இதழ் 10

Rosei Kajan

Administrator
Staff member
#1
செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்!


பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மிக மிக வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் மிக ஆபத்தான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கு யாரெல்லாம் காரணம்? ஆண்கள் மட்டும் தானா? அல்லது அத்தனை ஆண்களும் அப்படியானவர்கள்தானா? இல்லையே! அப்போ பெண்களும் காரணமாகத்தானே இருக்கிறோம். வீடுகளும் காரணமாகத்தான் இருக்கிறது.

பெற்றவர்களின் மனங்கள் விசாலமாக வேண்டியிருக்கிறது. பிள்ளைகள் மனம் திறந்து நம்மிடம் பேசக்கூடிய ஒரு வெளியை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சரியோ பிழையோ அவர்களின் கருத்துக்களைப் பொறுமையாக உள்வாங்கவேண்டும். தாயும் தகப்பனும் வேலை வேலை என்று ஓட, தனிமையில் வாடும் குழந்தைகளுக்கு யாரோ எங்கிருந்தோ போடும் ஒரு ஹாய் உற்சாகத்தைக் கொடுக்கிறதென்றால், அவர்கள் எவ்வளவு தூரத்துக்குத் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

பெற்றவர்களுக்கு வீட்டினருக்கு மறைத்து ஒரு உறவை அது நட்பாகட்டும், காதலாகட்டும், சகோதரத்துவமாகட்டும் எதுவாக இருந்தாலும் அதைப் பேணுதல் அவசியமா என்று பிள்ளைகள் சிந்திக்க வேண்டும்! வீட்டுக்கு மறைத்து ஒன்றைச் செய்ய ஆரம்பிக்கிறோமாக இருந்தால், அதன் பிறகு நடக்கப்போகிற தவறுகளுக்கு நாமும் காரணகர்த்தாவாகி விடுகிறோம் என்பதுதான் நிஜம்.

இது எல்லாவற்றையும் தாண்டி, ஒரு பிரச்சனையில் பிள்ளைகள் மாட்டிவிடும் பட்சத்தில் வீட்டில் அவர்கள் அதைச் சொல்லுமளவுக்கு அவர்களுக்கான தைரியத்தைப் பெற்றவர்கள் வழங்கியே ஆகவேண்டும்.

இவ்வுலகுக்கு நாம் கொண்டுவந்தவர்கள் தான் நம் குழந்தைகள். அவர்களோடு பேசுங்கள், சிரியுங்கள், பகிருங்கள். அதையே அவர்களையும் செய்ய வையுங்கள்! திடமுள்ள குழந்தைகளாக அவர்கள் வளரவேண்டும். குழந்தை வளர்ப்பில் சிந்தித்துச் செயல்படுவோம்.
நட்புடன் செந்தூரம்.

10.jpg

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
 
Top