தொடர்கதைகள் அத்தியாயம் 23

Rosei Kajan

Administrator
Staff member
#1
மெய் எழுத்தும் மறந்தேன்

உயிர் எழுத்தும் மறந்தேன்

ஊமையாய் நானும் ஆகினேன்

கையை சுடும் என்றாலும்

தீயை தொடும் பிள்ளை போலே

உன்னையே மீண்டும் நினைக்கிறேன்

பின்பு கவினுக்கு வேண்டியவற்றை பார்த்து பார்த்து செய்தாலும் ஆதிரா கவினுடம் மீண்டும் பேச முற்படவில்லை..அமைதியாக சிந்தித்தபடியே இருந்தாள்..கவினுக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாக அவளின் பின் விழிகளை அலைய விட்டு கொண்டு இருந்தான்..கவினின் அருகில் ஸ்ரீ தூங்க வேண்டாம் என்று எண்ணியதால் சிந்துவே ஸ்ரீயை அறைக்கு கொண்டு செல்ல ஆதிரா சோபாவில் அமர்ந்து மெல்லிய ஒலியில் பாடலொன்றை ஒலிக்கவிட்டு தனது கைவேலையை பார்த்துக்கொண்டு இருக்க கவின் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.சிறிது நேரத்தில் தூக்கத்திலேயே தலையை பிடித்து முணகியவாறு அவன் மல்லாந்து படுக்கவும் அருகில் இருந்த தைலத்துடன் அவனருகில் சென்றவள் அவனது தலைக்கருகில் அமர்ந்து தலையில் இதமாக தேய்த்து விட்டாள்..பின்னர் உடலை முறுக்கி முறுக்கி அவன் முணகவும் தனம் சொல்லியது நியாபகம் வர புன்னகைத்தவள் கை கால்களையும் பிடித்து விட்டாள்..

நேரமில்லாமல் உழைத்தது, திருமண வேலைகள் எல்லா அலுப்புக்கும் ஓய்வெடுக்க கவினது உடல் விழைந்தது போலும். ஒரு வாரம் கவினுக்கு உடல்நிலை சரியாகாமல் இருக்கவும் ஆதிதான் தவித்துப்போனாள். ஸ்ரீயை பெரியவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள கவினை விட்டு நகராமல் ஆதி தான் அமர்ந்து இருந்தாள். கவினும் அவளது துணையை உணர்ந்தாலும் அவளை ஏனோ விலக்க தோன்றாமல் அவளது கவனிப்புக்களை மௌனமாகவே ஏற்றுக் கொண்டான்.கவின் காய்ச்சலில் இருந்த நாட்களில் ஒருநாள், காலை பத்துமணியளவில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அறையில் இருந்த தொலைக்காட்சியின் அலைவரிசை ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்த கவின் ஆதிரா உணவுத்தட்டுடன் வரவும் அவளை பார்த்து சோபையாக புன்னகைத்தான். அவனை பார்த்து தானும் புன்னகைத்தவள் கட்டிலின் அருகே கிடந்த மோடாவில் உணவுத்தட்டை வைத்துவிட்டு அவனது அருகே வந்து இயல்பாக நெற்றியில் கை வைத்து உடல் சூட்டை கணிக்க முயன்றாள்.சூடான உடலில் சில்லென்ற அவளது கரம் பட சிலிர்த்த கவின் அவளை அதிர்ச்சியாக பார்க்க அவளோ இந்த நெருக்கம் எல்லாம் சகஜம் என்பது போல இயல்பாக இருந்தாள். அவள் கையை விலக்கவும் அந்த கையை அங்கயே பிடித்து வை என்று கூக்குரல் இட்ட மனதை அடக்க தெரியாமல் அவன் தான் தவித்துப் போனான்.பின்னர் அவனுக்கு அருகே கட்டிலில் இயல்பாக அமர்ந்தவள் உணவுத்தட்டை எடுத்து கவினுக்கு ஊட்ட விழையவும் கையை நீட்டித்தடுத்தான். அவன் தடுக்க முறைத்தவள் என்ன என்பது போல இமையை உயர்த்தவும் அவளது விழி அசைவில் இவனுள் தான் ஏதோ ஒன்று பிறழ்ந்தது."தா ஆரா! நானே சாப்பிடுறேன்" எனவும் அவனது ஆரா என்ற அழைப்பில் மனம் மயங்க அவனையே பார்த்த படி இருந்தாள். அவள் ஒன்றும் பேசாமல் இருக்கவும்

"ஆரா" என்று அழுத்தி அழைத்தான்."ஹான்" என்று கனவிலிருந்து விழிப்பதை போல விழித்தவள் "என்ன? என்ன கேட்டிங்க?" என்றாள். அவளை பார்த்து புன்னகைத்தவன்"நானே சாப்பிட்டுக்கிறேன்.தா" என்றான்."ஏன்? நான் இப்போ தந்தா என்ன?" என்று அவள் கோவமாக வினவ அந்த கோவமும் சுகமாக அவனுள் இறங்கியது. மனதை அடக்கியவன்"நீ எதுக்கு இதை எல்லாம் பண்ணி கஷ்டப்படுற? தா" எனவும்

"எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல. நீங்க சாப்பிடுங்க" என்று உணவை அவனின் வாயருகே கொண்டு சென்றாள். 

Rosei Kajan

Administrator
Staff member
#2

மீண்டும் தலை ஆட்டி மறுத்தவன்

"நீ விருப்பமில்லாம பண்ண திருமணத்துக்கு ஏன் இவ்வளவு கஷ்ட படனும்?" என்று அவன் கேட்கவும் கண்கள் கண்ணீரில் நிறைய சட்டென்று மறுபுறம் திரும்பி கண்ணை அழுந்த மூடி திறந்தவள் அவனை மீண்டும் நோக்கியவாறே"இங்க பாருங்க. விரும்பியோ விரும்பாமலோ பண்ண திருமணமாவே இருக்கட்டும் ஆனா நீங்க என்னோட கணவன் தானே?" என்று மிரட்டலாக கேட்கவும் அவளது விழிகளை பார்த்தவாறெ தலை ஆட்டினான். இருவரிடமும் திருமணத்திற்கு முன் பேசியிருந்த வார்த்தைகள் முன்னே வரவில்லை."ஆஹ்..அப்போ சாப்பிடுங்க" எனவும் அவளது விரல்களில் இருந்த உணவை அவசரமாக இதழ்களால் அள்ளிக்கொண்டான்.இன்னொரு நாள் அறைக்குள் வந்த ஆதியிடம்

"ஆரா என்னோட மொபைலும் லேப்டப்பும் எங்கே?" எனவும் அவனை முறைத்தவள்

"எதுக்கு?" என்றாள்.ஏன் இவள் முறைக்கிறாள் என்று எண்ணியவாறே "கருணை கண்ணிலையே காணோம். ஆபிஸில என்ன நடக்குது என்றே தெரியல." என்றவன் மீண்டும் "என்னோட டிவைஸஸ் எங்கே?" என்றான்."இங்க பாருங்க. ஓடி ஓடி தான் சின்ன ஒரு ஃபீவருக்கே உங்க உடம்பு தங்க மாட்டேன் என்குது. ஸோ ஸாரி. அதெல்லாம் இப்போ தர முடியாது" என்று கப்பேர்ட்டை நோக்கி நகரவும்"ம்ச்..ஆதிரா நில்லு" என்று அவளின் கையை இழுக்கவும் அதை பாக்காதவள் கட்டின் அருகே நின்று இருந்தவனின் மார்பிலேயே போய் விழுந்தாள். காய்ச்சலில் இருந்தவன் மேல் பொத்தென்று அவள் மோதவும் தடுமாறி அவளது இடையை வளைத்தவன் அப்படியும் பாலன்ஸ் இல்லாமல் கட்டிலில் சரிந்தான்."அச்சோ" என்று பதறிய ஆதி அவசரமாக எழ பார்க்கவும் அவளை நகராதபடி இடையை வளைத்தவன் "என்னோட மொபைலை தந்திட்டு போ" எனவும் "ம்ஹூஹூம்" என்று தலையை மறுப்பாக ஆட்டவும் சுழன்று அவளை கீழே படுக்கவைத்து அவளின் மேல் தான் படுத்த படி "ஆதிரா.. ஐ நீட் இட்" என்றான்.அவன் கேட்க அவள் உதட்டை சுழிக்கவும் அதை கவ்வும் வேகம் அலைஅலையாய் எழ தன்னை வெளிக்காட்டிவிடுவோம் என்ற பயத்தில் "போடி" என்றவன் மொபைலை மறந்து வாஷ்ரூம் நோக்கி ஓடினான். அப்பொழுது தான் தாங்கள் இருந்த நிலை உணர்த்தவள் அருகே இருந்த தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்துக்கொண்டாள்.அன்று இரவில் இடையிடையே எழுந்து கவினின் டெம்பரேசர் செக் செய்து கொண்டிருந்தவள் துக்க கலக்கத்தில் கட்டிலின் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்து அவனது தலையணைக்கு அருகில் தலைவைத்து அப்படியே தூங்கினாள்..மறுகாலையில் கவினுக்கு உடல் நன்றாக இருப்பது போல தோன்றியது..புத்துணர்ச்சியுடன் உடலை முறுக்கியபடி எழுந்தவன் தனது தலையினருகே ஏதோ தட்டுபடவும் பட்டென்று எழுந்து பார்த்தான்..ஆதிரா தான்..புன்னகையுடன் கூடிய பெருமூச்சொன்றை வெளியேற்றியவன்,சிறிது நேரம் அன்பாக அவளை பார்த்தவாறு இருந்தான்..இரவில் உறக்கத்தில் பதிந்து விலகிய கரம் இவள் தானா?? அவனுள்ளே மெல்ல மெல்ல ஏதோ ஒன்று பூத்தது..அவளையே சிறிது நேரம் பார்த்தவன் 'எனக்காக ரொம்ப கஷ்டப்படுறியா ஆரா?? உன்னோட இந்த தவிப்பு இதற்காக நான் எதுவுமே செய்தது இல்லையே.. ஏன் ஒரு நிபந்தனையா இந்த கல்யாணம் பண்ணேன் என்று தோணுது ஆரா.. ஹா.ஹா.. நீ மட்டும் இதை கேட்டால் அவ்வளோ தான் என் தலை தப்பாது ல?? என்னை மயக்குறடி.. எந்த இடத்துல என்று தெரியல..ஆனா உன்னை பிடிக்குது..நீயும் என்னை இப்படி ஒரு எண்ணத்தோட பார்க்கும் வரையும் நானும் உன்னை சீண்டிக்கிட்டு இப்பிடியே இருப்பேன்..ஆனா சீக்கிரம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும் டியர்" என்று மனதினுள் எண்ணியவன் காதலாக அவளை கண்ணுற்றான்..இவ்வளவு நாள் இருந்த கண்ணியம் போக இவள் என்னவள் என்னுரிமை என்ற எண்ணத்துடன் பார்வையிட்டான்..மெல்ல அவளது தலை கோத எழுந்த கரத்தை அடக்கியவன் சத்தமில்லாமல் எழுந்து அவளை தூக்கி கட்டிலில் கிடத்திவிட்டு புன்னகையுடன் சென்றான்..விசிலடித்தவாறு இறங்கி வந்த மகனை பார்த்த தனம் "என்னடா இன்றைக்கே ஆபிஸ் போகனுமா?" என்று தாங்கலாக கேட்கவும்"ஆமாமா..போய் ஒருக்கா நிலமையை பார்க்கனும்..ஆமா கருணும் பாவனாவும் எங்க?"

"அதுங்க ரெண்டும் உன்னை மிஞ்சிடும் போல..எழுந்ததுமே ஓடிட்டாங்க" என்று அவர் கூறி கொண்டிருக்கவும்"ப்பா" என்று அழைத்தபடி தனது பிஞ்சு கால்களால் அவனை நோக்கி ஓடிவந்தாள் ஸ்ரீ..அவளை வேகமாக எதிர்கொண்டு தூக்கி உயர சுற்றியவன் அவள் சிரிக்கவும் தன் தோளில் சாய்த்து கொண்டான்.. தோளில் ஒயிலாக சாய்ந்தபடி"ப்பா..பீபர் போச்சா"

என்று கேட்கவும் அவளது நெற்றியில் முட்டியவன்"ஆமாடா குட்டி" என்றான்.."ம்மா உங்கதுக்கு மருந்து தந்தாவா?? அதான் போச்சா?" என்று வினவவும் ஆதியின் நினைவில் முகம் கனிய மேலே தன் அறை நோக்கி பார்வையை செலுத்தியவன்"ஆமாடா" என்றுவிட்டு அவளுக்கு முத்தம் கொடுத்து இறக்கி விட்டவன் உணவை உண்டுவிட்டு"ஆமா அவ நல்லா தூங்குறா..தூங்கட்டும்..யாரும் எழுப்ப வேண்டாம்" என்றவன் மீண்டும் அறைக்கு சென்று ஆதியை கண்களால் நிறைத்துவிட்டு ஸ்ரீயின் விபரங்கள் அடங்கிய ஃபைலையுல் தேடி எடுத்துக்கொண்டு கீழே இறங்கி ஆபிஸுக்கு சென்றான்..


 
#3
super ka adutha epi seekiram potudungao
 

emilypeter

Active member
#4
Appa konjam konjamaga puthunarvu iruvaridamum ezhukirathu .ithu Munneri vazhkkaiyai anubhavikka thodangattum. Vazhthukkal
 
#5
Nice epi sis.
 

lalu

Well-known member
#6
Super UD...Sri Athira voda ponnu ellai pola...aval akkavoda ponna?flashback seekirama solungoo...😍
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
நன்றி நன்றி பிள்ளைகளா
 
#8
Nice ud sis
 

Rosei Kajan

Administrator
Staff member
#9
நன்றி பிரியா
 
Top