அரசியல்

#1
அரசியல்
கண்டறியாத அரசியல் கதைகளை
கதைக்கிற எங்கடை சனங்கள்
கண்மண் தெரியாமை ஊருக்கை
கண்டன ஆர்ப்பாட்டம் செய்யினம்
பண்பாட்டை மறந்து போட்டினம்-ஆனால்
படலயிக்கை நோட்டீஸ் போடுற
கண்கெட்டவங்களை மட்டும் நம்பி
களைச்சுப் போய் காத்திருக்கினம்.

எத்தனை கட்சிகள் வந்தாலும்
எதுவுமே செய்யாமை போகுது
சுத்திச்சுத்தி போய் ஏமாந்து போற
சனத்தை நினைச்சா எனக்கு
பத்திக் கொண்டும் வருது-பிறகு
பாத்தா பாவமாயும் கிடக்கு(து)
புத்தி சொல்லுறதுக்கு இஞ்சை ஒரு
புண்ணியவானும் இல்லாமை போச்சு.

நாக்கு கூசாமை பொய் சொல்லி
நல்லா நடிச்சு ஏமாத்தி
வாக்கு கேக்கிறது தானே அரசியல்;
வாறவங்களை நம்பிற சனமும்
பாக்காமை கொள்ளாமை விசருகள்,
பயித்தியம் போலை அவங்களுக்கு
வாக்கு போட்டு கடைசியில ஏமாந்து
வாடிவதங்கி அழிஞ்சு போட்டினம்.

அதையிதைச் செய்யிறமெண்டு
அநாவசியமா பொய்யான
கதையளை சொல்லிப் போட்டு
களவெடுக்கிற கட்சிக்காரரை
உதை உதையெண்டு அடிச்சு
உதைச்சாலும் புத்தி வராது
இதையெல்லாம் பாத்தும் பாக்காம
இருக்கிற எங்களிலைதான் பிழை.

என்ன செய்யிறது நாங்களும்,
எல்லாரையும் நம்பி-அவையள்
சொன்னால் செய்வினம் எண்டு
சோறில்லாம தண்ணியில்லாம
சொன்னதெல்லாம் ஒப்பேறுமெண்டு
தொடர்ந்து காத்திருக்கிறம்
என்னதான் செய்யேலும் எங்களாலை
எல்லாருமே ஏமாந்து போட்டம்.

மோகனன்
 

Rosei Kajan

Administrator
Staff member
#2
அரசியல்
கண்டறியாத அரசியல் கதைகளை
கதைக்கிற எங்கடை சனங்கள்
கண்மண் தெரியாமை ஊருக்கை
கண்டன ஆர்ப்பாட்டம் செய்யினம்
பண்பாட்டை மறந்து போட்டினம்-ஆனால்
படலயிக்கை நோட்டீஸ் போடுற
கண்கெட்டவங்களை மட்டும் நம்பி
களைச்சுப் போய் காத்திருக்கினம்.

எத்தனை கட்சிகள் வந்தாலும்
எதுவுமே செய்யாமை போகுது
சுத்திச்சுத்தி போய் ஏமாந்து போற
சனத்தை நினைச்சா எனக்கு
பத்திக் கொண்டும் வருது-பிறகு
பாத்தா பாவமாயும் கிடக்கு(து)
புத்தி சொல்லுறதுக்கு இஞ்சை ஒரு
புண்ணியவானும் இல்லாமை போச்சு.

நாக்கு கூசாமை பொய் சொல்லி
நல்லா நடிச்சு ஏமாத்தி
வாக்கு கேக்கிறது தானே அரசியல்;
வாறவங்களை நம்பிற சனமும்
பாக்காமை கொள்ளாமை விசருகள்,
பயித்தியம் போலை அவங்களுக்கு
வாக்கு போட்டு கடைசியில ஏமாந்து
வாடிவதங்கி அழிஞ்சு போட்டினம்.

அதையிதைச் செய்யிறமெண்டு
அநாவசியமா பொய்யான
கதையளை சொல்லிப் போட்டு
களவெடுக்கிற கட்சிக்காரரை
உதை உதையெண்டு அடிச்சு
உதைச்சாலும் புத்தி வராது
இதையெல்லாம் பாத்தும் பாக்காம
இருக்கிற எங்களிலைதான் பிழை.

என்ன செய்யிறது நாங்களும்,
எல்லாரையும் நம்பி-அவையள்
சொன்னால் செய்வினம் எண்டு
சோறில்லாம தண்ணியில்லாம
சொன்னதெல்லாம் ஒப்பேறுமெண்டு
தொடர்ந்து காத்திருக்கிறம்
என்னதான் செய்யேலும் எங்களாலை
எல்லாருமே ஏமாந்து போட்டம்.

மோகனன்
உண்மைதான் ..உணரும் நிலையில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கோபம், இயலாமை உங்கள் வார்த்தைகளில் .

கடைசியில்...' என்ன செய்யிறது ?' இயலாமையோடு கேட்டு விடைதெரியாது திண்டாட வேண்டியதுதான் .

நான் அவ்வளவாகக் கவிதைகள் வாசிப்பதில்லை மோகனன். குட்டியா இருந்தால் ரசிச்சு வாசிப்பேன் . அப்படியிருந்தும் உங்கள் வார்த்தைகள்,அதிலுள்ள யதார்த்தம் தன்னுள் இழுத்து வாசிக்க வைக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் .
 
Top