அவள் ஆரணி -1

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம்-1சீறிக்கொண்டு வந்த காரின் உறுமலிலேயே வருவது யார் என்று குமாரவேலுக்குத் தெரிந்துபோயிற்று! அப்போதுதான் தீ மூட்டிய சிகரெட்டினைக் காலில் போட்டு மிதித்துக் கொலை செய்துவிட்டு ஓடிவந்து, அந்த மாளிகையின் அகன்ற பெரிய கேட்டினைத் திறந்து பிடித்துக்கொண்டு நின்றான்.

வேகம் சற்றும் குறையாமலேயே மாளிகைக்குள் நுழைந்த கார் வாசலின் முன்னே கிறீச்சிட்டபடி நின்றது! படார் என்று கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள் ஆரணி! அவளின் பாதங்கள் விடுவிடு என்று வீட்டுக்குள் நுழைந்து பரந்து விரிந்திருந்த நீள் சதுர ஹாலின் நட்ட நடுவில் சென்று நின்றது!

பளிங்குபோல் பளபளத்த வெள்ளை நிற மார்பில் நிலத்தில் ரெட் வைனின் நிறத்திலான சோபாவின் கைப்பிடியில் ஒற்றைக் கையை வைத்தபடி, நளினமாக அமர்ந்திருந்தார் யசோதா. கோபத்தில் சிவந்திருந்த மகளின் முகத்தை நிதானமாக ஏறிட்டார்!

ஆக, அவளின் வருகைக்காகக் காத்திருந்திருக்கிறார்! புரிந்துவிட்டதில் நிதானமாக நடந்துசென்று தாயின் முன்னிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டாள் ஆரணி.

“அப்ப உங்களுக்கும் தெரிஞ்சுதான் எல்லாம் நடந்திருக்கு!” வந்தபோது அவளிடமிருந்த கொந்தளிப்புக்குச் சற்றும் சம்மந்தமேயில்லாத அமைதியான குரலில் வினவினாள் ஆரணி!

அவளின் மனக்கட்டுப்பாட்டை எண்ணித் தனக்குள் மெச்சிக்கொண்டார் அன்னை!

“ஒரேயொரு மகளின்ர திருமணத்தை அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஏற்பாடு செய்றதுதானே வளமை!” உதட்டினில் உறைந்தே கிடக்கும் சின்னச் சிரிப்புடன் எடுத்துரைத்தார் யசோதா.

“அந்த ஒரேயொரு மகளின்ர விருப்பம் என்ன எண்டு தெரிஞ்சும் வேற ஏற்பாடு செய்றது மிகப்பெரிய பிழை! அவளை அவமானப்படுத்தி இருக்கிறீங்க!” அடக்கப்பட்ட சினத்துடன் வந்தன அவள் வார்த்தைகள்.

“இது அவமானம் இல்ல ஆரா! அக்கறை. அவள் காலத்துக்கும் நல்லா இருக்கவேணும் எண்டுற பாசம்.”

“அக்கறை இருந்திருந்தா அவளின்ர விருப்பம் பெருசாத் தெரிஞ்சிருக்கும். அவளின்ர சந்தோசம் முக்கியமாப் பட்டிருக்கும்.”

“நீ ஆசைப்பட்டாய் எண்டுறதுக்காக வாங்கித் தாறதுக்கு வாசல்ல நிக்கிற கார் இல்ல ஆரா இது, வாழ்க்கை. பிழைச்சுப்போனா மாத்தி அமைக்கவே முடியாது!”

எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும் கேட்கிறாள் இல்லையே என்கிற கவலை தொனித்தது அவர் குரலில்.

“பிழைக்கிறதா? அப்ப தவறான முடிவை நான் எடுப்பன் எண்டு சொல்லுறீங்க. தீர்க்கமா சிந்திச்சு தெளிவா முடிவெடுக்க முடியும் எண்டுற என்னுடைய தன்னம்பிக்கைக்கு சவால் விட்டிருக்கிறீங்க. இருபத்திமூண்டு வயசிலையும் உங்கட சொல்லுக் கேட்டுத் தலையாட்டச் சொல்லுறீங்க. அப்படியா?” சீறினாள் ஆரணி!

சட்டென்று நிதானித்தார் யசோதா. அவர்களின் பேச்சு அபாயகரமான பாதையை நோக்கி நகர்வதாய்ப் பட்டது. இனி இடையில் விடவும் முடியாது; ஆரணி அதற்கு விடமாட்டாள். எனவே மகளுக்கு நிதானமாக எடுத்துரைக்க முனைந்தார்.

“வளந்தவர்களும் பிழையான முடிவை எடுக்கச் சாத்தியங்கள் இருக்கு ஆரணி.” அன்னையின் நிதானம் அவளின் பொறுமையைச் சீண்டிப் பார்த்தது!

“சரியா சொன்னீங்க! அதைச் செய்தது நீங்களும் அப்பாவும்தான்! நானில்லை!” அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

மற்றவர்களைப் போல காதலித்ததும் என் வாழ்க்கை என் விருப்பம் என்று ஓடாமல், பெற்றவர்களிடம் தன் விருப்பத்தைச் சொன்னபோது, அதை ஏற்காமல் மாறாக ஒருவனை அவளுக்கானவன் என்று நிச்சயித்துவிட்ட அவர்களின் செயலில் மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தாள் ஆரணி!

யசோதாவின் விழிகளிலும் மெல்லிய கோபம் வந்தமர்ந்தது.

“படிச்ச, நல்ல பதவில இருக்கிற, எங்கட வசதிக்குக் கொஞ்சமும் குறையாத, லட்சணமான, ஒரு குறை சொல்ல முடியாத ஒருத்தனை தெரிவு செய்திருக்கிறோம். அவனிட்ட ஏதாவது ஒரு குறை இருக்கா சொல்லு பாப்போம்?” என்று சவால் விட்டார். ஒற்றைப் பெண்ணுக்காக என்று பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தவனிடம் குறை காண்கிறாளே!

இப்போது ஆரணி நிதானமாகத் தன் செவ்விதழ்களில் புன்னகையைத் தவழவிட்டாள்.

“உங்கள மாதிரி அடுத்தவனிட்ட குறை தேடுற பழக்கம் எனக்கில்லை!” என்றாள் தைரியமாக.

தாயின் விழிகளில் தெறித்த முறைப்பை லட்சியமே செய்யவில்லை அவள்.

“நீங்க சொன்ன அத்தனை தகுதிகளும் நிகேதனுக்கும் இருக்கு. பிறகும் ஏன் வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? காசு!” கைச் சைகையிலும் காட்டினாள். “இங்க கலக்கப்போறது காசு; மனங்கள் இல்ல!”

“எங்களிட்ட இல்லாத காசா!” கையினை அலட்சியமாக விசுக்கினார் யசோதா.

“வேற என்ன குறை அவனிட்ட இருக்கு எண்டு சொல்லுங்க பாப்பம்?” இப்போது மகள் சவால் விட்டால் தாயிடம்.

“அவனிட்ட குறையே இல்லையா?” ஏளனமாய்க் கேட்டார் யசோதா.

ஆரணியில் விழிகளில் பெரும் சீற்றம் வந்தமர்ந்தது! அதைப் பொருட்படுத்தவில்லை யசோதா.

“சொந்தக் காலில நிக்க வக்கில்லாம, தமையன்ர காசுல சாப்பிடுறவனுக்குக் குறையில்லையா?”

“அம்மா!” அத்தனை பொறுமையும் பறக்கத் துள்ளிக்கொண்டு எழுந்தாள் ஆரணி!

“நிகேதனைப் பற்றி ஒரு வார்த்தை தவறக்கூடாது அம்மா! நீங்க அவனைக் கேவலப்படுத்ததேல்ல! என்னைக் கேவலப் படுத்துறீங்க. நான் அவனிலை வச்சிருக்கிற அன்பைக் கேவலப் படுத்துறீங்க!”

“யாரையும் கேவலப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை ஆரா! காதல் கண்ணை மறைக்குது உனக்கு! அதுதான் உண்மையைச் சொல்லி விளங்கப்படுத்துறான்!

“என்னம்மா உண்மை? அவன் ஒரு பட்டதாரி எண்டுறது உண்மை. படிச்ச படிப்புக்கேத்த வேலை தேடுறான் எண்டுறதும் உண்மை. அதேபோல அவன் குடும்பம் ஏழ்மைல இருக்கு எண்டுறதும் உண்மை. இது எல்லாத்தையும் விடப் பெரிய உண்மை என்ன தெரியுமா? அந்த ஏழ்மை எண்டைக்கும் நிரந்தரம் இல்லை எண்டுறது! அவன் அதைத் தாண்டி முன்னுக்கு வருவான் எண்டுறது ” கோபத்தில் சிவந்திருந்த முகத்தோடு தாயின் முகத்திலேயே விழிகளை நிறுத்திச் சொன்னாள் ஆரணி.

அவளின் ஆக்ரோஷத்தில் யசோதாவே சற்றுத் திகைத்துப்போனார். அவரிடம் தான் முதன் முதலில் அவள் தன் காதலைப் பற்றிச் சொன்னது. அன்றிலிருந்து பிடிவாதமாக மாறாமல் தன் பிடியிலேயே நின்றாளே தவிர, இப்படியொரு கோபத்தைக் காட்டவில்லை. அதனால் தான் தைரியமாக அவர்கள் அவளுக்கான வரனைத் தேடியதும். அனைத்திலும் சிறந்தவனாக ஒருவனைக் கண்டு பிடித்துவிட்டு எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்வாள் என்று எதிர்பார்க்க விஷயமோ அப்படியே தலைகீழாக மாறிப்போயிற்று!
 
NithaniPrabu

Administrator
Staff member
#2
அதேநேரம் அடுத்த காரும் சீறிக்கொண்டு வந்து நிற்க, புயலென வீட்டுக்குள் நுழைந்தார் சத்தியநாதன்! ஆரணி இண்டஸ்ட்ரீஸின் அதிபர்!

அவர் முகத்தில் தெறித்த சீற்றத்தில் யசோதாவே அமைதியாகிவிட்டபோதும், தைரியமாக அவரை எதிர்கொண்டாள் ஆரணி!

“விபாகரனை என்னத்துக்கு அவமானப்படுத்தி அனுப்பி வச்சாய் ஆரணி?” வந்ததுமே கர்ஜித்தார் சத்தியநாதன்.

“அவமானப்படுத்தி அனுப்பேல்ல, அனுமதி வாங்கிக்கொண்டு வா எண்டு அனுப்பி வச்சனான்!” நிமிர்ந்து சொன்னாள் மகள்.

“ஆபீஸ்ல வேலை நேரத்தில அப்பாயின்மென்ட் இல்லாம யாரையும் பாக்கிறேல்ல எண்டுறது பொது விதிதானேப்பா. அதை எப்படி மீறுறது?” தந்தைக்கே பாடம் கற்பித்தாள் மகள்!

“அனுப்பி வச்சது நான்! பிறகு எதுக்கு அனுமதி?”

“பாக்க வந்தது என்னைத்தானே?”

“ஆரா!” மகளின் பதிலில் கொந்தளித்தார் சத்தியநாதன்!

பெண் அசையவில்லை! தளராத பார்வையோடு தகப்பனையே பார்த்தாள்!

“அவனை என்ன வேலை வெட்டி இல்லாம சும்மா ஊரைச் சுத்துறவன் எண்டு நினைச்சியா? ஒவ்வொரு செக்கனையும் காசாக்குறவன்! என்ன மதிச்சு உன்னைப் பக்கா வந்தா அவனைக் கேவலப்படுத்தி அனுப்பி இருக்கிறாய்!”

“அவ்வளவு வேலை உள்ளவன் வேலையைப் பாத்திருக்க வேணும்! தேவையில்லாம என்னைப் பாக்க வந்திருக்கக் கூடாது.”

சாத்தியநாதனுக்கு இரத்த அழுத்தம் ஏறிக்கொண்டு போயிற்று!

“தேவையில்லாத கதை என்னத்துக்கு? நீ என்ன செய்தாலும் அவன் தான் உனக்கு மாப்பிள்ளை! அது மாறாது!” முடிவாகச் சொன்னார்.

நிமிர்ந்தாள் ஆரணி! “அது நடக்காது அப்பா! நான் விரும்புறது நிகேதனை! அவனைத்தான் கட்டுவன்! ஒருத்தனை காதலிச்சிட்டு இன்னொருத்தனை கட்டுற கேவலமான பழக்கத்தை நீங்க எனக்குச் சொல்லித் தரேல்ல!” அவளும் தெளிவாகச் சொன்னாள்.

“நான் ஒருத்தனை விரும்புறன் எண்டு சொன்னபிறகும் இன்னொருத்தனைப் பாக்க அனுப்பி வச்சதுதான் அசிங்கம்! அதைச் செய்தது நீங்க!” அவரையே குற்றம் சாட்டினாள்.

சத்தியநாதன் யசோதாவைத்தான் முறைத்தார். யசோதாவுக்குத் திக் என்றது! “நல்ல வளப்பு வளத்து வச்சிருக்கிறாய்! படி எண்டு அனுப்பிவச்சா காதல் எண்டு வந்து நிக்கிறாள்! அன்னக்காவடிய விரும்புறாளாம். அவன் எனக்கு மருமகனாம்! எந்தக் காலத்திலையும் நடக்காது!”

யசோதாவுக்கு மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. என்னவோ நடக்கக் கூடாதது நடக்கப் போவதுபோல உள்ளம் பதறியது. அப்பாவும் மகளும் பிடிவாதத்துக்குப் பெயர் போனவர்கள். எப்படிச் சமாளிக்கப் போகிறார்? வழியின்றித் தடுமாறினார்.

“நீங்க நினைக்கிறதும் நடக்காது அப்பா! இனி அவன் என்னைப் பாக்க வரக்கூடாது! மீறி வந்தான்.. பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை!”

“ஹா!” அலட்சியச் சிரிப்பைச் சிந்தியவரின் விழிகளில் ஒருவிதமான மினுமினுப்பு! “அவனுக்கு என்ன பெயர்.. நிக்.. நிகேதன் என்ன? அவன் இருக்கிற வரைக்கும் தானே நீ மாட்டன் எண்டு சொல்லுவாய்? இல்லாம போய்ட்டா?” அவர் கேட்டு முடிக்க முதலே, “அப்பா!” என்று ஓங்கிக் குரல் உயர்த்தியிருந்தாள் ஆரணி!

யசோதாவே ஆடித்தான் போனார். “சத்யா, என்ன இது? கோபத்தில் என்ன கதைக்கிறது எண்டு இல்லையா?” என்று பதறினார்.

எவனாக இருந்தாலும் யாரோ ஒரு தாய் பெற்ற பிள்ளை தானே அவனும்!

“அதை உன்ர மகளுக்குச் சொல்லு! செல்லமா வளத்தா என்னவும் செய்யலாம் எண்டு நினைச்சிட்டாள் போல!” அலட்சியமாகச் சொன்னார் சத்தியநாதன்.

“செல்லம் கொடுத்தது நீங்க. கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தது நீங்க. இப்ப, ஒரு பிரச்சனை எண்டு வந்ததும் ‘உன்ர மகளா?’. சும்மா கோவத்துல குதிக்கிறதை விட்டுட்டு உங்கட மகளுக்கு எடுத்துச் சொல்லுங்கோ! அதைவிட்டுட்டு, அடுத்த வீட்டுப் பிள்ளையில கைவைக்க நமக்கு உரிமையில்லை!”

“என்ர வீட்டுல கைவச்சா அதுதான் நடக்கும்!” அசராமல் சொன்னார் அவர்.

“கொஞ்சம் பொறுமையா கதைங்கோ சத்யா.”

“இன்னும் எத்தனை நாளைக்குப் பொறுமையா கதைக்கச் சொல்லுறாய்?” மனைவியிடமும் சீறினார் சத்தியநாதன்.

அதுவரை தகப்பனையே அசையாமல் பார்த்திருந்த ஆரணியும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.

நிதானமாகக் காலடி எடுத்துவைத்து அவரின் முன்னே வந்து நின்றாள். “செல்லமாத்தான் வளத்தீங்க! நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தீங்க! படிச்ச படிப்பில இருந்து ஓடுற கார் வரைக்கும் நான் எடுத்த முடிவு எல்லாம் சரி எண்டு சொல்லிச் சந்தோசமா கொண்டாடுனீங்க. அந்தத் தைரியத்திலதான் ஆசைப்பட்டவனையும் காதலிச்சனான். என்ர அப்பா என்ர விருப்பத்துக்கு மாறா நடக்கமாட்டார் எண்டுற நம்பிக்கையோடதான் உங்களிட்ட வந்து சொன்னதும். ஆனா நீங்களும் காசை வச்சுத்தான் ஆளை எடைபோடுற ஆள் எண்டு தெரிஞ்சபிறகும் மனத்தைப்பற்றி உங்களிட்டக் கதைக்கிறதுல அர்த்தமில்லை!” என்றவள் மிகுந்த நிதானத்தோடு கடைசி வார்த்தைகளை உதிர்த்தாள்.

“என்ன சொன்னீங்க? அவன் இருக்கிற வரைக்குமா? அவன் இல்லாட்டியும் நான் அவனுக்குத்தான் சொந்தம்! இப்பவே இந்த வீட்டை விட்டுப் போகப்போறன்! கோயில்ல வச்சு திருமணமும் செய்யப்போறன்! உங்களால் என்ன செய்ய ஏலுமோ அதைச் செய்ங்க! நடக்கிறதைச் சந்திக்க எனக்குத் தைரியமிருக்கு!” என்றவள், அதிர்ந்து சிலையாகி நின்ற அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்!

தொடரும்.....

மக்களே, எப்படி இருக்கு என்று சொல்லுங்க, உங்களின் வார்த்தைகள் தான் என்னை எழுதத் தூண்டும். ஆரணி முதல் பதிவில் என்ன சொல்லுகிறாள்? அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
 
Last edited:
#3
wow Super akka ....... AARANI...... ya enaku rompa pudichuruku......
 
emilypeter

Well-known member
#4
Aval dhairiyamana ponnu nan yendru solkiral. Avalin aazhntha kadhal avalukku verriya kodukkattum.un ezhuthum sirakka valara vazhthukkal.
 
#6
Wow... Aarani sema gethu.... :love:
 
#7
Aarambamae adhiradi..nice sis
 
#8
Super sis interesting
 
#9
ஆரம்பமே ஆரணியின் செயலில் அதிருது...ஆரணியின் தொடர் அதிரடி ஆட்டத்தை காண காத்திருக்கிறேன்....நிகேன் தான் ஹீரோவா?சரி பாதி சான்ஸ் உண்டா இல்லை ஆரணியின் ஆட்டம் மட்டும் தானா?😊😊😊
 
#10
ஆரணி அதிரடியா சரவெடி போல வெடிக்கிறாள அக்கா. அருமை
 
#11
அதேநேரம் அடுத்த காரும் சீறிக்கொண்டு வந்து நிற்க, புயலென வீட்டுக்குள் நுழைந்தார் சத்தியநாதன்! ஆரணி இண்டஸ்ட்ரீஸின் அதிபர்!

அவர் முகத்தில் தெறித்த சீற்றத்தில் யசோதாவே அமைதியாகிவிட்டபோதும், தைரியமாக அவரை எதிர்கொண்டாள் ஆரணி!

“விபாகரனை என்னத்துக்கு அவமானப்படுத்தி அனுப்பி வச்சாய் ஆரணி?” வந்ததுமே கர்ஜித்தார் சத்தியநாதன்.

“அவமானப்படுத்தி அனுப்பேல்ல, அனுமதி வாங்கிக்கொண்டு வா எண்டு அனுப்பி வச்சனான்!” நிமிர்ந்து சொன்னாள் மகள்.

“ஆபீஸ்ல வேலை நேரத்தில அப்பாயின்மென்ட் இல்லாம யாரையும் பாக்கிறேல்ல எண்டுறது பொது விதிதானேப்பா. அதை எப்படி மீறுறது?” தந்தைக்கே பாடம் கற்பித்தாள் மகள்!

“அனுப்பி வச்சது நான்! பிறகு எதுக்கு அனுமதி?”

“பாக்க வந்தது என்னைத்தானே?”

“ஆரா!” மகளின் பதிலில் கொந்தளித்தார் சத்தியநாதன்!

பெண் அசையவில்லை! தளராத பார்வையோடு தகப்பனையே பார்த்தாள்!

“அவனை என்ன வேலை வெட்டி இல்லாம சும்மா ஊரைச் சுத்துறவன் எண்டு நினைச்சியா? ஒவ்வொரு செக்கனையும் காசாக்குறவன்! என்ன மதிச்சு உன்னைப் பக்கா வந்தா அவனைக் கேவலப்படுத்தி அனுப்பி இருக்கிறாய்!”

“அவ்வளவு வேலை உள்ளவன் வேலையைப் பாத்திருக்க வேணும்! தேவையில்லாம என்னைப் பாக்க வந்திருக்கக் கூடாது.”

சாத்தியநாதனுக்கு இரத்த அழுத்தம் ஏறிக்கொண்டு போயிற்று!

“தேவையில்லாத கதை என்னத்துக்கு? நீ என்ன செய்தாலும் அவன் தான் உனக்கு மாப்பிள்ளை! அது மாறாது!” முடிவாகச் சொன்னார்.

நிமிர்ந்தாள் ஆரணி! “அது நடக்காது அப்பா! நான் விரும்புறது நிகேதனை! அவனைத்தான் கட்டுவன்! ஒருத்தனை காதலிச்சிட்டு இன்னொருத்தனை கட்டுற கேவலமான பழக்கத்தை நீங்க எனக்குச் சொல்லித் தரேல்ல!” அவளும் தெளிவாகச் சொன்னாள்.

“நான் ஒருத்தனை விரும்புறன் எண்டு சொன்னபிறகும் இன்னொருத்தனைப் பாக்க அனுப்பி வச்சதுதான் அசிங்கம்! அதைச் செய்தது நீங்க!” அவரையே குற்றம் சாட்டினாள்.

சத்தியநாதன் யசோதாவைத்தான் முறைத்தார். யசோதாவுக்குத் திக் என்றது! “நல்ல வளப்பு வளத்து வச்சிருக்கிறாய்! படி எண்டு அனுப்பிவச்சா காதல் எண்டு வந்து நிக்கிறாள்! அன்னக்காவடிய விரும்புறாளாம். அவன் எனக்கு மருமகனாம்! எந்தக் காலத்திலையும் நடக்காது!”

யசோதாவுக்கு மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. என்னவோ நடக்கக் கூடாதது நடக்கப் போவதுபோல உள்ளம் பதறியது. அப்பாவும் மகளும் பிடிவாதத்துக்குப் பெயர் போனவர்கள். எப்படிச் சமாளிக்கப் போகிறார்?

“நீங்க நினைக்கிறதும் நடக்காது அப்பா! இனி அவன் என்னைப் பாக்க வரக்கூடாது! மீறி வந்தான்.. பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை!”

“ஹா!” அலட்சியச் சிரிப்பைச் சிந்தியவரின் விழிகளில் ஒருவிதமான மினுமினுப்பு! “அவனுக்கு என்ன பெயர்.. நிக்.. நிகேதன் என்ன? அவன் இருக்கிற வரைக்கும் தானே நீ மட்டன் எண்டு சொல்லுவாய்? இல்லாம போய்ட்டா?” அவர் கேட்டு முடிக்க முதலே, “அப்பா!” என்று ஓங்கிக் குரல் உயர்த்தியிருந்தாள் ஆரணி!

யசோதாவே ஆடித்தான் போனார். “சத்யா, என்ன இது? கோபத்தில் என்ன கதைக்கிறது எண்டு இல்லையா?”

“அதை உன்ர மகளுக்குச் சொல்லு! செல்லமா வளத்தா என்னவும் செய்யலாம் எண்டு நினைச்சிட்டாள் போல!”

“அதுக்காக என்ன கதைக்கிறது எண்டு இல்லையா? பொறுமையா எடுத்துச் சொல்லுறதை விட்டுட்டு..”

“இன்னும் எத்தனை நாலைக்குப் பொறுமையா சொல்லக் சொல்லுறாய்?” மனைவியிடமும் சீறினார் சத்தியநாதன்.

அதுவரை தகப்பனையே அசையாமல் பார்த்திருந்த ஆரணியும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.

நிதானமாகக் காலடி எடுத்துவைத்து அவரின் முன்னே வந்து நின்றாள். “செல்லமாத்தான் வளத்தீங்க! நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தீங்க! படிச்ச படிப்பில இருந்து ஓடுற கார் வரைக்கும் நான் எடுத்த முடிவு எல்லாம் சரி எண்டு சொல்லிச் சந்தோசமா கொண்டாடுனீங்க. அந்தத் தைரியத்திலதான் ஆசைப்பட்டவனையும் காதலிச்சனான். என்ர அப்பா என்ர விருப்பத்துக்கு மாறா நடக்கமாட்டார் எண்டுற நம்பிக்கையோடதான் உங்களிட்ட வந்து சொன்னதும். ஆனா நீங்களும் காசை வச்சுத்தான் ஆளை எடைபோடுற ஆள் எண்டு தெரிஞ்சபிறகும் மனத்தைப்பற்றி உங்களிட்டக் கதைக்கிறதுல அர்த்தமில்லை!” என்றவள் மிகுந்த நிதானத்தோடு கடைசி வார்த்தைகளை உதிர்த்தாள்.

“என்ன சொன்னீங்க? அவன் இருக்கிற வரைக்குமா? அவன் இல்லாட்டியும் நான் அவனுக்குத்தான் சொந்தம்! இப்பவே இந்த வீட்டை விட்டுப் போகப்போறன்! கோயில்ல வச்சு திருமணமும் செய்யப்போறன்! உங்களால் என்ன செய்ய ஏலுமோ அதைச் செய்ங்க! நடக்கிறதைச் சந்திக்க எனக்குத் தைரியமிருக்கு!” என்றவள், அதிர்ந்து சிலையாகி நின்ற அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்!

தொடரும்.....

மக்களே, எப்படி இருக்கு என்று சொல்லுங்க, உங்களின் வார்த்தைகள் தான் என்னை எழுதத் தூண்டும். ஆரணி முதல் பதிவில் என்ன சொல்லுகிறாள்? அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
Eeei appa enna dairiyam
 
#12
Sema bold... Kadasi varaikum ippadiye irukkanum
 
#13
அழகான அருமையான தொடக்கம். தொடரட்டும்.
 
#14
Saravedi aarani
 
sumiram

Active member
#15
Aarani semma bold , athiradiya mudivu edukka vum seiyura. Arambam semma super.
 
#16
எடுத்தவோட சும்மா டாப் கியர்ல போறாளே ஆரணி..... சும்மா கேள்வி எல்லாம் நச்சு நச்சுனு இருந்தது..... நான் அனுப்பி வந்தவனுக்கு எதுக்கு முன்னனுமதி வாங்கணும் என்ன பாக்க என்கிட்டே தான் அனுமதி வாங்கணும்.....செம ..... அடேய் நிகேதன் எங்க இருக்க நீ உனக்காக மொத்த குடும்பமும் சண்டை கட்டி கிட்டு இருகாங்க....நீ எங்க பா இருக்க.... சீக்கிரம் ஓடி வா பாக்கலாம்.....
 
#17
Name ellam super mam.nice story akka😆😆😆😄
 
#18
hai nitha,

arani kathalukku kannilaiyo.......yaar hero nigen,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,vibhaaaaaaaaaaaaa
 
#19
Arani arambame athiradi chumma athiruthila sema strong character hero eppadi endu parpom
 
#20
என்ன காதலோ பெத்து வளத்தவங்களையே தூக்கிஎறியற காதல்.
 
Top