அத்தியாயம் 6

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம் 6

சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்ததுமே முதலில் யாருக்கு என்ன வாங்குவதென்று ஒரே குழப்பமாக இருந்தது. அதைவிட முந்தைய நாட்களில் அவனோடு பொருட்கள் வாங்கிய நினைவுகள் வேறு என்னை இம்சிக்கத் தொடங்கியிருந்தன. இந்த இரண்டுக்குமிடையே நான் குழம்பித் தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான், பின்னாலிருந்து அவனது குரல் கேட்டது.

"என்ன வாசலிலேயே நின்னு மொத்த கடையையும் பார்த்திட்டு இருக்க. கடையையே விலைக்கு வாங்கப் போறியா என்ன?"

அவன் கேட்ட கேள்வியை விடவும், அவன் ஏன் வந்தான் என்பதே என்னைக் குடைந்தது.

"வரலைன்னு சொன்ன..."

"அப்போ ஏன் வந்தாய்ன்னு கேட்குறியா?"

"நான் அப்படிச் சொல்லல.."

"ஓஓ…! அப்போ வேற எப்படிச் சொன்னீங்களாம் மேடம்?"

"நான் எப்படியும் சொல்லல. ஆளை விடு சாமி." என்று அவன் முன்னே இரண்டு கைகளையும் குவித்து கும்பிடு போட்ட நான், பழங்களிருந்த பகுதியை நோக்கி விரைந்தேன்.

ஆனாலும் வாய் அதன் போக்கில் முணுமுணுக்கத் தொடங்கியது.

"வரலைன்னு சொல்லிட்டு வந்து நின்னா ஏன்னு கூட கேட்க மாட்டாங்களா? அது ஏதோ பெரிய குத்தம்னு அதைப் பிடிச்சு தொங்கிக்கிட்டு."

"நீ முணுமுணுக்கிறது இங்க நல்லாவே கேட்குது. என் மேல இருக்கிற கோபத்தை மாம்பழத்து மேல ஒன்னும் காட்டிடாத."

அவனைத் திரும்பி லேசாக முறைத்த நான்,

"மாம்பழத்துக்கு ஒன்னும் ஆயிடக்கூடாது. ஆனால் காதலிச்ச பொண்ணோட மனசு மட்டும் என்ன ஆனாலும் பரவாயில்லை." என்று மனதில் மட்டுமே பொருமிக் கொண்டேன்.

ஆனால் அவன் அதற்கும் பதில் தந்தான்.

"மனுசங்களோட மனசையும் எனக்கும் புரிஞ்சுக்கத் தெரியும் மித்ரா. ஆனால் சிலர் தான் புரிஞ்சும் புரியாத மாதிரி நடந்துக்கிறாங்க." என்று என்னை ஏதோ உள் அர்த்தத்தோடு நோக்கியவன் சிறிது தூரம் விலகி நின்றான்.

அவனது அம்மாவிற்கென பழங்களை வாங்கிக் கொண்ட நான், ஆரு குட்டிக்கு பொம்மையொன்றையும், சொக்லேட்களையும் வாங்கிக் கொண்டேன்.

அவனது மனைவிக்கு என்ன வாங்குவதென்று குழப்பமாக இருந்தது.


வேறு வழியின்றி அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அவனருகே சென்ற நான்,

"உன்னோட மனைவிக்கு என்ன பிடிக்கும்..?" என்றேன்.

அவன் சிறிதும் யோசிக்காமல்...

"என்னைத்தான் பிடிக்கும்..." என்றான்.

அதுவரை நேரமும் இருந்த இதம் எங்கோ காணாமல் போக அவனது பதிலில் கண்களோரமாய் கண்ணீர்த்துளிகள் முட்டி மோதத் தொடங்கின.


அவன் அறியாமல் திரும்பி நின்று அதைத் துடைத்துக் கொண்ட நான்..

"நான் அதைக் கேட்கல. உன் வைப்ஃக்கு எந்த ஐயிட்டம்ஸ் ரொம்ப பிடிக்கும்னு கேட்டேன்."என்று இயன்றவரை அழுகையை அடக்கிக் கொண்டே கேட்டேன்,

நான் கேட்டதும் வாங்கியிருந்த பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தியவன்,

"அவளுக்கு சொக்லேட்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். நீதான் அதை ஏற்கனவே வாங்கிட்டியே. இனி நாம கிளம்பலாமா?"

"ம்ம்..."

பொருட்களுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு நான் வெளியே வரவும் அவன் பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்திருந்தான்.

அதன் பின் அவனது வீட்டைப் போய்ச் சேரும் வரை மீண்டும் எங்கள் இருவரையும் மௌனமே ஆரத் தழுவிக் கொண்டது.

அவனது வீட்டிற்கு இதற்கு முன்னும் பல தடவைகள் வந்துள்ளேன்.

ஆனால் அப்பொழுதெல்லாம் எனக்குள் எழாத தயக்கம் இப்போது மட்டும் எனக்குள் எழுந்து என்னைப் பாடாய்ப்படுத்தியது..

காரை விட்டு இறங்கியதுமே வீட்டை நன்றாகப் பார்த்தேன். முதல் இருந்ததிற்கு இப்போது அவனது வீடு பல மாற்றங்களைக் கண்டிருந்தது.

எனது கால்கள் லேசாக நடுங்கத் தொடங்கியிருந்தன. அது ஏனேன்று எனக்கே சரிவரத் தெரியவில்லை...

காரின் சத்தம் கேட்டதுமே வெளியே எட்டிப் பார்த்த அவனது அம்மா, என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டார்.

அந்த அணைப்பினில்தான் எவ்வளவு அன்பு கொட்டிக் கிடந்தது. இதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டா நான் சென்றேன் என்று என் மனம் கேட்டுக் கொண்டது.


ஆனாலும் எனக்குத்தான் வேறு வழி இருக்கவுமில்லையே...

"எப்படிம் மா இருக்க? பார்த்து எத்தனை வருசமாச்சு?"

"நான் ரொம்ப நல்லாயிருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க?"

"எனக்கென்னமா கடவுள் புண்ணியத்தில ரொம்ப நல்லாவே இருக்கேன்."

"இப்போதான் எங்களையெல்லாம் பார்க்கனும்னு உனக்குத் தோனிச்சா?"

"நானும் இங்கதான்மா இருக்கேன். என்னையும் இரண்டு பேரும் கவனிச்சீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்."

நல்லவேளை அவன் இடையில் குறுக்கிட்டான்.

இல்லையென்றால் அவனது அம்மாவின் கேள்விக்கு என்ன பதிலைத்தான் சொல்லியிருக்க முடியும்?

"உன்னைத்தானே 29 வருசமா கவனிச்சிட்டு இருக்கேன். இதுக்குமேலயும் உன்னை என்னால கவனிக்க முடியாது பா..."

"கவனிக்கலைன்னா போங்க. அதான் என்னைக் கவனிச்சுக்க இரண்டு பேர் இருக்காங்களே."

"போடா படவா..."

"எங்கம்மா ஆருக்குட்டி? சாப்பிட்டாளா?"

"உன்னோட கதைச்சதும்தான் சாப்பிட்டாள். இப்போத்தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தூங்கினாள்..."

"அதானே. இல்லைன்னா இந்நேரத்திற்கு என் செல்லம் என்கிட்ட ஓடி வந்திருப்பாளே?"

"ஆமா நீங்க என்ன மித்ராவை வாசலோடையே அனுப்புற பிளானா?"

"ஹைய்யோ… உள்ள வா மா. உன்னைப் பார்த்த சந்தோசத்தில அதை மறந்தே போயிட்டேன் பாரு."

"நீங்க அவளை பார்த்த சந்தோசத்தில என்னையே மறந்து போயிட்டீங்க."

இவ்வளவு நேரமாக அவன் முகத்திலிருந்த இறுக்கம் இப்போது காணாமல் போயிருந்தது.

நான்கு வருடங்களின் முன் அவனை எப்படிப் பார்த்தேனோ… அதே குறும்பும் புன்னகையும் இப்போதுதான் அவனிடத்தில் மீண்டும் வந்திருந்தது.

அவன் சொன்னது உண்மைதான். அவனது சந்தோசம் மொத்தமும் இங்குதான் கொட்டிக் கிடக்கிறது. அதை நினைக்கும் போது மனதிற்கு ஒரு பக்கம் கவலையாகவும் மறுபக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

"இப்படி உட்காரும்மா. நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாறேன்..."

"ஹைய்யோ அதெல்லாம் ஒன்னும் வேணாம் மா..."

"அவ அப்படித்தான் மா. நீங்க ஏதாவது ரெடி பண்ணுங்க. நான் என்னோட பொண்டாட்டியை அவளுக்கு அறிமுகப்படுத்திட்டு வாறேன்..."

"சரிப்பா. நீ போய் பார்த்திட்டு வாம்மா...." என்றவாறே அவர் சமையலறை நோக்கிச் செல்லவும்,

"மேலே ரூம்லதான் அவ இருப்பா. வா..." என்று கூட்டிக்கொண்டு போனான்.

அவன் முன்னே படிகளில் ஏற திக் திக் என்று துடிக்கத் தொடங்கிய மனதோடு நானும் அவனைப் பின்தொடர்ந்தேன்...
 

NithaniPrabu

Administrator
Staff member
#2
அறையின் கதவைத் திறந்து கொண்டே அவன்,

"ஹாய் பொண்டாட்டி. இன்னைக்கு உன்னைப் பார்க்க யாரு வந்திருக்கிறான்னு பாரு..." என்றவாறே உள் நுழைந்தான்.

என் கால்கள் அறையின் வாசலிலேயே ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டன.


அதற்கு மேலும் என் கால்கள் நகருவேனா என்று அடம்பிடிக்க நான் அதிலேயே நின்று கொண்டேன்.

"என்ன அங்கேயே நின்னுட்ட. உள்ள வா மித்ரா..."

அவனது குரலில் மீண்டும் நடப்புக்கு வந்த நான் ஒவ்வொரு அடியையும் மெதுவாக வைத்தே உள்ளே சென்றேன்.

"ஹேய் இரு இரு..." என்று என் முன்னே வந்து என்னைத் தடுத்தவன், என் கண்களிரண்டையும் பொத்திக் கொண்டான்...

"சரண் என்ன பண்ற?"

"அட பொறுங்க மேடம்." என்றவாறே என்னை அவன் கைப்பிடியில் அழைத்துச் சென்றான்.

மெதுவாக என் இரு கண்களையும் அவனது கரத்திலிருந்து விடுவித்தவன்,

"இதான் என்னோட பொண்டாட்டி. இதுவரை நேரமும் நீ பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்த இந்தச் சரணோட மனைவி. அவள் மட்டும் இல்லைன்னா நான் எதுவுமே இல்லை. அவதான் எனக்கு எல்லாமுமே..." என்றான்.

"ரொம்ப ரொம்ப அழகாயிருக்கா ல. அகத்திலும் சரி முகத்திலும் சரி அவ எப்பவுமே அவ்வளவு அழகு. என்னுடைய விழிகளுக்கு அவள் மட்டும்தான் இந்த உலகத்திலேயே பேரழகு..."

"அவள்கிட்ட எனக்குப் பிடிச்சதே அவளோட புன்னகைதான். சிரிக்கும் போது ரொம்ப அழகாயிருப்பாள். அவ சிரிக்கும் போது அவளோடு கண்களும் சேர்ந்து சிரிக்கும். அதை வாழ்க்கை முழுதுக்கும் பார்த்திட்டே இருக்கலாம்னு தோனும்..."

"கொஞ்சம் கோபக்காரி. ஆனால் ரொம்பவே பிடிவாதக்காரி.எந்தளவுக்கு பிடிவாதம்னா, அவ ஒரு விசயத்தில முடிவு எடுத்திட்டாள்னா அதிலயிருந்து மாறவே மாட்டாள்."

"அதனாலதான் என்னவோ என் விசயத்தில அவ எடுத்த முடிவைக் கூட அவளால மாத்திக்கவே முடியலை. நாலு வருசமா அவ அதிலேயேதான் உறுதியா இருந்திருக்கிறாள். இப்போவரைக்கும் கூட அவ அதை மாத்திக்க விரும்பல. ஆனால் இந்த முறை அவளோட முடிவில அவ பிடிவாதமா இருக்கிகிறதுக்கான காரணமும் நான்தான். நான் மட்டுமேதான்..."

"நான்னா அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். என்னை வேணாம்னு அவ சொல்லிட்டுப் போனப்ப கூட அவளோட கண்களில நான் அளவுக்கதிமான காதலை மட்டுமேதான் பார்த்தேன்..."

"அந்தக் காதல்தான் அன்னைக்கு என்னை வாயடைக்க வைச்சுது. அந்தக் காதல்தான் அவ என்னை விரும்பியும் எதுக்காக வேணாம்னு சொன்னா என்கிறதுக்கான காரணத்தை தேட வைச்சுது. அந்தக் காதல்தான் அவளுக்காக மட்டுமே காத்திருக்கவும் சொல்லிச்சு..."

"அவ என்னை விட்டு விலகிப் போனதுக்கான காரணத்தை தேடி நான் அலைஞ்சப்போ அதுக்கான பதில் தூரமா நின்னு கொஞ்ச காலத்துக்கு என்னை வேடிக்கை மட்டும்தான் பார்த்திச்சு. ஆனால் அந்தப் பதில் என்கிட்ட வந்தப்போ என்னோட உலகமே இருள்மயமாகும்னு நான் நினைக்கவேயில்லை.."

"என்னை விட்டு அவளை தூரமாக்கிய அவளோட நிலைமைக்காக நான் அழுகிறதா? இல்லை என்னோட வாழ்க்கை நல்லாயிருக்கனும் என்றதுக்காக தன்னையே தனக்குள்ள புதைச்சுகிட்டு வலியோட போனவளை நினைச்சு வேதனைப்படுறதா? இல்லை இதை என்கிட்ட கூடச் சொல்லாதளவுக்கு நான் அந்நியமாகிட்டனா? என்றதை நினைச்சு கண்ணீரில கரையுறதான்னு அன்னைக்கு எனக்குத் தெரியல..."

"ஆனால் அவளோட நிராகரிப்பு என்னைவிட அவளுக்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும்னு என்னால அன்னைக்கு புரிஞ்சுக்க முடிஞ்சுது. இந்த முடிவை அவ எடுக்கிறதுக்கு எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள் என்றதையும் என்னால உணர முடிஞ்சுது."

"எனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். அவங்களோட உலகத்தில நானும் ஒருத்தனாய் இருக்கவே என்னைக்குமே ஆசைப்படுவேன். அவங்களோட சின்னச்சின்ன அசைவுகளைக்கூட நான் அவ்வளவு ரசிப்பேன். என்னுடைய குழந்தை எப்படி இருக்கும்னு எனக்குள்ள ஆயிரமாயிரம் கற்பனைகள்..."

"அதனாலதான் என்னவோ, அவள் என்கிட்ட கூட இந்த விசயத்தை இந்த நிமிசம் வரைக்கும் சொல்லாமலேயே மறைச்சிட்டாள். அவளால தாய்மை அடைய முடியாது என்கிறதை என்கிட்ட சொன்னா எங்க என்னோட வாழ்க்கையில சந்தோசம் இல்லாமலே போயிடும் என்ற பயத்தை விட, எங்க அவளை விட்டு நான் போயிடுவேனோ என்கிற பயம்தான் அவளுக்கு அதிகமாக இருந்திருக்கனும்."

"அதனாலதான் அவளே முந்திக்கிட்டா. ஆனால் அவளோட அந்த முடிவு எனக்கு எவ்வளவு கொடுமையானதுன்னு அவளுக்குத் தெரியல. அவள் என்னோட வாழ்க்கையை விட்டிட்டுப் போயிட்டா நான் இன்னொரு கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைன்னு சந்தோசமா இருப்பன்னு அவ நினைச்சுட்டா."

"ஆனால் அவளுக்குத் தெரியல. என்னோட மொத்த சந்தோசத்தையும் எடுத்துகிட்டுத்தான் அவ என்னை விட்டுப் போயிருக்கான்னு. என்னை முழுமையா நிரப்ப வேண்டியவளே என்னை வெற்றிடமா விட்டிட்டுப் போயிட்டாள்னு..."

"எனக்கொரு குழந்தையை அவளால பெற்றுத்தர முடியாதுன்னு விலகிப் போனவளுக்கு ஒரு உண்மை புரியாமலே போயிட்டுது. என்னோட முதல் குழந்தை என்னைக்கு அவதான்னு..."

"என்னுடைய குழந்தைகளோட உலகத்தில நான் மகிழ்ச்சியா இருக்கனும்னு ஆசைப்பட்டவளுக்கு… என்னுடைய உலகமே அவள்தான்னு தெரியாமலேயே போயிடுச்சு."

"இன்னைக்கு கூட அவளை நான் எவ்வளவோ காயப்படுத்தினேன். வார்த்தைகளாலயே சாகடிச்சேன். என்னை நானே கல்லாக்கிகிட்டு அவளோட இதயத்தையே குத்திக்கிளறினேன்..."

"ஆனால் அப்போதும் கூட அவளோட காதலை ஒத்துக்கிட்டாளே தவிர என்னையும் என்னோட காதலையும் அவ ஏத்துக்கவேயில்லை. என்னை விட்டு விலகிப் போனதுக்கான காரணத்தை அவள் சொல்லவுமில்லை..."

"அவளோட காதல் மட்டுமே எனக்குப் போதும். நான் அவளை அவளுக்காக மட்டுமேதான் காதலிச்சேன். இப்போ கூட அவ என்னோட காதலை ஏத்துக்குவாளா??இல்லையான்னு தெரியல..."

"ஆனால் இன்னும் எத்தனை வருசமானாலும் என்னோட வாழ்க்கையில அவ மட்டும்தான். என்னோட தோழியாய், காதலியாய், மனைவியாய் என்னை அவளால மட்டும்தான் முழுமைப்படுத்த முடியும். எனக்குள்ள இருக்கிற இடைவெளியை அவளால மட்டும்தான் நிரப்ப முடியும்."

"இதுக்குமேலயும் அவளை நான் கட்டாயப்படுத்தப் போறதில்லை. அவளுக்காக… இந்தச் சரணோட மித்ராவுக்காக என் காதலும் நானும் என்னைக்குமே காத்திருப்போம்."


தொடரும்....
 
#3
Nan nenaichan mithrada photo Andy athana,,?,😁😆😀😉
 
#4
ஆஹா நன் நினச்சேன் இப்படி தான் இருக்கும் என்று
அந்த குழந்தை கூட வளர்ப்பு மகளா இருக்கும்
 
#5
Nice ud sis
 
#6
Super.i guess this. Before mirror , nikkavachu Avalaiye avalukku Kattan.
 
Top