தொடர்கதைகள் அத்தியாயம் 8 - முன்னோட்டம்

#1
இலங்கையில் நிலவிவரும் அசாதாரண நிலைகளால் என்னால் கதையை ஒழுங்காக தொடர முடியவில்லை. இன்று அல்லது நாளையில் இருந்து மீண்டும் கதைக்கான பதிப்புகள் போட படும்.

வீட்டிற்கு வந்தால் வீடு பெரும் அமைதியாக இருந்தது. வழமையாக மாயா இருக்கும் இடம் அமைதியாக இருந்து இவன் கண்டதே இல்லை. ஏதேனும் மெல்லிய பாடல்கள், மெல்லிய சிரிப்பொலியுடன் அவள் ஃபோனில் பேசிக்கொண்டு இருப்பது, சமையல் செய்கிறேன் பேர்வழி சமையலறையில் சட்டி பானைகளை உருட்டுவது இப்படி ஏதேனும் ஒரு சத்தம் இருந்து கொண்டே இருக்கும். அமைதியாக இருக்கவும் வீட்டை ஒரு முறை விழிகளை சிஉழற்றி நோட்டமிடவும் வேலைக்காரர்களை தவிர இவனின் திருமதியை காணவில்லை. அவளை அழைக்க கோவமும் தடுத்ததால் லேசான தோள் குலுக்கலுடன் அறைக்குள் சென்று அங்கு இருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.

சாய்ந்ததும் தான் தாமதம் பட படவென அறைக்கதவும் தட்டுப்படவும் அவனின் அழுத்தமான இதழ்களில் ஒரு புன்னகை நெளிந்தது. பின்னே!? அவனது அறைக்கதவை தட்டும் தைரியம் அவனைக் கட்டியவளையன்றி யாருக்கு இருக்கும்? புன்னகைத்தாலும் அவள் தனது அழைப்பை ஏற்காததால் கோவத்தில் இருத்தவன் புன்னகையை விழுங்கிவிட்டு முறைப்பாக சென்று கதவைத் திறக்க அங்கே மாயாவோ இவனை விட கோவமாக முகத்தை வைத்திருந்தாள்.
 
#2
இலங்கைவாழ் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிட இறைவனை தினமும் பிரார்த்திக்கிறோம்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#3
இலங்கையில் நிலவிவரும் அசாதாரண நிலைகளால் என்னால் கதையை ஒழுங்காக தொடர முடியவில்லை. இன்று அல்லது நாளையில் இருந்து மீண்டும் கதைக்கான பதிப்புகள் போட படும்.
Take care ma
 
#4
Take care மா...
 
#5
Hi... Epo nxt ud potuvenga.......?
 
Top