இதழ் 8 -கிரந்தம் தவிர் தொடர்ச்சி...

#1
மருவுதமிழ் மறவாமல் காப்போம்!வி. குகநாதன் அவர்கள் எழுதிய ‘கிரந்தம் தவிர் தமிழ் பழகு’ எனும் ஏட்டிலிருந்து.தனித்தமிழ் பயன்பாட்டுக்குச் செய்ய வேண்டியவை:1. முடியுமானவரை தமிழில் உள்ள 247 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. கிரந்த எழுத்துக்களை ஸ, ஷ, ஜ, ஹ போன்றவற்றை தவிருங்கள். (எடுத்துக்காட்டாக ஹிந்து என்பதை இந்து எனவும் ரஸ்யா என்பதனை இரசியா எனவும் எழுதவும்.)

3. கிரந்தச் சொற்களுக்குப் பதிலான தூய தமிழ்சொற்களைப் பயன்படுத்துதல்.(பட்டியல் இணைப்பைக் காணலாம்)

4. புதிய சொற்களின் தமிழ் மொழியாக்கம் அறிந்து பயன்படுத்துதல். (எடுத்துக்காட்டு: Pen Drive-விரலி, Whatsapp- புலனம்)

கர்ப்பக்கிரகம் கருவறை

கர்மம் செயல்

கலாச்சாரம் பண்பாடு

கலாரசனை கலைச்சுவை

கல்யாணம் மணவினை, திருமணம்

கஷ்டம் தொல்லை, துன்பம்

கம்பீரம் பீடு

கரம் கை

கவிதை பா

காலி வெறுமை

கீதம் பாட்டு, இசை

கீர்த்தி புகழ்

கீர்த்தனை பாமாலை, பாடல்

கும்பாபிஷேகம் குடமுழுக்கு

கோஷம் ஒலி

கேவலம் கீழ்மை

கேளிக்கை பொழுதுபோக்கு

கோபம் சினம்

கௌரவம் மதிப்பு

சகலம் எல்லாம், அனைத்தும்

சகஜம் வழக்கம்

சகி தோழி

சகோதரி உடன்பிறந்தவள்

சங்கடம் இக்கட்டு, தொல்லை

சங்கதி செய்தி

சங்கோஜம் கூச்சம்

சதம் நூறு

சதவீதம், சதமானம் விழுக்காடு

சதா எப்பொழுதும்

சதி சூழ்ச்சி

சத்தம் ஓசை, ஒலி


 
Top