தொடர்கதைகள் அத்தியாயம் 4

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம் 4

காலையில் மாயாவை அபி அவளது கம்பஸ் வாசலில் இறக்கும் போது, மாயா தான் அவளைக் கண்டாள்.

அவள் பெயர் ஸ்ருதி. பெரும்புள்ளி ஒருவரின் மகள். மாயா அவளது வகுப்பிற்கும் த்ரீ டி டிசைனிங்க் சப்ஜக்ட் எடுக்கிறாள். வகுப்பில் அவள் செய்யும் கலாட்டாக்கள் ஏராளம். யாரையும் மதிக்காமல் அவளுக்கென்று ஒரு காங்க்கை உருவாக்கிக்கொண்டு சுற்றி திரிபவள். அபி, மாயாவை இறக்கும் இடத்தில் சற்றுத் தள்ளி யாரையோ எதிர்பார்த்தபடி தனது கூட்டத்துடன் அமர்ந்து இருந்திருந்தவள் மாயா, அபியின் கார் வரவும் ஆவலாக அதையே நோக்கினாள். முதலில் காரைத்தான் ஆவலாக நோக்கிக் கொண்டு இருக்கிறாள் என்று எண்ணிய மாயாவுக்கு , அபியை நோக்கி அவளது பார்வை திரும்பவும் திக் என்று இருந்தது.

தனக்கே உரிய பொருளை வேறுயாரும் ஆவலாக பார்க்கும் போது எழும் உரிமையுணர்வு அது.

அதுவும் அம்மா வேறு ஒருத்திக்கு கட்டிவைப்பேன் என்று சொன்னதையே தாங்கமுடியாத பெண்ணின் மனம் நேரடியாக தன் கணவனை இன்னொரு பெண் நோக்கவும் திகைத்து தான் போனது.

என்னடா இது புது தலைவலி? அவள் தலையில் கைவைக்கவும், அவளை நோக்கி வந்த அபி அவளை நெருங்கி
"என்னாச்சு மாயா..ஆர் யு ஓகே?" என்று பதட்டமாக வினவவும் திடுக்கிட்டவள்,"அ.அது..ஒன்டுமில்லை அபி.நான். நான் போறன்" என்றவளின் பார்வை அவர்களை முறைத்துக்கொண்டு இருந்த ஸ்ருதியை தொட்டு மீண்டது.


நொடியேனும் அவளது பார்வை போன திக்கை பார்த்தவன் அங்கு அமர்ந்து இருந்த ஸ்ருதியைக் கண்டு விழி சுருக்கினான்.

"யார் அது?"

"எ..எது?" ஸ்ருதியின் திசை நோக்கி கையை நீட்டியவன் , "அந்த பொண்ணு தான். " என்றதும் சுரு சுருவென கோவம் வரவும் , "உங்களுக்கு எதுக்கு?" என்று காரமாக கேட்டாள்.

அவள் கோவமாக குரல் உயர்த்தவும் விநோதமாக அவளை நோக்கி பார்வையை திருப்பியவன், "என்ன மாயா? அந்த பொண்ணு நம்ம ரெண்டு பேரையும் வெட்டவா கொத்தவா என்று பார்க்குது. கேட்டா நீ ஏன் கோவப்படுற?" என்று கேட்கவும், அவனை முறைத்தவாறே அவன் அருகில் இன்னும் நெருங்கியவள், "மிஸ்டர்.மாயாவோட பார்வை மாயா மேல மட்டும் தான் இருக்கனும். வேற யாரையும் சும்மா கூட எனக்கு முன்னால பார்க்காதீங்க. எனக்கு பிடிக்கல" என்றவள், அவன் ஏதோ கூற வரவும் அதைக் கேட்காமல் விறு விறு என்று உள்ளே சென்றுவிட்டாள் .

'எல்லாத்திலயும் அவசரம். நான் என்ன சொல்றேன் என்டு கேட்கிறாளா பாரு' என்றவன் ஸ்ருதியை நோக்கி முறைத்து விட்டு கூலிங்கிளாஸை அணிந்தவாறே காரில் ஏறி அமர்ந்தான்.

மாயா போனவுடன் ஸ்ருதியின் பார்வை ஆசையாக தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன் 'ஓகோ.இதுக்கு தான் மேடம் இந்த குதி குதிச்சாங்களா? லூஸு மாயா" என்று மனதிற்குள்ளேயே அவளைத் திட்டியவன் காரை எடுத்துக்கொண்டு பறந்தான்.

லஞ்ச் டைம் கான்டீனில் உணவோடு வந்து அமர்ந்து உணவில் கைவைக்கப் போனவளுக்கு அபியின் நியாபகம் வந்தது. தாயில்லாத அவனுக்கு தாயாகவும் இருக்கவேண்டும் என்று நேற்று எடுத்த வீர சபதம் அது. அந்த முடிவை எடுத்ததில் இருந்தே அபியின் மீது ஏதோ சொல்ல தெரியாத உரிமையுணர்வு எழுந்து கொண்டே இருந்தது. அவனுக்கு எல்லாமே நான் தான். நானாக மட்டும் தான் இருக்கனும் என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம்.

'அவன் சாப்பிட்டு இருப்பானா? காலையில இந்த ஸ்ருதியால அவனை முறைச்சுட்டு வந்துட்டேனே! நைட் அவனை பாக்கிறபோ ஏதும் கேப்பானோ? கேட்டா எனக்கென்ன? அவங்க என்னோட அபி தானே?'

"என்னோட அபி" என்று சொல்லிப் பார்த்தவள் செயினை எடுத்து வெட்கமாக கடித்துக் கொண்டாள்.

பிறகு ஹான்ட்பாக்கில் இருந்த அவனது விசிட்டிங்க் கார்ட்டை எடுத்து அவனது பெர்சனல் நம்பரை "மிஸ்டர்.மாயா" என்று சேவ் பண்ணியவள் ஒரு நிமிடம் தயங்கி பின்னர் அவனுக்கு அழைத்தாள்.

ஒரு அழைப்பு கூட முடிந்து இருக்காது ஃபோனை எடுத்து "சொல்லு மாயா!" எனவும் , அவனது குரல் செவிகளில் வந்து மோத சிலிர்த்தவள், "சாப்பிட்டீங்களா?' என்று மெல்ல கேட்டாள்.

ஒரு நிமிடம் அந்தப்பக்கம் ஒரு பதிலும் வரவில்லை. இவள் தான் பதட்டமாக "ஹலோ! ஹலோ!" என்று அழைக்கவும் தொண்டையை செறுமியவன் "யா. மீட்டிங்க் இருக்கு என்று சொன்னேன் தானே! ஸோ லஞ்சும் மீட்டிங்க் லயே முடிஞ்சு"

"ஓ..சரி அப்போ நான் வைக்கிறன்"

"மாயா!"

"எ.என்.என்ன?"

"நீ சாப்பிட்டியா?"

"இல்லை. இனி தான். இப்போ தான் லஞ்ச் எடுத்துட்டு வந்தேன். உங்கள கேட்டுட்டு சாப்பிடுவோம் என்று தான்"

"ஹ்ம்ம்.. நைட் பீச் போவோமா?"

"வாவ். எங்க? கோல்ஃபேஸுக்கா?"

"ம்ம்"

"செம..செம போவோமே" என்று ஆர்ப்பரித்தவளை எண்ணி சிரித்தவாறே பாய் சொல்லி ஃபோனை அணைத்தான்.

மாயாவிற்கு பின்னால் போடப்பட்டு இருந்த மேசையில் இருந்த ஸ்ருதி இவளின் பேச்சை உன்னிப்பாக கேட்பதை அவள் அறிந்து இருந்தால் துள்ளியிருக்க மாட்டாளோ?

போனை வைத்துவிட்டு சாய்ந்து அமர்ந்தவன் மாயாவை எண்ணி புன்னகைத்துக் கொண்டான். அவள் காட்டும் உரிமையுணர்வு, அவனைக் கவனிக்கும் பாங்கு சிறுபிள்ளைத் தனமாக இருந்தாலும் அதுவும் அவனுக்கு பிடித்து இருந்தது. தனது ஸ்பேஸ் என்று ஒரு வட்டம் போட்டு வாழ்பவனின் வட்டத்திற்குள் அவளையும் இழுத்துக்கொண்டு இது இனி எங்களோட ஸ்பேஸ் என்று சொல்லனும் போல இருந்தது.

அவன் உண்டானா உறங்கினானா என்று அக்கறையாக யாருமே கேட்டதில்லை, தந்தை இவனுடன் தோழன் போல பழகினாலும் அவரும் நில்லாமல் ஓடித் திரிபவர் அல்லவா? இந்த திருமண வாழ்க்கை மீது மெல்ல மெல்ல பிடிப்பு ஏற்படுவதை உணர்ந்து பின்தலையை அழுத்தமாக கோதிக்கொண்டான் அந்த வியாபார உலகின் மன்னன்.

மாலையில் கம்பஸில் இருந்து காரில் வீடு திரும்பியவள் வாசலில் அபியின் கார் நிற்கவும் நைட் வெளியே செல்வது நினைவு வர உற்சாகமாக குதித்து இறங்கி ஓடினாள்.

" பார்த்துமா" என்ற ட்ரைவரின் சொல்லும் அவளை எட்டவில்லை. ஓடியவள் வாசலில் காலை வைக்கவும் அவளது காலடியில் ஒருவன் வந்து விழவும் சரியாக இருந்தது.

யார்டா இது போயும் போயும் என்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிறது.

நிமிர்ந்து ஹாலை துழவியவள் அபி நின்ற கோலம் பார்த்து அதிர்ந்து தான் போனாள். இது தான் ருத்ரமூர்த்தி அவதாரமா?

என்ன இப்பிடி முறைச்சுட்டு நிற்கிறான். ஆமா அவன் பக்கத்துல யாரு?டை கட்டுன ஒரு அல்லக்கை போல இருக்கு.

யோசித்து முடிக்கும் முன்னர் விழுந்தவனை அந்த அல்லக்கை தூக்கி சென்று மீண்டும் அபியின் முன் நிற்பாட்டினான். சோபாவில் டையை தளர்த்தியவாறே சாய்ந்து காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தவன் அடி வாங்கியவனை முறைக்கவும் அவன் ஓடிச்சென்று அவனது காலைப்பற்றி 'நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் சார். தப்பு தான். ப்ளீஸ் சார்" என்று அழவும் அவனது ஷேர்ட் காலரைப் பற்றி விழிகளுக்குள் உற்றுப்பார்த்தவன் "நீ கேட்டிருந்தா எவ்வளவு வேணாலும் அள்ளிக் கொடுத்து இருப்பேன். பட் நீ செய்தது துரோகம் ல? எப்பிடி விட சொல்ற?" என்று கேட்கவும் அவனது விழிகளின் பளபளப்பில் இவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது.

சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தபடி தடுமாறியவள் இதென்ன பழக்கம் வீட்டில இருந்து அராஜகம் பண்றது என்று முணுமுணுக்கவும் 'வெளியே செல்லுமாறு' அடி வாங்கியவனை பார்த்து அபி உத்தரவிடவும் சரியாக இருந்தது.
 
Last edited by a moderator:

NithaniPrabu

Administrator
Staff member
#2

தன்னைத் தாண்டி செல்பவனை பாவமாக பார்த்தவள் உள்ளே வந்து அபியின் அருகில் சோபாவில் அமர்ந்தாள். தன்னருகில் மாயா வந்து அமரவும் ஆச்சர்யமாக பார்த்தவனுக்குள் 'இவள் எப்போ வந்தாள்?'என்ற சிந்தனை. அவனின் பார்வையை உணர்த்தாலும் அவனது அல்லக்கை என்று நினைத்தவனை பார்த்தவள்


'ஏன் நீங்க நின்டுட்டே இருக்கீங்க? டேக் யுவர் சீட்' என்று கையைக் காட்டவும் அவனின் பார்வை அபியின் புறம் திரும்பியது.

அவன் கண்ணைக் காட்டவும் தயக்கமாக அபி, மாயாவிற்கு எதிராக இருந்த சோபாவில் அமர்ந்தான். அமரவும் அபியின் புறம் திரும்பிய மாயா "யார் அபி இவங்க?" என்று கேட்கவும், இயல்பாக அவள் பேசுவதை ஆச்சர்யமாக பார்த்தவாறே, "என்னோட பெர்சனல் செக்ரடரி, அஜய்" என்றான் அவன்.

அடக் கொடுமையே சாமியார்! சாமியார்! கிளுகிளுப்பா அழகான பொண்ணுங்களை தானே பி.ஏ வா வச்சு இருப்பாங்க.

அவளது யோசனையான முகத்தைப் பார்த்தவன் அவளருகில் குனிந்து "என்ன யோசிக்கிற?" என்றான்.

ஆங் விழி விரித்து பார்த்தவள் "உங்களோட எனக்கென்ன பேச்சு?" என்று ஒரு வெட்டும் பார்வையுடன் அஜய் புறம் திரும்பியவள் "ஹாய் அஜய். நான் மாயா. ஸ்ஸ் சாரி மிர்ஸஸ். மாயா அபிமன்யு. ஆமா நீங்க ஏன் இப்பிடி படபடனு இருக்கிங்க. என்னை பார்த்தா அவ்வளொ கொடூரமாவா இருக்கு?" தயக்கமாக சிரித்தவன், அதற்கும் அபியை பார்க்க,

"அட என்ன அஜய் நீங்க? இவர பாத்து இந்த முழி முழிக்கிறீங்க? நான் ஒன்று சொல்றேன் கேக்குறீங்களா?"

தொடங்கிட்டாய்யா தொடங்கிட்டா என்று எண்ணிய அபியின் முகத்தில் புன்முறுவல் உதிக்கவும் அதை ஆச்சர்யமாக பார்த்தவாறே "சொல்லுங்க மேம்" என்றான் அஜய்

"மேமா!! கடவுளே! மாயா சொல்லுங்க.உங்களுக்கு இவங்க தான் பாஸ். நான் இல்ல. நான் அஜய் அண்ணா சொல்றேன். அண்ணா இல்லை என்ற குறை போகட்டும்" என்று தோளைக்குலுக்கவும், மீண்டும் உத்தரவை எதிர் பார்த்து அபியை நோக்கினான் அஜய்.

அபி கண்ணை அசைக்கவும் "சரிங்க மாயா" என்றவன், அவள் முறைக்கவும், "ச..சரி மாயாம்மா" என்றான்.

இவன் திருந்தமாட்டான் என்று தலையை குறுக்காக ஆட்டியவள் அபியின் பக்கம் திரும்பி " எவ்வளோ நேரம் வந்து?" கேட்டாள் .

"இப்போ தான் மா வந்தோம்"

"ஆஹான்!! சரி உங்கள பிறகு விசாரிச்சுக்கிறேன்" என்றவள் வீட்டு எஜமானியாக ,"எதாச்சும் குடிச்சீங்களா? ஸ்னாக்ஸ் சாப்பிட்டிங்களா?" என விசாரிக்கவும், "இல்லை மா. வேலை விஷயமா பேசிட்டு இருந்தோம்." என்றான் அபி.

"பேசிட்டு? அதைத் தான் நான் பார்த்தேனே! சரி இருங்க உங்களுக்கு காபி ஓகே தானே?" அபி தலையாட்டவும், "அஜய்ண்ணா உங்களுக்கு" அவனிடமும் கேட்டாள் .

"எனக்கும் ஓகேம்மா"

"சரி இருங்க வாறன்" எழுந்து சென்றாள் .

அய்யோ பாவம் அஜய். செத்தான். என்று சிரித்தவனுக்கு அவள் பொறுப்பாக தனது ஆபிஸ் ஸ்டாஃபை கையாண்ட விதம் பிடித்திருந்தது. அவள் சென்றவுடன் அஜய் எழும்ப போகவும்

"உட்காரு அஜய். பிறகு உன் பாசமலர் என்னைத் தான் கேள்வி கேட்பா! லெக்ஸரர் வேற!" என்று சிரிக்கவும் தானும் புன்னகைத்தவன் "யு போத் ஆர் குட் பெயார் சார்" என்றவன் மாயாவின் காபியைக் குடித்துவிட்டு மகிழ்வாக விடை பெற்றான்.

அவன் சென்றதும் அபியை கோவமாக முறைத்தவள் விடுவிடுவென மாடியில் தனது ரூமிற்கு சென்று கதவடைத்துக் கொண்டாள். உள்ளே சென்றவள் ஒரு லினென் பான்ட் உம் ஒரு ட்ஷெர்ட் உம் அணிந்து பொனி டெய்ல் போட்டவாறே மறுபடியும் கீழே இறங்கி வர அபி சோபாவில் எதையோ சிந்தித்தவாறே அமர்ந்து இருந்தான்.

என்ன பெரிய கோட்டைய பிடிக்கிற மாதிரி இப்பிடி யோசிக்கிறான் என்று உதடு சுழித்தவள் கிட்செனுக்கு சென்று சமையல் அம்மாவை அனுப்பி விட்டு ஒரு சிப்ஸ் பக்கட்டை எடுத்து வந்து சோபாவில் இரு காலையும் மேலே தூக்கி அமர்ந்து கொறித்தவாறெ எட்டி ரிமோட்டை எடுத்து ஹோம் தியெட்டரை ஆன் பண்ணி மியூசிக் செனல் ஒன்றை விட்டவள் அதில் "ஒத்தையடிப்பாதையில தாவி ஓடுறேன்" என்று பாடலுடன் ஹம்மிங் செய்த படி சிப்ஸ் பக்கட்டுக்குள் தலையை விடவும் சிந்தை கலைந்து மாயாவை நிமிர்ந்து பார்த்தான் அபிமன்யு.

சிப்ஸோடு சண்டை பிடித்துக் கொண்டு இருந்தவளை பார்த்து தலையில் அடித்தவன் ,"மாயா பீச் போகனும் ல" என்றதும், அவனின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், "யாருடா நீ அற்பபதரே!" என்று பார்த்துவிட்டு சிப்ஸை எடுத்து வாயில் போட்டாள்.

"ஓஹ், மேடம் கோவமா இருக்காங்களா? இவ கிட்ட இது சரி வராது."

"மாயா! நீ வாறியா இல்லயா இப்போ?" எனவும் அவனை முறைத்தவள் , "எதுக்கு இப்போ கத்துறீங்க? நான் கோவமா இருக்கேன்" என்று அறிவிக்கவும் புன்னகையை தொண்டைக்குள்ளேயே விழுங்கியவன், "எதுக்கு இப்போ கோவம்?" எனவும் அவன் புறம் நன்கு திரும்பி அமர்ந்தவள், "நீங்க என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க?"வினவினாள் .

அது ஆயிரம் இருக்கு இவ எதை கேட்குறா? அவளே சொல்லட்டும்.

"அந்த மனுசன் பாவம் போட்டு அந்த அடி அடிச்சு இருக்கீங்க. சர்ர்ர்ர் நு சுழன்று வந்து தடால்னு விழுறான். பயந்தே போனேன்." என்று அவள் சொல்ல,

'என்ன கண்ணுடா இது. இவ்வளோ எக்ஸ்ப்ரஷன் காட்டுறா!! க்கும்'எண்ணமோட குரலை செறுமியவன், "அவன் தப்பு பண்ணி இருக்கான் மாயா" என்றான் பொறுமையாக.

"அதான் கேட்டேனே!"குரலை ஆண்களினதை போல் தடிப்பாக கொண்டு வந்தவள், "தப்பு செய்து இருந்தா மன்னிச்சு இருப்பேன். ஆனா செய்தது துரோகம்" என்று அவனை போல பேச முயன்று தோற்றவள் "ம்ச்" என்று சலித்தவாறு, "என்ன இதெல்லாம்? என்னால அக்சப்ட் பண்ணவே முடியல" என்று சலிப்பாக சொன்னாள்.

அவளை ஆறுதல் படுத்து என உள்ளே கேட்ட குரலால் "மாயா! என்னோட அவ்வளோ பிஸ்னஸையும் தனியா ஃபேஸ் பண்ணிட்டு இருக்கேன். பாத்து பாத்து நம்பிக்கையானவங்களை பிடிச்சு விட்டா அவங்க செய்ற துரோகத்தை தாங்க முடியல! என்ன பண்ண சொல்ற? இட்ஸ் ஆல் இன் கேம்" என்று தோளை சலிப்பாக குலுக்கவும் பாவமாக அவனை பார்த்தவள், "ஆமா என்ன பிஸ்னஸ் பண்றீங்க?" என்று தயக்கமாக கேட்கவும் கடகடவென சிரித்தவன், "அத இன்னொரு நாள் சொல்றேன். இப்போ சொல்லு போலாமா?" என்றான் அவன்.

"சரி.நான் வாறன். பட் இனி இந்த அடி தடியெல்லாம் வீட்ட வர கூடாது சொல்லிட்டேன்" என்று கூறியவள் நின்றால் இன்னொரு பாராயனம் கேட்கவேண்டி வரும் என எண்ணிவிட்டு, "நான் ரெடியாக போறன்" என்று சொல்லி விட்டு அறைக்கு ஓடினாள்.


தொடரும்...
 
Last edited by a moderator:
#3
:rolleyes::rolleyes:somthing missing.....?
 
#4
Nice
 
#5
Nice
 
#6
Nice but eluththu pellai iruku athoda eatho missing story la. Pelaiya irunthal sorry
 
#7
:rolleyes::rolleyes:somthing missing.....?
Did I miss some thing? May I know what part you are telling about please :)
 
#8
When I was reading, the first part was missing. No it's okay
 
#9
Sorry now*
 
#10
When I was reading, the first part was missing. No it's okay
Cool :)
 

emilypeter

Well-known member
#11
Nice ud
 

Rosei Kajan

Administrator
Staff member
#13
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!
 
#14
ஒரு மனைவியின் செயல்கள அருமையாக ஆரம்பித்து விட்டாள்
 
Top