இதழ் 4

Rosei Kajan

Administrator
Staff member
#1

This is, however, a contested distinction as academic work on the cultures and sociology of tr...jpgசெந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்கள்.

மாதாந்தம் வெளிவரும் இதழ்தான் செந்தூரம். ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆவணிமாத இதழ் வெளியாகவில்லை. இனி வரும் காலங்களில் இப்படி நிகழாமல் நிச்சயம் பார்த்துக்கொள்வோம்.

இதோ புரட்டாதி மாத இதழ் வெளிவந்திருக்கிறது. மாதத்துக்கு மாதம் புதுப்பொலிவுடன், புது மெருகுடன் மிளிர்ந்துகொண்டிருக்கிறாள் எங்கள் செந்தூரப்பெண். நெஞ்சை தொட்டுச் செல்லும் சிறுகதைகளுடன், சிந்திக்க வைக்கும் கவிதைகளுடன், இதமான குறுநாவல்களுடன், மூளைக்கு சுடோக்கு, சமைக்க சமையல் செய்முறைகள் என்று அனைத்தையும் தாங்கி வந்திருக்கிறது.

எப்போதும்போல உற்சாகத்துடன் ஆக்கங்களை அனுப்பிவைத்து இதழை இன்னுமின்னும் மெருகேற்றும் அத்தனை எழுத்தாள உள்ளங்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள்!


**************************


செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்!

கடந்து செல்லும் நாட்கள் ஒவ்வொன்றும் மனதில் பாரத்தை ஏற்றியபடியே நகர்ந்து செல்கின்றன. எங்கு பார்த்தாலும் பெண்கள், சிறு பெண்குழந்தைகள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட செய்திகளே செவிகளுக்கு எட்டுகின்றன.யாரை நம்புவது? நம்பக் கூடாது என்றே தெரியாமல், மாமா, சித்தப்பா, தாத்தா, அண்ணா, அத்தான், என்று ‘ஆண்’ என்கிற வரையறைக்குள் வரும் எல்லோரையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் நிலைக்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.முன் வீட்டுத்தாத்தா, பக்கத்துவீட்டு மாமா, பின் வீதியில் இருக்கும் தெரிந்தவர் என்று ஒரு காலத்தில் அயலவரை நம்பிக் குழந்தைகளை வளர்த்த காலம் போய், குடும்பத்து ஆண்களிடம் கூட பிள்ளைகளை விட முடியவில்லை. இது ஆரோக்கியமான விஷயமல்ல. ஆனாலும், தவிர்க்கவும் முடியவில்லை.ஆயினும் அத்தனை ஆண்களும் பிழையானவர்களும் அல்ல! அதனால் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே வன்முறைகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. நம்மைப் பாதுகாப்பவர்களும் ஆண்களே! அதனால்தான் தெரியாத ஊரிலும், அறிமுகமற்ற இடங்களிலும் இன்னுமே பெண்கள் நடமாடுகிறார்கள்.


பிழையானவர்களை மட்டும் பிரித்தறியக் கற்றுக்கொள்ளவும், நம்பிக்கையானவர்களிடம் பாதுகாப்பைத் தேடவும் பழகிக்கொள்ளுதல் மிகச் சிறந்த வழி!


பெண் பிள்ளைகளுக்கு, ஆண்களின் தொடுகைகள் பற்றிய வகைகளை (நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்) சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்களின் பார்வையை வைத்துப் பிரித்தறியக் கற்றுக்கொடுக்க வேண்டும்.


ஆபத்தான சூழ்நிலை ஒன்று அமையுமாயின், கத்திக் கூச்சலிட்டு இன்னுமே பாதகமான எதுவும் நடக்கவிடாமல், அமைதியாக புத்திசாலித்தனமாக சாதுர்யமாக அந்த இடத்தை விட்டு நழுவும் வழிகளைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.


ஒவ்வொரு வழியாலும் தைரியமான குழந்தைகளை உருவாக்குவோம். ஏதாவது ஒரு தற்காப்புக்கலையின் அடிப்படையையாவது அறிந்து வைத்திருத்தல் சிறந்தது.


எல்லாவற்றையும் விட அம்மாவும் அப்பாவுமாக இருந்து பிள்ளையின் மனதை தைரியப்படுத்துங்கள். அவர்களோடு கதையுங்கள். ஆயிரமாயிரம் சந்தேகங்கள், விடை தெரியா வினாக்கள் குழந்தைகள் மனதில் இருக்கும். அவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரியாமலேயே மனதுக்குள்ளேயே போட்டிருப்பார்கள். அவற்றை வெளியே கொண்டு வாருங்கள். தைரியத்தைக் கொடுங்கள். எங்காவது ஏதாவது பிரச்சனைகள் நடந்திருந்தால், அதுபற்றி அவர்களோடு அலசி ஆராயுங்கள்.


முக்கியமாக அப்பாக்கள் பெண் பிள்ளைகளோடு ஆத்மார்த்தமான நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உனக்கு நான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கையினைக் கொடுங்கள்.


ஆரம்பத்தில் சிறிதாய் ஆரம்பிக்கும் விஷயங்கள் தான் பாரிய வன்முறையில் வந்து முடியும். குழந்தைகளுக்கு, எதை ஆரம்பத்திலேயே களைய வேண்டும், அல்லது தவிர்க்க வேண்டும் என்று தெரியாது. அவற்றை எடுத்துச் சொல்லுதல் முக்கியமானது. அவர்கள் போகிற போக்கில் சொல்லுகிற சின்ன சின்ன விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்பது என்பது மிக மிக முக்கியம்!

ஆண் உறவுகளே, நீங்கள் இல்லாமல் இந்த உலகத்தில் பெண்கள் இல்லை. உங்களின் பாதுகாப்பு இல்லாமல் அவர்களின் நிம்மதியான வாழ்க்கை இல்லை.

காவலனே காவு கொள்ளுதல் நியாயமா? இந்த உலகின் அழகை கூட்டுபவர்கள் பெண்கள். உங்களை வாழ வைப்பவர்களும் அவர்களே! வாழ்வின் மீது பிடிப்பைக் கொடுப்பவர்களும் அவர்களே! இவற்றில் துளியேனும் மறுப்பு உண்டா? அப்படியிருக்கையில், அப்படியானவர்களைக் காயப்படுத்தலாமா? நீங்களும் வாழ்ந்து பெண்களையும் வாழ வையுங்கள்!

மாற்றம் நிகழும்! தடம் மாறிய ஒருசில ஆண்களால் உருவான இந்நிலை ஓராயிரம் நல்ல உள்ளம் கொண்ட ஆண்களால் மாறாதா என்ன? மாறும்! மாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையோடு,


என்றென்றும் நட்புடன்,

செந்தூரம். 
Last edited:

lalu

Well-known member
#2
Open aagalai sister...
 

Rosei Kajan

Administrator
Staff member
#3
Open aagalai sister...
லிங்க் ad பண்ணமறந்துட்டேன் மா ...நன்றி ..இப்போ பாருங்க, வாசிக்கலாம் .
 

lalu

Well-known member
#4
Thx akka☺👍
 

Abi

New member
#5
Open akavilla pls
 
Top