இதழ் 9

Rosei Kajan

Administrator
Staff member
#1
நிர்ப்பந்தம்1554061812319.pngதொலைதூர நடைபயணம்
தொடர்ந்தே வரும் நிழல்
பாதங்களிடையே சிக்கி
மிதிப்பட்டு வந்தாலும்
இணைந்தே வர சலிப்பதில்லை..
உறங்காமல் உள்ளமெனும்
ஆழ்கடல் தன்னில் புதையுண்டு
நினைவுகள் எனும் அலைகள்
கரைத்தொடுகையில் அவை
வலிகள் தர மறப்பதில்லை..
என் துடுக்குத்தனங்களும்
என்னை விட்டு தூரம் செல்கையில்
வண்ணம் தீட்டமுடியாத
உடைந்த தூரிகை நானோ
என்றே என்னுள் எழும்
உணர்வை மட்டும் தவிர்க்கமுடியவில்லை..
விடைகள் கிடைக்கப்போவதில்லை
என்றறிந்தும் கிடைத்தாலும்
நான் ஏற்கத்தயாரில்லை..
என்பது புரிந்தும் எதற்கு
என்னை சிலந்திவலை பின்னினுள்
சிக்கவைக்க எத்தனிக்கும்
நிர்பந்த போராட்டம் தேவையில்லையே..


* சமீரா
 

Rosei Kajan

Administrator
Staff member
#2

கல்வி
கல்வி என்பது அறிவாகும்

கலைக்கு அதுவே முதலாகும்

செல்லும் இடங்களில் என்றென்றும்

செம்மை தருவது அதுவாகும்

கல்லார் முன்னே கற்றவர்கள்

கருணை கொண்ட பேச்சாலும்

இல்லார் வாழ்வில் கற்றவர்கள்

இரக்கம் கொள்வதும் அழகாகும்.வாழும் காலத்தில் கல்விமான்கள்

வாட்டம் கொண்டது கிடையாது

சூழும் துன்பத்தில் அவர்தங்கள்

சுயத்தை விற்றது கிடையாது

நாளும் கெட்டதை கண்டாலும்- அதில்

நாட்டம் கொண்டது கிடையாது

தாழும் உலகத்தை வெல்வதற்கும்

தவமாம் கல்விக்கு தடையேதுஎண்ணும் எழுத்தும் கற்றாலே

எங்கள் வாழ்க்கை சிறப்பாகும்

எண்ணம் எல்லாம் நிறைவேற

எழுத்துக் கல்வியும் அவசியமாம்

கண்ணும் கருத்துமாய் கற்றாலே

கடலும் எமக்கு வசமாகும்

திண்ணம் நாமும் கொண்டாலே

சீராய் கல்வி எமக்கேறும்.------------------------------


எட்டுத் திக்கும் எம்மொழி முழங்கும்

கொட்டும் பறையென கொடுந்தமிழ் அதிரும்

கட்டுக் கடங்காமல் கலைத்தமிழ் திமிறும்

தட்டிக் கொடுப்போரால் சங்கத்தமிழ் வளரும்.பாரதி போன்ற பாவலர் கவியிலும்

பாரத மண்ணின் படைப்புகள் பலதிலும்

சீரும் சிறப்பும் தீயென கொண்ட

வீரத் தமிழ் விரைவாய் உயரும்.சுதந்திர வீணையை சுகமாய் மீட்டி

இதந்தரு ராகங்கள் இனிமையாய் பாடி

காதக அசுரர்கள் கழுத்தினை அறுத்து

வதம்செய் நிலையில் தமிழும் இருக்கும்.வெல்லும் வெல்லும் நொடியினில் வெல்லும்

அல்லும் பகலும் தமிழ்மொழி வளரும்

தொல்லுலகும் தமிழின் பெருமையை சொல்லும்

வல்ல மொழியிது தாழ்வின்றி வாழும்.


* மோகனன்
 
Top