அத்தியாயம் - 31 , 32, 33

K.Thanu

Active member
#1
இதழ்:-31

தமிழின் பிறந்தநாளிற்கான ஏற்பாடுகள் களைகட்டி இருந்தன.கடந்த நான்கு வருடங்களாக அந்த குடும்பம் எந்த விழாவையுமே கொண்டாடவில்லை.அந்த பாசக்கூட்டில் இருந்து ஒரு பறவை பிரிந்திருக்கும் போது எப்படி மற்றவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.இதோ இப்போது அந்த பறவை கூடு திரும்பிவிட்ட மகிழ்ச்சியில் தமிழின் பிறந்தநாள் ஏற்பாடுகள் அட்டகாசமாக நடைபெற்றன.

பிறந்தநாள் விழாவிற்கான முழு ஏற்பாட்டையும் இளையவர்கள் தாங்களே செய்வதாக தங்கள் பொறுப்பில் ஏற்றிருந்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் நடக்கும் ஒரு கொண்டாட்டம் என்பதனால் சற்று பெரியளவிலேயே செய்ய தீர்மானித்திருந்தனர்.


நாளை பிறந்தநாள் என்றநிலையில் அனைவரும் உற்சாகமாக விழா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். கேக் தயாரிப்பு மற்றும் ஆடை அலங்காரம் என்பவற்றை வினியும் தாரணியும் தாய்மாருடன் கலந்துபேசி ஏற்பாடு செய்ய விழாவை தோட்டத்திலேயே நடத்துவதால் தோட்டத்தை அதற்கேற்ற விதத்தில் ஒழுங்குசெய்யும் பொறுப்பை பையன்கள் ஏற்றிருந்தனர். விழாவிற்கு தேவையான உணவுகளை ஆர்டர் கொடுப்பது மற்றும் விழாவிற்கு விருந்தினர்களை அழைக்கும் பொறுப்பு தந்தையர்களுக்கு போக தாய்மார் சிற்றுண்டிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.ஆக மொத்தம் அந்த வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்க பேசி சிரித்தபடியே மகிழ்ச்சியுடன் அனைவரும் வளைய வந்தனர்.வீடே கலகலவென்று இருந்தது.

நிலவன் மட்டும் இன்னும் வந்திருக்கவில்லை.அன்று மாலை கண்டிப்பாக வந்துவிடுவதாக தங்கையிடம் வாக்கு கொடுத்திருந்தான்.வினிக்கு தான் அவனை எப்போது காண்போம் என்று ஏக்கமாக இருந்தது.ஆனால் அதையே எண்ணிக்கொண்டிருக்க முடியாமல் அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தன.

கேக் (கட்டிகை or கடினி) தயாரிப்பு வினியினுடையது.தமிழுக்கு அது இன்ப அதிர்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக கேக் தயாரிப்பை தன் வீட்டிலேயே செய்தாள்.தாரணியும் அருகிலிருந்து அவளுக்கு உதவினாள்.

கேக்கை ஏற்றவிதத்தில் வெட்டி வடிவமைத்தவள் ஏய் தரு நல்லா இருக்கா?? என்றாள்.

ம்ம் சூப்பர் வினிக்கா.மேலே ஐசிங் அலங்காரத்தையும் முடித்தால் இன்னும் செமையா இருக்கும்.

ம்ம் அடுத்து அந்த வேலை தான்.மேலே என் அறையில் அதற்கு தேவையான பொருட்கள் ஒரு கவரில் வைத்திருக்கிறேன்.எடுத்து வருகிறாயா.

இதோ வினிக்கா!!! என்ற தாரணி மாடியேறிப் போனாள்.வினியின் அறையை நெருங்கி திறக்கும் போது எதிரே இருந்த அறைக்கதவு திறந்து மித்திரன் வெளிப்பட்டான்.

நின்று ஆர்வமாக திரும்பி பார்த்தாள்.இப்போதெல்லாம் அவனைக் காண்பதே அரிதாக இருந்தது.அப்படியே நேரில் காண நேர்ந்தாலும் ஒரு வெற்றுப் பார்வையுடன் விலகிப் போனான்.தாரணியின் மனம் இப்போதெல்லாம் அவனின் குறும்பு பார்வைக்காகவும் சீண்டல் பேச்சுக்காகவும் மிகவும் ஏங்கியது.

ஆர்வமாக தன முகம் நோக்கியவளை ஒரு கணம் பார்த்தவன் பின் அதே வெற்றுப் பார்வையுடன் விலகிச் சென்றுவிட்டான்.

தாரணிக்கு கோபம் வந்தது. அவன் எதற்காக இப்படி நடந்துகொள்கிறான் என்று அவளுக்கு தெரியும்.அன்று அவன் எடுத்துக் கொடுத்த உடைகளை அவள் வாங்கிக் கொள்ளவில்லையாம்.அந்த கோபத்தில் தான் இப்படி நடந்துகொள்கிறான்.அவனின் கோபத்தில் எதுவித நியாயமுமே இல்லை என்று தாரணிக்கு தோன்றினாலும் அவனின் கோபமும் பாராமுகமும் அவள் மனதைப் பாதிக்கத்தான் செய்தது.


சிறு பெருமூச்சுடன் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே சென்ற போது மித்திரன் வினியின் அருகே அமர்ந்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தான்.இவளைக் கண்டதும் அவன் சிரிப்பு மறைந்தது.தாரணிக்கு வருத்தமாக இருந்தது. எப்படியாவது அவன் கோபத்தை குறைத்துவிட வேண்டும் என்ற வேகம் எழ வினியிடம் சென்று பொருட்களைக் கொடுத்துவிட்டு அவள் அருகிலேயே அமர்ந்தாள்.

வினி பொருட்களைப் பிரித்து இரண்டு பௌல்களில் ஐசிங்க்கு தேவையான பொருட்களைப் போட்டு ஒன்றில் நீல நிறத்தை கலந்து மாஜரீனில் ஐசிங் சுகரும் கலரும் நன்றாக கரையுமாறு கலக்க சொல்லி தாரணியிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை வெறுமனே கலக்குமாறு மித்திரனிடம் கொடுத்தாள்.தான் கேக்கை அலங்கரிக்க தேவையான ஐசிங் பூக்களை தயாரிப்பதில் ஈடுபட்டாள்.


ஆகா தெரியாம உன்கிட்ட வந்து மாட்டிகிட்டேன் போலவே!!! என்று பொய்யாய் அலறினாலும் மித்திரனும் அவர்களுக்கு உதவினான்.


மாஜரீனில் ஐசிங் சுகர் கரைய கரைய மித்திரனின் கோபத்தை எப்படிப் போக்குவது என்று சிந்தித்தபடியே இருந்தாள் தாரணி. ஐசிங் ம்ம் தயாராக அவளுக்கும் ஒரு யோசனை உதித்தது.அதன் படி

வினிக்கா நேற்று என் தோழி ரியால்ல அவளுக்கு அவ அம்மா செம திட்டாம்.

எதற்கு சம்பந்தமில்லாத இந்தப் பேச்சு என்று தோன்றினாலும் ம்ம் ஏனாம்??? என்றாள் வினி.

அவ பெரியப்பாவோட உறவுக்கார பையன் ஒருத்தன் ஊர்ல இருந்து வந்திருக்கானாம்.இவ அவ பெரியம்மா பொண்ணோட ஷாப்பிங் போனப்போ அவனும் கூட வந்திருக்கான்.

ம்ம்

அவ பெரியம்மா பொண்ணும் இவளும் ஏதோ துணி எடுத்தப்போ அந்த பையன் ரெண்டுக்கும் சேர்த்து பணம் கொடுத்துட்டானாம்.இவளும் எதுவும் பேசாம அதை வாங்கிட்டு வந்து வீட்டில சொல்லியிருக்கா. அதுக்கு தான் அவ அம்மா இப்படிதான் யார் எதுகொடுத்தாலும் வாங்கிட்டு வருவியான்னு செம திட்டாம்.

ம்ம் அவ அம்மா திட்டினதில நியாயம் இருக்கு தானே தரு.அடுத்தவங்க அதுவும் ஒரு பையன் எதையாவது வாங்கி கொடுத்தா இப்படித்தான் எதுவும் சொல்லாம வாங்கிட்டு வாறதா?? ஒண்ணு அதை மறுத்திருக்கணும் இல்லைன்னா அதற்குரிய பணத்தை அந்த பையனிடம் கொடுத்திருக்கணும்.உரிமையில்லாத இடத்தில எதையுமே சும்மா பெறுவது தப்பு தானே.

தாரணிக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது.அவளுக்கு தெரியும் வினி இப்படித்தான் சொல்லுவாள் என்று.ஓரக்கண்ணால் மித்திரனைப் பார்த்தாள்.அவன் கர்ம சிரத்தையாய் ஐஸிங்கை கலக்கிக் கொண்டிருந்தான். தாரணி அத்தோடு விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவளோ அவனுக்கு மேலும் தன பக்க நியாயத்தை விளக்கிவிடும் நோக்குடன் தொடர்ந்து

ஆமாம் வினிக்கா நானும் அவளிடம் அதைத்தான் சொன்னேன்.ஒரு மூன்றாவது ஆளிடம் இருந்து அதுவும் ஒரு ஆணிடம் இருந்து நீ இப்படி வாங்கியது தப்பு என்று.!!! நான் சொன்னது சரிதானே வினிக்கா என்று கேட்டபடியே மித்திரனைப் பார்த்தாள்.

அதுவரை தலையை குனிந்தவாறே ஐஸிங்கை கலக்கிக் கொண்டிருந்தவன் தாரணியின் பேச்சைக் கேட்டு சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான்.அவன் கண்கள் இரண்டும் கோபத்தில் ஜொலித்தன.

அது ஏன் என்று புரியாமல் அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே முகம் இறுக கலக்கிய ஐசிங் கலவையை பட்டென்று வைத்துவிட்டு நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன் வினி என்றுவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.


அவனின் கோபத்தின் காரணம் அறியாமல் தாரணியின் மனம் கலங்கியது. அவளின் கலங்கிய முகத்தைக் கண்டு என்னாச்சு தரு?? என வினி வினவ சட்டென புன்னகையைப் பூசிக்கொண்டவள் எதுவுமில்ல வினிக்கா என்றபடி வினிக்கு உதவுவதில் கவனத்தைச் செலுத்தினாள்.

கேக் வேலைகளை ஓரளவுக்கு முடித்த இருவரும் மீதி இருந்த கேக்கை அலங்கரிக்கும் வேலைகளை மட்டும் மறுநாள் காலைக்கு என ஒதுக்கிவிட்டு குளித்து உண்டுவிட்டு அலங்காரத்திற்கு தேவையான சில பொருட்களை வெளியே சென்று வாங்கி வந்தனர். பின் விழா வீட்டுக்கு சென்று தமிழ் அணிய வேண்டிய ஆடை மற்றும் அலங்காரம் என்பவற்றை முடிவு செய்தனர்.

தமிழுக்கு நீலநிறம் மிகவும் பிடிக்கும் என்பதால் நீல நிறத்தையே மையப்படுத்தி அனைத்தையும் வடிவமைத்தனர்.மேலும் தோட்டத்தில் விழா நடப்பதால் அந்த பசுமைக்கு ஏற்றமாதிரி அங்கங்கே பச்சையும் இணைந்திருந்தது.

தமிழ் அணிய வேண்டிய ஆடை அணிமணிகள் என அனைத்தையும் ஒழுங்குபடுத்தினார்கள்.தமிழுக்கான ஆடையை வினியே தேர்வு செய்திருந்தாள்.எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்துவைத்துவிட்டு தோட்டத்தில் நடக்கும் ஏற்பாட்டை கவனிக்க சென்றனர்.

செந்துவும் சுவே நிவேயும் தோட்டக்காரரின் உதவியுடன் நன்றாகவே இருந்த தோட்டத்து தரையை மேலும் சற்று சீரமைத்து ஒரு பக்கத்தில் விழா அரங்கை வடிவமைத்திருந்தனர்.தோட்டத்து செடிகொடிகள் எல்லாம் விளக்கு சரங்கள் போர்த்தப்பட்டு கண்சிமிட்டி சிரித்துக்கொண்டிருந்தன.செடிகளில் அங்கங்கே விதவிதமான நிறங்களில் காகிதப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
 

K.Thanu

Active member
#2
விழா அரங்கின் திரைச்சீலையும் மேசை விரிப்புகளும் பலூன்களும் மட்டும் மறுநாள் காலைக்கு என ஒதுக்கி வைக்கப்பட்டன.

அனைத்தையும் பார்வையிட்ட வினியும் தருவும் டேய் அசத்துரீங்கடா!! பக்காவா இருக்கு.அதுவும் அந்த செடிகளில் எல்லாம் பூக்களை பூக்க செய்தது செமையா இருக்குடா.யாரோட யோசனைடா இது.

தமக்கைகளின் பாராட்டைக் கேட்டு புன்னகைத்தவர்கள் அது மித்திரன் அண்ணாவோட யோசனை வினிக்கா.அவர்தான் அதெல்லாம் பண்ணினார்.செமையா இருக்கில்ல.

ம்ம் ஆமா ரொம்ப நல்லா இருக்கு.தமிழ் இதையெல்லாம் பார்த்தா துள்ளிக் குதிப்பா.

ஹ ஹ....ம்ம் ஆனா அவளுக்கு இதையெல்லாம் இப்போ காட்டக் கூடாது.நாங்க திட்டம் போட்டது போல இரவு சரியா பனிரண்டு மணிக்கு அவளை இங்கே கூட்டிட்டு வந்து கேக் வெட்ட சொல்லணும்.அப்போ இதையெல்லாம் பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவா.

ம்ம் அது சரி தான் வினிக்கா ஆனா அவகிட்ட இருந்து எப்படி இதையெல்லாம் மறைக்கிறது.இப்போ வெளியே போய் இருக்கிறவ வந்ததும் தெரிஞ்சுடுமே?? செந்தூ கவலையாக வினவவும்

வினி மர்மமாக புன்னகைத்தபடியே அது தான் அவள சின்ன மாமா கூட வெளியே கிளப்பிட்டன்.இருட்ட முதல் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாதுன்னு மாமாக்கு உத்தரவு போட்டாச்சு.

மாமா எப்படியும் எட்டுமணிக்கு முதல் அவளைக் கூட்டிட்டு வரமாட்டார்.அதுக்கப்புறம் அவ வரும் போது தோட்டத்து விளக்கு எல்லாத்தையும் அணைச்சிட்டா எதுவுமே தெரியாது தானே?? அப்புறம் எங்க திட்டம் போல பன்னிரண்டு மணிக்கு அவளை கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுக்கலாம் எப்படி???


அட செம பிளானிங் வினிக்கா.அப்படியே செய்திடலாம்.ஆனா நிலவத்தானும் அதுக்குள்ள வந்திடணும்.அப்போதான் அவளுக்கு முழு சந்தோசமும் கிடைக்கும்.என்றான் செந்தூ.

செந்தூவும் தமிழும் ஒரே வயது ஒரே கல்லூரி என்பதால் நண்பர்கள் போலத் தான் பழகுவார்கள்.ஒருமையில் தான் பேசிக்கொள்வார்கள்.

அதைக் கேட்ட தாரணி.ம்ம் ஆமாம் டா.ஆனால் அத்தான் கண்டிப்பா சொன்ன மாதிரி வந்துடுவார்.என்றாள்.

நிலவனும் சொன்னது போலவே அன்று இரவு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான்.ஏற்பாடுகளை எல்லாம் முடித்துவிட்டு கண்டிப்பாக நாளை தான் செய்தாக வேண்டும் என்கிறமாதிரியான சிறு சிறு வேலைகளை மட்டும் மறு நாளுக்கென ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கூடத்தில் அமர்ந்து தாய்மார் செய்த சிற்றுண்டியை சுவை பார்க்கிறோம் என்ற பெயரில் அதை காலிபண்ணியபடியே வளவளத்தபடி இருந்தனர்.


அப்போது தான் நிலவனின் கார் கிரீச்சிட்டபடி வாசலில் வந்து நின்றது.அனைவர் பார்வையும் ஒன்றாக ஆர்வத்துடன் வாசலுக்கு தாவ உள்ளே வந்தவனைக் கண்ட சின்னவர்கள் ஹே அத்தான்ன்ன் ............வாங்க வாங்க. ஹப்பா வந்துட்டீங்களா .....எப்போ வருவீங்கள் என்று காத்துட்டே இருந்தோம்.என்றனர் கோரசாக

அவர்களின் உற்சாகத்தைக் கண்டு புன்னகைத்தவன் எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போலவே!! ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு.அழகா செய்திருக்கிறீங்கடா என்றான் பாராட்டாக

ஆமாத்தான். ரொம்ப பெரிய ஏற்பாடு தான்.எல்லாம் திட்டமிட்டது வினிக்கா தான்.நாங்கள் எல்லாம் நடைமுறைப் படுத்த உதவினோம் அவ்வளவுதான்.என்றாள் தாரணி சிரித்தபடியே.

வினியின் பெயரை தாரணி எடுத்தது நிலவனின் பார்வையை வினியின் புறம் திருப்புவதற்காகத்தான்.ஏனெனில் உள்ளே வந்ததில் இருந்து அவன் பார்வை வினியின் புறம் திரும்பவே இல்லை.வினி அவனையே இமை கூட வெட்டாது நோக்கியபடியிருந்ததை கவனித்ததால் தான் தாரணி நிலவனின் கவனத்தை வினியின் புறம் திருப்ப முயன்றாள்.

ஆனால் தாரணி பேசியது காதில் விழுந்தது என்பதற்கு அறிகுறியாக அவளை நோக்கி சிறு புன்னகை சிந்தியவன் எல்லாரும் பேசிட்டு இருங்க நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வருகிறேன் என்று விட்டு மாடிக்கு விரைந்தான்.அவன் பார்வை தற்செயலாய்க் கூட வினியைத் தீண்டவே இல்லை.

தாரணி கேள்வியாக வினியைப் பார்க்க அவள் தாரணியைப் பார்த்து அமைதியாகப் புன்னகைத்தாள்.


அவர்கள் திட்டம் போட்டபடியே அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு எல்லோரும் தோட்டத்தில் கூடினர்.தூங்கிக் கொண்டிருந்த தமிழை நிலவன் சென்று எழுப்பி கண்ணைப் பொத்தியபடியே தோட்டத்துக்கு அழைத்துவந்தான்.தோட்டத்தில் ஒரு சிறிய மேசையில் கேக் வீற்றிருக்க அதன்மேல் மெழுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது.நிலவன் தமிழை அழைத்து வந்து அந்த கேக்கின் முன் நிறுத்தி கைகளை விலக்கவும் தோட்டத்து விளக்குகளெல்லாம் ஒளிர்ந்தது.கூடவே அனைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஒலித்தது.

தமிழின் விழிகள் ஆனந்தத்தில் விரிந்தது.முகம் முழுக்க மகிழ்ச்சி மின்ன தேங்க்ஸ்ணா என்றபடி அருகில் நின்ற தமையனின் தோள் சாய்ந்தாள்.தங்கையின் தலையை இதமாய் வருடிவிட்டு அவளுக்கு ஒரு அழகிய கழுத்தாரத்தைப் பரிசளித்தான் அண்ணன்.

அதைக் கண்ட தாரணி ஏய் உனக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்தது வினிக்காவும் நாங்களும் நன்றி மட்டும் அத்தானுக்கா என்றாள் பொய்க் கோபம் காட்டி.

அதைக்கேட்டு அனைவரும் சிரிக்க தமிழும் புன்னகையுடன் நான் அண்ணாக்கு சொன்ன நன்றி அவர் எனக்காக வந்ததற்காக என்றவள் வினியின் கையைப் பற்றி ரொம்ப நன்றி வினிக்கா என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.வினியும் பதிலுக்கு அவளை அணைத்து வாழ்த்துச் சொன்னதோடு அவளுக்கு ஒரு மோதிரத்தை அணிவித்துவிட்டாள்.அதன் பின் ஒவ்வொருவரும் வாழ்த்து சொல்லி தங்களின் பரிசினையும் கொடுத்தனர்.மித்திரன் வாழ்த்துக்கள் மா என்று கூறி அழகிய பெரிய கரடி பொம்மை ஒன்றை கொடுத்தான்.கூடவே என்னிடமிருந்து இந்த பரிசினை வாங்கி கொள்ளலாம் தானே?? என்று கேட்டான்.அவனின் கேள்விக்கான காரணம் புரியாமல் என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? கொடுங்கள்.என்று கூறி மகிழ்ச்சியுடன் அவனின் பரிசைப் பெற்றுக்கொண்டாள் தமிழ்.

மித்திரனின் பார்வை தாரணியிடம் பாய்ந்து மீண்டது.


மறுநாள் வெளி விருந்தாளிகள் வருவதால் அந்த இரவு நேர கொண்டாட்டத்தை குடும்பத்தினருக்கு மட்டுமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நான் கொண்டாடிய பிறந்தநாளிலேயே இது தான் சிறப்பானது.இந்த நாளை என்னால் மறக்கவே முடியாத ஒரு நாள் ஆக்கிய உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி
எனக்காக எல்லாரும் எவ்ளோ செய்திருக்கீங்கள்.இந்த தூங்குமூஞ்சி கூட பன்னிரண்டு மணிக்கு விழித்திருக்கிறதே என்று பேச்சின் முடிவில் செந்தூவை சீண்டினாள் தமிழ்.

போயும் போயும் உனக்காக வாழ்த்து சொல்ல விழித்திருந்தேன் பார் எனக்கு இது தேவைதான். என்று செந்தூ கடுப்புடன் சொல்ல மீண்டும் ஒரு கலகல நகையோசை அங்கே அரங்கேறியது.

அதன் பின் வந்த சில மணித்துளிகள் அவர்களின் உற்சாகத்திலும் சிரிப்பொலியிலும் அந்த தோட்டமே அதிர்ந்தது.அவ்வளவு கலகலப்பிலும் கூட நிலவன் வினி இடையே இறுக்கமே நிலவியது.வினியின் பார்வை அவ்வப்போது காதலுடன் அவன் புறம் பாய்ந்தாலும் நிலவனின் சாதாரண பார்வை கூட அவள் மேல் பதியவில்லை.

உனக்கு இருக்குடா மவனே!!!!!!!! பல்லைக் கடித்தாள் வினி.

சரி சரி எல்லோரும் போய் படுங்கள்.நாளைக்கு தான் விழா.கொஞ்சமாவது தூங்கினால் தான் நாளைய ஏற்பாடுகளை உற்சாகமாக கவனிக்க முடியும்.என்று ஜெகநாதன் கூற அனைவரும் கலைந்து சென்றனர்.

 

K.Thanu

Active member
#3
இதழ்:-32

மறு நாள் பொழுதும் அனைவருக்கும் உற்சாகமாகவே புலர்ந்தது.காலையில் தோட்டத்தில் சற்று நேரம் செலவிடுவது வினியின் வழக்கம்.அன்றும் தோட்டத்தில் நடைபயின்றவளுக்கு ஏதோ தோன்றவே தலை நிமிர்த்தி நிலவனின் அறையைப் பார்த்தாள். சட்டென அவன் ஜன்னல் திரைச்சீலை மூடுவது தெரிந்தது.

வினியின் இதழ்களில் ஓர் முறுவல் மலர்ந்தது.
ஆடுங்க சார் ஆடுங்க...இந்த ஆட்டம் எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கிறேன்.மனதில் சொல்லிக் கொண்டவள் சிரிப்புடனேயே வீட்டுக்குள் சென்றாள்.

அவள் எதிரே வந்த மித்திரன் ஏய் வினி நேற்று வரைக்கும் நல்லா தானேடி இருந்த?? எனவும் புரியாமல் பார்த்தாள்.

இல்ல உன் பாட்டில சிரிச்சுட்டு வந்தியே அதான் கேட்டேன்.என்றான் குறும்புடன்.

போடாங்க்க் என்றவள்.ஏய் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்.

சொல்லு

தருக்கும் உனக்கும் இடைல என்னடா பிரச்சனை??

ப்ச் எதுவுமில்ல

பொய் சொல்லாத மித்து என்கிட்ட சிரிச்சு பேசுற உன்னோட முகம் அவளைக் கண்டா எதுக்கு அப்படி உர்ருன்னு மாறுது.
இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாத நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கன்.

உடம்பு மொத்தமும் திமிர் வினி அவளுக்கு.மற்றவர்களின் மனதைப் பத்தி கொஞ்சமும் சிந்திக்க மாட்டாள்.அப்படிப் பட்டவளுடன் எனக்கென்ன பேச்சு.அதான் விலகி போறன்.

ஒ...நீ மட்டும் அடுத்தவையோட மனச பத்தி சிந்திக்கிறியா மித்து??? உனக்கு நீ நினைச்சது நடக்கணும்.அப்படி உன்னோட ஆசையை அடுத்தவர் புறக்கணித்தால் உனக்கு கோபம் வரும்.அவர்களுக்கு என்று ஒரு நியாயம் இருக்கும் என்று சிந்திக்கவே மாட்டாய். இது மட்டும் ஆணவம் இல்லையா???

ஏய் என்ன சொல்கிறாய்??

நான் என்ன சொல்வது.முதலில் தருவின் மீது எதற்கு கோபம் என்ன நடந்ததுன்னு தெளிவாய் சொல்லு.

மித்திரன் சிறு சங்கடத்துடன் நடந்ததைக் கூறினாள்.

நினைத்தேன் என்று அவனை முறைத்தவள் அவள் செய்ததில் என்ன தப்பிருக்கு? என்றாள் காட்டமாய்.

மித்திரன் மௌனமாய் இருக்கவும் சொல்லு மித்து அவள் உனக்கு யார்??? நீ வாங்கி கொடுத்ததை அவள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று என்ன உரிமையில் எதிர்பார்க்கிறாய்?? அவள் என்ன உன் தங்கையா??

நான் ஒரு போதும் அவளை அப்படி எண்ணிப்பார்த்ததில்லை.

அப்புறம் மனைவியா??

என்ன மௌனமாக நிற்கிறாய்? சொல்லேன்!!!!! உன்னிடமிருந்து எந்த உரிமையில் அவள் அதைப் பெற்றுக்கொண்டிருக்க முடியும்???

“காதலி என்ற உரிமையில்.” அழுத்தமாக வந்த மித்திரனின் வார்த்தையில் வினி திகைத்தாள்.

என்ன சொல்கிறாய் மித்து???

ஆமா வினி நான் அவளைக் காதலிக்கிறேன்.இதைச் சொல்வதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.என்று அவளை முதன் முதலில் பார்த்தேனோ அன்றே என் மனதில் அவள் நுழைந்து விட்டாள்.என்றான் கண்களில் காதலுடன்

வினி சற்றுநேரம் எதுவும் பேசவில்லை பின் இது சரி வருமாடா? உனக்கு அவளைப் பிடித்தால் மட்டும் போதுமா அவளுக்கு உன்னை பிடிக்க வேண்டாமா?? அவளே சொல்லி இருக்கிறாள் டா தனக்கு காதல் எல்லாம் சரி வராதுன்னு

மித்திரன் லேசாகச் சிரித்தான் பின் எல்லாம் சரி வரும் வினி.அவளுக்கும் என்னைப் பிடிக்கும்.ஆனால் அதை ஒத்துக்கொள்ள தயங்குகிறாள்.நானும் இதுவரை அவளிடம் நேரடியாக எதுவும் பேசவில்லை.உன் விடயம் ஒரு முடிவுக்கு வரட்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


ஹேய் அவளுக்கு உன்னைப் பிடிக்கும் என்று எதை வைத்து கூறுகிறாய்??


உன் அத்தானுக்கு உன்னைப் பிடிக்கும் என்று எதை வைத்து நீ அறிந்துகொண்டாய்.

ஹ ஹ ஹ...சரி சரி முறைக்காதே.ஒரு சின்ன விடயம் சொல்கிறேன்.என் கோபத்தில் நியாயமே இல்லை என்று தானே நீ நினைக்கிறாய்.அவளுக்கும் அது தெரியும் தானே!! அப்படி இருக்கும் போது ஏன் நியாயமே இல்லாத என் கோபம் அவளைப் பாதிக்க வேண்டும்?? அதைப் போக்க ஏன் அவள் முயல வேண்டும்??

நேற்று கவனித்தாயா தன தோழி அவள் பெரியம்மா பொண்ணுன்னு சுற்றி வளைத்து நியாயம் பேசியதை.
 

K.Thanu

Active member
#4
ஹ ஹ ஹ..ம்ம் கவனித்தேன் கவனித்தேன்.அப்போதே மண்டைக்குள் மணியடித்தது.அது தான் இன்று உன்னைப் பிடித்தேன்.

அவள் பேச்சைக் கேட்டு சிரித்தவன் நானே இது குறித்து உன்னிடம் பேசவேண்டும் என்று எண்ணியிருந்தேன் வினி.உன் விடயம் ஒரு முடிவுக்கு வரட்டும் என்று காத்திருந்தேன்.

ஹ்ம்ம்...எனக்கு இதில் பூரண மகிழ்ச்சி தான் மித்து.சீக்கிரமே அத்தை மாமாவிடம் பேசி நேரே வீட்டுப் பெரியவர்களுடன் பேசிவிடு.அதற்கு முன் தருவிடமும் தெளிவாகப் பேசி அவள் சம்மதத்தை தெரிந்துகொள்.

ம்ம்ம்....செய்யத்தான் வேண்டும் வினி ஆனால் அதற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் சிலது இருக்கிறது.

என்னடா??

ப்ச்..எனக்கே இன்னும் தெளிவாகாத சில குழப்பங்கள் இருக்கிறது.அது தெளிவான பின் உன்னிடம் சொல்கிறேன்.

ம்ம்..

அஹ்..வினி

என்னடா??

இப்போதைக்கு இது குறித்து தருவிடம் எதுவும் பேசாதே.நேரம் வரும் போது அவளிடம் நானே பேசுகிறேன்.

ம்ம் சரிடா

அப்புறம் உன் ஆள் வந்துவிட்டார் போல

ம்ம்

ஏதாவது பேசினாயா??

ம்ஹும்ம்....சந்தர்ப்பம் அமையவில்லை மித்து.இந்த விழா முடியட்டும்.அதன் பிறகு தான் பேசவேண்டும்.ஆனால் ஒன்று டா இனியும் அவரை சும்மா விடுவதாக இல்லை.

ஹ ஹ ஹ........என்னடி இப்படி மிரட்டுகிறாய்.சும்மாவே அவன் ஓடி ஒளிகிறான்.நீ வேறு இப்படி மிரட்டினால் மறுபடியும் எங்கேயாவது ஓடிவிடப் போகிறான்.

மித்திரன் பேச்சைகேட்டு பூவினி இதழ்களில் ஒரு வருத்தமான புன்னகை மலர

அத்தான் எவ்வளவு கம்பீரமானவர் தெரியுமாடா?? எதற்குமே அஞ்சமாட்டார்.அவர் ஒன்றை நினைத்தால் எத்தனை தடைகள் வந்தாலும் அதை முறியடித்து தான் நினைத்ததை சாதிப்பார்.அப்படிப்பட்டவர் எதற்காக இப்படி மனதை மறைத்து நடிக்கிறார் என்று புரியவில்லையே டா. எவ்வளவோ சிந்தித்துப் பார்த்துவிட்டேன் காரணம் எதுவாயிருக்கும்னு.ஹ்ம்ம்ம் ........


ஏன் வினி நீங்கள் இருவரும் காதலிப்பது தெரிந்தால் இந்த குடும்பத்தில் யாராவது எதிர்ப்பார்களா?? கூர் பார்வையுடன் வினவினான்.

ம்ஹும்...எங்க குடும்பத்தைப் பொறுத்தவரையில் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.அவர்களின் ஆசைகள் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதை யாரும் தடுக்க மாட்டார்கள்.

படிக்கும் வயதில் காதல் என்று போய் நின்றால் அது தப்பு.இப்போது இருவருமே ஒரு நிலைக்கு வந்துவிட்டோம்.இனி எங்கள் நேசத்தை மறுக்க காரணமே இல்லையே!!!!

ம்ம்...என்று புருவத்தை சுளித்து எதையோ சிந்தித்தவன் சரி வினி சும்மா கண்டதையும் சிந்தித்து மனத்தைக் குழப்புவதை விட நேரில் அவனிடமே பேசிவிடு.இனியும் அவன் எதையும் மறுக்க முடியாது.

ம்ம்..ஆமாம் மித்து.இவ்வளவு நாள் என்னை வருத்தியதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஹ்ம்ம்...பேசும் போது பார்த்து பேசு.உன்னைவிட்டு விலகி இருந்ததால் அவனும் ஒன்றும் மகிழ்ச்சியில் திளைக்கவில்லை.சொல்லப்போனால் உன்னைவிடவுமே அவன் அதிக வேதனைப் பட்டிருப்பான்.அது உனக்கும் தெரியும்.

ம்ம் ..

சரி வினி இப்போது எதையும் சிந்திக்காதே.முதலில் விழா முடியட்டும்.இப்போது அதற்கான வேலைகளைக் கவனிப்போம்.சீக்கிரம் கிளம்பி வா அங்கு செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் சிலது இருக்கிறது.

ஹ்ம்ம் ஹ்ம்ம்....நீ செய்ய அவசரப்படும் வேலை எதுன்னு எனக்கு தெரியும் டா.ஆனா தரு இன்னும் அங்கு வந்திருக்க மாட்டாள்.என்றாள் வினி குறும்புடன்

ஹி ஹி...கண்டுபிடுச்சுட்டியே கள்ளி என்று மித்திரன் அசடு வழியவும்


அய்யே வழியுது...துடைச்சுக்கோ !!! என்று கலாய்த்தாள்.


மித்திரனும் பூவினியும் கலகலத்தபடியே கிளம்பி அங்கு சென்ற போது தோட்டத்தில் வட்ட மேசைகளையும் நாற்காலிகளையும் அழகுற அடுக்கியபடியே தமிழும் தாரணியும் செந்தூ நிவே சுவேயும் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

இவர்களைக் கண்டதும் ஹாய் வினிக்கா வாங்கண்ணா என்று வரவேற்றனர். பூவினியிடம் வா வினிக்கா ஏன் தாமதம் என்று வினவிய தாரணியின் பார்வை மித்திரனிடம் ஆர்வமாக பாய்ந்தது.அவனும் அவளை நோக்கி ஒரு வெற்றுப் பார்வையை வீசினான்.அதைக் கண்ட பூவினி

மெல்ல அவன் காதோரமாய் அது எப்படிடா முறைக்குர மாதிரியே சைட் அடிக்கிற என்றாள் கேலியாக

அவளின் பேச்சைக் கேட்டு அவனுக்கும் சிரிப்பு வர என்ன பண்றது உன் தங்கைக்கு பின்னாடி நான் ஜொள்ளு விட்டுட்டு திரியும் போது அவ என்னை திரும்பியும் பார்க்கல முறைக்கும் போது தான் அடிக்கடி பார்க்கிறா அதான் என்று கண்சிமிட்டினான்.

நீ நடத்துடா அண்ணா என்று கிசுகிசுத்துவிட்டு கொஞ்சம் வேலை இருந்திச்சுடி அதான் தாமதம் என்றபடி தாரணியிடம் விரைந்தாள்.

அதன் பின் நேரம் இறக்கை கட்டிப் பறந்தது.தோட்டத்தை விழாவிற்கு ஏற்றாற் போல் ஒழுங்கமைத்தவர்கள் அங்கேயே அமர்ந்து கதையளந்தனர் அப்போது உள்ளே சென்ற செந்தூவும் நிவேயும் குளிர்பானங்களையும் சிற்றுண்டி வகைகளையும் எடுத்து வந்தனர்.


செந்தூவைக் கண்ட தமிழின் விழிகள் குறும்பில் மின்ன அருகில் அமர்ந்திருந்த தருவிடமும் வினியிடமும் ஒரு வேடிக்கையைப் பாருங்கள் என்றுவிட்டு

டேய் ..செந்தூ இன்னைக்கு function க்கு உன் girl friend ம்ம் வருகிறாள் டா என்றாள் உரக்க அவள் பேச்சு அங்கிருந்த அனைவர் காதிலும் விழ அனைவர் பார்வையும் அவன் புறம் திரும்பியது.அப்போது நிலவனும் அங்கே வந்திருந்தான்.
 

K.Thanu

Active member
#5
தமிழின் பேச்சைக் கேட்டு செந்தூவின் முகம் பேயறைந்ததைப் போல் மாறியது.அதைக்கண்டு தமிழுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.


தமிழும் தாரணியின் தம்பி செந்தூரனும் ஒரே வயது. இருவருமே ஒரே கல்லூரியிலேயே வேறு வேறு குழு எடுத்துப் படித்தனர்.இருவருக்கிடையிலும் நல்ல நட்பு உண்டு.

தமிழின் முயற்சி புரிந்தவள் போல தாரணியும்
டேய் தம்பி உனக்கு கேர்ள் பிரண்ட் இருக்கிறாளா?? சொல்லவே இல்லைப் பார்த்தாயா?? அக்கா நீ என் பிரண்ட் போலன்னு சொன்னது எல்லாம் பொய்யா டா?? என்றாள்

ஏண்டி ஏண்டி உனக்கு இந்த கொலைவெறி.அக்கா இவள் சொல்லுவதை நம்பாதே.சும்மா கோர்த்துவிடுகிறாள்.

ச்சே ச்சே..எனக்கென்னவோ தமிழ் சொல்லுவது உண்மை போலத்தான் தெரிகிறது தரு.என்ன செந்தா யாருடா அது???

அய்யோ வினிக்கா நீங்களுமா?? இந்த குண்டு பொய் சொல்லுகிறாள் வினிக்கா??

யாருடா குண்டு ?

நீ தாண்டி குண்டுப்பூசணி.

போடா போடா புடலங்காய்.என் நட்பு வட்டத்தில் வந்து பார் நான் தான் அதற்குள் ஒல்லியாக இருப்பேன்.

ம்ம்ஹும்ம் நீ தேடி தேடி உன்னைவிட குண்டாக இருக்கிற கும்கிகளைத் தானே சிநேகம் பிடிப்பாய் எனக்கு தெரியாதா???

ஓகோ!! அந்த கும்கியிடம் தான் அவள் என் தோழி என்று தெரியாமல்.உங்க பெயர் என்ன??? என்ன குரூப்?? ரொம்ப அழகா இருக்கீங்க அப்டின்னு கடலை போட்டாயா??

ஏய் தமிழ் இது எப்போ நடந்திச்சு?? நீ சொல்லவே இல்லை பார்த்தாயா????

இது என்ன தருக்கா.இன்னும் சொல்றதுக்கு எவ்ளோ இருக்கு.

ஏய் குண்டு சும்மா பொய் பொய்யா சொல்லாதடி.பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடைக்காது.என்றான் செந்தூ எதுவும் செய்ய முடியாத ஆதங்கத்துடன்.

ப்ச் ப்ச் எனக்கு பொரி பிடிக்காதுடா.அதனால் அது கிடைக்காட்டிலும் பரவாயில்லை.என்று அவனுக்கு உதட்டை சுழித்து பழிப்புக் காட்டிவிட்டு.

நீங்கள் கேளுங்க வினிக்கா தருக்கா.அப்புறம் இவன் என்ன பண்ணினான் தெரியுமா?? அவ கூட அப்படியே பேசி பேசி பிரண்ட் ஆக்கிட்டான்.தொலைபேசி இலக்கம் கூட பரிமாறப்பட்டது. இங்க மாமா கொடுக்கிற பாக்கெட் மணி முழுதும் அவளுக்கு தான் செலவு செய்தான்.அவள கான்டீனுக்கு கூட்டிட்டு போய் சமோசா ஜூஸ் அது இதுன்னு நிறைய வாங்கி கொடுத்திருக்கான்.

ஓஹோ இதெல்லாம் வேற நடந்திருக்கா?? ஏண்டா தம்பி கூடப் பிறந்த எனக்கு இதுவரைக்கும் ஒரு ஐஸ்கிறீம் ஆவது வாங்கிக் கொடுத்திருப்பியா??? நீயெல்லாம் ஒரு தம்பியாடா??? என்றாள் தாரணி

அடிப்பாவி அக்கா போனவாரம் தானே உனக்கு பட்டர் ஸ்காட்ச் ஒரு பெட்டி வாங்கி வந்து கொடுத்தேன். இப்படி சொல்கிறாயே??

ஓஹோ அப்போ நீ எனக்கு வாங்கி கொடுப்பதை எல்லாம் கணக்கு வைத்து தான் பண்ணுகிறாயா??

செந்தூ செய்வதறியாது திகைத்தான்.இப்படி சுத்தி சுத்தி அடித்தால் அவன் பாவம் என்னதான் செய்வது.தன அருமை சகோதரர்களிடம் இருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று பாவமாய்ப் பார்த்தான்.அவர்களோ அவன் படும் பாட்டை நமட்டுச் சிரிப்புடன் சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல் உங்கள் சண்டையை அப்புறம் போட்டுக்கொள்ளுங்கள் தருக்கா.தமிழ் அக்கா நீங்க சொல்லுங்க அப்புறம் என்ன ஆச்சு?? என்று வேறு கேட்டார்கள்.

தம்பிகளாடா நீங்கள் துரோகிகள் என்று அவன் கறுவும் போதே


ம்ம் அப்புறம் தானே மெயின் பிக்சரே என்று தமிழ் மீதியைத் தொடர்ந்தாள்.

அதுவரைக்கும் சாருக்கு அவ என் தோழின்னு தெரியாது.
ஒருநாள் அவ சொன்னா மச்சி என்கிட்ட ஒரு அடிமை சிக்கியிருக்குடி.இன்னைக்கு அதோட பிறந்தநாளாம்.வாங்க ஓசில போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வரலாம்னு.எங்களுக்கு அந்த பையன் யாருன்னு தெரியாமலே பாவமா இருந்திச்சு.போயும் போயும் இவகிட்ட மாட்டின அந்த அப்பாவி பயபுள்ள யாரோ எவரோன்னு யோசிச்சுட்டே முடிஞ்சா அவகிட்ட இருந்து தப்பிச்சுடு அவ உன்னை மொட்டையடிச்சுடுவான்னு.புத்திமதி சொல்லிட்டு வரலாம்னு போய் பாத்தா!!!!!!!!!!!

பார்த்தா??????????????

அங்க மேசை முழுக்க தின் பண்டங்கள் வாங்கி வைச்சுட்டு வழிமேல் விழிவைத்து காத்திருந்தது நம்ம வீட்டு பேக்கு.அடப்பாவி மகனே நீ தானா அந்த அடிமைன்னு உச்சுக்கொட்டிக்கொண்டே பார்த்தா சார் அங்க என்னைக் கண்டு அப்படியே சாக்காகி திரு திருன்னு முழிக்கிறார்.அந்த முழியை நீங்க பார்க்கணுமே ஹ ஹ ஹ....அசல் கோழித் திருடனோட முழிதான்.

ஏய் குரங்கு நிறுத்த போகிறாயா இல்லையா???

முடியாது போடா.

டேய் நீ சும்மா இரு.

ஹ ஹ ஹா...ஹையோ செம காமெடி தான். நீ சொல்லு தமிழ் அப்புறம் என்னடி ஆச்சு??

அப்புறம் என்ன ஆகும்.சார் எஸ்கேப்.அதுக்கு பிறகு சார் அவ பக்கமே திரும்பல.ப்ச் ப்ச் அவ தான் பாவம். ரொம்ப மெலிஞ்சு சோகமாயிட்டா.கிடைச்ச ஒரு அடிமை தப்பிச்சுட்டே என்று ரொம்ப கவலைப் பட்டு

நீ எங்கே என் அன்பே
வேண்டும் வேண்டும் வேண்டும்
பீசா பர்கர் வேண்டும்.
வேண்டும் வேண்டும் வேண்டும் __அதுவும்
ஓசியில் வேண்டும்.....

அப்படின்னு பாட்டு பாடிட்டே காலேஜ் முழுக்க சுத்தி வாறா..

தமிழின் பேச்சைக் கேட்டு அனைவரும் கண்ணில் நீர் வரச் சிரித்தனர்.நிலவன் கூட மனம் தளர்ந்து வாய்விட்டு சிரித்தான்.கூடவே

ச்சே செந்தா.இப்படி மொக்கை வாங்கிட்டியேடா.உனக்கு வேற பெண்களா கிடைக்கல??
 

K.Thanu

Active member
#6
ஹ்ம்ம் என்ன பண்றது நிவித்தான்.இந்த குண்டு பூசணியோட தோழிதான் அதுன்னு தெரிஞ்சிருந்தா அந்தப் பக்கம் திரும்பியே பார்த்திருக்க மாட்டனே.என்றான் அழாக்குறையாக.

அதைக்கேட்டு அனைவரின் சிரிப்பும் மேலும் அதிகரித்தது.

தோட்டத்தில் அதிர்ந்த சிரிப்பொலியில்

சமையல் அறையில் இருந்த தாய்மாரும் புன்னகையுடன் ஜன்னலினூடாக எட்டிப் பார்த்தனர்.சாந்தா மகிழ்ச்சியுடன் இப்போதான் மனசுக்கு சந்தோசமா இருக்கு.நம்ம வீட்டோட கலகலப்பு திரும்பின மாதிரி இருக்கு என்றார்.
மேகலாவும் ஆமாம் அண்ணி.ரொம்ப நாளைக்கு பிறகு வீடு மகிழ்ச்சியால நிறைந்திருக்கு என்றார்.

ஏன் அக்கா நம்ம வீட்டில படிக்கிறதுக்காக ஒரு பிள்ளை பிரிஞ்சு போனதே வீடே வெறிச்சென்று போன மாதிரி இருந்ததே .நாம மூணு பெண்களை வைச்சிருக்கோம்.நாளைக்கு கல்யாணம் பண்ணி அனுப்ப தானே போறோம்.அதை எப்படித் தாங்க போறமோ.

அதை நினைவு படுத்தாதே கல்யாணி.நினைக்கும் போதே நெஞ்சை அடைக்குது.

ஹ்ம்ம் கஷ்டமா தான் இருக்கும்.ஆனா அது நடக்க போற ஒன்னு தானே.இதோ வினிக்கும் வயசு நெருங்கிடுச்சு.

ஆமா சின்னண்ணி. அன்னைக்கு தான் குட்டிப் பொண்ணா துறுதுறுன்னு வீடு முழுக்க ஓடித்திரிஞ்ச மாதிரி இருக்கு.அதுக்குள்ளே வளர்ந்து கல்யாணம் பண்ற வயசாயிடுச்சு.ஹ்ம்ம்ம் சில சமயம் நினைச்சா ச்சே இந்த பிள்ளைகள் எதுக்கு வளர்ந்து பெரியவங்க ஆகுறாங்க.எப்போவும் குழந்தையாவே இருக்க கூடாதான்னு இருக்கு.அப்படின்னா எப்பவும் நம்ம கூடவே இருப்பாங்க இல்ல.

ம்ம்ம் சில விசயங்கள் ஏற்றுக்கொள்ள கஷ்டமா தான் இருக்கும்.ஆனா என்ன பண்ணுறது. இது தான் வாழ்க்கை மேனா.காலம் தன போக்கில் ஓடிக்கொண்டே இருக்கும்.நாங்கள் தான் அதற்கேற்ற மாதிரி மனதை தயார்ப்படுத்த வேண்டும்.

ம்ம் வினியோட கல்யாணத்தைப் பற்றி ஏதாச்சும் நினைச்சு வைச்சிருக்கீங்களா அக்கா??

ம்ம் பண்ண வேண்டும் கல்யாணி.அவர் அம்மாவுக்கு மனதில் ஓர் ஆசை.

என்னக்கா??

வினியை அவர் மகள் வயிற்றுப் பேரனுக்கு கொடுக்க வேண்டுமென்று.

சற்று நேரம் அந்த சமையலறையில் மௌனம் நிலவியது.

சாந்தா சட்டென நிமிர்ந்து மேகலாவை ஓர் அடிபட்ட பார்வை பார்த்தார்.

அதைப் புரிந்து கொண்ட மேகலாவும் கண் கலங்க .இதில் நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.அண்ணி. ஏற்கனவே அவரை நாங்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக்கி தன்னிடம் இருந்து பிரித்துவிட்டோம் என்ற கோபம் என் மாமியாருக்கு உண்டு.இதில் இந்த விடயத்திலும் நான் ஏதாவது சொன்னால் என்ன சொல்வாரோ.அவர் வேறு தன் சொந்தங்களோடு உறவை முறிக்க நினைக்கிறேன் என்று நினைப்பாரோ என்று இருக்கிறது. அதனால் நான் எதுவுமே பேசவில்லை அண்ணி என்றார் வருத்தத்துடன்.


ப்ச் உன் நிலை புரிகிறது மேகலா விடு.யாருக்கு யார் என்று எழுதி வைத்திருக்கிறதோ அது தான் நடக்கும்.ஒருத்தன் பொண்டாட்டிக்கு இன்னொருத்தன் தாலி கட்ட முடியாது என்று சொல்லுவார்கள்.அந்த பையனும் பார்க்க பழக நல்லவனாய்த்தான் இருக்கிறான்.

ஆமாம் அண்ணி நல்லவன் தான்.ஆனால் மனதில் நான் வேறு ஆசைபட்டேன்.

ஹ்ம்ம் நீ மட்டுமா மேகலா எனக்கும் தான் அந்த ஆசை இருந்தது.காலத்துக்கும் நம்ம பிள்ளைகள் நம்மளோடு இருப்பார்களே.

ஹ்ம்ம் ஆமாம் அண்ணி அவர்கள் சிறுவயதில் இருந்து பழகியதை வைத்து நாங்களும் அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.

ம்ம் அந்த ஆசை அவர்களுக்கும் அல்லவா இருக்க வேண்டும்.அவர்களுக்கு இடையில் அப்படி ஒரு எண்ணம் இல்லாத போது நாம் என்ன பேசி என்ன.

ஹ்ம்ம் .......அவர்கள் பெருமூச்சின் வெப்பம் அந்த சமையல் அறையை நிறைத்தது.
 

K.Thanu

Active member
#7
இதழ்:- 33

நேரம் இறக்கை கட்டி பறக்க விழா தொடங்கும் நேரமும் வந்தது.விருந்தாளிகள் மெல்ல மெல்ல வரத்தொடங்கினர்.

பூவினி தூய வெண்மை நிறத்தில் ஆடை அணிந்து அதற்கேற்ற முத்து நகைகள் அணிந்து ஒரு தேவதை போலவே ஒளிர்ந்தாள்.தாரணி அன்று மித்திரன் தேர்வு செய்து கொடுத்த ஆடையில் இளநீல வர்ணத்தில் கல் வேலைப்பாடுகள் செய்த ஆடையை அணிந்து கொண்டாள்.தமிழ் கரு நீல நிறத்தில் விழாவுக்கெனவே தைக்கப்பட்ட ஆடையில் அழகிய பொம்மைக் குட்டியைப் போலவே இருந்தாள்.


பெண்கள் மூவரும் தாய்மாருடன் விழா அரங்குக்கு சென்ற போது அங்கிருந்த அனைவர் பார்வையும் இவர்களையே மொய்த்தது.தாரணியின் பார்வை ஆவலுடன் மித்திரனைத் தேடிக் கொண்டிருந்தபோது அவனே அவள் எதிரில் வந்தான்.அவன் விழிகளில் வந்து போன வெளிச்சம் அவள் அணிந்திருக்கும் ஆடையை அவன் கண்டுகொண்டான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.வெட்கத்துடன் தலைகுனிந்துகொண்டாள்.அதன் பிறகு மித்திரனின் பார்வை அடிக்கடி அவளிடம் பாய்ந்து மீண்டது.இந்த நாடகத்தைக் கண்ட வினியின் பார்வை ஏக்கத்துடன் தன்னவனைத் தேடியது.அவன் அங்கு தான் இருந்தான்.அங்கு வந்திருந்த தொழில்முறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.பெண்கள் மூவரும் அவனைக் கடக்கும் போது எதேச்சையாக திரும்பியவனின் பார்வை ஒருகணம் வினியை உரசிச் சென்றது.அதன் பின் அவள் இருந்த பக்கம் அவன் முகம் திரும்பவே இல்லை.


அந்த விழாவில் பூவினியின் கேக் எல்லோரின் பாராட்டையும் பெற்றது. ஒரு பசிய புல்வெளி அதன் நடுவில் ஒரு குளம்.நீல நிற குளத்து நீர் கரையோரம் மோதி வெள்ளை நுரைகளை தோற்றுவித்தது.அந்த குளத்தின் கரையோரம் ஒரு குட்டிப் பெண் அமர்ந்திருந்தாள்.குளத்தின் அருகே நின்ற மரத்தில் இருந்து பசிய புல்வெளியில் வெண்ணிற மலர்கள் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சொரிந்திருந்தன.இவ்வளவையும் கேக்கிலும் ஐசிங்கிலுமே வடிவமைத்திருந்தாள்.குட்டிப் பெண்ணின் பொம்மையை வைத்திருந்தாள்.

அதைப் பார்த்த அனைவருமே அவளின் கற்பனையையும் அதை கேக்கில் வடிவமைத்த விதத்தையும் பாராட்டினர்.அவள் எதிர்பார்த்தது போலவே தமிழ் வியப்பில் விழிகள் விரிய மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தாள்.அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் புன்னகையோடு நன்றி கூறிய வினியின் விழிகள் நிலவனைத் தேடியது.

அவனைக் கண்டுகொண்ட அவள் விழிகள் கோபத்தில் சுருங்கியது.யாரோ ஒரு நவ நாகரிக யுவதி ஒருத்தி அவன் அருகில் நெருங்கி நின்று பேசியபடியிருந்தாள்.அவர்களுக்கு சற்று தள்ளி ஒரு மொட்டைத்தலை பெரிய மனிதர் ஜெகநாதனுடன் பேசிக்கொண்டிருந்தார்.ஒ ..யாரோ தொழில் முறை நண்பருடைய வாரிசு போலும்.

யாராயிருந்தாலும் அவள் அத்தானிடம் அவளுக்கு என்ன பேச்சு.அதுவும் அத்தனை நெருங்கியிருந்து.இங்கு இத்தனை பெண்கள் இருக்கிறோமே!! பேசுவதற்கு நாங்கள் யாருமே அவளுக்கு கிடைக்கவில்லையாமா??

ஆளைப்பார் ஆளை..உரித்த கோழி மாதிரி!!!!! கையும் இல்லாமல் கழுத்துமில்லாமல் ஒரு ஆடை வேறு ச்சே... கருமம்...

அதன் பிறகு கணமும் தாமதியாமல் வினி அவர்களை நெருங்கினாள்.அவள் நெருங்கும் போதே அந்த பெரிய மனிதர் ஜெகநாதனிடம் என்ன ஜெகா எப்போது கல்யாணச் சாப்பாடு போடப் போகிறாய்??? பையனுக்கும் வயசாகிறது இல்லையா??


ஆமாம்பா எனக்கும் போடத்தான் ஆசை.பையன் தான் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறான்.எப்போது கேட்டாலும் கொஞ்ச நாள் போகட்டும் என்கிறான்.

அட என்னப்பா நீ பையனிடம் கேட்டால் அவன் ஆமாம் பண்ணி வையுங்கள் என்றா சொல்லுவான்.நீ பெண்ணைப் பார்த்துவிட்டு கட்டிக்கொள் என்றால் தாலியைக் கட்டப் போகிறான்.

அவரின் பேச்சுக்கு ஜெகநாதன் லேசாக சிரித்து வைத்தார்.அவர்கள் வீட்டில் பிள்ளைகளின் விருப்பம் தான் முக்கியம்.பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டோம் என்று கூறினால் அந்த அறுவை அதற்கும் ஏதாவது சொல்லும் என்பதால் வெறும் சிரிப்புடன் நிறுத்திக்கொண்டார்.

அவர் சிரிப்பை தான் சொன்னதை அவர் அங்கீகரித்ததற்கான அடையாளமாய்க் கொண்டு உன் பையனுக்கு பொண்ணு பார்க்கும் போது என்னையும் நினைவு வைத்திருப்பா.என்னிடமும் ஒரு பொண்ணு இருக்கிறாள். என் சொத்து முழுதும் அவளுக்குதான்.என்றார்.

அவர்களை நெருங்கிய பூவினிக்கு அவர்கள் பேச்சு முழுதும் கேட்டது.அந்த மொட்டையை முறைத்தபடி பூவினி அவர்களை நெருங்கவும் அவளைக் கண்டுகொண்ட ஜெகநாதன் வினி இங்கே வாடா என்று அழைத்தார்.இவள் அருகில் செல்லவும் இவள் பெயர் செம்பூவினி.என் தங்கை பெண்.வெளிநாடு சென்று படித்துவிட்டு இப்போது தான் திரும்பி வந்தாள்.என்று அறிமுகப்படுத்தினார்.அந்த அறிமுகத்தில் வெளிநாடு சென்று படித்துவிட்டு வந்தாலும் எங்கள் குடும்பத்துப் பெண் எப்படி இருக்கிறாள் பார்த்தாயா என்று கர்வம் மறைந்திருந்தது.


வேறு வழியின்றி வினி வணக்கம் சொல்ல சுண்டிப்போன முகத்துடன் தானும் வணக்கம் சொன்னார்.அதுவரை நிலவனின் அருகில் நின்று வழிந்து வழிந்து பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் முகமும் தேவதையாய் மிளிர்ந்த வினியைக் கண்டு சுருங்கியது. அவளது பொறாமையை மேலும் தூண்டுவது போல் நிலவனின் அருகே சென்று அத்தான் கொஞ்சம் வருகிறீர்களா என்று உரிமையுடன் அழைத்தாள்.

அருகே ஜெகநாதன் இருந்ததால் மறுக்க முடியாமல் அவர்களிடம் நாசுக்காய் மன்னிப்பு வேண்டிவிட்டு அவளுடன் சென்றான்.அவர்கள் பேச்சு மற்றவர்களின் காதில் விழாத அளவு தூரம் சென்றதும்

எதற்கு அழைத்தாய்?? என்றான் மொட்டையாய்.


ஏன் நான் அழைத்ததால் உங்கள் இனிமையான தருணம் கெட்டுவிட்டதா?? என்றாள் வினி கடுப்புடன்.

புரிந்தால் சரி என அலட்சியமாக அவன் பதில் கொடுக்கவும்
அவன் அருகில் வந்தவள் என்ன கொழுப்பா இனி அந்த பெண் உங்கள் அருகில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் மீறி வந்தால் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது என்று மிரட்டலாய் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக அகன்றாள்.


அவளின் இந்த மிரட்டலை நிலவன் எதிர்பார்க்கவில்லை.கண நேரம் திகைத்து நின்றவன் இதழ்களில் அவனையும் மீறி ஒரு முறுவல் மலர அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவன் இதழ்களில் மலர்ந்த முறுவல் அதுவரை அவர்களையே வெறித்துக்கொண்டிருந்த கண்மணியின் விழிகளில் பட்டு அவர் வயிற்றில் அமிலத்தைச் சுரக்க வைத்தது.


தோட்டத்தில் விழா நடந்துகொண்டிருக்க நிலவன் தனிமை தேடி வீடு நோக்கி நடந்தான்.
 

K.Thanu

Active member
#8
வினி அவனை மிரட்டியதை நினைக்க நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் ஒரு வார்த்தை உரத்து சொன்னால் மிரண்டு விழிக்கும் அவள் அவனையே மிரட்டுகிறாளாமா!!!!!! என்ன நடக்கும்னு அவளுக்கே தெரியாதாம்!! ஹ ஹ.........பொறாமை..

அவனின் உற்சாகம் பாதியில் நிற்க மனம் வேதனையைச் சுமந்துகொண்டது. உன்னுடைய இந்த பொறாமையையும் உரிமை உணர்வையும் அதட்டலையும் அனுபவிக்க நான் கொடுத்துவைக்கவில்லையடி. உன்னுடைய இந்த உரிமையான பேச்சு எதன் விளைவென்று எனக்கு தெரியும்.ஹ்ம்ம்........மறுபடியும் உன்னை காயப்படுத்தப்போகிறேன்!!!!!!

கண்மூடி அமர்ந்திருந்தவன் எதிரே அசைவுணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.எதிரே கோபத்துடன் கண்மணி நின்றிருந்தார்.ஒரு வெற்றுப்பார்வையுடன் என்ன என்பதாய் அவரைப் பார்க்கவும்

உன் மனதில் நீ என்னதான்டா நினைத்துக்கொண்டிருக்கிறாய்???? உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னால் புரியாதா?? ஓராயிரம் தடவை நீ யார் என்பதை நினைவுபடுத்தி என் பேத்தியை விட்டு விலகி இரு இல்லாவிட்டால் என்ன நடக்கும்.உன் காதல் இந்த குடும்ப ஒற்றுமையை எப்படிப் பாதிக்கும் என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டுமா???? அன்று நான் உன் பிறப்பைப் பற்றி நீ ஒரு அநாதை என்பதைப் பற்றி கூறிய பின்பு இந்த நான்கு வருடம் ஒழுங்காகத்தானே இருந்தாய்??? இப்போதென்ன மறுபடியும் அவள் புறம் சாய்கிறாய்?? மீண்டும் அவளை அருகில் கண்டதும் உன் மனமந்தி தடுமாறுகிறதோ?? இதோ பார் நான் முன்பே சொன்னது போல உன்னைப் போல ஒரு அனாதைக்கு ஒரு போதும் என் மகன் தன மகளைக் கட்டித் தர மாட்டான்.என் பேரன் மித்திரன் தான் வினிக்கு கணவன்.என் மகனும் அதற்கு சம்மதித்துவிட்டான்.கூடிய சீக்கிரமே அவர்கள் திருமணம் நடக்கும். அதனால் ஒழுங்காக முன்பு போல நீயுண்டு உன் வேலையுண்டு என்று விலகியிரு.இல்லாவிட்டால்..........

இல்லாவிட்டால்???????? நிலவனின் அழுத்தமான கேள்வியில் கண்மணியின் வாய் அடைத்தது.

அவர் எப்பவும் போல் அவனின் பிறப்பைக் குறித்துப் பேசினால் அடங்கிப் போய்விடுவான்.மறுபடியும் வினியின் புறம் கூட திரும்ப மாட்டான் என்று தான் எண்ணினார்.என்று வினி அவனின் அலுவலகத்துக்கு அவனோடு செல்கிறாள் என்பது தெரிந்ததோ அன்றே அவனை மீண்டும் எச்சரித்து வைக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் அவன் மறுநாளே கொடைக்கானல் கிளம்பிவிட்டான்.இன்று மீண்டும் வினியும் அவனும் அருகே நின்று பேசியதைக் கண்டவர் உள்ளம் கொதித்தது.அவர்கள் என்ன பேசினார்கள் என்று அவருக்கு தெரியாது தான்.ஆனால் அவர்கள் பேசுவதே அவருக்கு பிடிக்கவில்லை.அதுவும் வினியின் பேச்சை ரசித்தாற்போன்ற அவனின் முறுவல் அவரின் முடிவை உறுதிப்படுத்த அவன் வீட்டுக்கு செல்வதைக் கவனித்து அவனை மிரட்ட வந்தார்.

ஆனால் அவர் ஒன்றை மறந்துவிட்டார்.இவர் மிரட்டி வைக்க அவன் ஒன்றும் சிறு பிள்ளை அல்ல.வளர்ந்த கம்பீரமான ஆண்மகன்.அத்தனை தொழில்களையும் திறம்பட நடத்துபவன்.அத்தோடு எந்த ஒரு விடயத்தையும் முதன் முதல் அறியும் போது தான் அதன் தாக்கம் அதிகம் இருக்கும்.அதையே மறுபடி மறுபடி கேட்க நேர்ந்தால் முதல் தடவை அளவுக்கு அது பாதிக்காது.

நிலவனும் அதே நிலையில் தான் இருந்தான்.அவர் முதல் தடவை அந்த ரகசியத்தை உடைத்தபோது அவனே உடைந்து போய்விட்டான் தான்.ஆனால் மீண்டும் மீண்டும் அவர்கள் அதையே கூறி மிரட்டுவது போல பேசவும் அவனுக்கும் கோபம் வந்தது.

சொல்லுங்கள் இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?? நான் ஒரு அநாதை என்ற உண்மையை வினியிடம் கூறுவீர்களா?? அந்த ஒரு காரணத்துக்காக அவள் என்னை வெறுப்பாள் என்றா நினைக்கிறீர்கள்?? ஹ்ம்ம்........நீங்கள் அந்தளவு முட்டாள் இல்லை என்று நினைக்கிறேன் என்று அலட்சியமாக கூறியவன்

நான் நினைத்தால் இப்போதே என் வினியை தூக்கிக் கொண்டு போய் மணம் முடிப்பேன்.அதை தடுக்கும் சக்தி இங்கு யாருக்கும் கிடையாது.அப்படி செய்யாமல் என்னைத் தடுப்பது எது தெரியுமா?? உங்கள் மிரட்டலோ வேறு எதுவுமோ இல்லை.என் மனம்!!!!!ஆம் என் மனம் தான்!!!!

இந்த அனாதையை சொந்தப் பிள்ளைக்கும் மேலாய் பாசத்தைக் கொட்டி போற்றி வளர்க்கும் இந்த குடும்பத்தின் மீது நான் கொண்ட பாசம் தான் என்னைத் தடுக்கிறது.இந்த குடும்பத்திற்கு ஒரு சிறு துன்பம் கூட வராமல் காக்க வேண்டும் என்ற என் மன வைராக்கியம் தான் என்னைத் தடுக்கிறது. இவர்களுக்கு நான் பட்ட நன்றிக்கடன் தான் என்னைத் தடுக்கிறது.


இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.உங்கள் ஆசைக்கு ஒருபோதும் நான் குறுக்கே நிற்கமாட்டேன். இந்த குடும்பத்தின் மகிழ்ச்சி எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு வினியின் மகிழ்ச்சியும் எனக்கு முக்கியம்.அவள் நன்றாக இருக்க வேண்டும்.உங்கள் பேரனை இதுவரை பார்த்த அளவில் அவன் உங்களைப் போல இல்லை என்று புரிகிறது.வினி மேல் பாசம் உள்ளவனாயும் தெரிகிறான்.வினி மகிழ்ச்சியாக இருந்தால் அது போதும் எனக்கு.

தயவுசெய்து இனிமேல் என்னை மிரட்டுகிறேன் பேர்வழியென்று இப்படி சின்னத்தனமாய் நடந்துகொள்ளாதீர்கள்.முதல் தடவை அடிபடும் போது தான் பயங்கரமாய் வலிக்கும்.அடிக்கு மேலே அடி விழ விழ மரத்துப் போகும். என் மனமும் இப்போது அந்த நிலையில் தான் இருக்கிறது.என்று மரத்த குரலில் பேசி முடித்தவன் அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்தான்.

கண்மணி சற்று நேரம் அசையாமல் நின்றார் அவருக்கு ஏனோ அவன் முன்னிலையில் தான் மிகவும் தாழ்ந்துவிட்டது போல் தோன்றியது.சோர்ந்த நடையுடன் அவர் வாசலை நெருங்கவும் அதுவரை திரைசீலையின் மறைவில் இருந்து அவர்களின் உரையாடலை அதிர்ச்சியுடன் கேட்டபடி இருந்த மித்திரனும் தாரணியும் மேலும் நன்றாக மறைந்து கொண்டனர்.

நிலவனை பின் தொடர்ந்து கண்மணி வீட்டை நோக்கி செல்வதை எதேச்சையாக கண்ணுற்ற மித்திரனுக்கு ஏதோ தோன்றவும் அவனும் கண்மணி அறியாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான்.உள்ளே சென்ற கண்மணி நிலவனிடம் பேசத் தொடங்கவும் அவன் திரைச் சீலையின் மறைவுக்குள் ஒளிந்து கொண்டு அவர்கள் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினான்.அச் சமயத்தில் வீட்டில் இருந்து ஏதோ பொருள் எடுத்துப் போவதற்காக தாரணி அங்கு வரவும் பேசிக்கொண்டிருந்தவர்களின் கவனத்தைக் கவராமல் அவளையும் தன கை வளைவுக்குள் இழுத்து திரைச்சீலையின் மறைவுக்குள் நிறுத்திக்கொண்டான்.

எதிர்பாராமல் மித்திரன் இழுத்ததால் திகைத்துக் கத்தப் போனவளின் வாயைப் பொத்தி திமிறியவளின் தோளை அணைத்து கண்களால் உள்ளே பார்க்குமாறு சமிக்ஞை செய்தான்.அதன் பிறகே அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்டு உள்ளே பார்த்தவள் கண்மணியின் பேச்சைக் கேட்டு திகைத்துப் போனாள்.

கண்மணி வாசல் தாண்டி வெளியே செல்லவும் அதுவரை மறைவிலேயே நின்ற தாரணி கண்களில் நீர் வழிய நிமிர்ந்து மித்திரனைப் பார்த்தாள்.கைவளைவில் இருந்த தாரணியின் அசைவை உணர்ந்து தன்னிலைக்கு மீண்ட மித்திரனும் அவளைத்திரும்பிப் பார்த்தான்.அவன் முகம் இறுகியிருந்தது.
 

K.Thanu

Active member
#9
தாரணி அவன் கையை விலக்கி வேகமாய் வீட்டினுள்ளே செல்ல முயற்சிக்கவும் எங்கே போகிறாய் என்றான் இறுகிய குரலில்.

உடனே அத்தானைப் பார்த்துப் பேச வேண்டும்.அவர் எங்கள் எல்லாருக்கும் எவ்வளவு முக்கியம் என்று கூறவேண்டும்.இன்னும்........என்று தவிப்புடன் பேசியவளை

வேண்டாம்...என்ற மித்திரனின் ஒற்றை வார்த்தை தடுத்தது.அவளின் தவிப்பு கோபமாக மாற

என்ன சொல்கிறீர்கள்???? உங்கள் பாட்டி பேசிய பேச்சைக் கேட்டீர்கள் தானே?? ச்சே அவரெல்லாம் ஒரு பெரிய மனுசியா???அத்தான் மனதை இப்படி உடைத்துவிட்டார்களே?? இதுவரை அத்தான் பற்றிய உண்மையை அவர்கள் பெற்ற பிள்ளைகள் எங்களிடம் கூட வீட்டுப் பெரியவர்கள் சொல்லவே இல்லையே!! அவ்வளவு அன்பான கண்ணியமான எங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு உறவினரா..ச்சே......நினைக்கும் போதே வெட்கமாக உள்ளது.

போதும் தாரணி

ஏன்?? ஏன்?? அவரைத் திட்டுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையோ?? அதுசரி என்ன இருந்தாலும் அவர் உங்கள் பாட்டி ஆயிற்றே!!!

ஸ்ஸ்ஸ் தரு உன் கோபம் எனக்கு புரிகிறது.உன் கோபம் நிஜாயமானதும் கூட.ஆனால் இப்போது நிலவனிடம் எதுவும் பேசாதே.எப்படியோ அவன் அனுபவித்த துன்பம் அனுபவித்தது தான்.இப்போது நீ போய் பேசுவதால் எதுவும் மாறப் போவதில்லை.இந்த உண்மை உனக்கு தெரியும் என்பதை இப்போதைக்கு யாரிடமும் காட்டிக்கொள்ளாதே.

என் பாட்டி செய்தது தப்பு தான். அவர் செய்தது எவ்வளவு தவறான விடயம் ஏன் முட்டாள்த்தனமானதும் கூட என்பதை நான் அவருக்கு புரிய வைப்பேன். என் பாட்டி செய்த தவறை நான் திருத்துவேன்.அதுவரை பொறுத்திரு. என்று இறுகிய குரலில் கூறியவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
 

K.Thanu

Active member
#10
HI HI friends
here is the next episodes..... read and Enjoy .....
thanks much 4r ur valuable comments and support friends.... love u all.
 
#11
கண்மணி கடைசிவரை இப்படியே இருப்பாரா?..
 
#12
மாறினாலும் மாறுவார்கள்
 
#13
so all slowly n clearly fall into place....superb narration......just wonderful to be in this whole bunch of beautiful relations....so cute......very nice work thanu....
 

sumiram

Active member
#14
birthday kondattam miga arumaiyana tharunam.
 
#15
அழகான பதிவு
மித்ரன் என்ன செய்ய போகிறான்
 
#16
மிகவும் நன்றாக உள்ளது.நேரம் போனது தெரியவில்லை.சரியான பதில் பாட்டிக்கு.சபாஸ் மித்ரன்.
 
#17
Nice epi sis...
 
Top