அத்தியாயம் 6

K.Thanu

Active member
#1
பகுதி _ 6

அந்த வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி உள்ளே நுழைந்த பரணியின் மனதை வாட வைத்தது.

அம்மா அவர் அறையில் சுருண்டு படுத்திருந்தார். அப்பா இன்னும் வந்திருக்கவில்லைப் போலும்.

ஹ்ம்ம்.. இல்லாவிட்டால் அவன் வீடு இப்படியா இருக்கும்.காலேஜ் விட்டு வீட்டிற்கு வரும் போதே மனதினுள் ஒரு புத்துணர்வு வந்துவிடுமே.

அவன் வீட்டினுள் நுழையும் போதே அம்மா டிபன் தயாரித்து டேபிளில் வைத்துவிட்டு ஹால் சோபாவிலோ அல்லது வெளியே வாசலிலோ அமர்ந்து அவனுக்காக காத்திருப்பார்.

அவனது இரு அக்காக்களும் சில நேரங்களில் ஒன்றாக வீட்டில் இருப்பார்கள். அப்படி இருந்தால் கரம் விளையாடியபடியோ அல்லது ஹாலில் அமர்ந்து அம்மாவுடன் டிவி பார்த்தபடி அரட்டை அடித்தபடியோ இருப்பார்கள்.

அவனைக் கண்டதும் அவன் சுபி அக்கா டேய்... பப்பு குட்டி வந்துட்டியா? போய் பிரெஷ் ஆகிட்டு வா. நான் டிபன் எடுத்துட்டு வாறேன் என்று போவாள். உடனே இந்த விபு குரங்கு

ஹேய்ய்...சுக்கு நீ இவனை பப்புக்குட்டி பப்புக்குட்டி என்று கொஞ்சும் போது எனக்கு நம்ம பக்கத்து வீட்டு உஷா பப்பிக்குட்டி என்று அவள் நாயைக் கொஞ்சுவது போலவே தோன்றுகிறதுடி என்பாள்.

ஏய் ... கொழுப்புத்தானே உனக்கு. என்னை சுக்கு மிளகு என்று அசிங்கப்படுத்துவது போதாதென்று அவன் செல்லப் பேரையும் கிண்டல் செய்கிறாயா??

நீங்க என்னை குட்டி என்று கொஞ்சுவதில் இந்த குரங்குக்கு கடுப்பு சுபிக்கா என்று விபுவின் தலையில் தட்டுவான் பரணி.

பின்னே யுராசிக் வேர்ல்ட்ல வாற நியூ வெர்ஷன் டைனோசர் போல இருக்குற உன்னை போய் குட்டி என்று கொஞ்சினால் கடுப்பாகாதா??

ஹே போடி.. நான் எப்படி இருந்தாலும் என் சுபிக்காக்கு நான் குட்டி தான் இல்ல சுபிக்கா... என்று தமக்கையின் தோளில் செல்லமாக தலையை சாய்த்துக்கொள்வான்.

டேய்... எருமை எருமை...காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறடா. கொஞ்சமாவது அந்த மச்சுவர்ட் ஓட நடந்துக்கோ... இப்படியே அக்காகிட்ட செல்லம் கொஞ்சிக்கிட்டே பாப்பா போல இருந்தின்னா ஒரு பிகர் கூட உன்ன சைட் அடிக்க மாட்டாங்க சொல்லிட்டேன்.

ஹேய்..நீ எங்க இருந்து எங்க போற?? நாங்கல்லாம் அந்தந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக்குவோமாக்கும். என் காலேஜ்ல ஐயாவுக்கு எத்தன பான்ஸ் இருக்காங்க தெரியுமா?? என்று சட்டைக் காலரை கெத்தாக உயர்த்திவிட்டுக்கொள்வான்.

அடப்பாவி.... ஏய் சுக்கு பாத்தியாடி இவன.இவனப் போய் குட்டி குட்டின்னு கொஞ்சுறியே இது உனக்கே அடுக்குமா?? ஹ்ம்ம்... என்னை போல அப்பாவிகளுக்கு காலமே இல்லப்பா... என்று சத்தமாய் சலித்துக்கொள்வாள்.

ஹா... ஹா...சுபிக்கா இவள் அப்பாவியாம். இத நம்ம ரிஷி அத்தான் கிட்ட சொல்ல சொல்லுங்க அப்படியே நம்புவாங்க.

டேய்.. நீ ஏண்டா இப்போ அந்த புள்ளபூச்சி பேர இழுக்கிற??

ஹ்ம்ம்... உன்ர அப்பாவித்தனம் எந்த ரேஞ்சுக்கு போகும்னு பாவம் அவருக்கு தானே தெரியும்....

ஏய்..சுக்கு ..வேணாம் இவன வாயை மூடிட்டு இருக்க சொல்லு..இல்லைனா ..அப்புறம்..... என்று அவள் மிரட்டலாய் இழுக்கவும் முகம் லேசாக சிவக்க சுபாங்கி சும்மா இரு பப்பு என்று தம்பியை அடக்குவாள்.

அக்கா..... அது என்ன எப்போ பார்த்தாலும் ரிஷித்தான் பேர எடுத்து இவள் எதாச்சும் சொன்னா மட்டும் உடனே ஆப் ஆகிடுறீங்க??? ஏதாச்சும் மேட்டர் எனக்கு தெரியாம ஓடிட்டு இருக்கா?? ஹ்ம்ம்... இருந்தா எனக்கும் சொல்லுங்க பா.

ஆனா ஒண்ணு சரோத்தைக்கும் அப்பாக்கும் அப்படி ஒரு ஐடியா இருக்குன்னு தெரியும். அத்தான் அடிக்கடி இங்க வாறதும் உங்க கூட பேசி பழகத்தானோ என்னவோ???? ஆனா அதுக்கு தான் இந்த குரங்கு அவர விடவே விடாதே.ஒன்று ரிஷித்தான்....பாட்மிண்டன் விளையாடலாமா?? என்று கூப்பிட்டு அவர் மண்டையை உடைக்கும் அல்லது நானே போட்ட காபி என்று கூறி அவர் சட்டையிலேயே காபி கப்பை கவிழ்க்கும் ...ஏதோ ஒரு குரங்குச் சேஷ்டை செய்து அவரை வந்த அடுத்த அரை மணி நேரத்திலேயே துரத்தி விட்டுவிடுமே...

பரணி கிண்டலாக சொல்ல சரிப்பா ....நான் இனி உன் அத்தானை துரத்தவே இல்லை. அவர் சுக்கு கூட நன்றாக பேசிப் பழகட்டும் நான் குறுக்கிடவே மாட்டேன் பா ...என்று கூறி விபு தமக்கையைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரிக்க....

முகத்தில் லேசான சிவப்புடன் ..ஸ்ஸ்ஸ்... போதும்..போதும்... விபு வா டிபன் எடுத்துட்டு வரலாம். பப்பு நீ போய் சீக்கிரம் பிரெஷ் பண்ணிட்டு வா. இன்னைக்கு அம்மா உனக்கு பிடிச்ச டோனட்ஸ் பண்ணியிருக்காங்க என்று பரணியை அனுப்பி விட்டு தங்கையை இழுத்துக் கொண்டு போவாள்.

K.Thanu

Active member
#2
கிட்செனில் காபி தயாரித்தபடியே அம்மா இவர்கள் சம்பாசணையைக் கேட்டு சிரித்தபடியிருந்ததும் நினைவுக்கு வந்தது.

அம்மா அப்பா இரண்டு பேருமே மிகவும் அண்டர்ஸ்டான்டிங். பிள்ளைகளின் பேச்சில் அனாவசியமாக மூக்கை நுழைக்க மாட்டார்கள். அதே நேரம் அவர்கள் கண்காணிப்பும் பிள்ளைகள் மேல் இருக்கும்.அவர்கள் வரம்பு மீறி பேசி விட முடியாது.ஆனால் அவர்கள் சில நகைச்சுவைப் பேச்சினை கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள்.

எவ்வளவு மகிழ்ச்சியான குடும்பம் அவர்களது. ச்சே... சுபி மேல் அவன் எவ்வளவு பாசம் வைத்திருந்தான். அவன் அக்காவா இப்படி ஒரு செயலைச் செய்தாள்.அவனால் இன்னும் நம்பத்தான் முடியவில்லை.ஹ்ம்ம்....அதுவும் அந்த......அவன்...அவரை... ஹ்ம்ம்..... அவர் கண்ணில் தன் பெண்கள் பட்டுவிடக் கூடாது என்று தானே அப்பா...இங்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தார்.அவர் ஆள் சரியில்லை என்று அப்பா சொல்லி இருக்கிறார் தானே??? அப்படி இருந்தும் சுபிக்கா எப்படி இப்படி ஒரு செயலைச் செய்தாள்.

ஹ்ம்ம்.. ஒரு பெரு மூச்சு விட்டபடியே தலையைக் கோதியபடி மேலே சென்று பிரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்தான். எதிரே விபு வந்து கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் சோர்வு தெரிந்தாலும் வருத்தம் தெரியவில்லை.தம்பியைப் பார்த்து புன்னகைத்தாள்.

வந்துட்டியா பப்பு....டிபன் எடுத்து வைக்கவா??

அவள் அப்படிக் கேட்கும் போதே அவனது சுபி அக்காவின் நினைவில் பரணியின் விழிகளில் நீர் நிறைந்தது. அதைக் கண்டதும் பப்பு டேய்... என்று அவன் தலையை வருடியவள்.... அவன் கையைப் பற்றி தன்னறைக்கு இழுத்துப் போனாள்.

அவன் கண்ணீர் நிற்கும் வரை அவன் கை ஒன்றை தன் கரத்தினுள் பொத்தி வைத்தபடி அமைதியாய் இருந்தாள். சற்று நிதானத்துக்கு வந்த பரணி தாங்க முடியாமல் கேட்டான்.

ஏண்டி அக்கா இப்டி பண்ணாங்க?? நான் இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.அப்படி அக்காக்கு நம்ம எல்லாரையும் விட அவன்..அந்த...

ஸ்ஸ்ஸ்..... எது எப்படி நடந்தாலும் அவர் நமக்கு மாமா பரணி.அந்த மரியாதையை நாம கொடுக்கணும்.

ஹ்ம்ம்.... ஆனா இத உன்னால அப்பா முன்னாடி சொல்ல முடியுமா??

ஹ்ம்ம்... முடியாது தான் பப்பு. ஆனால் நாங்களும் அப்பா போலவே இருக்க வேண்டும் என்று இல்லையே!! அவள் நம் அக்காடா.

ஹ்ம்ம்.... நம் அக்காவா இப்படி ஒரு செயலைச் செய்தாள் என்று இருக்கிறது விபு. நம்பவே முடியவில்லை.

ஹ்ம்ம்.. என்னாலும் தான். என்று ஏதோ சிந்தனையுடன் முணுமுணுத்தாள் விபாங்கி
விபுக்கா உனக்கு அக்கா மேல் கோபமே வரவில்லையா?

ஏன் கோபம் வரணும்?

என்னடி இப்படிக் கேட்கிறாய்???

ஏய்... ஒன்று அக்கா என்று சொல்லு.. இல்லை டி சொல்லு.....

ஹ்ம்ம்.. நான் என்ன செய்வது சில நேரங்களில் தான் நீ எனக்கு அக்கான்றதே நினைவு வருது. உன் கூட பிரெண்ட் போலவே பேசி பழகிட்டேனா..... சாரிடி.

ஹ்ம்ம். சரி விடு.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு??

என்ன??

ஏன் சுக்கு மேல கோபம் வரணும்???

என்ன விபுக்கா... அக்கா பண்ணது தப்பில்லையா?? எங்களைப் பற்றி அப்பாவைப் பற்றி குடும்ப கௌரவத்தைப் பற்றி ஒன்றுமே சிந்திக்காமல் இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டார்களே!!!!

நீ என்ன சொல்கிறாய் பரணி? அக்கா நமக்காக பார்த்துக்கொண்டு திருமணமே செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்கிறாயா??

ஹேய்ய்.. லூசு நான் அப்படியா சொன்னேன்.அவளுக்கு பொருத்தமானவரை அப்பாவே பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பார் தானே... இது ... இந்த.. இவர்.... ஒன்றும் அக்காவுக்கு ஏற்ற மாதிரி தெரியல...ஆள் சரியில்லை என்று அப்பா கூட சொல்லியிருக்கிறார்.

ஹ்ம்ம்... ஆனால் அக்காவுக்கு அவரைத் தானே பிடித்திருக்கிறது.

ஹ்ம்ம்... அது தான்டி எனக்கும் ஆச்சரியமாய் இருக்கு.எப்படி அக்காக்கு அவரைத் தெரியும்?? எங்கள் அனைவரையும் விட்டு அவரை மட்டுமே நம்பி செல்லும் அளவிற்கு ....அவரைப் பிடிக்குமென்றால்.... அக்கா அவருடன் எப்படி எங்கேடி பழகியிருப்பார்கள்?? அப்பா ரொம்ப வருஷமாக ஊருக்கு கூட அழைத்துப் போகவில்லையேடி...

ஒரு கணம் எதையோ எண்ணியவள் போல விபாங்கியின் இதழ்களில் சிறு புன்னகை மலர்ந்தது.

என்னடி??

இல்லை... அக்கா பதினைந்து வயதாய் இருக்கும் போது ஒரு தடவை ஊரில் வயல் வரப்பில் ஓடி விளையாடிய போது அங்கிருந்த மொட்டை கிணற்றில் விழுந்துவிட்டாளாம்.

ஒ...

அப்போ பக்கத்துல பெரியவங்க வேற யாருமே இல்லையாம்..

ஒ.. ஆனா அக்காக்கு நீச்சல் தெரியுமில்ல..

ம்ஹும்..அப்போ தெரியாது.அந்த சம்பவத்துக்கு பிறகு தான் அப்பா அக்காவ நீச்சல் கிளாசுக்கு அனுப்பினார்.

ஒஹ்... அப்போ எப்படி தப்பினா??

ஹ்ம்ம்.... அப்போ வயல்கள பாத்துட்டு நம்ம தனா மாமா அந்த வழியா வந்திருக்கார். அக்கா பிரெண்ட்ஸ் அவர் கிட்ட சொல்ல அவர் தான் உடனே கிணத்துல குதிச்சு காப்பாத்தினாராம்.
 
K.Thanu

Active member
#3
ஓஹோ... அதில தான் நம்ம அக்காக்கு அந்தாள் மேல காதல் வந்திருச்சாக்கும் என்று கேலியாய் இழுத்த பரணி சட்டென ஏதோ தோன்றவும்

ஹேய்ய்.. அப்போ உனக்கு முதலே எல்லாம் தெரியும்...என்றான் குற்றம் சாட்டும் பார்வையுடன்.

ஒரு கணம் தலை குனிந்தவள். பின் நிமிர்ந்து பப்பு உனக்கு தெரியும் அக்காவும் நானும் எவ்ளோ பிரண்ட்ஸ் என்று..அக்கா மனசுல என்ன இருக்கென்று தெரியும். அதனால தான் ரிஷித்தான அக்கா கிட்ட நெருங்காம பாத்துக்கிட்டேன்..

என்ன பரணி அமைதியாய் இருக்க?? எங்க மேல கோபமா??

ப்ச்.... அவன் நல்லவன்னா பரவால்ல.... ஆனா அப்பா...

ஹ்ம்ம்.. நமக்கு அப்பா பேச்சை மட்டும் வைத்து தான் அவரை தெரியும் பரணி. அப்பாக்கு அத்தை மேல் ரொம்ப வெறுப்பு....

ஆனால்... அதற்காக இப்படி அநியாயமாக ஒருத்தர் மேல் பழி போடுகிறவர் அப்பா இல்லையேடி.

ஹ்ம்ம்... தெரியல பரணி.ஆனா ஒண்ணு மட்டும் தெரியும் அக்கா அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாள்.

ஓஹோ..அதுனால தான் அக்கா ஓடிப் போக மேடம் ஹெல்ப் பண்ணினீங்க போல?? ஏன் வீட்டில் பேசி அப்பா சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கலாமே? எதற்கு இந்த திருட்டுத்தனம்?

ஹேய்ய்ய்..... பரணி.. இந்த திருமணத்திற்கு அப்பா சம்மதம் சொல்வது என்பது நடக்கவே நடக்காத விடயம்..எவ்ளோ காலம் காத்திருந்தாலும் அது நடந்திருக்காது..

ஹ்ம்ம்.. சோ அக்கா இப்படி கம்பி நீட்டினது தான் சரி என்கிறாயா?? நாளைக்கு நீயும் இதே போலத்தான் செய்வாயா?

ஹேய்.. ஷட்அப் .... ஜஸ்ட் ஷட்அப் பரணி... அக்காவைப் பற்றி உனக்கு என்னடா தெரியும்?? அவள் மனதில் அவர் மேல் ஒரு எண்ணம் இருந்தது சரி தான். ஆனால் அந்த சைட் மாமா மனம் எப்படி என்று அவளுக்கு தெரியாது. தெரிந்து கொள்ள அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கேட்டால் என்ன சொல்வாள் தெரியுமா? என் மனதில் அவர் தான் விபு.ஆனால் அதற்காக என்னால் அப்பாவை மீறி அவரை திருமணம் செய்ய முடியாது. அதோடு அவர் மனதில் என்னவென்றும் எனக்கு தெரியாது. அப்பா அவரைப் பொறுக்கி அது இதுவென்று பேசுகிறார்.. ஆனால்.... அவர் அப்படி இல்லை என்று என் மனம் சொல்லுகிறது என்பாள்.

ஓயீ.. உன் முடிவு தான் என்னடி?? இங்கே ரிஷி வேறு பாவம் உனக்காக நான் என்ன இம்சை செய்தாலும் தாங்கிக் கொண்டு வந்து போகிறார்.பேசாமல் அவருக்கே ஓகே சொல்லி விடேன் என்றால்....

ப்ச்.....என் மனதில் தனா தான். அதே போல் அவர் மனதிலும் நான் இருந்தால் தேடி வரட்டும்.

அப்படி வராவிட்டால்??

திருமணம் மட்டும் தான் வாழ்க்கையா என்ன?? அவள் விழியோடு விழி கலந்து அதை சொன்ன தமக்கையின் குரலில் இருந்த உறுதி அன்று அவள் மனதை சிலிர்க்கச் செய்தது.

அதைக் கேட்ட போது பரணியும் மௌனமாகி விட்டான்.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அப்புறம் எப்போது விபு அக்காவும் அவரும் சந்தித்துக் கொண்டார்கள்??

அது தான் தெரியவில்லைடா. அக்கா அது பற்றி எதுவுமே என்னிடம் கூறவில்லை. அவள் இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று நிஜமாவே எனக்கு தெரியாது டா.

ஹ்ம்ம் ....சொன்னால் நீ தடுப்பாய் என்று எண்ணினார்களோ என்னவோ??

ஹ்ம்ம் ... தெரியவில்லை.ஆனால் ஒன்று பரணி. எனக்கு அவள் மேல் துளியும் கோபம் இல்லை. சந்தோசம் தான்.

ஹ்ம்ம்.. நீ அக்காவின் மனது பற்றி கூறிய பின்பு .... ஹ்ம்ம் அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அது போதும்.. என்று கூறிய தம்பியை தோளோடு அணைத்துக்கொண்டாள் விபாங்கி...

அன்று அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது சுபாங்கிக்கு.அருகில் பிரபாவதி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அதற்கு மேல் தூக்கம் வரும் போல் தோன்றாததால் எழுந்து பிரெஷ் ஆகி மெல்ல அறையை விட்டு வெளியே வந்து தோட்டத்தில் நுழைந்தாள்.

அந்த காலை நேர குளிர் காற்றும் தோட்டத்து மரங்களில் இருந்து பறந்த பலவகைப் பறவைகளின் கலகல ஒலிகளும் மெல்ல மெல்ல இதழ் அவிழ்த்துக் கொண்டிருந்த மலர்களின் நறுமணமும் அவள் மனதை மகிழ்வித்தன.

ம்ஹா... என்று மூச்சை ஆழ இழுத்துச் சுவாசித்தவள் கைகள் இரண்டையும் தேய்த்து கன்னத்தில் அழுத்தியபடியே மெல்ல நடந்தாள்.

அந்த தோட்டம் மிகப் பரந்து இருந்தது. ஆனால் எதுவும் ஒழுங்காய்ப் பேணப்படவில்லை என்று தெரிந்தது. நடைபாதை இருந்தாலும் அதனை புற்கள் மூடியிருந்தன. பூச்செடிகள் , குரோட்டன்ஸ் எல்லாம் எந்த ஒழுங்கும் இன்றி தாறுமாறாக வளர்ந்திருந்தன.

தோட்டக்காரன் என்ன செய்கிறான்?? இதையெல்லாம் யாரும் கவனிப்பதே இல்லையா??? முறைப்படி இந்த தோட்டத்தை பராமரித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்..

ஏதேதோ எண்ணியபடியே நடந்து கொண்டிருந்தவள் கால்களினிடையே எதுவோ உரசியபடி ஓடவும் அம்மா.. என்று அலறியபடி துள்ளிக் குதித்தாள்.

பின்னாலே சிரிப்புச் சத்தம் கேட்டது.திரும்பி பார்த்தால் தனஞ்சயன் தான். வீராதி வீரி ..சூராதி சூரி ....ஒரு ஓணான பார்த்து இந்த பயம் பயப்படுறாங்கடா.. என்றான் நக்கலாய்...

அவள் முகத்தில் கோபம் தென்பட்டது. எதிர்பாராமல் காலில் ஏதாவது உரசியபடி ஓடினால் யாராய் இருந்தாலும் பயப்படுவாங்க தான்.

அப்படியா மேடம்... நீங்கள் சொன்னால் நம்ப வேண்டியதுதான்.

உக்கும்.... இந்த நக்கலுக்கொன்றும் குறைச்சல் இல்லை.

வேறு எதில் குறை மேடம்??

ம்ம்... எது நிறையாய் இருக்கிறது என்றாள் அவள் ஒரு மாதிரி மட்டம் தட்டும் குரலில் .....

ஏய் என்ன கொழுப்பா என்றான் தனா கோபத்துடன்.

இல்ல ப்ரோடீன்.. என்றாள் அவள் சளைக்காமல்...

இருந்தாலும் உனக்கு திமிர் ஜாஸ்தி தான்டி....என்ன செய்தாலும் ஏன்னு கேட்க யாரும் இல்லை.. அப்படி இருந்தும் இந்த வாய் பேசுகிறாய்..

ஹலோ.... என்ன மிரட்டிப் பார்க்கிறீங்களா???

ஆமாமா நீ அப்படியே மிரண்டுட்டாலும்.....

புரியுதில்ல.... என்ன சொன்னீங்க?? ஏன்னு கேட்க யாரும் இல்லையா?? என் அத்தை இருக்காங்க சார். என் மேல் ஒரு தூசு கூட படாம அவங்க பார்த்துக்குவாங்க...

ஹ்ம்ம்... அந்த கொழுப்பில தானே இவ்ளோ இயல்பா சுத்திக்கிட்டிருக்க.... ஆனா உனக்கு ஒண்ணு தெரியுமா?? நான் ஏதாவது செய்ய நினைச்சா அதை அவங்களால மட்டுமில்ல வேற யாரேலேயும் தடுக்க முடியாது. நம்ம கல்யாணமே அதுக்கு ஒரு சான்று.... என்றான் அவன் கர்வக் குரலில்.

அந்த கர்வம் அவளைச் சீண்ட
ஹ்ம்ம்.. இதன் மூலம் தாங்கள் கூற வருவது என்னவோ?? என்றாள் நக்கலுடன்.....

அந்த நக்கல் அவனை சீண்டிவிட அவளை ஒரு கணம் முறைத்தவன். ஒரு விரலை உயர்த்தி என்னை கோபப்படுத்தாமல் இருப்பது உனக்கு நல்லது சுபாங்கி. என்றான் அமைதியான குரலில்.. அந்த குரலில் கோபம் இல்லை ...மிரட்டல் இல்லை.. ஆனால் ஓர் அழுத்தம் இருந்தது... அது சுபாங்கியின் உடலில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது நிஜம்.
 
K.Thanu

Active member
#4
அன்று காலை உணவு முடிந்து தனாவும் முகிலனும் கிளம்பிய பிறகு சுபாங்கி பிரபாவதியிடம் தோட்டம் குறித்து பேசினாள்.

ஏன் அத்தை எவ்வளவு பெரிய தோட்டம்.... எத்தனை விதமான பூச்செடிகள் , வித விதமான குரோட்டன்ஸ் என்று நிறைய இருக்கு..ஆனா ஏன் அதை நீங்க சரியான விதத்தில் பராமரிக்காம விட்டிருக்கீங்க??

ஹ்ம்ம்... அதில் ஆர்வம் வரவில்லைடா... வீட்டில் ஒரு பெண்பிள்ளை இருந்தால் தோட்டத்தில் அக்கறை செலுத்தி இருப்பாளோ என்னவோ? தனா காலையில் வெளியே போனால் மீண்டும் மாலையில் தான் வீட்டுக்கு வருவான்.. நான் .... எனக்கும் அதிலெல்லாம் ஆர்வம் இல்லை..மனச் சோர்வு... உடம்பும் அவ்வளவிற்கு ஒத்துழைப்பதில்லை...சற்று நடந்தாலே மூச்சு வாங்குகிறது.....

ஏன் அத்தை தோட்டத்தை பராமரிக்க தோட்டக்காரன் இருக்கிறார் தானே?? நீங்கள் சற்று மேற்பார்வை பார்த்து அதை செய் இதைச் செய் என்று செய்யவேண்டியதைக் கூறினால் கூட போதுமே...

ஹ்ம்ம்.. தோட்டகார முனியனை அனேகமாக தனா வயல் வேலைகளுக்கு அத்தோடு தோப்பில் சருகு புதைக்க என்று அழைத்துப் போய் விடுவான்மா. அத்துடன் இவ்வளவு பெரிய தோட்டத்தை அவன் ஒருவனே முழுவதும் பராமரிப்பது என்பதும் கஷ்டம் தானேடா...

உங்களுக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லுங்கள் அத்தை என்றாள் சுபி கோபத்துடன்... பின்னே அங்கே அவள் வீட்டில் சிறு சிறு தொட்டிகளில் கூட பூச்செடிகள் நட்டு எவ்வளவு ஆசையாக வளர்ப்பார்கள் அவளும் விபுவும்...இங்கே இந்த அற்புதமான தோட்டத்தை இப்படி காடாக்கி வைத்திருக்கிறார்களே என்று அவளுக்கு கோபம் வந்தது.

அவள் கோபத்தைப் பார்த்துச் சிரித்த பிரபா இது இனி உன் வீடு சுபிம்மா இனி இந்த வீடு தோட்டம் எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கொள். உன் விருப்பம் போல எப்படியோ மாற்றிக்கொள் சரியா?? என்றார் அன்புடன்.

அவளுக்கும் அந்த தோட்டத்தை நல்ல விதத்தில் சீரமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனவே மகிழ்ச்சியுடனேயே ஒத்துக் கொண்டாள். ஆனால் கூடவே தனஞ்சயன் என்ன சொல்லுவானோ என்ற ஐயமும் எழ

அத்தை நான் இப்படி தோட்டத்தில் ஏதாவது மாற்றம் செய்தால் உங்கள் மகன் ஒன்றும் சொல்ல மாட்டாரா?? என்று தயக்கத்துடன் வினவினாள்.

அவன் என்னம்மா சொல்வது?? சுபி ஒன்றைப் புரிந்துகொள்ளம்மா எது எப்படி நடந்த போதிலும் நீ தனாவின் மனைவி. இனி காலத்துக்கும் அந்த உறவு மாறப் போவதில்லை. அவன் உனக்குரிய உரிமையைத் தந்து தான் ஆக வேண்டும்.தராவிட்டால் நீ எடுத்துக்கொள். இனி இது உன் வீடு சுபிம்மா என்றார் ஓர் உறுதியுடன்.

அந்த குரலின் உறுதி சுபிக்குள்ளும் ஏதோ ஓர் நிமிர்வை விதைத்தது.

மறுநாள் காலை உணவின் போதே பிராபாவதி அது குறித்து தனாவிடம் பேசினார்.

தனா நம்ம சுபி தோட்டத்தை சீராக்கணுங்கிறா... நம்ம தோப்பில் இருந்து நாலு பேர அனுப்பி வைப்பா.. இந்த வேலைக்கும் தனியா கூலி போட்டு கொடுத்திடலாம்.

ப்ச்.... தோப்பில இப்போ காய் பறிச்சிட்டு இருக்கோம்மா. இப்போ ஆளுங்கள அனுப்புறது கஷ்டம்...அங்கேயே நிறைய வேலை.....

பரவால்ல அத்தை கொஞ்ச கொஞ்சமா நானே பாத்துக்கிறேன்.... நம்ம தோட்டக்காரன் ஒருத்தர் மட்டும் போதும். எனக்கும் பொழுது போகும்ல...

அவனின் பேச்சை இடைமறித்துப் பேசிய சுபாங்கியை தனஞ்சயன் ஒரு கணம் முறைத்தான்.... பின் தாயிடம் திரும்பி இவ்ளோ பெரிய தோட்டத்த மேடம் தனியே சீரமைக்கப் போறாங்களாமா?? சும்மா காமெடி பண்ண வேணாம்னு சொல்லுங்கம்மா....

அடுத்த வாரம் தோப்பு வேலை எல்லாம் முடிஞ்சுடும் கூடவே நாலு ஆளுங்கள போட்டு செய்யச் சொல்லுங்க.. இவ சும்மா என்ன எப்படி செய்யணும்னு சொன்னாலே போதும். அவங்க பாத்துக்குவாங்க என்று கூறிவிட்டு கைகழுவ எழுந்து சென்றான்.

சுபாங்கி முகம் மலர குனிந்து உணவை எடுக்க அந்த இடைவெளியில் முகிலனின் பார்வையும் பிரபாவதியின் பார்வையும் சிரிப்புடன் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொண்டது.

#5
Nice😉😆
 
#6
ஹப்பாடா!! இவர்களுக்குள் ரொமான்ஸ் வருவதற்கு நாங்கள் எவ்வளவு நாள் கஷ்டப்பட்டு காத்திருந்தோம்.. ஒரு வழியாக இப்ப தான் ஆற அமர ஆரம்பிச்சிருக்காங்க.. சந்தோசம்!!
 
niti

New member
#7

Super
 
emilypeter

Well-known member
#8
அருமையான பதிவு
 
#9
PL update next episode
 
Top