அத்தியாயம் 9

#1
இதழ்:- 9

காதருகில் ஒலித்த கடிகாரச் சத்தத்தில் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தாள் பூவினி.நெஞ்சைப் பிளக்கும் வலியுடன் கண்கள் பிரசவித்துக்கொண்டிருந்த நீர்முத்துக்களை துடைத்துக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தாள்.அது நேரம் நான்கு என்றது.அப்போது தான் வெளியே செல்ல வேண்டும் என்று சிந்துவுடன் பேசியது நினைவு வர எழுந்து குளியலறை நோக்கி சென்றாள்.

பூவினி குளித்து முடித்து வெளியே சென்றால் முன்னறையில் தொலைக்காட்சி அதன் பாட்டில் ஓடிக்கொண்டிருக்க சிந்து இரண்டு பேர் அமரும் மெத்திருக்கையில் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் மனம் கனிந்தது பூவினிக்கு.இந்த சிந்து மட்டும் இல்லையென்றால் பூவினி தன் சுஜத்தையே தொலைத்து ஒரு இயந்திரமாக மாறிப்போய் இருப்பாள். அப்படி நடக்காமல் தன் பேச்சினாலும் செய்கையினாலும் அவளை அவள் வேதனையில் இருந்து மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததே சிந்து தானே.

மெல்ல அவள் அருகில் அமர்ந்து தலையை வருடினாள்.அதில் தூக்கம் கலைந்த சிந்து ஒரு கொட்டாவியை வெளியேற்றியபடியே எழுந்து அமர்ந்தாள்.

போய் குளித்துவிட்டு கிளம்பு சிந்து வெளியே போய்விட்டு வரலாம்.

ம்ம்ம்... என்றபடியே குளியலறை நோக்கி சென்றாள் சிந்து.

அவள் கிளம்பி வரும் போது பூவினி தேநீர் தயாரித்து வைத்திருந்தாள்.இருவரும் தேநீர் அருந்தும் போதும் கூட சிந்து எதுவும் பேசவில்லை.ஒரு நிமிடம் சும்மா இருக்காமல் எதையாவது லொடலொடத்துக்கொண்டே இருக்கும் சிந்துவின் இந்த மௌனம் பூவினியை பாதிக்க. மெல்ல அவள் கையைப் பற்றி அழுத்தி என்னை மன்னித்துவிடு சிந்து என்றாள்.

இல்லை பரவாயில்லை பூவினி.உன் சொந்தவிசயத்தில் தலையிட்டதுக்கு நான் தான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கணும் என்றாள் சிந்து அமைதியாக.

அவள் பேச்சு பூவினிக்கு வலியைக் கொடுக்க சிந்துவின் கையை மேலும் அழுத்திப் பிடித்தவள்.நிஜமாவே என்னை மன்னித்துவிடு சிந்து நான் கோபத்தில் ஏதோ பேசிவிட்டேன்.அப்படி உன்னை நான் வேற்றாளாக பார்த்திருந்தால் என் மனதில் உள்ளதை எல்லாம் உன்னிடம் பகிர்ந்து கொண்டிருப்பேனா?? நீ என் தோழி சிந்து.என்னிடம் உனக்கு பூரண உரிமை உண்டு என்றாள் பூவினி.

அதுவரை அவள் மேல் கோபம் கொண்டது போல நடித்த சிந்து மகளே!!!!! மாட்டினியா?? என்று மனதில் நினைத்தபடி

சரி பூவினி நீயே கூறிவிட்டாய் உன்னிடம் எனக்கு பூரண உரிமை உண்டு என்று அந்த உரிமையில் கேட்கின்றேன் உண்மையைச் சொல்.நீ நிஜமாகவே உன் அத்தானை மறந்துவிட்டாயா??

சிந்துவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை பூவினி எதிர்பார்க்கவில்லை என்று அவளின் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.

எதற்கு தேவையில்லாத பேச்சு.நமக்கு இருப்பதே இந்த ஒருநாள் தான்.அதை மகிழ்ச்சியாக கழிப்போம்.வா கிளம்பலாம் என்று எழப்போனவளின் கையைப் பற்றிய சிந்து எனக்கு இந்தக் கேள்விக்கு பதில் வேண்டும் பூவினி என்றாள் அழுத்தமான குரலில்.

நினைவுகளின் தாக்கத்தால் ஏற்கனவே மனம் சோர்ந்திருந்த பூவினி சிந்துவின் இந்த விடாப்பிடிக்கேள்வியால் மனம் உடைந்தாள்.அதுவரை தடுத்து வைத்திருந்த கண்ணீர் வெள்ளம் கரையுடைத்து பாய என்னால் முடியவில்லையே சிந்து.என்று ஒரு கேவலுடன் கூறியவள் தொடர்ந்து என்னை புறக்கணித்து விலகியவனை இன்னும் மறக்க முடியாமல் என் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவதற்கு எனக்கே வெட்கமாக இருக்கிறது.ஆனால் அது தான் உண்மை சிந்து.என்று கூறி அழத்தொடங்கினாள்.

இதை சிந்து எதிர்பார்த்தவள் போல எதுவும் பேசாமல் அவள் முதுகை வருடியபடி இருந்தாள்.

நானும் மறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.ஆனால் முடியவில்லை சிந்து.என் ஒவ்வொரு செயலிலும் அவனின் தாக்கம் இருக்கும் போது என்னால் எப்படி சிந்து மறக்க முடியும்.அவனை மறந்து விட்டதாக நான் எண்ணும் பொழுது ஏதோ ஒரு சிறு செயலில் சட்டென அவனின் நினைவு வந்து என் நெஞ்சை தாக்குகிறதே. நான் என்ன செய்வேன் சிந்து.என்று மேசையில் தலை கவிழ்ந்து முதுகு குலுங்க புலம்பிக்கொண்டிருந்த பூவினியை பார்க்க சிந்துவின் மனம் வலித்தது.
 
#2
இப்படி ஒரு பெண்ணை அவளின் பரிசுத்தமான காதலை மறுக்க எப்படி அவனால் அந்த நிலவனால் முடிந்தது என்று சிந்துவின் மனம் வியந்தது. ஆனால் மறுத்துவிட்டானே!!!!!!!!!!! சிந்துவின் மனதுக்குள் .பூப்போன்ற தன் தோழியை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டானே என நிலவன் மேல் பெருங்கோபம் எழுந்தது.ஆனால் அதை யாரிடம் காட்ட என்று தான் புரியவில்லை அவளுக்கு.

பூவினியின் அழுகை சற்று குறையவும் அவளை நிமிர்த்தி கண்களைத் துடைத்தவள் போய் முகம் கழுவிவிட்டு வா என்று அவளை அனுப்பி விட்டு அவள் சென்றதும் சற்று நேரம் புருவம் சுளிப்புடன் அமர்ந்திருந்தாள். பூவினி முகத்தை கழுவி சற்று தெளிவாக வரவும்.


வேறு எதுவும் பேசாமல் அவளையும் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினாள்.வெளியே சற்று நேரம் சுற்றி சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு அப்படியே ஒரு உணவகத்தில் இரவு உணவையும் முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது பூவினி இயல்புநிலைக்கு திரும்பி இருந்தாள்.அவள் இதழ்களில் சிந்துவின் நகைசுவைப் பேச்சினால் புன்னகை கூட மலர்ந்திருந்தது.

அன்று இரவு பூவினியின் பயணத்திற்கு தேவையான அனைத்தையும் ஒழுங்குபடுத்திவிட்டு சற்று நேரம் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

சற்று தயக்கத்துடன் சிந்து கேட்டாள்.பூவினி உன்னால் அவனை மறக்க முடியவில்லை என்கிறாயே அப்படியாயின் உன் எதிர்கால வாழ்க்கை????

ஏன் என் எதிர்கால வாழ்வுக்கென்ன.?? நான் மறக்க முடியவில்லை என்று தான் சொன்னேனே தவிர அவனில்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று சொல்லவில்லையே.

இதற்கு என்ன அர்த்தம் பூவினி??
நான் அவன் முன்னால் வாழ்ந்து காட்டுவேன் சிந்து. நீ என்னை புறக்கணித்ததால் நான் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை.என்று நிமிர்ந்து நின்று காட்டுவேன்.பூவினியின் குரலில் கோபத்தின் பலம் தெரிந்தது.

அந்த வாழ்ந்து காட்டுவேன் என்பதில் உன் திருமணமும் அடக்கமா பூவினி???

...............................

ஏன் பூவினி இந்த மௌனம்???

வாழ்க்கை என்றால் திருமணம் பண்ணிக்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கையா சிந்து.அதைவிட பெரிய விடயங்கள் எத்தனையோ இருக்கிறது.என்னைப்பொறுத்தவரை அன்னை தெரேசா வாழ்ந்த வாழ்க்கை தான் மிகச் சிறந்த வாழ்க்கை என்பேன்.

அதுசரி தான்.ஆனால் எல்லோருமே அன்னை தெரேசா ஆகிவிட முடியாது பூவினி.நீ நிதர்சனத்தைப் புரிந்துகொள்.எதையுமே பேசுவது சுலபம்.ஆனால் நடைமுறை????

பூவினி நீ உன் பெற்றோருக்கு ஒரே வாரிசு.உன்னைக்குறித்து அவர்களுக்கும் எத்தனையோ கனவுகள் ஆசைகள் இருக்கும்.உன் மனதை மட்டுமே பார்த்துக்கொண்டு அவர்கள் மனதை வேதனைப்படுத்தாதே.இந்த நான்கு ஆண்டுகள் நீ அவர்களை விட்டு பிரிந்திருப்பதே அவர்களுக்கு எவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்கும்.அப்படி இருந்தும் உன் ஆசைக்காக அதைப் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இதற்கு மேலும் அவர்களைக் கஷ்டப்படுத்தாதே. உன்னை நேசிக்காத ஒருத்தனுக்காக உன் வாழ்க்கையை பாழாக்காதே.

ஆனால் நான் நேசித்தேனே சிந்து.உண்மையாக உயிராக நேசித்தேனே.என்றாள் பூவினி.அவள் குரலில் தெரிந்த வலி சிந்துவை ஒருகணம் கலங்கச்செய்தது.இருந்தும் சமாளித்துக்கொண்டு எல்லாம் நம்முடைய மனம் தான் பூவினி.நாம் நினைத்தால் நம் மனதை மாற்றலாம்.நீயே சொல்லு நீ இங்கு வந்த புதிதில் எப்படி இருந்தாய்?? இப்போது எப்படி இருக்கிறாய்?? இந்த மாற்றம் எப்படிச் சாத்தியமானது.இதே போல தான் பூவினி எல்லா விடயங்களும்.மாற்றம் ஒன்று தான் மாற்றமே இல்லாதது என்று சொல்லுவார்கள்.நீ நினைத்தால் உன் மனதை நிச்சயம் மாற்றலாம்.உன் பெற்றோர் சொல்லும் ஒருவனை மணம் புரிந்து மகிழ்ச்சியாய் வாழலாம்.நம் வாழ்க்கை நம் கையில் பூவினி.

சிந்துவின் பேச்சை மௌனமாக கேட்ட பூவினி எதுவும் பேசாமல் கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றி விட்டு நீ சொல்வது சரி தான் சிந்து.ஆனால் சில காயங்களை காலம் தான் ஆற்றும் என்பார்கள்.பார்ப்போம் அந்த காலத்தின் போக்கில் என் காயமும் ஆறினால் நீ கூறியதை பற்றி சிந்திக்கிறேன். சரி வா நித்திரை கொள்ளலாம். நாளைக்கு சீக்கிரம் எழும்பணும் என்றபடி சிந்துவையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.அவளின் பதில் சிந்துக்கு திருப்தியை கொடுக்காவிட்டாலும் இப்போதைக்கு பூவினி இந்தளவுக்கு சொன்னதே போதும் என்று விட்டுவிட்டாள்.
 
#3
மறுநாள் அதிகாலையில் எழுந்து கிளம்பி இருவரும் விமான நிலையத்திற்கு சென்றனர்.அங்கு குரு இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தார்.குரு இவளின் சின்னஅத்தை கல்யாணியின் ஒன்றுவிட்ட தமையன்.அவருடன் பேசி எல்லா ஏற்பாடுகளும் செய்து பூவினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்பே அவளது குடும்பம் அவளை தனியே இங்கு வர அனுமதித்தது.இங்கு வந்து முதல் ஆறு மாதங்கள் அவரின் வீட்டில் தான் தங்கினாள்.பின்பு சிந்துவின் அறிமுகம் கிடைத்தபின் மிகவும் சிரமப்பட்டு வீட்டினரிடம் அனுமதி பெற்று சிந்துவுடன் தங்கினாள்.அதன் பிறகு அவ்வப்போது அவரின் இயந்திர வாழ்க்கையில் நேரம் கிடைக்கும் போது தொலைபேசியிலோ நேரிலோ வந்து நலம் விசாரித்து ஏதாவது உதவி தேவையா என்று கேட்டு செல்வார் குரு.

நல்ல மனிதர் தான்.அவருடன் சற்று உரையாடிவிட்டு அவர் கல்யாணிக்கு என்று கொடுத்த பொருட்களை வாங்கி பத்திரப்படுத்திவிட்டு விமானம் கிளம்பும் வரை இருக்கிறேன் என்றவரை பரவாயில்லை மாமா.என் தோழி இருக்கிறாள் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறி சமாதானப்படுத்தி விடைகொடுத்தாள் பூவினி.

அவர் சென்றதும் சிந்துவும் அவளும் காத்திருப்போர் அமரும் கூடத்தில் சற்று நேரம் அமர்ந்தனர்.தோழியின் முகத்தில் தன்னைப் பிரியப்போகும் வாட்டம் தெரியவும்.அவள் கைகளைப் பற்றிக்கொண்டு கவலைப்படாதே சிந்து இன்னும் ஆறே ஆறு மாதங்கள் தானே.சீக்கிரம் ஓடிவிடும்.அதுவரை உன்னுடன் நம் அஞ்சலி வந்து தங்குவதாக சொல்லியிருக்கிறாள் தானே.அவளும் நல்ல பெண் தான்.கவலைப்படாதே.நான் தினமும் உன்னை அலைபேசியிலோ முகநூலிலோ சந்திக்கிறேன்.இப்போது தானே தொடர்பாடல் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது.என்று கூறி சிந்துவை சமாதானப்படுத்தினாள்


சிந்துவின் முகமும் ஓரளவு தெளிந்தது. ஒரு புன்னகையுடன் உன் உறவினர்களைக் கண்டதும் என்னை மறந்து விடாதே பூவினி.எப்போதும் என் கூட தொடர்பிலேயே இரு.நான் ஊருக்கு வந்ததும் எப்படியும் உன்னை சந்திப்பேன்.என்று கூறினாள்.

நிச்சயமாய் சிந்து.என்னால் எப்போதும் உன்னை மறக்க முடியாது.என்று கூறிக்கொண்டிருக்கும் போதே பூவினியின் விமானத்திற்கான அறிவிப்பு வர சிந்துவை அணைத்து விடைபெற்றாள்.என்ன முயன்றும் இருவரின் கண்களும் கலங்கி வழிந்ததை இருவராலும் தடுக்க முடியவில்லை.உதடுகளில் புன்னகையும் கண்களில் கண்ணீருமாக அந்த தோழிகள் இருவரும் விடைபெற்றனர்.
 
#4
வணக்கம் மக்களே.......
நான் உங்கள் தனு :)

எனக்கு உங்கள் ஆதரவு வேணுமே வேணும்.. :love: யாருக்கெல்லாம் இந்த கதை வாரா வாரம் வேண்டுமோ.... அவர்கள் எல்லாரும் கமெண்ட் பண்ணோணும் சரியா..?? ;);)

உங்களுடன் என் நட்புறவினை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் மக்களே.....

அன்புத்தோழி
தனு :)
 
#5
Nalla kathai. Enaku venumpa
 
#6
anakum anakum vanum sis
 
#7
Nice ud sis....
 
#8
Nice story sis.
 
#9
Nalla kadhai.. dhinamum kidaithal kooda magizhchi than..
 
#10
Nalla kathai. Enaku venumpa
anakum anakum vanum sis
Nalla kadhai.. dhinamum kidaithal kooda magizhchi than..

Thank u all for ur comments ... :) next ud poda poren :D
 
#11
Thank u all for ur comments ... :) next ud poda poren :D
Thank u all for ur comments ... :) next ud poda poren :D
Seekiram waiting eagerly
 
Top