தொடர்கதைகள் அத்தியாயம் 39

Rosei Kajan

Administrator
Staff member
#1
மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா


சக்கரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. அன்று அந்த மாளிகையின் இளவரசி சிந்துவுக்கு நிச்சயதார்த்தம். மணமகன் வேறு யாரும் இல்லை. இப்பொழுது பாவனாவின் பாசமிகு அண்ணன், ஸ்ரீயின் ஹான்ட்ஸம் மாமா, ஆதியின் தத்து அண்ணன் ஹரிஷே தான்.

ஹரிஷை பற்றி அறிந்து பாவனா உருகி வீட்டினர் மறுகி என்று இருக்க சிந்துவோ அவனை சைட் அடிக்க தொடங்கி விட்டாள். அதை அறிந்து கொண்டது கவின் தான். அவன் விழிகளை தாண்டி ஒரு விடயம் சென்று விடுமா என்ன? அறிந்ததோடு மட்டுமன்றி அதை நடத்தவும் வழி வகுத்து விட்டான். அது தான் இன்றைய நிகழ்வுக்கான அச்சாரம்..

ஹரிஷிற்கும் இவ்வளவு நாள் தனித்து இருந்துவிட்டு இந்த கூட்டுக்குள் சேர்வது பிடித்து தான் இருந்தது. சிந்துவை அவளது குறும்பை அதை விட பிடித்து இருந்தது. அதனாலே அவனும் மகிழ்வாக இதை ஏற்றுக்கொண்டான்.

விழா சிறப்பாக நிறைவேறி இரவும் கவிழ்ந்தது. அனைவரும் களைப்பில் உறங்க செல்லவும், ஸ்ரீ ஹரிஷுடன் செல்வதாக அடம் பிடிக்க அவளை அவனுடன் விட்டு விட்டு அனைத்தையும் மேற்பார்வையிட்டு விட்டு தனது அறைக்குள் நுழைந்த ஆதி கணணிக்குள் தலையை நுழைத்துக்கொண்டு இருந்த கவினை கண்டு தலையில் அடித்தவாறே கதவை தாளிட்டு கட்டிலின் மறுபுறம் வந்து அமர்ந்தாள்.

அவள் அமர்ந்தும் அதனை கவனிக்காமல்கவின் இருக்கவும் கோவம் மிகையுற தனது நகைகளை களைந்து சென்று பத்திரப்படுத்தியவள் நைட்டியை எடுத்து சென்று குளித்து விட்டு வந்து மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள். அப்பொழுதும் அவன் தன்னை கவனிக்காமல் இருக்கவும் எரிச்சலில் திரும்பி படுத்தது தான் தாமதம் சுழன்று போய் கவினின் மேலே இருந்தாள். எப்படி என்று அதிர்ச்சியாகி அவள் முழிக்கவும் அவளை தன் மேல் போட்டவாறு சிரித்துக்கொண்டிருந்தான் அந்தக்கள்வன்.

அவன் தான் என்று புரிய "கவின்" என்று சிணுங்கியபடி அவனது மார்பில் அடிக்கவும் அவளது கையை பற்றி அதில் அழுத்தமாக முத்தமிடவும் "கவின்" என்று மீண்டும் உள்ளே போன குரலில் அழைத்தாள். அவளை அழுத்தமாக பார்வையிட்டுக்கொண்டே அவளது இடுப்பை இறுக்கியவன்

"சந்தோஷமா இருக்கியா கண்ணம்மா?" என்று குழைவாக கேட்க அவனது நெற்றியில் இதழ் பதித்தவள்

"ரொம்ப..ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கவின். எல்லாமே உங்களால தான். தாங்க் யூ" எனவும் அவளது கீழுதட்டை கடித்தவன்

"நமக்குள்ள தாங்க் யூ வரனுமா?" என்று கேட்கவும் "ம்ஹூம்" என்று தலையை மறுப்பாக ஆட்டியவள் அவனின் மார்பில் புதைந்து கொண்டாள்.

"இப்போதான் மனசுக்கு ஆறுதலா இருக்கு ஆரா. உன்னோட பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நீ நிம்மதியா இருக்கிறத பாக்கிறப்போ"

அவனின் நெஞ்சில் தன் தாடையை பதித்து அண்ணாந்து பார்த்தவள் ஒரு கையால் அவனின் கன்னத்தை தடவியவாறே

"நீங்க இல்லனா இதெல்லாம் சாத்தியமே இல்ல கவின்" என்றதும் தலை ஆட்டி மறுத்தான்.

"இல்ல ஆரா..ஹரிஷ் என்ற தனி மனிதன் இல்லனா இதெல்லாம் சாத்தியமே இல்ல.. அவனுக்கு நம்ம சிந்துவை கொடுக்கிறதுல எனக்கு அவ்வளவு சந்தோஷம்" எனவும் அதை ஆமோதித்தவள்

"ஆனா..ஹரிஷ் மூலமா எனக்கு என்ன கிடைச்சு இருக்கும் கவின்? பாதுகாப்பும் சொத்தும் தானே? ஆனா என்னை உயிர்க்க வைச்சது இந்த கவினோட அன்பு மட்டும் தான்" என்று கூறி சிரித்தவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்

"இவ்வளவு நாள் எங்க டி இருந்த? மென்மைனா என்னனு இப்போ தான் உணருறேன்" எனவும் தான் இருக்கும் நிலை உணர்ந்து

"ச்சீ" என்று வெட்கம் மேலிட விலக பார்க்கவும் அவளை அசையாமல் பிடித்தவன்

"நான் அதை சொல்லல..ஆனா அதுவும் தான்" என்று கண்சிமிட்டினான் அந்த கள்வன்.

அவனின் பார்வையிலும் பேச்சிலும் சிவந்து போனவள் "கவின்" என்று முணகி அவன் மார்பை சூடாக்கவும் இன்னும் அவளை நெருக்கியவன்

தன்னுள் புதைந்தவளை இறுக அணைத்தவாறே

"ஐ நீட் யு ஆதி. உன்னை எனக்கே எனக்குனு தருவியா?" என்று காதருகில் கேட்ட்டான். பெண்மை என்ன பதில் சொல்லும்? நாணத்தில் இன்னும் அவன் மார்பில் புதையவும் பதில் கிடைத்த மகிழ்வில் அவளை சுவீகரிக்க தொடங்கினான் கவின் சக்கரவர்த்தி. தன்னவனின் கைகள் அவளுடலில் அத்து மீறிய போதும் சரி அவன் ஆடைகளை களைந்த போதும் சரி மார்பில் அழுத்தமாக புதைந்த போதும் சரி ஆதி கிறங்கி அவனுடன் கலந்திட துடிக்க அதை உணர்ந்த கவினும் தன்னவளை முழுமையாக தனக்குள்ளே உள்வாங்கிக்கொண்டான்.

கவினின் ஆளுகைக்குள் இருந்த ஆதியும் மெல்ல மெல்ல முழுமையாக ஆதிரா கவின் சக்கரவர்த்தியாக மாறிக்கொண்டு இருந்தாள்.

அங்கு கவின் ஆராவை சுவீகரிப்பதை கண்டு நிலவே மேகத்துக்குள் மறையும் போது நமக்கு அங்கே என்ன வேலை மக்களே? அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்.
 
#2
Nice story.
 
#3
Thank you for the new year gift
 
#4
அருமையான கதை. நல்ல முடிவு. வாழ்த்துக்கள். மேலும் சிறப்பான கதைகளை எதிர் பார்க்கின்றோம்.
 
#5
Nice ending sis
 

Saroja

Active member
#6
அருமையான கதை
நல்ல முடிவு
 
#7
Nice story
 
#8
Super story sis
 

Rosei Kajan

Administrator
Staff member
#9
ஆரம்பத்திலிருந்து கருத்திட்ட , வாசித்த அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி! இது ரக்ஷியின் சார்பில் நான் கூறுகின்றேன் :)
 

Aruna

Active member
#10
Nice story sis...
 
Top