இதழ் 9

Rosei Kajan

Administrator
Staff member
#1
செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்!


ஆபத்தில் மட்டுமல்ல சின்னதாய் ஒரு அந்தரத்தில் நிற்கையில் கிடைக்கும் உதவி கூட மிகப் பெரியதுதான் இல்லையா? முக்கியமான ஒரு பொருளை வாங்குவதற்குச் செல்கையில் பத்துச் சதம் குறையும்போது அருகில் நிற்பவர் தருகிறபோது, வழிதெரியாமல் தடுமாறுகையில் வழிப்போக்கர் ஒருவர் பாதையைக் காட்டும்போது செய்யும் உதவியும் அந்தநேரத்தில் மிகப்பெரியதுதானே. தடுமாறி நிற்கும் அந்தக் கணத்தில் எங்கிருந்தோ யார் என்றே தெரியாத ஒருவர் செய்கிற சின்ன மனிதாபிமானச் செய்கைக்கு நம் கைமாறு என்னவாக இருக்கவேண்டும்?


“மிகவும் நன்றி!” என்று மனதிலிருந்து வருகிற ஒரு வார்த்தை. அதை முழுமனதோடு முகம் நிறைந்த புன்னகையோடு, அவரின் விழிகளைப் பார்த்துச் சொல்லுகிறபோது, உதவி செய்தவரின் மனதில் தோன்றும் பாருங்கள் ஒரு திருப்தி! ஒரு சந்தோசம். மலையையே முழுதாகப் புரட்டியது போன்ற நிறைவு! அந்த நிறைவு இன்னும் பலபேருக்குக் குட்டி குட்டி உதவிகளைச் செய்யத் தூண்டும். சின்ன உதவிதான் என்கிற நம் அலட்சியம், நம் எடுத்தெறிதல் பலருக்குக் கிடைக்கவேண்டிய பல உதவிகளை நிறுத்திவிடுகிறது.


உங்கள் உதவியால் நான் மிகவும் மகிழ்ந்தேன் என்று உணர்த்துவதில் ஒன்றும் தவறில்லையே. முறையாக நாம் செய்யவேண்டியதும் தானே. மனதிலிருந்து பேசுவோம். மனதார உதவிகளைச் செய்யத் தூண்டுவோம். நாமும் செய்வோம்.


நட்புடன் செந்தூரம்

9.jpg


செந்தூர வானில்

என்னை மட்டும் காதலி -சிறுகதை

கவிதைக் காதலன்

போவோமா ஊர்கோலம்

ஆஹா! சமைக்கலாம் ...

தொடர்கதை - அத்தியாயம் 2

கிரந்தம் தவிர்

தெரிந்து கொள்வோம்

உங்களோடு சில நிமிடங்கள்

நினைவுப் பெட்டகத்தில் இருந்து

உன்னைப் போல் ஒருவன் - சிறுகதை


ஆக்கங்களை வாசித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டால் வருங்காலத்தில் இதழ் மேலும் சிறப்பாக வெளிவர மிகவும் உதவியாக இருக்கும் .

நன்றி நன்றி ! 
Top