இதழ் 1

Rosei Kajan

Administrator
Staff member
#1
This is, however, a contested distinction as academic work on the cultures and sociology of tr...jpg
ஹாய் ஹாய் மக்களே,நாங்கள் பார்த்து் பார்த்துச் செதுக்கிய சிற்பம் ஒன்றை உங்கள் கண்முன்னே காட்ச்சிப்படுத்தும் நேரமிது! மிகவுமே நிறைவாய் உணர்கிறோம்! இதழ் மிக மிக சிறப்பாய் அமைய பங்களிப்புச் செய்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! இன்று மட்டுமல்ல என்றுமே உங்களின் ஆக்கங்களும் ஊக்கங்களும் எங்களுக்கு வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்த்தி ஊக்குவித்த அன்பு உள்ளங்களுக்கு இதயம் நிறைந்த நன்றி! புதிதாய் இணைய விரும்பும் ஆர்வலர்கள் அத்தனைபேரையும் இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்!!

இதோ எங்கள் இதழ், பார்வையிட்டு படித்து மகிழ்வீர்! எப்படி இருந்தது என்றும் சொல்வீர்களாக இருந்தால் மிகவுமே மகிழ்வோம்! நிச்சயம் சொல்லவேண்டும்; குறையானாலும் சரிதான் நிறையானாலும் சரிதான். இன்னும் எப்படி இருந்தால் இன்னுமே நன்றாக இருக்கும் என்பதையும் சொல்லவேண்டும்! அப்போதுதானே இன்னுமின்னும் புதுப்பொலிவுடன் மின்னுவாள் எங்கள் செந்தூரப்பெண்!


ஆசிரியர் உரை:

செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்கள்!காலம் கடகடவென்று ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒருகாலத்தில், தினசரி பத்திரிகைகளுக்காக காத்திருந்து படித்த நிலை மாறி, புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று தேடித்திரிந்து வாங்கி, பொக்கிஷமாய் சேமித்த நாட்களும் போய்க்கொண்டிருக்க, ‘மின்னிதழ்’ நம் உள்ளங்கைக்குள் கிடைத்திடும் காலம் விரைந்தோடி வந்திருக்கிறது. இந்த நாட்களுக்கு ஏதுவாய், அழகிய மின்னிதழ் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்!இல்வாழ்வின் சரிபாதியாக இணைந்து இன்ப துன்பங்களில் பக்கபலமாய் தம்மோடு இணைந்திருக்கும் தம் பாதியின் நீண்ட ஆயுளுக்கும், அவர்களின் ஆரோக்கியத்துக்குமாய் பெண்கள் இட்டுக்கொள்ளும் செந்தூரம், புனிதமும் போற்றுதலுக்கும் உரியதே!அதைப்போலவே, சித்த மருத்துவத்தின் அக மருந்துகளில் ஒன்றான செந்தூரமும் மிகுந்த வீரியமும் மகத்துவமும் கொண்டது! மிக சொற்பமாய் உட்கொண்டாலும் பாரிய நோய்நொடிகளை தீர்க்கும் வல்லமை கொண்டவை இந்த வகையான செந்தூரங்கள்!அதேபோலவே, நம் செந்தூரத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறோம். சின்னதாய் ஆரம்பித்தாலும், அதனை வாசிப்பவர் வாழ்வில் மிகுந்த பலனை கொடுக்கவேண்டும் என்கிற முனைப்போடும், இந்த மின்னிதழ் உங்களுக்கு பயனுள்ளதாய் அமையவேண்டும் என்கிற எதிர்பார்ப்போடும் உருவாக்கியிருக்கிறோம். எதிர்வரும் காலங்களில் இன்னுமின்னும் பயனுள்ளதாய் மாறும் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உண்டு.செந்தூரம் தாங்கும் செந்தூரப்பூக்களுக்கு பயனுள்ளவையாக சமையல் குறிப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிந்திக்க சில விஷயங்கள், சிரிக்க சின்னச் சின்ன விஷயங்கள், மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக வார்த்தைகள், கதைகள், சிறுகதைகள், தொடர்கள் என்று பல்சுவை அம்சங்களையும் தாங்கி வரக் காத்திருக்கிறது உங்கள் செந்தூரம் மின்னிதழ்.ஆதரவு கொடுத்து பயன் பெறுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்,செந்தூரம் ஆசிரியர் குழு.

ஆக்கங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
senthuram.emagazine@gmail.com

இதழ் பற்றிய கருத்துக்களை இது திரியிலேயே பகிர்ந்து கொள்ளலாம்.
 
Last edited:
Top