அவள் ஆரணி 6

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம் 6மனம் விட்டே போயிற்று அமராவதி அம்மாவுக்கு. சற்றும் எதிர்பாராத நேரத்தில் பிடரியில் படார் என்று ஓங்கி அறைந்தால் எப்படி இருக்கும்? மகனை மணக்கோலத்தில் கண்டபோது அப்படித்தான் இருந்தது. அவர் கட்டிவைத்த கோட்டைகள் அத்தனையும் கண்முன்னே இடிந்துவிழக் கண்டார். அந்தக் கணத்தில் அவர் உணர்ந்த பேரதிர்வு இரவாகியுமே அவருக்குள் பூகம்பத்தைக் கிளப்பியபடியே இருந்தது. இன்னுமே மனம் மருகிக் கருகிக் கொண்டிருந்தது. நடந்துவிட்ட நிஜத்தை ஏற்றுக்கொண்டு நாளாந்த வாழ்வுக்குள் தன்னைத் திணிக்க முடியாமல் நெஞ்சு பெரும் குரலெடுத்துக் கதறிக்கொண்டிருந்தது.


அவள் யாரோ எவரோ? எப்படி இருப்பாள் என்றுகூடி கவனிக்கவேயில்லை. எல்லாம் போயிற்று! வீடே களவுபோனது போல அவரின் கனவுகள் எதிர்பார்ப்புகள் எல்லாமே கலைந்து போயிற்று! இன்னுமே ஒவ்வொரு தமிழ் குடும்பங்களும் முக்கியமாக ஆண் பிள்ளைகளைத் தமது தலைமுறையின் வறுமை என்கிற சாபக்கேட்டின் விடியலாகத்தானே பார்க்கின்றன. அவர்கள் பாதை மாறிப் போகையில் ஏற்பது சுலபமும் அல்லவே!


அவன் மன்னிப்புக் கேட்க வந்தபோது முகம் பார்க்கவே பிடிக்கவில்லை. பேச்சைக் கேட்கவே விருப்பமில்லை. நம்பிக்கைத் துரோகம்; அது பெரும் வலியைக் கொடுத்திருந்தது. பெற்றெடுத்துப் பாசமாக வளர்த்த மகனின் மீது இவ்வளவு வெறுப்பைக் கொள்வார் என்று அவரே எண்ணிப் பார்த்திராத அளவு வெறுப்பு உண்டாயிற்று! கூடவே ஒரு ஆத்திரமும்! நான் என் சந்தோசம்தான் முக்கியம் என்று சுயநலமாக வாழாமல் என் ஆசைகளை, சந்தோசங்களை எல்லாம் துறந்து, சந்நியாசிபோல் ஒடுங்கி உன்னை வளர்ந்துவிட்டால் நீ உன் வாழ்க்கையைத் தேடிக்கொண்டு போவாயா? எனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் பிற்காலத்துக்கு வழி என்ன என்று யோசிக்காமல் உன்னையே நம்பி நான் இருக்க, நீ யாரோ ஒருத்தியைக் கூட்டிக்கொண்டு வருவாயா? அவ்வளவு இலகுவா விடமாட்டேன். மனம் குமுறியது. ஆவேசமும் சேர்ந்து வந்தது. கண்ணீர் வழிய ஒற்றைக் கையைத் தலையணையாக்கி அப்படியே நிலத்தில் சரிந்துகொண்டார். ஊனுமில்லை உறக்கமுமில்லை.


அந்த வீட்டின் மயான அமைதி ஆரணியை என்னவோ செய்தது. அவள் வீட்டிலும் அப்பா எப்போதும் தொழில் தொழில் என்றுதான் இருப்பார். அம்மா மகளிர் மன்றம், ஏதாவது விழாவுக்கு விருந்தினராகச் செல்வது, யாருக்காவது ஏதாவது உதவிகள் செய்வது என்று போய்க்கொண்டே இருப்பார். ஆனாலும், வேலை ஆட்கள் என்றும் பெரிதாக யசோதா வைத்துக்கொள்வதில்லை. சமையல் உதவிக்கு ஒருவர், தோட்டம் பார்ப்பதற்கு இன்னொருவர் என்று இருவர் மட்டுமே நிரந்தர வேலையாட்கள். பெரும்பாலும் சமையலைப் பார்ப்பதும் யசோதா தான். அவர் இல்லாத பொழுதுகளில் மட்டும்தான் சரஸ்வதி அம்மா சமைப்பார். ஆனாலும் அந்த வீட்டில் ஒரு கலகலப்பு இருக்கும். சந்தோசம் இருக்கும். துள்ளல் இருக்கும். இந்த மயான அமைதி?


காயலினி கூட சத்தமில்லையே.


“இந்த வீடு எப்பவும் இப்படித்தானாடா நிக்ஸ்?”


தான் வாழப்போகும் வீட்டின் சுபாவத்தை அறிந்துகொள்ளக் கேட்டாள்.


இல்லை என்று தலையசைத்தான் நிகேதன். “வீட்டு நிலமை இதுதான் எண்டாலும் சந்தோசமா பொழுது போகும். டிவி, காயலினியோட சண்டை, அம்மாட அதட்டல் இப்படி.. அண்ணா அண்ணி எடுத்தா மட்டும் கொஞ்சநேரம் அமைதியா இருப்போம். அதுவும் கொஞ்ச நேரம் தான். பிறகு அண்ணிய வில்லியாக்கி அவா கதைச்சதை சொல்லிச் சிரிச்சு பகிடிபண்ணி எண்டு மூட் மாறிடும்.” என்றான் அவன்.


“ஓ.. அப்ப நான் வந்ததுதான் இந்த அமைதிக்குக் காரணமா?” அதைச் சொல்லும்போதே அவள் முகம் வாடிப் போயிற்று! தன்னால் அவனுக்கு ஒன்று என்பதை எப்போதுமே அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.


அவனுக்குக் கோபம் வந்தது. “நீ வந்தது காரணமில்லை. நமக்கு நடந்த கல்யாணம்தான் காரணம்.” என்றான் அழுத்தமாக.


அப்போதும் அவள் முகம் தெளியவில்லை.


“ஆரா இங்க பார்! நீ வாழ்ந்த வாழ்க்கைக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தமே இல்ல. காதலிக்கேக்க கூட இத நான் உனக்குச் சொல்லி இருக்கிறன். அதைவிட, இந்த வீட்டுல இண்டைக்குத்தான் நமக்கு முதல்நாள். இண்டைக்கே எல்லாம் சரியாகும் எண்டு எதிர்பாக்கிறது சரியோ சொல்லு? கொஞ்ச நாள் போக எல்லாம் சரியாகும். நான் சரியாக்குவன். அதுவரை எனக்காக என்ர செல்லம் கொஞ்சம் பொறுத்துப் போகவேணும். சரியா? நாளைக்கு காலையிலேயே நான் வெளில போயிடுவன். வேலை தேடவேணும். நீ தனியாத்தான் இங்க இருக்கவேணும். அம்மா ஏதும் சொல்லக்கூடும். கயலினி என்ன செய்வாளோ தெரியாது. நான் வந்து உனக்காக கதைச்சன் எண்டு வை, உன்னில இருக்கிற கோபம் தான் கூடும். அதால கொஞ்சநாள்.. அமைதியாத்தான் போகவேணும். அதுக்காக எல்லாத்தையும் பாத்துக்கொண்டு சும்மா இருப்பன் எண்டும் நினைக்காத. ஓகே?” என்று அவன் கேட்டபோது, அவள் முகம் மலர்ந்து போயிருந்தது.


“உனக்காக நான் எதையும் பொறுப்பன் நிக்ஸ். நீ எண்டைக்கும் எனக்குத் துணையா இரு. அவ்வளவும் போதும்!” என்றாள் அவள்.


“முழு விசரியடி நீ. உனக்குத் துணையா இருக்காம வேற யாருக்குத் துணையா இருக்கப் போறன்?” என்றபடி அவளை அணைத்தான் அவன்.


“ஐயோ கிட்ட வராத!” என்று தள்ளிவிட்டாள் அவள்.


“கட்டின மனுசன கிட்ட வராத எண்டு சொல்லுறாய். நல்லா இல்ல சொல்லிப்போட்டன்!”


“அவிச்சுக் கொட்டுதடா! உடம்பெல்லாம் ஒட்டுது. குளிச்சா நல்லம் போல இருக்கு.” என்று சிணுங்கினாள் ஆரணி. அறையின் வெளிக்கதவைத் திறந்து வைத்தும் தாங்க முடியாத அளவில் அவிந்தது.


“கிணத்தடிக்குத்தான் போகோணும். வா!” என்று எழுந்தவன், அப்படியே அமர்ந்து அவளைப் பார்த்தான்.


“என்ன?”


“குளிச்சிட்டு என்ன போடப்போறாய்?” அந்தக் கேள்வியே அவன் குரலை உள்ளுக்கு இழுத்துக்கொண்டது. ஒரு நைட்டி வாங்கக்கூடி அவனிடம் பணமில்லை. அவமானமாய் உணர்ந்தான்.


அவளுக்கும் புரிந்தது. புரிந்ததைவிட அவன் வருந்துவது பிடிக்கவில்லை. “விடு மச்சி! உன்ர சாரம் சேர்ட் இருக்குதானே சமாளிப்பம்!” என்றாள் சிரிப்புடன்.


உடனேயே அவனது காப்போர்ட்டைத் திறந்து ஒரு சாரத்தையும் அவனது டீ- ஷார்ட் ஒன்றையும் எடுத்துக்கொண்டாள்.
 
Last edited:

NithaniPrabu

Administrator
Staff member
#2
உள்ளாடைகள்? தோன்றிய கேள்வியைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். வக்கற்றவன் என்று அவன் நெஞ்சே அவனைக் குத்தியது.


“டேய்! போதும் சோக கீதம் வாசிச்சது! எழும்பி வா! நாங்க கட்டி பத்து வருசமா போயிட்டுது? இன்னும் ஒருநாள் கூட முடியேல்ல. ஒன்றுமே இல்லையே எண்டு அழுறதுக்கு ஒண்டும் நடக்கேல்ல. அமையிற சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கிறம் எண்டுறதுதான் கேள்வி. நான் சமாளிப்பன், நீ வா. வெளில தனியா போக எனக்கு இரவில பயம்!” என்று அவனையும் இழுத்துக்கொண்டு கிணற்றடிக்கு நடந்தாள்.


பெரிய ஆழமில்லாத கிணறு. அதன் முன்னே சீமேந்தினால் சதுர வடிவில் இழுத்த நிலம். அதை ஓலைக்கிடுகினால் மறைத்துக் கட்டியிருந்தார்கள். கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு டாங்க் இருந்தது. பக்கத்தில் சீமெந்தினால் ஆன கட்டு, உடைகளைத் துவைப்பதற்கு ஏற்றவாறு சரிவாக கட்டப்பட்டிருந்தது.


“இதுக்க இறங்கவா நான்!” டாங்க்கினைக் காட்டிக் கேட்டாள் அவள்.


“அம்மா முதுகில ரெண்டு போடுவா பரவாயில்லையா?” என்றான் அவன்.


“ஏனடா?” வித்தியாசமாக இருந்த குட்டி டாங்க் அவளை ஈர்த்தது. அவன் மறுத்ததால் முகத்திச் சுருக்கிக்கொண்டு கேட்டாள்.


“அதுக்க இறங்கிக் குளிக்கிறேல்ல. அதுக்க நிரப்பிப்போட்டு அள்ளிக் குளிக்கவேணும்.”


“நீ என்ன செய்வாய்?”


“கிணத்திலேயே அள்ளிக் குளிச்சிடுவன்.”


“தள்ளு. நானும் அள்ளிப் பாக்கிறன்.”


“வேணாம் விடு. கை நோகும். நான் அள்ளி டாங்க்க நிரப்புறன். நீ குளி.” என்றவனின் பேச்சை அவள் கேட்கவேயில்லை. அப்படிக் கேட்டுவிட்டால் அது ஆரணியும் அல்லவே!


“என்னப்பாத்தா, உனக்கு அந்தளவுக்கு நோஞ்சான் மாதிரியா இருக்கு! தள்ளுடா!” என்று வீராவேசமாக ஆரம்பித்தவள் இரண்டாவது வாளியிலேயே உண்மையிலேயே களைத்துப்போனாள்.


அதைவிட மொத்தமான கயிறை இறுக்கிப் பற்றிய விரல்களின், உள்ளங்கையின் மென்மையான தசைகள் வலி எடுக்க, “அம்மாடி! என்னால ஏலாது போடா!” என்றாள் முகத்தைச் சுருக்கியபடி.


“இதைத்தானே முதலும் சொன்னனான். நான் சொல்லுற எதையாவது எண்டைக்காவது நீ கேட்டிருக்கிறியா?” என்றபடி வாளியை வாங்கிக்கொண்டான் அவன்.


அவனது வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவளுக்கு விளங்காதா?


“நீ சொன்னதை கேட்டிருந்தா உனக்கு காதலியாத்தான் வந்திருப்பனா இல்ல மனுசியா பக்கத்தில நிண்டு தண்ணி அள்ளித்தாடா எண்டு உரிமையா கேப்பனா?”


“இதெல்லாம் தேவையா உனக்கு?” ஆற்றாமையோடு கேட்டான் அவன்.


பார்த்த கணமே அவனுக்குத்தான் அவளைப் பிடித்தது. அது காதலில்லை. ஒருவித ஈர்ப்பு. அவளின் நிமிர்வில், தைரியத்தில் வந்த பிரமிப்பு. அது அவளைக் கவனிக்க வைத்தது. கவனிக்கக் கவனிக்க அவள் அவனின் ரசனைக்குரியவளாக இருந்தாள். தானாகவே தேடித் தேடி ரசித்தான். தன் ரசிப்பை அவளுக்குத் தெரியாமலேயே தான் வைத்தும் இருந்தான். அவளிடம் என்ன இருந்தது என்று கேட்டால் தெரியாது. எந்தக் கணத்தில் முதன் முறையாக அவன் முன்னே வந்து நின்றாளோ அந்தக் கணத்திலிருந்து அதன் பிறகெல்லாம் அவன் விழிகள் தானாகவே அவளைத் தேடிக் கண்டடைந்துவிடும். அவளின் ஒவ்வொரு செய்கையையும் கவனித்து ரசிக்கும். அவளைக் காணாவிடில் தேடி அலையும். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் கண்டால்தான் அமைதிகொள்வான்.


மெல்ல மெல்ல அவன் உள்ளம் அவள் பால் நகருகிறது என்று உணர்ந்தபோது துன்பத்தைத் தான் அனுபவித்தான். ஆனால்.. அவள் என்ன செய்தாள்?


“ஹல்லோ பாஸ்! கனவு கண்டது காணும். தண்ணிய அள்ளி ஊத்துங்க!” அவள் குறும்புடன் சொல்ல, பழைய நினைவுகள் கொடுத்த உந்துதலில் தண்ணீர் நிறைந்திருந்த வாளியை அப்படியே உயர்த்தி அவள் தலையில் கவிழ்த்துவிட்டான் நிகேதன்.


“ஐயோ.. அம்மா!” திடீரென்று எதிர்பாராமல் உடல் முழுவதையும் நனைத்துவிட்ட கடுங்குளிரில் துடித்துப்போனாள் ஆரணி.


அவனுக்கும் தன் செயல் அப்போதுதான் உறைத்தது. “அச்சோ.. யோசிக்காம விளையாட்டுக்கு ஊத்திட்டன். சாரிடி.” என்றபடி அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.


“நடுங்குது நிக்ஸ்..!” மளுக்கென்று கண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு. அவன் இறுக்கி அணைத்துக்கொண்டான். அவளது கண்ணீர் அவன் மார்பைக் சுட்டது.


“சுடு தண்ணி வச்சுக் கொண்டுவரவா?” அவன் கேள்வி அவனுக்கே அபத்தமாகப் பட்டது. இனி வச்சு அது சூடாகி வரும்வரையில் அவள் இப்படியே நிற்கமுடியுமா? அவளுக்கும் புரிந்தது. அதைவிட எத்தனை நாட்களுக்குச் சுடுதண்ணிக் குளியல் பொருந்தும்?


“இல்ல இப்படியே நான் குளிக்கிறன். பழகத்தானே வேணும்!” அவனிடமிருந்து விலகி ஒரு பிடிவாதத்துடன் தேகம் நடுங்க நடுங்க தலையில் அள்ளி ஊற்றியவளைக் கண்டு உறைந்துபோய் அப்படியே நின்றான் நிகேதன்.


‘பழகத்தானே வேணும்.’ இப்படி எத்தனையை பழக்கப்போகிறாள் அவனுடைய ஆரணி?


ஒவ்வொரு முறையும் அள்ளி ஊற்றும்போதும் அவள் தேகம் நடுங்கியது. வேக வேகமாகக் குளித்துவிட்டு வந்தவளுக்கு நடுக்கம் போகவேயில்லை.


அவள் அணிந்திருந்த ஆடைகளை அலசி கொடியில் உலரப்போட்டுவிட்டான் அவன்.


முகம் சிவந்து மூக்குச் சிவந்து அழுகை வந்தது அவளுக்கு. அடக்கிக்கொண்டு தலையைத் துவட்டினாள். அவன் தலைக்குப் பிடிக்கும் ஹெயர் டிரையரால் உடல் முழுவதும் பிடித்துவிட்டும் உடலுக்குள் ஊடுருவிவிட்ட நடுக்கம் போகமாட்டேன் என்றது. வேக வேகமாக தலையைக் காயவைத்துவிட்டு ஓடிவந்து கட்டிலுக்குள் சுருண்டுகொண்டாள்.


தானும் வேறு உடைக்கு மாறிக்கொண்டு வந்து அவளருகில் படுத்தான் நிகேதன். போர்வைக்குள் சுருண்டு இருந்தவளை தனக்குள் இழுத்துக்கொண்டான். தன் தேகச் சூட்டினை அவளுக்கும் ஏற்றும் பொருட்டு முகம் கைகால்களை வருடிக்கொடுத்தான். சத்தமேயில்லாமல் அவனுக்குள் அடங்கினாள் ஆரணி.
 
Last edited:

NithaniPrabu

Administrator
Staff member
#3
“என்னடா? பிழையான முடிவு எடுத்திட்டதா நினைக்கிறியா?” அவனது கேள்வியில் சூடான கண்ணீர் காதுகளை நனைக்க விரல்களால் அவன் உதடுகளை மூடினாள் அவள்.


“ஒரு குளிர் என்ர காதலை அசைச்சுப் பாக்கும் எண்டு நினைக்கிறியா நிக்ஸ்? எனக்கு நடுங்குதுதான். பழக்கமில்லை தான். எப்படி இதப் பழகிறது எண்டுதான் யோசிக்கிறன். விலகிறது எப்படி எண்டில்ல.” கண்ணீரோடு சொன்னவளை அப்படியே அணைத்துக்கொண்டான் அவன்.


“சரி அழாம கண்ண மூடு. இனி இருட்ட முதலே குளிச்சா இவ்வளவு குளிர் இருக்காது!”


வருடிக்கொண்டிருந்தவனின் அணைப்பு மெல்ல மெல்ல இறுகியது. உடலைத் தின்றுகொண்டிருந்த குளிருக்கு இதமாக அவளுக்கும் அந்த அணைப்பு அத்தியாவசியமாகிப் போயிற்று. அவன் மார்புக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவனுக்குள் அடங்கியபோது போர்வை தராத வெப்பத்தை அவன் தேகம் தரத் தொடங்கியது. அவள் கரைந்துகொண்டிருந்தாள். அவன் இன்னுமே சூடாகிக்கொண்டிருந்தான்.


போட்டுக்கொண்ட தீர்மானங்கள் புதையுண்டு கொண்டிருக்க, அவனுடைய தேவைகள் அவளுக்குள் தேடலாக மாறத் தொடங்கியது.


குளிர் அடங்கி, அவனது சூடான மூச்சுக்காற்றை உள்வாங்கத் தொடங்கியபோதுதான் அவனது தேடலின் ஆபத்தை உணரத் தொடங்கினாள் ஆரணி.


“நிக்ஸ்! வேண்டாமடா!” பலகீனமான குரலில் மறுத்தாள்.


“வேணாமா?” காதுக்குள் தீ மூட்டினான் அவன். அவனையே அவள் மறுத்துவிட்டது போன்ற மூர்க்கம் அந்தக் கேள்வியில்.


எப்படிச் சொல்லுவாள்? காதல் கொண்டு மணந்தவனின் கையணைப்புக்குள் இருந்துகொண்டு, கரைந்துவிடு அவனுக்குள் தொலைந்துவிடு என்று கூக்குரலிடும் உள்ளத்தோடு மறுப்பது இலகுவாயில்லை அவளுக்கு. கண்ணோரம் கசிந்தோடியது கண்ணீர் துளிகள்.


“இப்ப வேண்டாம் நிக்ஸ்!” உடைந்த குரலில் உரைத்தாள்.


உணர்வுகள் உந்தும் பொழுதுகளில் எல்லாம், அறிவும் அதுகொண்டு எடுத்த முடிவுகளும் தோற்றுவிடுமே! அதில் விருப்பமில்லை அவளுக்கு.


“வாழ்க்கையை இன்னுமே சிக்கலாக்க வேண்டாம் நிக்ஸ்.”


அவன் பதிலே சொல்லவில்லை. அவளை விட்டு விலகவும் இல்லை. அப்படியே இருந்தான்.


தன்னை மூடியிருந்தவனின் முதுகை அவள் விரல்கள் வருடிக்கொடுத்தன. “என்னையும் உன்னையும் யாராலயும் பிரிக்கமுடியாத இடத்துக்கு வந்தாச்சு நிக்ஸ். இப்போதைக்கு இது போதுமே! இனி முன்னுக்கு வருவோமடா. அதுக்குப்பிறகு சந்தோசமா ஆரம்பிப்போம்.” சிறு குழந்தைக்குச் சொல்வதுபோலச் சொன்னாள்.


அவனோ அசையவில்லை.


“என்னடா?”


“ம்ம்!” என்றான் அவன்.


“கோவமா?”


“பாதுகாப்பா ஆரம்பிப்பமா?” தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் எல்லையை அவன் தாண்டிவிட்டான் என்று விளங்கிற்று அவளுக்கு.


அவளாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏனோ அது பிடிக்கவில்லை. அழகான தாம்பத்யம். அந்த அழகிய இல்லறத்தின் முழுமையான சந்தோசத்தில் உதிக்கும் குழந்தை. அறிந்த நாளில் இருந்தே கொண்டாடிப் பெற்றுக்கொள்ளும் பிள்ளை. எல்லாம் எவ்வளவு அழகாயிருக்கும். அதைவிடுத்து கவனாமாக ஆரம்பிக்கும் தாம்பத்யம், குழந்தை வேண்டும் என்றதும் தடையகற்றிப் பெற்றுக்கொள்ளும் பிள்ளை எல்லாமே இயந்திரத்தனமாக அமையாதா? திட்டமிட்டு எழுப்பப்படும் கட்டடத்துக்கும் இயற்கையின் அழகுக்கும் ஓராயிரம் வித்தியாசம் உண்டே.


அவன் முகத்தை தன் முகம் பார்க்க வைத்துக் கேட்டாள். “அது நல்லாருக்குமா?”


அவனிடம் பதிலில்லை. “பசிக்குச் சாப்பிடுற மாதிரி ஒரு தேவையா மாறிப்போயிடுமேடா. காமத்துக்கும் காதலுக்கும் வித்தியாசம் இருக்கேடா.”


அவனுடைய ஆசைகள் மட்டுப்பட்டது. தான் கொண்ட அவசரமும் விளங்கியது. மெல்ல விலகினான்.


“குடும்ப வாழ்க்கையைப் பற்றி உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. அதை ஏன் ஒரு ‘தேவை’ எண்டுற இடத்தில இருந்து தொடங்குவான்? அவ்வளவு அவசரம் ஏன் சொல்லு? கல்யாணம் இப்ப சரிவராது எண்டு நீதானே சொன்னாய். இது மட்டும் இப்ப சரியா வருமாடா? உன்ர வீட்டு குளியலை பழகவே எனக்கு ஒரு மாதம் வேணும் போலக்கிடக்கு. குடும்ப வாழ்க்கையை பழக எவ்வளவு காலம் எடுக்குமோ? இப்ப வேண்டாமடா. எல்லாம் சரியாகட்டும். காலமும் வயசும் நிறையவே நமக்கு இருக்கு!” அவன் தோளில் முகம் புதைத்தபடி சொன்னாள்.


“சரி படு!” அவளின் கூந்தல் வருடியபடி இதமாகச் சொன்னான் அவன்.


“கோவமில்லையே..” அவன் முகம் பார்த்துக் கேட்டாள் .


“அவ்வளவு தைரியம் எனக்கு இல்லடி!” அந்த முகத்தை இரு கைகளாலும் பற்றி நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டுவிட்டுச் சொன்னான் அவன்.


மனம் அமைதியாக அவன் மார்பே அவளுக்கு மஞ்சமாயிற்று!


தேகங்கள் தேவைகளைச் சொன்னபோதும், உணர்வுகள் காட்டாற்று வெள்ளமாகப் பொங்கியபோதும், உணர்வை அறிவு வென்ற தருணமாய் அவர்கள் வாழ்வு ஆரம்பிக்காமல் ஆரம்பித்தது


தொடரும்....
 
Last edited:
#4
Nice epi
 
#5
என்ன ஒரு திடசித்தம் ஆரணிக்கு....superma... இந்த நம்பிக்கை அவள் வாழ்வில் வெற்றியை தரும் என்றே நான் நினைக்கிறேன்.
 
#6
நைஸ் நிதா.ஆவலோடு காத்து இருக்கிறேன் அடுத்த பகுதிக்கு.
 
#7
Very nice update. Aara super hats off
 
#8
ஆரணி - பிரம்மிக்க வைக்கிறாள்!!.
 
#9
Arani is so bold
 
#10
ஒரு குளிர் என்ர காதலை அசைச்சுப் பாக்கும் எண்டு நினைக்கிறியா நிக்ஸ்? எனக்கு நடுங்குதுதான். பழக்கமில்லை தான். எப்படி இதப் பழகிறது எண்டுதான் யோசிக்கிறன். விலகிறது எப்படி எண்டில்ல.” கண்ணீரோடு சொன்னவளை அப்படியே அணைத்துக்கொண்டான் அவன். Wonderful feel to read
 
#11
தேகங்கள் தேவைகளைச் சொன்னபோதும், உணர்வுகள் காட்டாற்று வெள்ளமாகப் பொங்கியபோதும், உணர்வை அறிவு வென்ற தருணமாய் அவர்கள் வாழ்வு ஆரம்பிக்காமல் ஆரம்பித்தது.
Nice lines.
 
#12
Indha UD oda last line sema...self control...Nice
 
#13
Nice episode arani athiradi ana pakkuvama nadakkura aduthu enna nadakkum ende guess panna mudiyala niks amma paavam eppadi react seyya porangalo analum aranikku ivvalavu kashtam thevaya
 
#14
Nitha, உங்களின் நாயகன் எப்பவுமே ராஜகுமாரனாக இல்லாமல் சராசரி மனிதனாக இருப்பான்.நிறை, குறைகளோட வாழும் சாதரண மனிதனின் கதை ராஜ்குமாரனின் கதையைவிட சுவாரசியமானது. உங்களின் ஒரு கதையின் நாயகன் ரவிவர்மன் என் all time favorite.தன் தவறைத் திருத்த போராடுவதால் எனக்கு அவனைப் பிடிக்கும். ஆரணியையும் பிடிக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.ஒருநாள் உங்கள் கதைகளைப் பற்றி நிறைய பேசலாம். Keep rocking.
 
#15
Super update mam
 
#16
Evlo theliva irukura aarani
 

NithaniPrabu

Administrator
Staff member
#17
Nitha, உங்களின் நாயகன் எப்பவுமே ராஜகுமாரனாக இல்லாமல் சராசரி மனிதனாக இருப்பான்.நிறை, குறைகளோட வாழும் சாதரண மனிதனின் கதை ராஜ்குமாரனின் கதையைவிட சுவாரசியமானது. உங்களின் ஒரு கதையின் நாயகன் ரவிவர்மன் என் all time favorite.தன் தவறைத் திருத்த போராடுவதால் எனக்கு அவனைப் பிடிக்கும். ஆரணியையும் பிடிக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.ஒருநாள் உங்கள் கதைகளைப் பற்றி நிறைய பேசலாம். Keep rocking.

நிச்சயம் பேசுவோம் சித்ரா.
 
#18
akka romba romba natural epi.... alagana epi....super aarani great
 
#19
arumaiyana ud.
 
#20
நல்ல பக்குவம் ஆரணிக்கு
இனி தொடக்கம் அருமையான வளர்ச்சியை நோக்கி
இருக்கனும்
 
Top