தொடர்கதைகள் அத்தியாயம் 4

Rosei Kajan

Administrator
Staff member
#1

அந்த இல்லத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாகவே நடைபெற்றன. சேரா தானே எழுதி மேடையேற்றிய நாடகம் மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றது.ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் நகரத்திற்கு எண்ணற்ற கனவுகளோடும் ஆசைகளோடும் படிக்க வரும் ஓர் அப்பாவி இளைஞனின் வாழ்வு தவறான நட்புக்களால் எப்படித் தடம் மாறுகிறது.அவன் எப்படி மதுவுக்கு அடிமையாகிறான். அந்த மதுப்பழக்கம் அவனை எந்தளவு இழிநிலைக்கு இட்டுச் செல்கிறது. என்பதை அடிப்படையாக வைத்து அவள் அந்த நாடகத்தை எழுதியிருந்தாள்.அதில் மது அருந்துவதைக்கூட ஒரு நாகரிகமாகக் கருதும் சமகால இளைய தலைமுறையை மிக மோசமாகச் சாடியிருந்தாள்.அதில் வரும் ஒவ்வொரு வசனங்களும் சாட்டையாய் சுழன்றன.அதில் நடித்த ஒவ்வொரு சிறுவர்களும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அற்புதமாக நடித்திருந்தனர்.அந்த நாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. நாடகம் முடிந்ததும் அனைவருமே எழுந்துநின்று கரகோஷம் செய்தனர்.வந்தனா வந்து மேடையின் பின்புறம் நின்ற தோழியை அணைத்துக்கொண்டவள். “மிகவும் நன்றாக வந்திருக்கிறது சேரா.நீ இத்தனை நாள் உழைத்தது வீண் போகவில்லை” என்றாள் மகிழ்ச்சியுடன்.சேராவோ அத்தனை பாராட்டிற்கும் உரிய மகிழ்ச்சி என்பது துளியும் அற்றவளாய் “நான் இந்த பாராட்டுக்காகவோ கரகோசத்துக்காகவோ இதை செய்யவில்லை வந்தனா.இந்த நாடகத்தின் கருப்பொருள் இதைப் பார்த்த யாரேனும் ஒருவருடைய மனதை என்றாலும் மாற்றி அவர் இந்த மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடுவரே ஆனால் அது தான் எனக்கு நிஜமான மகிழ்ச்சி.அத்தோடு இந்த நாடகத்தில் நான் நடிக்க வைத்த சிறார்கள் எல்லோரும் பதின்நான்கு பதினைந்து வயது நிரம்பியவர்களே.வளரும் பருவம். சரியானதைச் சொல்லிக்கொடுத்தால் பசுமரத்தாணியாய் மனதில் பதிய வைத்துக்கொள்ளும் பருவம்.இந்த நாடகத்தின் கருப்பொருள் நிச்சயம் அவர்கள் மனதில் பதிந்திருக்கும். மலரும் அந்த மொட்டுக்கள் சரியாக மலர்ந்தாலே எனக்கு போதும் வந்தனா.அது தான் எனக்கு வேண்டும்” என்று ஒரு தவிப்புடன் முடித்தாள்.

தோழியை ஒரு கணம் கூர்ந்த வந்தனா எதுவும் பேசாமல் சிறு தலையசைப்புடன் மேடைக்கு திரும்பினாள்.வந்தனாவும் சேராவும் தங்களது பொறுப்பை சிறப்பாகவே நிறைவேற்றினர்.ஒவ்வொரு நிகழ்ச்சி நடக்கும் போதும் அடுத்த நிகழ்ச்சிக்குரிய சிறுவர்களை ஒழுங்குபடுத்துவது. அவர்களுக்கு தேவையான உணவு நீர் போன்றவற்றை கவனித்து சரியான நேரத்தில் வழங்குவது. அங்கிருக்கும் உடல் நலம் குன்றிய சிறார்களுக்கான தனிப்பட்ட கவனிப்பு என பம்பரமாய் சுழன்று வேலைபார்த்துக் கொண்டிருந்த சேரா தன்னையே இரு விழிகள் சிறு வியப்பும் திகைப்பும் சந்தேகமுமாக நோக்கிக் கொண்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டாள்.நிகழ்ச்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்ததும்.துர்க்காம்மாவும் அங்கிருந்த முக்கிய ஊழியர்கள் சிலரும் வந்திருந்த விருந்தினர்களுக்கு அந்த இல்லத்தை சுற்றிக் காட்டினர். சேராவும் வந்தனாவும் சிறார்களை உணவுக்கூடத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஊழியர்களுடன் சேர்ந்து சிறார்களுக்கான உணவினைப் பரிமாறினார்கள். ஒரு சிறுவன் கேட்ட சாம்பார் வாளியைத் தூக்கிக் கொண்டு திரும்பிய சேரா அருகில் கேட்ட“நீ......... நிலா தானே?” என்ற ஓர் அழுத்தமான ஆண் குரலில் சிறிது அதிர்ந்து திரும்பினாள். இந்த “நிலா “ என்ற அழைப்பு அவளுக்கு முன் ஜென்மமாய்த் தோன்றும் கடந்த காலத்தின் சுவடு. இந்த நிலா என்ற அழைப்பே அவளுக்கு வேண்டாத பலவற்றை நினைவுபடுத்திவிடும் என்பதால் அவள் தற்போது பழகும் அனைவரிடமுமே தன்னை “சேரா” என்றே அழைக்கச் சொல்லுவாள். அவளை இங்கே அனைவருமே சேரா என்று தான் அழைப்பார்கள். அது பழகிய ஒன்றும் கூட.அப்படி இருக்கையில் கடந்த காலத்தின் தொடர்ச்சியாய் சற்றும் எதிர்பாராமல் வந்த இந்த நிலா என்ற அழைப்பு அவளைச் சற்று அதிர வைத்தது. அது யாராயிருக்கும் சிறு அதிர்வுடன் திரும்பிய சேரா அங்கு உதடுகளில் சிறு புன்னகையும் கண்களில் சிறு வியப்புடனும் நின்றவனைக் கண்டு மேலும் அதிர்ந்தாள்.

“இனியணண்ணா”அவள் வாய் அவளையும் மீறி சிறு அதிர்ச்சியுடன் உச்சரித்தது.“நானே தான்.”என்று புன்னகைத்தவன். “ஹேய் நீ எப்படி இங்கே?” என்று வியப்புடன் வினவினான்.அவனுக்கு பதில் சொல்லுவதா?? வேண்டாமா?? என்பது போல் கண நேரம் தயங்கியவள் பின் ஏதோ எண்ணியவளாய் லேசாகப் புன்னகைத்து “கடந்த மூன்று வருடங்களாக இங்கே தான் வாசம்” என்றாள்.“ஒ..அம்மா அண்ணன் எல்லோருமே இங்கே தானா? அம்மா எப்படி இருக்கிறார்கள்? அந்த தடியன் என்ன பண்ணுகிறான்? ரொம்ப நாட்களாக தொடர்பே அற்றுப்போய்விட்டது இல்லையா?” என்றான் சிறு புன்னகையுடன்.ம்ம்..என்று லேசாக புன்னகைத்தவள் தொடர்ந்து “அவர்கள் சென்னையில் தான். நான் மட்டும் தான் இங்கே” என்றாள்.அவளின் சுருக்கமான பதிலைக் கேட்டு சற்று வியப்புடன் அவளை நோக்கியவன் “ஏய் .. நீ நிலா தானே! உனக்கு இவ்வளவு சுருக்கமாக பேசக்கூடத் தெரியுமா ?” என்றான் கேலியாக.அவன் கேலிக்கு புன்னகை என்ற பெயரில் லேசாக உதடுகளைச் சுளித்தவள், “எல்லோராலும் எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடிவதில்லையே” என்றாள் இயல்பான குரலில் சாதாரணமாக.என்னதான் முயன்று அவள் இயல்பாக பேசினாலும் இனியனுக்கு அவளிடம் ஏதோ நிறைய மாறுபாடு தெரிவதாக தோன்றியது.அவனறிந்த நிலா இப்படி அமைதியும் அழுத்தமுமாய் பேசுபவள் இல்லை.அவள் சிற்றோடை போல சலசலத்து ஓடுபவள். அவளுக்கு அமைதி என்றாலே என்னவென்று தெரியாது. யாராவது ஒரு வார்த்தை பேசினால் பதிலுக்கு பத்துப் பக்கம் பேசக்கூடியவள்.அவன் பார்வையில் மிதமிஞ்சிய வியப்பு பரவியது.அவன் ஓர் வியப்புடன் சேராவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே தூரத்தில் நின்று அவர்களைக் கவனித்த வந்தனா அவர்களை நெருங்கினாள். சேராவை நெருங்கியவள் “ஏதாவது பிரச்சினையா சேரா?” என்றாள்.சேராவின் கையைப் பற்றி இனியனை ஓர் பார்வை பார்த்தபடி.சேராவின் தற்போதைய சுபாவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த வந்தனா.இனியன் சேராவிடம் நின்று பேசுவதைப் பார்த்து இவன் சேராவைப் பற்றி தெரியாமல் அவளிடம் போய் ஏதாவது பேசி வாங்கிக் கட்டப்போகிறான்.ஆள் வேறு சற்று பெரிய இடமாய்த் தோன்றுகிறது.எதற்கு வம்பு என்று எண்ணியவள் பிரச்சினை பெரிதாகும் முன் போய் சமாளிப்போம் என்று எண்ணியே அவர்களை நெருங்கினாள்.ஆனால் “பிரச்சினை எதுவுமில்லை வந்தனா.இவர் எனக்கு தெரிந்தவர் தான்.” என்று சேராவின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிரவும் வந்தனா திகைப்பின் உச்சிக்கே சென்றாள்.ஒரு ஆண் மகனினை தனக்கு தெரிந்தவன் தான் என்று கூறி சேரா இவ்வளவு இயல்பாக பேசுகிறாளா! இது சேரா தானா? அவளின் மிதமிஞ்சிய திகைப்பின் வெளிப்பாடாய் அவள் விழிகள் வெளியே தெறித்து விடுமோ என்பது போல் விரிந்தது..அதை கண்ணுற்ற இனியன் இவள் என்னை தெரியும் என்று சொன்னதற்கு இந்தப்பெண் ஏன் இப்படி திகைத்துப்போய் பார்க்கிறது. நான் நிலாவிற்கு தெரிந்தவனாய் இருப்பது இவ்வளவு தூரம் திகைப்பிற்குரிய விடயமா என்ன??? என்று குழம்பியபடி சேராவையும் வந்தனாவையும் நோக்கினான்.அவளறிந்த சேரா ஒரு ஆணிடம் இவ்வளவு தூரம் பேசுவதென்பதே அவளுக்கு மிகப்பெரிய வியப்புக்குரிய விடயம் என்று அவனுக்கு தெரியாதே!!அவர்கள் இருவரின் உணர்வுகளையும் திகைப்பையும் வியப்பையும் புரிந்துகொண்ட சேரா சட்டென சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு“நீங்க எப்படி இருக்கிறீர்கள் இனியணண்ணா ?? நீங்கள் எப்படி இங்கே??” என்றாள் நிலைமையை சீராக்கும் பொருட்டு ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக.அவள் பேச்சில் மற்றது மறந்து போக “ஏய்...நீ இந்த “ண” கரத்தை கட்டியிழுக்கும் வேலையை இன்னும் விடவில்லையா??” என்று அப்போது தான் அவளின் அழைப்பினைக் கவனித்தவன் போல் சிரித்தவன் தொடர்ந்து “என்னோட ஊருக்கு வந்து என்னையே எங்கே என்று கேட்கிறாயா?? ம்ம்ம்??” என்றான் வம்பிழுக்கும் குரலில்.ஆனால் சேராவோ “ஓ... உங்கள் சொந்த ஊரே இதுதானா?? எனக்கு அது தெரியாது.” என்றாள் அமைதியாகஅவளின் பதிலைக் கேட்டு இனியன் வியப்பின் உச்சிக்கே போய்விட்டான்.இவ்வளவு அமைதியாக பணிவாக பேசுவது நிலா தானா??? இவளுக்கு என்னதான் ஆயிற்று?? இதுவே பழைய நிலா என்றால்ஹலோ!!!! என்னது உங்க ஊரா??? இது சொந்த ஊர் என்பதாலேயே அது உங்க ஊர் ஆகிடுமா?? எப்போ சார் உங்களுக்கு முழு ஊரையும் பட்டா போட்டு கொடுத்தாங்க??? என்று முழ நீளத்துக்கு பேசி வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்திருப்பாள்.இவளுக்கு என்ன தான் ஆயிற்று?? ஒரு வேளை பெண்கள் என்றாலே அப்படித்தானோ?? ஒரு வயதிற்கு மேல் இப்படி அமைதியும் பொறுமையும் நிறைந்தவர்களாய் மாறி விடுவார்களோ??? ஆனாலும் ஒருவரின் இயல்பே இப்படி தலைகீழாக மாறி விடுமா என்ன??? கண்களில் சிறு குழப்பத்துடன் அவளை நோக்கியவன்“சரி நிலா.எனக்கு நேரமாகிறது நான் கிளம்புகிறேன்.வீட்டில் பேசினால் ஆன்டி சேரன் இருவரையும் நலம் விசாரித்ததாய் கூறு வருகிறேன்” என்றவன் சேராவுக்கும் வந்தனாக்கும் சேர்த்த ஒரு சிறு தலையசைப்புடன் விடைபெற்றான்.அவன் விடைபெற்று செல்லவும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் திரும்பிய சேரா அருகில் நின்று தன்னையே ஒரு வியந்த பார்வையுடன் கூர்ந்தபடி நின்ற வந்தனாவைக் கண்டு ஒரு கணம் தடுமாறினாள்.பின் தன்னை சமாளித்தவளாய்“இவர் என்னுடைய அண்ணாவின் நண்பன்.” என்றாள் விளக்கம் போல“ஒ ..”என்ற வந்தனா. அதன் பிறகு அங்கிருந்து விடுதிக்கு செல்லும் வரையிலும் கூட அது குறித்து எதுவுமே பேசவில்லை. விடுதிக்கு சென்று சேரா தன் அறையினுள் நுழையப் போகையில் வந்தனா வினவினாள்.“உனக்கு ஒரு அண்ணா இருக்கிறார் என்று இதுவரை நீ என்னிடம் கூறவே இல்லையே சேரா??” என்றவள் சேரா அதிர்ந்து அவளை பார்க்கும் போதே “அதுசரி நான் தான் உன்னை என் உற்ற தோழியாய் நினைத்து அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறேன்.உனக்கு நான் அப்படியா என்ன??” என்றவள். விரைந்து தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.சற்று நேரம் அங்கேயே நின்று வந்தனாவின் அறைக்கதவையே வெறித்துக்கொண்டிருந்த சேரா பின் ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.அன்றைய அலைச்சலின் கசகசப்புத் தீர குளித்துவிட்டு வந்த சேராவுக்கு சாப்பிட மனம் வரவில்லை.பேசாமல் சென்று படுத்துக் கொண்டாள். அவள் சாப்பிடாவிட்டாலும் இரவு உணவு கண்டிப்பாய் எடுத்துக்கொள்ள வேண்டும்மா என்று கூறி உணவருந்த வைக்க அருகில் அன்னையா இருக்கிறார்.அவள் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை மலர்ந்தது.ஏனோ அன்னையிடம் பேச வேண்டும் போல் ஓர் ஏக்கம் தோன்ற தன்னருகில் இருந்த அலைபேசியை எடுத்தவள் பின் அம்மா தூங்கியிருப்பார்கள். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் காலையில் பேசுவோம் என்றெண்ணி பேசியை வைத்து விட்டு படுத்துக்கொண்டாள்.இன்று இனியனை சந்தித்தது மற்றும் வந்தனாவின் பேச்சு எல்லாம் சேர்ந்து அவள் மனதை சங்கடத்தில் ஆழ்த்தியது.நான் தான் உன்னை என் உற்ற தோழியாய் நினைத்து அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் நீ அப்படி அல்ல. என்ற வந்தனாவின் குற்றச்சாட்டு அவள் காதில் ஒலித்தது.அவள் அப்படி அல்ல தான்.அவளால் நிச்சயம் தன் மனதில் இருப்பதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. அந்த ஒரு காரணத்துக்காகவே நீ ஏன் இப்படி இருக்கிறாய்?? உன் மனதில் உள்ள துயரத்தை பகிர்ந்துகொள் என்று யாரும் தன்னை நெருங்கி கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தன்னைச் சுற்றி கோபம் சிடுமூஞ்சித்தனம் என்ற திரைகளைப் போட்டுக்கொண்டு யாரையும் தன்னை நெருங்கவிடாமல் தனியே இருந்தாள். அவளின் அந்த திரைகளைக் கடந்து அவளை நெருங்கியது வந்தனா மட்டுமே.

Rosei Kajan

Administrator
Staff member
#2
அவள் சேராவை சேராவாகவே ஏற்று கொண்டாள். அனாவசியமாக அவளிடம் எதையும் கேட்டு குடையவில்லை.தன்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காது தூய நட்பினையும் அன்பினையும் மட்டுமே தன் மீது காட்டும் வந்தனாவை சேராவிற்கும் பிடித்திருந்தது. இன்று அவளின் கோபமும் அதன் பின்னணியில் உள்ள எதிர்பார்ப்பும் கூட அவளுக்கு புரிந்தது.நான் உன்னிடம் என் சம்மந்தப்பட அனைத்தையும் பகிரும் போது நீ உன்னைப் பற்றிய மிகச் சாதாரண விடயத்தைக் கூட என்னிடம் கூறாமல் மறைக்கிறாய்.என் மீதான உன் நட்பு அவ்வளவு தானா என்ற கோபம் அது.அது நியாயமானதும் கூட.ஆனால் அவளால் அனைத்தையும் வந்தனாவிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா?? நிச்சயம் முடியாதென்றே தோன்றியது. சேராவின் நினைவுகள் பின்னோக்கி பயணமானது.நிலா ....நிலா.... எழுந்திரு. கல்லூரிக்கு நேரமாகுது பார்..அன்னை சகுந்தலாவின் குரல் காதுக்குள் கீதம் பாட அதை சிறிதும் ரசிக்காத ஓர் எரிச்சலான முகச் சுழிப்போடு இரண்டு கைகளையும் காதைப் பொத்தி வைத்துக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள் நிலா. விட்ட தூக்கத்தை தொடரும் நோக்குடன் அவள் சற்று அயர்ந்துகொண்டு போகும் போதே மூக்கினுள் ஏதோ புகுந்து விட

அச்ச்சூ........ அச்ச்சூ........... என்ற தும்மலோடு பதறி விழித்தாள்.அவள் நினைத்தது போலவே அவள் அண்ணன் தான். அவள் விழித்த விதத்தைக் கண்டு வாய்விட்டு சிரித்தபடி கையில் இருந்த சிறு துரும்பை வீசிகொண்டிருந்தான்.

“யூ ..... யூ ......”என்று பல்லைக்கடித்தபடி அவள் எழவும் “ஏய்...ஏய்.... நிலா என்மேல் தப்பில்லை.இன்று ஏதோ முக்கியமான வகுப்பிருக்கிறது.சீக்கிரம் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று கூறி உன்னை எழுப்பிவிடச் சொன்னதே நீ தான்.”என்றான் சேரன்.“சேரவேந்தன்” நிலாவின் அண்ணன்.

“அதற்கு இப்படியா எழுப்புவாய் தடியா என்று அவள் கத்தவும் அதே சிரிப்புடன் வேறு என்னம்மா செய்வது. மனித ஜென்மம் என்றால் வாயால் எழுப்பலாம். நீ ..........” என்றவன் அவள் அடிக்க வருமுன் தப்பித்து அந்த அறையை விட்டு வெளியே ஓடினான்.அவன் செய்கையில் சிரித்தபடியே குளியலறைக்குள் நுழைந்தாள் நிலா.நிலாவிற்கு அவள் அண்ணன் தான் உலகம்.நிலாவின் ஐந்தாவது வயதிலேயே அவள் தந்தை இறந்த பின் அவளும் அவள் அண்ணனும் அன்னையும் மட்டுமே அவர்கள் குடும்பம் என்றானது.சேரவேந்தன் சேரநிலா அவர்கள் இருவரின் பெயரினைப் போலவே அவர்கள் இருவருக்குமான ஒற்றுமையும் கூட அலாதியானது தான். நிலாவிற்கு அவள் அண்ணன் தான் எல்லாம்.அவள் அண்ணன் அவளுக்கு ஒரு தோழன் மட்டுமல்ல சமயத்தில் தந்தையும் கூடத்தான். தந்தை இல்லையே என்ற குறையை அவள் உணர்ந்ததே இல்லை.நிலாவிற்கு விபரம் புரிந்த வயதில் இருந்தே அவள் அண்ணன் தான் அவளுக்கு எல்லாம்.ஏன் அன்னை கூட அடுத்தபடி தான். சிறுவயதில் அவளின் விளையாட்டுத் துணையாய் கூட விளையாடியதில் இருந்து வளரும் வயதில் மனம் விட்டு அனைத்தையும் பகிரும் நல்ல தோழனாகவும் அவள் அண்ணன் இருந்தான்.“டேய் அண்ணா அந்த நரேஷ் என்னை சைட் அடிக்கிறான் டா.”“ஹே உனக்கும் நினைப்பு தான்.அவன் வேறு யாரையாவது பார்த்திருப்பான் டி.”“போடா அவன் என்னைத் தான் முறைச்சு முறைச்சு பார்த்தான்.நான் நல்லா பார்த்தனே!”“ஏய் நீ ஏண்டி அவனைப் பார்த்தாய் குரங்கே!!!!!!!!”“ஹி ஹி..அதுவா?? அவன் கொஞ்சம் பார்க்கிறாப்போல ஹன்ட்சம்மா இருந்தான் டா.அதான்...”என்று கூறி அவள் அண்ணனின் முறைப்பினைப் பெற்றுக்கொள்ளுவாள்.ஆனால் அந்த முறைப்பும் அதிகநேரம் நீடிக்காது.அவளின் குறும்பு விழிகளின் இமைசிமிட்டலைப் பார்த்ததுமே “குட்டிக்குரங்கு” என்று கூறி வாய்விட்டுச் சிரித்துவிடுவான்.இந்தளவு தூரம் இயல்பாக உரையாடும் அளவிற்கு அவர்களின் நெருக்கம் இருக்கும்.சேராவின் வாழ்வில் அந்த இருபத்தியொரு வருடங்களும் வசந்தகாலங்களே!!!!!!!! எந்த கவலைகளும் அற்று துன்பத்தின் நிழல் கூட அவளை அண்டாமல் தோழிகள் குறும்பு கேலி விளையாட்டு என பட்டாம்பூச்சியாய் அவள் பறந்து திரிந்த காலங்கள்.அவள் அம்மா அண்ணன் என்று மூன்று பேர் மட்டுமே அடங்கிய சிறிய குடும்பம் என்றாலும் அந்த சிறிய கூட்டுக்குள் உலகின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் கொட்டிக்கிடப்பதாய் அவளுக்கு தோன்றும்.அந்த வீட்டில் எப்போதும் சிரிப்புச் சத்தமும் அம்மா அண்ணா என்னை கொட்டுறான் மா.அம்மா இவ ரொம்ப சேட்டை பண்றாம்மா.என்ற சிறுபிள்ளைத் தனமான செல்லச் சண்டை ஒலிகளும் கேட்டபடியே இருக்கும்.என்ன தான் அவளுடன் சரிக்குச் சரி வம்பு செய்தாலும் அவள் அண்ணனுக்கு அவள் மீது கொள்ளை அன்பு தான்.அவள் முகம் சற்று வாடினாலே போதும் உடனேயே “என்னடா குட்டிம்மா.என்ன ஆச்சு???” என்று உருகிக் குழைந்து விடுவான்.சேராவும் அதே போலத்தான் தன அண்ணனை பெற்ற அன்னையிடம் கூட விட்டுக்கொடுக்க மாட்டாள். தாய் தமயனை திட்டினால் உடனே அவனுக்கு பரிந்து கொண்டு கிளம்பிவிடுவாள்.ஹ்ம்ம் அந்த அன்பு தானே இதோ இன்றும் கூட அன்னையிடம் உண்மை எதையும் கூறாமல் வீட்டைவிட்டே அவளைத் தனியே கிளம்பி வரச் செய்து ஒரு அநாதையைப் போல தன்னையே தனக்குள் சுருக்கிக் கொண்டு ஒரு கூட்டுக்குள் வாழச் செய்திருக்கிறது.ஆனாலும் அவள் அண்ணன் அப்படி ஒரு மோசமான தவறை செய்து அவ்வளவு இழிநிலைக்கு இறங்கி இருக்க வேண்டாம்.எப்படி அவனால் சற்றும் மனம் கூசாமல் அந்த தவறினை செய்ய முடிந்தது?? அப்படியா அவள் அன்னை அவனை வளர்த்தாள்??அப்படி ஒரு கேவலமான தவறினை செய்த பின்பும் எப்படி அவனால் மனம் கூசாமல் மனசு உறுத்தாமல் தாய் தங்கையின் முகத்தினைப் பார்த்து இயல்பாகப் பேச முடிந்தது.அவள் மனதில் அவள் அண்ணனுக்கு எவ்வளவு உயர்ந்த ஒரு ஸ்தானத்தைக் கொடுத்திருந்தாள். உலகின் ஒட்டு மொத்த சிறந்த ஆண்களின் பிரதிநிதியாகவும் அவள் அண்ணனைத் தானே மனதில் கருதியிருந்தாள். அது எல்லாவற்றையும் ஒரே நொடியில் தவிடுபொடி ஆக்கிவிட்டானே! அவன் அவன் வாழ்க்கையை மட்டும் சிதைக்கவில்லையே. அவன் மேல் அளவுக்கதிகமான பாசத்தையும் நம்பிக்கை யையும் மட்டுமே வைத்திருந்த அவள் வாழ்க்கையையும் சேர்த்தல்லவா அழித்து விட்டான். இதற்கு மேலும் அவளால் இன்னொரு ஆணை எப்படி நம்ப முடியும்.ஆண்கள் ஒட்டுமொத்த பேருமே மோசக்காரர்கள்.நம்பிக்கைத் துரோகிகள். இனி அவள் வாழ்வில் எந்த ஒரு ஆணையுமே நம்ப மாட்டாள். நம்பவே மாட்டாள்.!!!!!!!!!!!!உள்ளத்தின் கோபக் கொதிப்பில் உடலெல்லாம் உப்பு நீர் முத்து முத்தாய்ப் பூக்க சட்டென எழுந்தமர்ந்தாள் சேரநிலா. அருகிலிருந்த ஒரு போத்தல் தண்ணீரையும் ஒட்டு மொத்தமாய் தொண்டையில் சரித்தும் அவள் உள்ளக்கொதிப்பு அடங்கவில்லை.எழுந்து எதையும் நினைக்காதே நிலா. மற மற என தனக்குள் உருப்போட்டபடியே அந்த சிறிய அறையில் கால் ஓயும் வரை நடந்தவள் ஒரு கட்டத்தில் தன்னை மீறி உடல் சோர்ந்து படுக்கையில் விழுந்து இமை மூடினாள். மூடிய இமைகளில் இருந்து அவளையும் மீறி வெளிப்பட்ட நீர்முத்துகள் சில விழியோரம் வழிந்தன.

அந்த இல்லத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாகவே நடைபெற்றன. சேரா தானே எழுதி மேடையேற்றிய நாடகம் மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றது.ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் நகரத்திற்கு எண்ணற்ற கனவுகளோடும் ஆசைகளோடும் படிக்க வரும் ஓர் அப்பாவி இளைஞனின் வாழ்வு தவறான நட்புக்களால் எப்படித் தடம் மாறுகிறது.அவன் எப்படி மதுவுக்கு அடிமையாகிறான். அந்த மதுப்பழக்கம் அவனை எந்தளவு இழிநிலைக்கு இட்டுச் செல்கிறது. என்பதை அடிப்படையாக வைத்து அவள் அந்த நாடகத்தை எழுதியிருந்தாள்.அதில் மது அருந்துவதைக்கூட ஒரு நாகரிகமாகக் கருதும் சமகால இளைய தலைமுறையை மிக மோசமாகச் சாடியிருந்தாள்.அதில் வரும் ஒவ்வொரு வசனங்களும் சாட்டையாய் சுழன்றன.அதில் நடித்த ஒவ்வொரு சிறுவர்களும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அற்புதமாக நடித்திருந்தனர்.அந்த நாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. நாடகம் முடிந்ததும் அனைவருமே எழுந்துநின்று கரகோஷம் செய்தனர்.வந்தனா வந்து மேடையின் பின்புறம் நின்ற தோழியை அணைத்துக்கொண்டவள். “மிகவும் நன்றாக வந்திருக்கிறது சேரா.நீ இத்தனை நாள் உழைத்தது வீண் போகவில்லை” என்றாள் மகிழ்ச்சியுடன்.சேராவோ அத்தனை பாராட்டிற்கும் உரிய மகிழ்ச்சி என்பது துளியும் அற்றவளாய் “நான் இந்த பாராட்டுக்காகவோ கரகோசத்துக்காகவோ இதை செய்யவில்லை வந்தனா.இந்த நாடகத்தின் கருப்பொருள் இதைப் பார்த்த யாரேனும் ஒருவருடைய மனதை என்றாலும் மாற்றி அவர் இந்த மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடுவரே ஆனால் அது தான் எனக்கு நிஜமான மகிழ்ச்சி.அத்தோடு இந்த நாடகத்தில் நான் நடிக்க வைத்த சிறார்கள் எல்லோரும் பதின்நான்கு பதினைந்து வயது நிரம்பியவர்களே.வளரும் பருவம். சரியானதைச் சொல்லிக்கொடுத்தால் பசுமரத்தாணியாய் மனதில் பதிய வைத்துக்கொள்ளும் பருவம்.இந்த நாடகத்தின் கருப்பொருள் நிச்சயம் அவர்கள் மனதில் பதிந்திருக்கும். மலரும் அந்த மொட்டுக்கள் சரியாக மலர்ந்தாலே எனக்கு போதும் வந்தனா.அது தான் எனக்கு வேண்டும்” என்று ஒரு தவிப்புடன் முடித்தாள்.

தோழியை ஒரு கணம் கூர்ந்த வந்தனா எதுவும் பேசாமல் சிறு தலையசைப்புடன் மேடைக்கு திரும்பினாள்.வந்தனாவும் சேராவும் தங்களது பொறுப்பை சிறப்பாகவே நிறைவேற்றினர்.ஒவ்வொரு நிகழ்ச்சி நடக்கும் போதும் அடுத்த நிகழ்ச்சிக்குரிய சிறுவர்களை ஒழுங்குபடுத்துவது. அவர்களுக்கு தேவையான உணவு நீர் போன்றவற்றை கவனித்து சரியான நேரத்தில் வழங்குவது. அங்கிருக்கும் உடல் நலம் குன்றிய சிறார்களுக்கான தனிப்பட்ட கவனிப்பு என பம்பரமாய் சுழன்று வேலைபார்த்துக் கொண்டிருந்த சேரா தன்னையே இரு விழிகள் சிறு வியப்பும் திகைப்பும் சந்தேகமுமாக நோக்கிக் கொண்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டாள்.நிகழ்ச்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்ததும்.துர்க்காம்மாவும் அங்கிருந்த முக்கிய ஊழியர்கள் சிலரும் வந்திருந்த விருந்தினர்களுக்கு அந்த இல்லத்தை சுற்றிக் காட்டினர். சேராவும் வந்தனாவும் சிறார்களை உணவுக்கூடத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஊழியர்களுடன் சேர்ந்து சிறார்களுக்கான உணவினைப் பரிமாறினார்கள். ஒரு சிறுவன் கேட்ட சாம்பார் வாளியைத் தூக்கிக் கொண்டு திரும்பிய சேரா அருகில் கேட்ட“நீ......... நிலா தானே?” என்ற ஓர் அழுத்தமான ஆண் குரலில் சிறிது அதிர்ந்து திரும்பினாள். இந்த “நிலா “ என்ற அழைப்பு அவளுக்கு முன் ஜென்மமாய்த் தோன்றும் கடந்த காலத்தின் சுவடு. இந்த நிலா என்ற அழைப்பே அவளுக்கு வேண்டாத பலவற்றை நினைவுபடுத்திவிடும் என்பதால் அவள் தற்போது பழகும் அனைவரிடமுமே தன்னை “சேரா” என்றே அழைக்கச் சொல்லுவாள். அவளை இங்கே அனைவருமே சேரா என்று தான் அழைப்பார்கள். அது பழகிய ஒன்றும் கூட.அப்படி இருக்கையில் கடந்த காலத்தின் தொடர்ச்சியாய் சற்றும் எதிர்பாராமல் வந்த இந்த நிலா என்ற அழைப்பு அவளைச் சற்று அதிர வைத்தது. அது யாராயிருக்கும் சிறு அதிர்வுடன் திரும்பிய சேரா அங்கு உதடுகளில் சிறு புன்னகையும் கண்களில் சிறு வியப்புடனும் நின்றவனைக் கண்டு மேலும் அதிர்ந்தாள்.
 
Rosei Kajan

Administrator
Staff member
#3
“இனியணண்ணா”அவள் வாய் அவளையும் மீறி சிறு அதிர்ச்சியுடன் உச்சரித்தது.“நானே தான்.”என்று புன்னகைத்தவன். “ஹேய் நீ எப்படி இங்கே?” என்று வியப்புடன் வினவினான்.அவனுக்கு பதில் சொல்லுவதா?? வேண்டாமா?? என்பது போல் கண நேரம் தயங்கியவள் பின் ஏதோ எண்ணியவளாய் லேசாகப் புன்னகைத்து “கடந்த மூன்று வருடங்களாக இங்கே தான் வாசம்” என்றாள்.“ஒ..அம்மா அண்ணன் எல்லோருமே இங்கே தானா? அம்மா எப்படி இருக்கிறார்கள்? அந்த தடியன் என்ன பண்ணுகிறான்? ரொம்ப நாட்களாக தொடர்பே அற்றுப்போய்விட்டது இல்லையா?” என்றான் சிறு புன்னகையுடன்.ம்ம்..என்று லேசாக புன்னகைத்தவள் தொடர்ந்து “அவர்கள் சென்னையில் தான். நான் மட்டும் தான் இங்கே” என்றாள்.அவளின் சுருக்கமான பதிலைக் கேட்டு சற்று வியப்புடன் அவளை நோக்கியவன் “ஏய் .. நீ நிலா தானே! உனக்கு இவ்வளவு சுருக்கமாக பேசக்கூடத் தெரியுமா ?” என்றான் கேலியாக.அவன் கேலிக்கு புன்னகை என்ற பெயரில் லேசாக உதடுகளைச் சுளித்தவள், “எல்லோராலும் எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடிவதில்லையே” என்றாள் இயல்பான குரலில் சாதாரணமாக.என்னதான் முயன்று அவள் இயல்பாக பேசினாலும் இனியனுக்கு அவளிடம் ஏதோ நிறைய மாறுபாடு தெரிவதாக தோன்றியது.அவனறிந்த நிலா இப்படி அமைதியும் அழுத்தமுமாய் பேசுபவள் இல்லை.அவள் சிற்றோடை போல சலசலத்து ஓடுபவள். அவளுக்கு அமைதி என்றாலே என்னவென்று தெரியாது. யாராவது ஒரு வார்த்தை பேசினால் பதிலுக்கு பத்துப் பக்கம் பேசக்கூடியவள்.அவன் பார்வையில் மிதமிஞ்சிய வியப்பு பரவியது.அவன் ஓர் வியப்புடன் சேராவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே தூரத்தில் நின்று அவர்களைக் கவனித்த வந்தனா அவர்களை நெருங்கினாள். சேராவை நெருங்கியவள் “ஏதாவது பிரச்சினையா சேரா?” என்றாள்.சேராவின் கையைப் பற்றி இனியனை ஓர் பார்வை பார்த்தபடி.சேராவின் தற்போதைய சுபாவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த வந்தனா.இனியன் சேராவிடம் நின்று பேசுவதைப் பார்த்து இவன் சேராவைப் பற்றி தெரியாமல் அவளிடம் போய் ஏதாவது பேசி வாங்கிக் கட்டப்போகிறான்.ஆள் வேறு சற்று பெரிய இடமாய்த் தோன்றுகிறது.எதற்கு வம்பு என்று எண்ணியவள் பிரச்சினை பெரிதாகும் முன் போய் சமாளிப்போம் என்று எண்ணியே அவர்களை நெருங்கினாள்.ஆனால் “பிரச்சினை எதுவுமில்லை வந்தனா.இவர் எனக்கு தெரிந்தவர் தான்.” என்று சேராவின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிரவும் வந்தனா திகைப்பின் உச்சிக்கே சென்றாள்.ஒரு ஆண் மகனினை தனக்கு தெரிந்தவன் தான் என்று கூறி சேரா இவ்வளவு இயல்பாக பேசுகிறாளா! இது சேரா தானா? அவளின் மிதமிஞ்சிய திகைப்பின் வெளிப்பாடாய் அவள் விழிகள் வெளியே தெறித்து விடுமோ என்பது போல் விரிந்தது..அதை கண்ணுற்ற இனியன் இவள் என்னை தெரியும் என்று சொன்னதற்கு இந்தப்பெண் ஏன் இப்படி திகைத்துப்போய் பார்க்கிறது. நான் நிலாவிற்கு தெரிந்தவனாய் இருப்பது இவ்வளவு தூரம் திகைப்பிற்குரிய விடயமா என்ன??? என்று குழம்பியபடி சேராவையும் வந்தனாவையும் நோக்கினான்.அவளறிந்த சேரா ஒரு ஆணிடம் இவ்வளவு தூரம் பேசுவதென்பதே அவளுக்கு மிகப்பெரிய வியப்புக்குரிய விடயம் என்று அவனுக்கு தெரியாதே!!அவர்கள் இருவரின் உணர்வுகளையும் திகைப்பையும் வியப்பையும் புரிந்துகொண்ட சேரா சட்டென சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு“நீங்க எப்படி இருக்கிறீர்கள் இனியணண்ணா ?? நீங்கள் எப்படி இங்கே??” என்றாள் நிலைமையை சீராக்கும் பொருட்டு ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக.அவள் பேச்சில் மற்றது மறந்து போக “ஏய்...நீ இந்த “ண” கரத்தை கட்டியிழுக்கும் வேலையை இன்னும் விடவில்லையா??” என்று அப்போது தான் அவளின் அழைப்பினைக் கவனித்தவன் போல் சிரித்தவன் தொடர்ந்து “என்னோட ஊருக்கு வந்து என்னையே எங்கே என்று கேட்கிறாயா?? ம்ம்ம்??” என்றான் வம்பிழுக்கும் குரலில்.ஆனால் சேராவோ “ஓ... உங்கள் சொந்த ஊரே இதுதானா?? எனக்கு அது தெரியாது.” என்றாள் அமைதியாகஅவளின் பதிலைக் கேட்டு இனியன் வியப்பின் உச்சிக்கே போய்விட்டான்.இவ்வளவு அமைதியாக பணிவாக பேசுவது நிலா தானா??? இவளுக்கு என்னதான் ஆயிற்று?? இதுவே பழைய நிலா என்றால்ஹலோ!!!! என்னது உங்க ஊரா??? இது சொந்த ஊர் என்பதாலேயே அது உங்க ஊர் ஆகிடுமா?? எப்போ சார் உங்களுக்கு முழு ஊரையும் பட்டா போட்டு கொடுத்தாங்க??? என்று முழ நீளத்துக்கு பேசி வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்திருப்பாள்.இவளுக்கு என்ன தான் ஆயிற்று?? ஒரு வேளை பெண்கள் என்றாலே அப்படித்தானோ?? ஒரு வயதிற்கு மேல் இப்படி அமைதியும் பொறுமையும் நிறைந்தவர்களாய் மாறி விடுவார்களோ??? ஆனாலும் ஒருவரின் இயல்பே இப்படி தலைகீழாக மாறி விடுமா என்ன??? கண்களில் சிறு குழப்பத்துடன் அவளை நோக்கியவன்“சரி நிலா.எனக்கு நேரமாகிறது நான் கிளம்புகிறேன்.வீட்டில் பேசினால் ஆன்டி சேரன் இருவரையும் நலம் விசாரித்ததாய் கூறு வருகிறேன்” என்றவன் சேராவுக்கும் வந்தனாக்கும் சேர்த்த ஒரு சிறு தலையசைப்புடன் விடைபெற்றான்.அவன் விடைபெற்று செல்லவும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் திரும்பிய சேரா அருகில் நின்று தன்னையே ஒரு வியந்த பார்வையுடன் கூர்ந்தபடி நின்ற வந்தனாவைக் கண்டு ஒரு கணம் தடுமாறினாள்.பின் தன்னை சமாளித்தவளாய்“இவர் என்னுடைய அண்ணாவின் நண்பன்.” என்றாள் விளக்கம் போல“ஒ ..”என்ற வந்தனா. அதன் பிறகு அங்கிருந்து விடுதிக்கு செல்லும் வரையிலும் கூட அது குறித்து எதுவுமே பேசவில்லை. விடுதிக்கு சென்று சேரா தன் அறையினுள் நுழையப் போகையில் வந்தனா வினவினாள்.“உனக்கு ஒரு அண்ணா இருக்கிறார் என்று இதுவரை நீ என்னிடம் கூறவே இல்லையே சேரா??” என்றவள் சேரா அதிர்ந்து அவளை பார்க்கும் போதே “அதுசரி நான் தான் உன்னை என் உற்ற தோழியாய் நினைத்து அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறேன்.உனக்கு நான் அப்படியா என்ன??” என்றவள். விரைந்து தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.சற்று நேரம் அங்கேயே நின்று வந்தனாவின் அறைக்கதவையே வெறித்துக்கொண்டிருந்த சேரா பின் ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.அன்றைய அலைச்சலின் கசகசப்புத் தீர குளித்துவிட்டு வந்த சேராவுக்கு சாப்பிட மனம் வரவில்லை.பேசாமல் சென்று படுத்துக் கொண்டாள். அவள் சாப்பிடாவிட்டாலும் இரவு உணவு கண்டிப்பாய் எடுத்துக்கொள்ள வேண்டும்மா என்று கூறி உணவருந்த வைக்க அருகில் அன்னையா இருக்கிறார்.அவள் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை மலர்ந்தது.ஏனோ அன்னையிடம் பேச வேண்டும் போல் ஓர் ஏக்கம் தோன்ற தன்னருகில் இருந்த அலைபேசியை எடுத்தவள் பின் அம்மா தூங்கியிருப்பார்கள். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் காலையில் பேசுவோம் என்றெண்ணி பேசியை வைத்து விட்டு படுத்துக்கொண்டாள்.இன்று இனியனை சந்தித்தது மற்றும் வந்தனாவின் பேச்சு எல்லாம் சேர்ந்து அவள் மனதை சங்கடத்தில் ஆழ்த்தியது.நான் தான் உன்னை என் உற்ற தோழியாய் நினைத்து அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் நீ அப்படி அல்ல. என்ற வந்தனாவின் குற்றச்சாட்டு அவள் காதில் ஒலித்தது.அவள் அப்படி அல்ல தான்.அவளால் நிச்சயம் தன் மனதில் இருப்பதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. அந்த ஒரு காரணத்துக்காகவே நீ ஏன் இப்படி இருக்கிறாய்?? உன் மனதில் உள்ள துயரத்தை பகிர்ந்துகொள் என்று யாரும் தன்னை நெருங்கி கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தன்னைச் சுற்றி கோபம் சிடுமூஞ்சித்தனம் என்ற திரைகளைப் போட்டுக்கொண்டு யாரையும் தன்னை நெருங்கவிடாமல் தனியே இருந்தாள். அவளின் அந்த திரைகளைக் கடந்து அவளை நெருங்கியது வந்தனா மட்டுமே.அவள் சேராவை சேராவாகவே ஏற்று கொண்டாள். அனாவசியமாக அவளிடம் எதையும் கேட்டு குடையவில்லை.தன்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காது தூய நட்பினையும் அன்பினையும் மட்டுமே தன் மீது காட்டும் வந்தனாவை சேராவிற்கும் பிடித்திருந்தது. இன்று அவளின் கோபமும் அதன் பின்னணியில் உள்ள எதிர்பார்ப்பும் கூட அவளுக்கு புரிந்தது.

Rosei Kajan

Administrator
Staff member
#4
நான் உன்னிடம் என் சம்மந்தப்பட அனைத்தையும் பகிரும் போது நீ உன்னைப் பற்றிய மிகச் சாதாரண விடயத்தைக் கூட என்னிடம் கூறாமல் மறைக்கிறாய்.என் மீதான உன் நட்பு அவ்வளவு தானா என்ற கோபம் அது.அது நியாயமானதும் கூட.ஆனால் அவளால் அனைத்தையும் வந்தனாவிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா?? நிச்சயம் முடியாதென்றே தோன்றியது. சேராவின் நினைவுகள் பின்னோக்கி பயணமானது.நிலா ....நிலா.... எழுந்திரு. கல்லூரிக்கு நேரமாகுது பார்..அன்னை சகுந்தலாவின் குரல் காதுக்குள் கீதம் பாட அதை சிறிதும் ரசிக்காத ஓர் எரிச்சலான முகச் சுழிப்போடு இரண்டு கைகளையும் காதைப் பொத்தி வைத்துக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள் நிலா. விட்ட தூக்கத்தை தொடரும் நோக்குடன் அவள் சற்று அயர்ந்துகொண்டு போகும் போதே மூக்கினுள் ஏதோ புகுந்து விட

அச்ச்சூ........ அச்ச்சூ........... என்ற தும்மலோடு பதறி விழித்தாள்.அவள் நினைத்தது போலவே அவள் அண்ணன் தான். அவள் விழித்த விதத்தைக் கண்டு வாய்விட்டு சிரித்தபடி கையில் இருந்த சிறு துரும்பை வீசிகொண்டிருந்தான்.

“யூ ..... யூ ......”என்று பல்லைக்கடித்தபடி அவள் எழவும் “ஏய்...ஏய்.... நிலா என்மேல் தப்பில்லை.இன்று ஏதோ முக்கியமான வகுப்பிருக்கிறது.சீக்கிரம் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று கூறி உன்னை எழுப்பிவிடச் சொன்னதே நீ தான்.”என்றான் சேரன்.“சேரவேந்தன்” நிலாவின் அண்ணன்.

“அதற்கு இப்படியா எழுப்புவாய் தடியா என்று அவள் கத்தவும் அதே சிரிப்புடன் வேறு என்னம்மா செய்வது. மனித ஜென்மம் என்றால் வாயால் எழுப்பலாம். நீ ..........” என்றவன் அவள் அடிக்க வருமுன் தப்பித்து அந்த அறையை விட்டு வெளியே ஓடினான்.அவன் செய்கையில் சிரித்தபடியே குளியலறைக்குள் நுழைந்தாள் நிலா.நிலாவிற்கு அவள் அண்ணன் தான் உலகம்.நிலாவின் ஐந்தாவது வயதிலேயே அவள் தந்தை இறந்த பின் அவளும் அவள் அண்ணனும் அன்னையும் மட்டுமே அவர்கள் குடும்பம் என்றானது.சேரவேந்தன் சேரநிலா அவர்கள் இருவரின் பெயரினைப் போலவே அவர்கள் இருவருக்குமான ஒற்றுமையும் கூட அலாதியானது தான். நிலாவிற்கு அவள் அண்ணன் தான் எல்லாம்.அவள் அண்ணன் அவளுக்கு ஒரு தோழன் மட்டுமல்ல சமயத்தில் தந்தையும் கூடத்தான். தந்தை இல்லையே என்ற குறையை அவள் உணர்ந்ததே இல்லை.நிலாவிற்கு விபரம் புரிந்த வயதில் இருந்தே அவள் அண்ணன் தான் அவளுக்கு எல்லாம்.ஏன் அன்னை கூட அடுத்தபடி தான். சிறுவயதில் அவளின் விளையாட்டுத் துணையாய் கூட விளையாடியதில் இருந்து வளரும் வயதில் மனம் விட்டு அனைத்தையும் பகிரும் நல்ல தோழனாகவும் அவள் அண்ணன் இருந்தான்.“டேய் அண்ணா அந்த நரேஷ் என்னை சைட் அடிக்கிறான் டா.”“ஹே உனக்கும் நினைப்பு தான்.அவன் வேறு யாரையாவது பார்த்திருப்பான் டி.”“போடா அவன் என்னைத் தான் முறைச்சு முறைச்சு பார்த்தான்.நான் நல்லா பார்த்தனே!”“ஏய் நீ ஏண்டி அவனைப் பார்த்தாய் குரங்கே!!!!!!!!”“ஹி ஹி..அதுவா?? அவன் கொஞ்சம் பார்க்கிறாப்போல ஹன்ட்சம்மா இருந்தான் டா.அதான்...”என்று கூறி அவள் அண்ணனின் முறைப்பினைப் பெற்றுக்கொள்ளுவாள்.ஆனால் அந்த முறைப்பும் அதிகநேரம் நீடிக்காது.அவளின் குறும்பு விழிகளின் இமைசிமிட்டலைப் பார்த்ததுமே “குட்டிக்குரங்கு” என்று கூறி வாய்விட்டுச் சிரித்துவிடுவான்.இந்தளவு தூரம் இயல்பாக உரையாடும் அளவிற்கு அவர்களின் நெருக்கம் இருக்கும்.சேராவின் வாழ்வில் அந்த இருபத்தியொரு வருடங்களும் வசந்தகாலங்களே!!!!!!!! எந்த கவலைகளும் அற்று துன்பத்தின் நிழல் கூட அவளை அண்டாமல் தோழிகள் குறும்பு கேலி விளையாட்டு என பட்டாம்பூச்சியாய் அவள் பறந்து திரிந்த காலங்கள்.அவள் அம்மா அண்ணன் என்று மூன்று பேர் மட்டுமே அடங்கிய சிறிய குடும்பம் என்றாலும் அந்த சிறிய கூட்டுக்குள் உலகின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் கொட்டிக்கிடப்பதாய் அவளுக்கு தோன்றும்.அந்த வீட்டில் எப்போதும் சிரிப்புச் சத்தமும் அம்மா அண்ணா என்னை கொட்டுறான் மா.அம்மா இவ ரொம்ப சேட்டை பண்றாம்மா.என்ற சிறுபிள்ளைத் தனமான செல்லச் சண்டை ஒலிகளும் கேட்டபடியே இருக்கும்.என்ன தான் அவளுடன் சரிக்குச் சரி வம்பு செய்தாலும் அவள் அண்ணனுக்கு அவள் மீது கொள்ளை அன்பு தான்.அவள் முகம் சற்று வாடினாலே போதும் உடனேயே “என்னடா குட்டிம்மா.என்ன ஆச்சு???” என்று உருகிக் குழைந்து விடுவான்.சேராவும் அதே போலத்தான் தன அண்ணனை பெற்ற அன்னையிடம் கூட விட்டுக்கொடுக்க மாட்டாள். தாய் தமயனை திட்டினால் உடனே அவனுக்கு பரிந்து கொண்டு கிளம்பிவிடுவாள்.ஹ்ம்ம் அந்த அன்பு தானே இதோ இன்றும் கூட அன்னையிடம் உண்மை எதையும் கூறாமல் வீட்டைவிட்டே அவளைத் தனியே கிளம்பி வரச் செய்து ஒரு அநாதையைப் போல தன்னையே தனக்குள் சுருக்கிக் கொண்டு ஒரு கூட்டுக்குள் வாழச் செய்திருக்கிறது.ஆனாலும் அவள் அண்ணன் அப்படி ஒரு மோசமான தவறை செய்து அவ்வளவு இழிநிலைக்கு இறங்கி இருக்க வேண்டாம்.எப்படி அவனால் சற்றும் மனம் கூசாமல் அந்த தவறினை செய்ய முடிந்தது?? அப்படியா அவள் அன்னை அவனை வளர்த்தாள்??அப்படி ஒரு கேவலமான தவறினை செய்த பின்பும் எப்படி அவனால் மனம் கூசாமல் மனசு உறுத்தாமல் தாய் தங்கையின் முகத்தினைப் பார்த்து இயல்பாகப் பேச முடிந்தது.அவள் மனதில் அவள் அண்ணனுக்கு எவ்வளவு உயர்ந்த ஒரு ஸ்தானத்தைக் கொடுத்திருந்தாள். உலகின் ஒட்டு மொத்த சிறந்த ஆண்களின் பிரதிநிதியாகவும் அவள் அண்ணனைத் தானே மனதில் கருதியிருந்தாள். அது எல்லாவற்றையும் ஒரே நொடியில் தவிடுபொடி ஆக்கிவிட்டானே! அவன் அவன் வாழ்க்கையை மட்டும் சிதைக்கவில்லையே. அவன் மேல் அளவுக்கதிகமான பாசத்தையும் நம்பிக்கை யையும் மட்டுமே வைத்திருந்த அவள் வாழ்க்கையையும் சேர்த்தல்லவா அழித்து விட்டான். இதற்கு மேலும் அவளால் இன்னொரு ஆணை எப்படி நம்ப முடியும்.ஆண்கள் ஒட்டுமொத்த பேருமே மோசக்காரர்கள்.நம்பிக்கைத் துரோகிகள். இனி அவள் வாழ்வில் எந்த ஒரு ஆணையுமே நம்ப மாட்டாள். நம்பவே மாட்டாள்.!!!!!!!!!!!!உள்ளத்தின் கோபக் கொதிப்பில் உடலெல்லாம் உப்பு நீர் முத்து முத்தாய்ப் பூக்க சட்டென எழுந்தமர்ந்தாள் சேரநிலா. அருகிலிருந்த ஒரு போத்தல் தண்ணீரையும் ஒட்டு மொத்தமாய் தொண்டையில் சரித்தும் அவள் உள்ளக்கொதிப்பு அடங்கவில்லை.எழுந்து எதையும் நினைக்காதே நிலா. மற மற என தனக்குள் உருப்போட்டபடியே அந்த சிறிய அறையில் கால் ஓயும் வரை நடந்தவள் ஒரு கட்டத்தில் தன்னை மீறி உடல் சோர்ந்து படுக்கையில் விழுந்து இமை மூடினாள். மூடிய இமைகளில் இருந்து அவளையும் மீறி வெளிப்பட்ட நீர்முத்துகள் சில விழியோரம் வழிந்தன.
 
#5
அருமையான பதிவு
அண்ணன் என்ன தப்பு செய்தான்
 
lalu

Well-known member
#6
Romba interesting ah pokuthu.....suspense thanka mudialai...😍
 
emilypeter

Active member
#7
அண்ணனிடம் அவள மனம் சங்கடப் படும்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது அதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது
 
Top