இணையத்தில் வாசித்ததில் பிடித்தது...

Rosei Kajan

Administrator
Staff member
#1
என்றைக்காவது உங்கள் நேரம் கடந்துவிட்டது எனச் சிந்தித்துள்ளீர்களா ?

இதற்கு மேல் எந்த வெற்றியும் கிடையாது எனத் தளர்ந்துள்ளீர்களா?

இதனைக் கொஞ்சம் வாசியுங்கள்.


ஒபாமா ஓய்வு பெறும் போது அவரது வயது 55.ஆனால், டிரம்ப் பதவியேற்கையில் அவர் வயது 70.

தனது 35 ஆவது வயதுவரை வெறும் பத்து டாலர்களையே சம்பளமாகப் பெற்றவர், சீன நாட்டுத் தொழில் முனைவர் ஜாக் மா (Jack Ma ). இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார்.


தனது 30 வது வயது வரை உணவுக்கே வழியின்றி இருந்தார், Harry Potter நூலை எழுதிய J.K.Rowling.

colonal Sanders தனது 65 வது வயதில்தான் KFC யை ஆரம்பித்தார்.அதேநேரம், Warren Buffett வணிகத்தை ஆரம்பிக்கும் பொழுது அவர் வயது 11.


Mark Zuckenberg தனது 23 வது வயதில் பலகோடிகளுக்கு அதிபதியானார் .ஆனால், Henry Ford தனது 40 வது வயதுவரை பெரும் தோல்வியையே சந்தித்து வந்தார்.இவை சில உதாரணங்கள். இதில் வராத பல பல சாதனைகளுக்கு வயது , இல்லாமை என்பன ஒரு தடையாகவே இருக்கவில்லை.


வெற்றிக்கு வயதோ, இல்லாமையோ முக்கியம் இல்லை.


நீங்கள் பந்தயத்தில் ஓடவில்லை தனி வழியில் பயணிக்கிறீர்கள் . எனவே மனமுடைந்து விடாதீர்கள்!

முயற்சியைக் கைவிடாதீர்கள். அதுவே பிரதானமானது.

நேரம் வருகையில் உங்கள் வெற்றியும் வந்து சேரும் , அன்று உங்கள் கவலைகள் மறையும் .


புகைப்படங்கள்: இணையத்தில் பெற்றவை.
 
Top