத்திரம் உண்டாயிற்று சுந்தரேசனுக்கு.

“அதுகளுக்கு என்ன வக்கில்லை? சொந்த வீடு இருக்கு. உழைப்பு இருக்கு. உதவி எண்டு கேட்டு ஒருத்தரிட்ட போகேல்ல. என்னட்ட கூட ஒரு உதவி வாங்காம தாங்களே உழைச்சு தங்கட காசில கௌரவமா வாழுற குடும்பம் அது. இல்லாட்டி, ‘பிரணவனை அனுப்பு, லண்டனுக்கு எடுத்துவிடுறன்’ எண்டு நான் சொன்ன நேரமே ஓம் எண்டு அனுப்பி இருப்பான். அவனுக்கும் தெரியும், மகன் வெளிநாட்டுக்குப் போனா இன்னும் நல்ல வசதியா வாழலாம் எண்டு. ஆனாலும் விடேல்ல. ஏன் தெரியுமா? கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு குடும்பமா சந்தோசமா வாழ்வேணும் எண்டுறதுக்காக. வயசான தாய் தகப்பன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்ல எண்டு மனுசனை இழுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடின உனக்கெல்லாம் இது விளங்காதுதான்!”

இவ்வளவு நாட்களும் எப்படியோ, இலங்கைக்கு வந்தபிறகு பெற்றவர்களோடு வாழ்ந்த நாட்கள் நினைவில் வந்து தாக்க, அப்படித் தன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த தாய் தகப்பனோடு இருக்கவில்லையே, வயதான காலத்தில் கூட இருந்து பார்த்துக்கொள்ளத் தவறிவிட்டேனே, எல்லாம் இவளால் என்கிற ஆத்திரம் அவரைப் பொங்க வைத்தது.

கணவர் இப்படி எப்பவோ நடந்ததைச் சொல்லிக்காட்டுவார் என்று எதிர்பார்க்கவில்லை லலிதா. முகம் கருத்துக் கண்களும் கலங்கிப் போயிற்று.

“அப்படிப் போனதாலதான் இண்டைக்கு இவ்வளவு வசதியா இருக்கிறீங்க. அதுக்கு நீங்க எனக்கு நன்றி சொல்லவேணும். இல்லாட்டி அந்தக் குடும்பம் மாதிரி ஒரு ஏசி வாங்கக்கூட காசில்லாம இருந்திருப்பம்!”

“பிறந்ததில இருந்து ஏசில வாழ்ந்த உனக்கு அது பெரிய குறையாத்தான் இருந்திருக்கும்!” நக்கலாக சுந்தரேசனும் மொழிந்துவிட அவமானத்தில் முகம் சிவந்து போயிற்று லலிதாவுக்கு.

திருமணத்துக்கு முன்னான வாழ்க்கையின் வறுமையை நினைத்துக்கூடப் பார்க்க விரும்பாதவர் லலிதா. அதையே அவர் குத்தியபோது, “பிறக்கேக்க இல்லாட்டி அது சாகும் வரைக்கும் இருக்கக் கூடாதா? லண்டன் போய் நீங்க என்ன கெட்டா போனீங்க? அங்க நாலுபேரும் எவ்வளவு சந்தோசமா இருந்தோம் சொல்லுங்கோ பாப்பம். இங்க வந்த முதல் நாளே சண்டை. நிம்மதி இல்ல. சந்தோசம் இல்ல. அதுக்காகத்தான் கூட்டிக்கொண்டு போனனான்.” என்று அவரும் சொல்ல, படார் என்று கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள் ஆர்கலி.

“ரெண்டுபேரும் உங்கட சண்டையை கொஞ்சம் நிப்பாட்டுறீங்களா!”

அவளின் அதட்டலில் தாய்க்கும் தகப்பனுக்கும் முகம் கன்றிப்போயிற்று. பிள்ளைகள் வளரத்தொடங்கியபிறகு இப்படி ஒரு நிலமை இங்கிலாந்தில் அமைந்ததேயில்லை. லலிதா சொன்னதுபோல சந்தோசமாகத்தான் வாழ்ந்தார்கள். இன்று மகள் கேட்கும்படிக்கு வாய்த்தர்க்கம் செய்தது குன்றலாகப் போய்விடவே அமைதியாக ஆளுக்கொரு அறைகளுக்குப் போய்விட்டனர்.

இரவு முழுக்க உறக்கமேயில்லை ஆர்கலிக்கு. பிரணவனே நினைவுகளில் நின்றான். அதைவிட முகம் கையெல்லாம் கடித்தது. எப்போதும்போல இரவு குளித்து, கிறீம் நன்றாகப் பூசிக்கொண்டுதான் படுத்தாள். ஆனாலும், காலையில் எழுந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, முகத்தில் ஆங்காங்கே சிவப்புச் சிவப்பாக சிவந்திருந்தது. அந்த இடமெல்லாம் ஒரே எரிவு. கையில் இருந்த கொப்பளங்கள் வேறு இன்னுமே எரிந்தது.

சோர்ந்துபோய் முகமெல்லாம் சிவந்து வீங்கி வெளியே வந்த மகளைக் கண்டதும் பயந்துபோனார் சுந்தரேசன். “என்னம்மா இது? இரவு நல்லாத்தானே இருந்தாய்?”

சோர்வோடு இறங்கிவந்து சோபாவில் சாய்ந்துகொண்டாள் ஆர்கலி.

“இரவு முழுக்க கடிச்சது அப்பா. இப்ப பாக்க எல்லாம் சிவந்துபோயிருக்கு. நேற்று கருப்பன் மாமா வீட்டுக் காணிமுழுக்கச் சுத்தினதாலயோ தெரியா!” சோர்வுடன் அவள் சொல்ல, உள்ளிருந்து வந்த லலிதாவுக்குப் பொறுக்கவில்லை.

“பாத்தீங்களா? அந்த வீட்டு ஆக்கலும் எங்களுக்குச் சரிவராது. அந்த வீடும் சரிவராது!” என்றார் பட்டென்று.

சலிப்பாய்ப் பார்த்தார் சுந்தரேசன். இரவு மகள் சொல்லியும் கேட்காத மனைவியை என்ன செய்ய என்றே தெரியவில்லை. “தயவுசெய்து கொஞ்சம் பேசாம இரு லலிதா! இங்க இருக்கப்போறது நாலு கிழமை மட்டும்தான். அந்த நாலு கிழமையும் சந்தோசமா இருந்திட்டுப் போவம்!” என்றார் மனம் விட்டுப்போன குரலில்.

அப்படியே நின்றுவிட்டார் லலிதா. கணவரின் சோர்ந்த குரல் மனதைத் தைத்தது. அவரும் பதிலுக்குப் பதில் தந்தபோது, கோபத்தோடு திருப்பிக்கொடுக்க முடிந்தது. அதுவே மனம் விட்டதுபோல தனிவாகப் பேசியபோது வாயடைத்து நின்றுவிட்டார்.

“ஒருக்கா டொக்டரிட்ட காட்டுவமா? பிள்ளைக்கு உடம்பும் கொதிக்கிற மாதிரி இருக்கு.” ஆர்கலியைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஒன்றுமே நடவாததுபோல தன்மையாகக் கேட்டார்.

சுந்தரேசனுக்கும் மனைவி விளங்கிக்கொண்டது இதமளித்தது. எனவே தனிவாகவே பதிலும் சொன்னார்.

“காட்டுறதுதான் நல்லது!”

கூட்டிக்கொண்டு போய் மருந்து வாங்கிக்கொண்டு வந்தார்கள். அன்று முழுவதுமே எழும்பவில்லை ஆர்கலி. காய்ச்சலும் நன்றாகவே இருக்கப் படுத்துவிட்டாள்.

அப்போதுதான் லலிதாவின் அண்ணி அழைத்து, யாழ்ப்பாணத்துக்கு வரும்படி அழைத்தார். “திருமணத்துக்கு உடுப்புச் செருப்பு எடுக்கிறதில குழப்பமா இருக்கு லலிதா. நீயும் இருந்தா உதவியா இருக்கும்! வாவன்!” என்று அழைத்தபோது மறுக்க முடியவில்லை.

லண்டனில் இருந்து வந்ததற்கு கிளிநொச்சியிலேயே நின்றுவிட்டார்கள். அங்கே இன்னும் போகவேயில்லை. அவர்கள் வீட்டுத் திருமணத்துக்கு என்றுதான் வந்ததே. ஆனாலும் இன்னும் போகவில்லை. அவராக அழைத்தும் போகாமல் விட்டால் குறையாகிப்போகுமே. அதைவிட, ஆர்கலிக்குப் பார்த்த பெடியனின் வீட்டினரும் அங்குதான் எனும்போது போய்வருவதுதான் சரி என்று உணர்ந்தார். ஆனால், முடியாமல் சோர்ந்து சுருண்டு கிடக்கும் மகளை அலைக்கழிக்கவும் மனமில்லை. மாப்பிள்ளை வீட்டாரும் மாப்பிள்ளையும் பார்க்கையில் மனத்தைக் கவரும் விதமாக அவள் இருக்க வேண்டாமா?

என்ன செய்வது என்று தெரியாமல், விசயத்தைக் கணவரிடம் கொண்டுபோனார். அவரோ, எந்த யோசனையும் இல்லாமல் புனிதாவுக்கு அழைத்துக் கேட்டுவிட, அடுத்த கணமே வந்துநின்றார் புனிதா.

“நான் பிள்ளையைப் பாக்கிறன் அண்ணா. நீங்க ஒன்றுக்கும் யோசிக்காம போயிட்டு வாங்கோ.” எந்த யோசனையும் இல்லாமல் உடனேயே சொன்னார் புனிதா.

“அங்க ஏசியும் இல்லையாம். அதைவிட, கலியாண வீட்டில வேலைகளுக்கு நடுவில இவளைப் பாக்க நேரம் கிடைக்குமோ தெரியாது. இங்க இருந்தால் எண்டால் கல்யாண நாளுக்கு முதல் சுகமாகிடும். முகமெல்லாம் பரு போட்டிருக்கு. கலியாணத்துக்கு பேசின பெடியன் பாக்கேக்க நல்லமாதிரியும் இருக்க வேணும் எல்லா.” என்று மெல்லச் சொன்னார் லலிதா.

“உண்மைதான் அக்கா. நீங்க கவலைப்படாம போய் வேலைய பாருங்கோ, நாங்க எல்லாரும் நல்லா பாப்போம்!” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்த அடுத்த கணமே வந்து நின்றார்கள் துவாரகாவும் திவ்யாவும்.

“யாரடியப்பா உன்ர முகத்தில இப்படி புள்ளி வச்சுக் கோலம் போட்டது?” துவாரகா கேட்க, முறைத்தாள் ஆர்கலி.

“எனக்குக் காய்ச்சலே வந்திட்டுது. உனக்கு நக்கல்!”

“ஹாஹா அக்கா! கையப்பாரு சிக்கன் குனியா வந்த மாதிரி இருக்கு!” என்று திவ்யா ஆரம்பிக்க,

“அது என்னடி சிக்கன் குனியா?” என்று தெரியாமல் கேட்டாள் ஆர்கலி.

“நீங்க ஐ படம் பாக்கேல்லையா.. அதுல வார விக்ரம் மாதிரி!” என்று திவ்யா சொல்ல, “என்னது? அப்படியா இருக்கிறன்?” என்று ஓடிப்போய் கண்ணாடியில் முகம் பார்த்தாள்.

விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கினர் சகோதரிகள் இருவரும்.
 
NithaniPrabu

Administrator
Staff member
#2
“எதுக்கும் நாங்க தள்ளி இருப்பம். என்ன தொத்து வியாதியோ யாருக்குத் தெரியும்?” என்று அக்காளும் தங்கையாக அவளை ஒரு கை பார்க்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் இருவருக்கும் முதுகில் இரண்டு போட முனைய, “தொற்று வியாதி நம்மளை துரத்திக்கொண்டு வருது. ஓடு திவ்யா!” என்றபடி ஓடத்துவங்கினாள் துவாரகா.

“மக்களே! ரெண்டுபேரும் மாட்டினீங்க சம்பல் தான்டி!” என்றபடி துரத்த, அவர்கள் ஓடிப்போய் புவனாவின் பின் நின்றுகொண்டு விளையாட்டுக்கு காட்ட, அவள் எட்டிப் பிடிக்க முனைய என்று வீடு முழுக்க ஓடிய மூவரையும் புவனாவால் தடுக்கவே முடியவில்லை.

களைத்து ஓய்ந்து அவர்களாகத்தான் நின்றார்கள்.

“ஓடினது பசிக்குது அம்மா. ஏதாவது சாப்பிடத் தங்கம்மா!” என்று குரல் கொடுத்தாள் திவ்யா.

“ஆரு, உனக்கு ரோல்ஸ் செய்து தரட்டா? விருப்பமா?” புவனா ஆர்கலியைக் கேட்க, “கேட்டது நான் கேள்வி அங்க!” என்று நொடித்தாள் அவரின் மகள்.

அன்று அவர்களோடு ஆர்கலிக்கு பொழுது மிகவும் சந்தோசமாகவே கழிந்தது. மருந்து மாத்திரைகள் கொடுத்து, பருக்களுக்கும் எரியும் இடங்களுக்கும் கிறீம் பூசி என்று பார்த்து பார்த்துக் கவனித்துக்கொண்டார் புனிதா.

“வீட்டுல யாரு மாமி சமைக்கிறது. மாமா பாவம் எல்லோ. நான் இருப்பேன். நீங்க போயிட்டு இரவுக்கா வாங்கோ.” என்று சொல்லியும் போகவில்லை.

துவாரகா திவ்யா இருவரோடும் ஆடியது களைப்பாக இருக்க, நன்றாக ரோல்ஸ் வெட்டியது வேறு கண்களைச் சொக்க வைக்க, மாலை நன்றாக உறங்கி எழுந்திருந்ததில் இரவு உறக்கம் வருவேனா எண்டு சண்டித்தனம் செய்தது ஆர்கலிக்கு. நேரம் பார்க்க இரவு பதினொன்று என்று காட்டியது. கீழே மெல்லிய பேச்சுக்குரல் கேட்க காது கொடுத்துக் கேட்டாள். ஏதோ வீடியோ பார்க்கும் சத்தம், யாரு என்று எட்டிப் பார்க்க ஹால் சோபாவில் படுத்திருந்து போன் பார்த்துக்கொண்டு இருந்தான் பிரணவன்.

‘இவன் எப்ப வந்தான்?’ கேள்வி ஓட மெல்ல இறங்கிவந்தாள்.

காலடிச் சத்தத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்தவன், எழுந்து அமர்ந்தான்.

“சாரி, சத்தம் கேட்டு எழும்பிட்டியா?” என்றான் மெல்லிய குரலில்.

“இல்ல நித்திரையே வருது இல்ல. எட்டிப்பாத்தா நீங்களும் படுக்கேல்ல. அதுதான் வந்தனான்.” என்றாள் ரகசியக் குரலில்.

அவள் சொன்னவிதம் அவன் உதட்டினில் மெல்லிய முறுவலை வரவைக்க, “ஏன் இந்த ரகசியக் குரல்?” என்று அவனும் ரகசியமாகவே கேட்டான்.

“மாமி நித்திரை எல்லா. அவா பாவம், என்னால இங்க வந்து இருக்கிறா. சொரி.” என்றபடி அவனருகில் அவள் அமர அவனுக்குத்தான் கலவரமாகிப் போனது.

எழுந்துபோய் அடுத்த சோபாவில் அமர்வதும் ஒருமாதிரி இருக்க அவளைப் பார்த்தான். இவனைப் பார்ப்பதுபோல திரும்பி, கால்களைத் தூக்கி சம்மணமாக அமர்ந்துகொண்டவளைப் பார்க்க சிரிப்பு வந்தது.

“நீங்க இங்க என்ன செய்யுறீங்க?” கையை கேள்வியாக ஆட்டி அபிநயித்துக் கேட்டாள்.

ரகசியமாகக் கதைக்கிறாளாம்! சிரிப்போடு, “எவனாவது வெளில இருந்து வந்து உன்ர கழுத்தை நெறிச்சாலும் எண்டு காவலுக்கு இருக்கிறன்.” என்று அவனும் அவளைப்போலவே அபிநயிக்க, “உங்கட அம்மாவுக்காக மெதுவா கதைச்சா நக்கலா?” என்று அருகிலிருந்த குஷனை எடுத்து அவன் மீது எறிந்தாள் ஆர்கலி.

அதை லாவகமாகப் பிடித்து, முதுகுக்குக் கொடுத்தபடி இலகுவாக அமர்ந்துகொண்டு அவளைப் பார்த்தான் பிரணவன்.

முழு நீள பைஜாமா செட், காலுக்கு சொக்ஸ் என்று அந்த நாட்டுக்கே பொருந்தாமல் இருந்தாள். கலைந்துகிடந்த தலைமுடியோடு உறக்கத்தைத் துறந்த பளிச்சிடும் விழிகள். முகம் மட்டும் ஜன்னலினூடு கசிந்துகொண்டிருந்த நிலவொளியில் தங்கமென மின்னியது.

ஏகாந்தமான இரவு. அமைதியான பொழுது. அதை அழகாக்கிக்கொண்டு ஒரு பெண். உள்ளம் ஏதோ ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சரிவதுபோலிருக்க விழிகளைத் திருப்பியவனின் பார்வையில் அவனது போனைப் பற்றியிருந்த கரங்கள் பட்டது. நீண்ட மெல்லிய விரல்கள் நர்த்தனமாடிக்கொண்டிருந்தது அவன் போனில். தடுக்கும் வலுவற்றுச் சமைந்திருந்தான். அளவாக வளர்த்து அவள் பூசியிருந்த றோஸ் வண்ண நகச்சாயத்துக்கும் அந்த விரல்களின் நிறத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

எந்த விசை உந்தியது என்று தெரியாமலேயே அவனது ஒற்றைக்கரம் நீண்டு சென்று அவளது கையைப் பற்றியது. அவள் நிமிர்ந்து அவனைப்பார்க்க, மெல்லிய நீண்ட விரல்களை நீவிக்கொடுத்தான். புறங்கையில் நீர் கோர்த்து இப்போது உடைந்து சின்னக் காயமாக மாறியிருந்த இடத்தை வருடிக்கொடுத்தான். “இப்ப வலி பரவாயில்லையா பொம்மா?”

அவளின் விழிகள் வியப்பால் விரிந்தது. “ம்ம்.. முகம் தான் எரியுது.” அப்போதும் ரகசியமாகத்தான் வந்தது பதில். மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ஆங்காங்கே நுளம்பு கடித்த தடம் சிவப்பாய் தெரிந்தது.

“மாறிடும்! வெயிலுக்க திரியாத என்ன?” பட்டுப்போன்ற மென்மையோடு சொன்னான்.

“ம்ம்!” கவ்வி நின்ற விழிகளின் வீச்சில் இமைகளைத் தாழ்த்தியவள் பக்கென்று சிரித்துவிட்டாள்.

என்ன என்று பார்த்த பிரணவனுக்கு மானமே போயிற்று! சாரி அணிந்து, பூச்சூடி, பொட்டு வைத்து, ஜிமிக்கி அணிந்து, உதட்டுக்கு இரத்தக் கலரில் சாயம் பூசி, முக்கியமாக பெண்ணுக்கான அத்தனை எடுப்பான வளைவு நெளிவுகளோடும் முழுமையான பெண்ணாக மாறிக் காட்சி தந்துகொண்டிருந்தான் அவன்.

‘எல்லாம் இவளிட்டத்தான் மாட்டுது!’

பட்டென்று போனை எட்டிப் பறிக்கப் பார்க்க, கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு சிரித்தாள் ஆர்கலி.

“பக்கா செக்ஸி பிர..ண..வன் நீங்க!” அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“இதெல்லாம் எப்படி பிரணவன்?” போட்டோவை ஸூம் பண்ணி அவள் காட்டிக்கேட்ட இடத்தைக் கண்டு அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அடிவாங்கப் போறாய்! மரியாதையா தா!”

“ஹாஹா! அந்த போட்டோ ஆல்பத்தை காட்டுங்கோ நான் இத தாறன்!” பேரம் பேசினாள் அவள்.

ஏற்கனவே போன மானம் காணாதா?

“கடைசி வந்தாலும் தரமாட்டன்! நீ போன தா!” அவன் கேட்டும் தராமல் கொண்டு ஓடப்போனவளை எட்டிப் பிடித்துப் பறித்தான் பிரணவன்.

“நீங்க என்ன மாதிரியான ஆள்? இல்ல தெரியாமத்தான் கேக்கிறன், அந்த வயசில அப்படி நடக்கிறீங்க, இந்த வயசில இப்படி நடக்கிறீங்க?” அவளுக்குச் சிரிப்பு நிற்பதாய் இல்லை.

எப்போதும்போல அவன் சிரிப்போடு கேசத்தைக் கோதிக்கொடுத்தான். அவளால் விழிகளை அவனிடமிருந்து அகற்றமுடியவில்லை.

“அது நடந்ததே எனக்குத் தெரியாது. இது மாறுவேட போட்டிக்கு அக்கா போட்டுவிட்ட வேஷம்!” சிரிப்புடன் சொன்னவனின் கைகள் அடுத்ததாய் என்ன செய்யும் என்று உணர்ந்து, அவளின் கையும் ஆவலாய் அவனது கேசத்துக்குள் நுழையப்போக, பின் பக்கமாகச் சரிந்து தடுத்தான் அவன்.

“முடியில மட்டும் கை வைக்காத!” என்றவன், இரு கையாளும் கோதிச் சரி செய்தான்.

“பார்றா! நடு சாமத்தில் போடுற மேக்கப்ப!” அப்படியே எவ்வளவு நேரம் கதைத்துக்கொண்டு இருந்தார்கள் என்றே தெரியாமல் நேரம் போனது. மெல்ல மெல்ல சுருண்டு அப்படியே அந்த சோபாவிலேயே உறங்கிப்போனாள் ஆர்கலி.

“உனக்கு நித்திரை வந்திட்டுது, போய்ப் படு!” என்று அவன் சொல்லியும் போகவில்லை.

“எனக்கு வருதா இல்லையா எண்டு எனக்குத்தான் தெரியும்!” என்றபடி கதைப்படியே உறங்கிப்போனாள். உதட்டினில் மின்னிய சிரிப்போடு நேரெதிரில் இருந்த சோபாவில் இலகுவாக சாய்ந்திருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரணவன்.

தொடரும்...
 
#3
அக்கா உம்மா உம்மா செம ud...... ரோலஸ் என்றால் என்ன .... நுளம்பு அப்படினா.....
 
#5
Romace easyaa varuthu sis ungalukku...tragedy ellam try pannavae pannathaengo .....padikka padiikka arumai
 
#6
அழகான பதிவு
 
#7
Sema romantic ud arkali pranav chemistry dhool lalitha avvalavu mosam illai pola ungal ovvoru kathaiyume classic and unique
 
#8

Epdii ipdi ellamm...
 
#9
அக்கா உம்மா உம்மா செம ud...... ரோலஸ் என்றால் என்ன .... நுளம்பு அப்படினா.....
ரோல்ஸ் like spring rolls
நுளம்பு கொசு
 
#10
Hey...அழகான ஒரு பீலிங் கொடுத்துச்சு ஆர்க்கலி,பிரணவன்து...வெரி கீயூட். செம நிதா...
 
#11
Aarkali Landon kilambum munnadi Chemistry work out aaguma
 
#12
Rosei sis enna solradhunu theriyala ahna oru romantic feel irukku padikumbodhu...ennaku mattum dhan appadiya illai matravargalukum adhu pola feel iruka theriyala..super🤗😍😍😍
 
#13
arumaiyana ud.
 
#14
Superb akka😍😍😍
 
#15
Nice epi sis....
 
#16
Nice ud.....
 
#17
அருமையான பதிவு
ஆர்கலி பிரணவன் ஜோடி பேசி சிரித்து அழகு
 
#18
ரோல்ஸ் like spring rolls
நுளம்பு கொசு
thanks sister...
 
lalu

Well-known member
#19
பிரணவன் மனதில் ஆர்கலி வந்து விட்டாள்....அவள் மனதில் என்ன இருக்கிறதோ.....😍
 
#20
Nice ud sis
 
Top