இதழ் 8

#1
1550857341363.png

காதலின் விம்பம் இவனோ!


ஏனடா உன் இதயச் சிறையில்
என்னைச் சிறைப்பிடித்தாய்
எத்தனை முறை உன்னிடம்
கேட்டுவிட்டேன்…
ஒற்றை சிரிப்பில் என்னை
ஊமையாக்கிவிடுகிறாய்...
கண்ணிமைத் தட்டி நீ
கடந்து செல்கையில் வளிமண்டலம்
எங்கும் எனக்கு மட்டும்
காற்றழுத்தமா? இல்லை
காதல் கொடுக்கும் அழுத்தமா?
இதயம் தன்னில் இடமேதுமின்றி
உன் காதல் நிரம்ப
எனக்கும் கூட மூச்சுத்திணறல் தான்...
இத்தனை ஆழமாய் காதல் இருக்குமென்றால்
அதன் விம்பம் நீயடா…
உன் விலகல் என்னுள் வேதனை
சிந்தும் தருணமாய் ...
உன் நெருக்கம் என்னுள் வெட்கம்
தரும் மாயமாய் ..
கடிகார முட்களும் கூட
உனக்கான காத்திருப்பில் வஞ்சிக்கின்றதோ…
வாயாடுகிறேன் உன் நினைவுகளுடன்…
தேடுகிறேன் வார்தைகளை நீ வந்த பின்பு…
காதல் அவஸ்தை தான்
ஆனால் இன்று அழகானதோ உன்னால்...!

சமீரா(இலங்கை)


 
#2
1550857556510.png


தவப்புதல்வன்துளித் தித்திப்பாய்
தூளியில்
துயிலுறங்கும்
தூவானமே
தரணியின்
தாரகையை
தற்காத்து
தடுப்பாகிடும்
தாரக மந்திரத்தை
தாலாட்டாக்கிய
தாயின்
தவப்புதல்வனன்றோ நீ!

-தீபி
 
Top