அத்தியாயம் 22-23

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம்-22

ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று வேலை முடிந்ததும், தந்தையின் விசயமாக வைத்தியர்களை கண்டு கதைத்துவிட்டு அம்மாவையும் போய்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சத்யன் முற்றாக களைத்துச் சோர்ந்துபோயிருந்தான்.

அலுப்போடு வந்தவனின் விழிகள், வீட்டுக் கதவை திறந்ததுமே பவித்ராவைத்தான் தேடியது.

அவளைக் காணவில்லை என்றதும் மனம் இன்னும் சோர, ‘கீழே நிற்கிறாளோ?’ என்று எண்ணிக்கொண்டு அவளின் அறையை எட்டிப் பார்த்தான்.

அங்கே, சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் நிறைந்துகிடந்த ரோஸ் நிற விரிப்பு அலங்கரித்த கட்டில் மெத்தையில், மஞ்சள் நிறத்தில் முழங்கால் வரையிலான ஒரு பாவாடையும் குட்டி ப்ளவுஸும் அணிந்தபடி தானும் ஒரு ரோஜாவாக குப்புறப் படுத்துக்கிடந்தாள் பவித்ரா. என்ன ஒன்று கால்களை ஆட்டிக்கொண்டிருந்தது அந்த உயிருள்ள ரோஜா!

ஒருகணம் மூச்சை விடவும் மறந்து அவளின் அழகை ரசித்தான் சத்யன். அதுவரை இருந்த களைப்பும் சோர்வும் மறைய, உற்சாகம் பீறிட்டது. அவனது உற்சாகமாய், உயிர்ப்பாய் அவளிருந்தாள். அதுவரை அவனை அழுத்திய தந்தை பற்றிய கவலை கூட அவனைவிட்டு ஓடிப்போனது என்பதுதான் உண்மை.

விழிகளோ மனையவளின் அழகை அப்பட்டமாய் விழுங்கின. முன்னும் பின்னுமாய் ஆடி வாழைத்தண்டாய் பளபளத்த கால்கள் வேறு அவனை வாவென்று அழைக்க, மெதுவாக காலடி எடுத்துவைத்து மனைவியை நெருங்கினான்.

அவள் கையில் ஏதோ ஒரு சித்திரம் இருக்கவும், ‘நான் வந்தது கூடத் தெரியாமல் இவ்வளவு முனைப்பாக எதைப் பார்க்கிறாள்?’ என்று எண்ணியபடி சற்றே எட்டிப் பார்த்தவன் இனிமையாக அதிர்ந்தான்.

அது அவனது ஓவியம்! சற்றே கூர்ந்து பார்த்தவனுக்கு, அன்று முதன் முதலாக தன்னைக் கண்ட கோலத்தை வரைந்திருக்கிறாள் என்று புலப்படவும், தான் எவ்வளவு ஆழமாக அவள் மனதில் சிம்மாசனம் இட்டிருக்கிறோம் என்று விளங்க உள்ளம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.

அவளின் விழிகளை மூட எண்ணி கைகளை அவள் முகத்தருகில் அவன் கொண்டுபோக, அனிச்சை செயலாக திரும்பிப் பார்த்தாள் பவித்ரா.

அங்கே கணவனைக் கண்டதும், புரண்டு படுத்தபடி, “ஹேய் ஜான்! என்ன நேரத்துக்கே வந்துவிட்டீர்கள்?” என்று துள்ளலாக வினவினாள்.

அவளுக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணியவன் அது சறுக்கியதில் சின்ன ஏமாற்றமாக உணர்ந்தான். அடுத்த கணமோ, திரும்பிப் படுத்த மனைவி படைத்த விருந்தில் ஒருகணம் மூச்சு விடவும் மறந்தான்!

‘இவன் ஏன் இப்படி நிற்கிறான்?’ குழப்பத்தோடு அவனை பார்த்தாள் பவித்ரா. அவன் விழிகளோ வேறெங்கோ இருந்தது.

‘எங்கே பார்க்கிறான்?’ அவன் பார்வை சென்ற இடத்துக்கே தன் பார்வையை திருப்பியவள் சட்டெனச் சிவந்தாள். அது அவளின் மணிவயிறு! புரண்டு படுத்ததில் மேல்சட்டை மேலேறியிருந்தது!

வேகமாக சட்டையை இழுத்துவிடப் போன கைகளை அதைவிட வேகமாகத் தட்டிவிட்டது அவன் கை!

“ஜா..ன்!” வெட்கமும் சிரிப்புமாக அவள் அதட்ட,

அவளருகில் அமர்ந்து, “மூடி என்ன செய்யப் போகிறாய்? நான் பார்க்காமலா இருக்கப் போகிறேன்?” என்றவனின் கை அவளின் இடையில் பதிந்து அழுந்தியது. பார்வையோ மாறியது.

மூச்சடைத்தது பவித்ராவுக்கு. ஆனாலும், இருவரின் உணர்வுகளோடும் விளையாட விரும்பாமல் கட்டிலில் இருந்து வேகமாக அவள் இறங்க முயல, இடையில் பதிந்திருந்த கரத்தால் அவளை அழுத்தி அசையவிடாமல் செய்தான் சத்யன்.

அதிர்வோடு அவனைப் பார்த்தாள் பவித்ரா. இடையிலிருந்த கரம் வேறு எல்லைகளை மீற அவளை நோக்கி மெல்லக் குனிந்தான் சத்யன்.

கணவனின் கைகள் புரிந்த ஜாலத்தில் சிந்திக்கவும் மறந்தவளாக அவளிருக்க, அவனது இதழ் முத்தத்துக்காக அவளது இதழ்கள் துடிக்க, அதன் துடிப்பை அடக்கியது அவனது உதடுகள்!

முத்தச்சாவி கொண்டு திறந்து விடப்பட்ட உணர்வுகள் அத்தனையும் விழித்துக்கொள்ள, கிறங்கி விழிமூடியவள் தன் கைகளால் கணவனின் கழுத்தை வளைத்தாள். அப்படியே அவனது அடர்ந்த சிகைக்குள் நுழைந்த கரங்கள், சிகையை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள மயங்கிப்போனான் சத்யன்.

அணையை உடைத்த வெள்ளமாய் வேகத்தோடு அவளுக்குள் மூழ்கத் தொடங்கினான். கணவனின் கைகளும் இதழ்களும் கேட்டவைகளை இசைந்து கொடுக்கத் தொடங்கியது பவித்ராவின் பூமேனி!

அவளது உடலையும் உயிரையும் மயக்கி, தன் ஆளுகைக்குள் அவன் கொண்டுவந்தபோது விழித்துக்கொண்டது பவித்ராவின் நெஞ்சம்.

அண்ணாவும் அண்ணியும் ஒவ்வொரு பக்கமாக இருக்க அவர்கள் மட்டும் இல்லறத்தில் இன்புற்று வாழ்வதா?

கணவனை தடுக்கச்சொல்லி மூளை சொன்னாலும், உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்த தேகமோ அவனோடு இன்னுமின்னும் அழுத்தமாக இழைந்தது.

அவளின் அனுசரிப்பில் சத்யனின் கைகள் இன்னுமே வேகமெடுக்க, இதற்குமேல் போனால் தன்னால் கூட அவனைத் தடுக்க முடியாது என்றெண்ணியவள் நடுங்கிய கரங்களால் கணவனுக்குத் தடைபோட முயன்றாள்.

அவனோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையிலில்லை!

காட்டாற்று வெள்ளமாக அவளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தவனை தன் பலமெல்லாம் ஒன்றாகத் திரட்டி தன்னிலிருந்து பிரித்துத் தள்ளினாள் பவித்ரா.

அதை எதிர்பாராதவன், ஒருகணம் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்து விழித்தான்.

“என்ன பவி?” மோகம் கொண்டு முறுக்கேறிப் போயிருந்தவனின் குரல் கரகரப்போடு ஒலித்தது.

அந்தக் குரலே அவளுக்குள் என்னவோ செய்ய, அவன் விழிகளில் தெரிந்த அழைப்பில் அனைத்தையும் மறந்து அவனுடன் கலந்துவிடத்தான் அவளும் துடித்தாள்.

அது முடியாமல் தமையனின் வாழ்க்கை நடுவில் நின்றதில், உணர்வுகளின் போராட்டத்தில் விழிகள் கலங்கியது.

இமைகளை சிமிட்டி தன்னை சமாளிக்க முயன்றவாறே பார்வையை கணவனிடமிருந்து அகற்றியவளுக்கு, அப்போதுதான் தான் இருந்த கோலமே கண்ணில் பட்டது.

பட்டதுமே வெட்கம் பிடுங்கித் தின்ன, சட்டென அருகிலிருந்த தலையணையை எட்டி எடுத்து தன்மேல் போட்டுக்கொண்டாள்.

அவளை முறைத்த சத்யன் ஆத்திரத்தோடு அதை தூக்கி எறிந்தான். “எல்லாவற்றையும் மறைத்துவைத்து என்ன செய்யப் போகிறாய்?” என்றான் கோபத்தோடு.
 

NithaniPrabu

Administrator
Staff member
#2
‘இவன் ஒருத்தன்! வெட்கம் கெட்டவன்!’ நாணம் தாளாது அவனை தன்னை நோக்கி இழுத்தவள் அவனையே தனக்கு ஆடையாக்கிக்கொண்டாள்.

அதுவே போதுமாக இருக்க, சத்யனின் சேட்டைகள் மீண்டும் ஆரம்பிக்க, “இப்போ வேண்டாமே. ப்ளீஸ்.” தவிப்போடு கெஞ்சியது அவள் குரல்.

எழுந்தமர்ந்து அவளை முறைத்தான் சத்யன். “ஏன் பவி எப்போது பார்த்தாலும் இப்படி என் உணர்வுகளோடு விளையாடுகிறாய்?” என்றவனின் குரலில் கோபத்தைவிட, குறையே மேலோங்கி நின்றது.

அவனது நிலை அவளுக்குப் புரியாமல் இல்லை. இன்று மட்டுமல்ல, இவ்வளவு நாட்களுமே அவன் நெருங்கும் போதெல்லாம் அவள் விலகி விலகித்தான் போகிறாள். அப்படி அவனுக்கு அவள் செய்வது கொடுமைதான். எந்த அன்புக்காக, எவனின் காதலுக்காக, யாரின் பார்வைக்காக அவள் ஏங்கினாளோ அது கிடைத்தும் தள்ளி நிற்கும் நிலையிலிருக்கும் தன்னை எண்ணி நொந்தவள், “சாரி ஜான்..” என்றபோது குரலும் தழுதழுத்தது.

“என்ன சாரி?” என்று கேட்டவனின் விழிகளில் பட்டது அவள் வரைந்த அவனது சித்திரம்.

“புருஷன் படத்தை வைத்து கொஞ்சுவாளாம். புருஷனை மட்டும் கொஞ்ச மாட்டாளாம். கொஞ்சுகிறவனையும் விடமாட்டாளாம்!” என்று ஆத்திரப்பட்டவன், அதை எடுத்துத் தூக்கி எறிந்தான்.

ஏமாற்றத்தைக் கோபமாகக் காட்டுகிறான் என்று விளங்க ஒன்றுமே சொல்லவில்லை பவித்ரா.

தன்னை தானே நினைத்தவளுக்கு விரக்தியாக இருந்தது. அன்று சத்யன் அவளின் வாழ்க்கையை அவனது தமக்கைக்காக பணயம் வைத்தான் என்றால், இன்று தன் தமையனுக்காக அவளே அவளின் வாழ்க்கையை பணயம் வைக்கிறாள். அவனது உணர்வுகளோடும் விளையாடுகிறாள்.

தப்பென்று தெரியாமலில்லை. வேறு வழியும் தெரியவில்லை அவளுக்கு. அண்ணாவின் வாழ்க்கை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று சுயநலமாக நடந்துகொள்ள முடியவில்லை. மெதுவாக எழுந்து அமர்ந்து தன் உடையை சீராக்கினாள்.

அதை பார்த்துக்கொண்டே, “என்னதான் பிரச்சனை உனக்கு?” என்று கேட்டான் சத்யன்.

அவனோடு சங்கமித்துவிட முடியாமல் போன இயலாமை கொடுத்த எரிச்சல் அவளுக்குள்ளும் இருந்ததில், “ம்.. கண்ணை திறந்து பார்த்தால் என்ன பிரச்சனை என்று புரியும்.” என்றாள் கடுப்புடன்.

சத்யனுக்கோ அவள் எதைச் சொல்கிறாள் என்று விளங்கவே இல்லை. விளங்கிக்கொள்ளும் நிலையிலும் அவன் இல்லை. இயலாமையோடு தலையை கோதிக்கொடுத்தான். “அதெங்கே முடிகிறது? கண்ணை திறந்தாலும் நீதான் தெரிகிறாய். மூடினாலும் நீதான் தெரிகிறாய்.” என்று புலம்பினான் அவன்.

“முத்திபோச்சு உங்களுக்கு..” என்று சிரிப்போடு சீண்டினாள் பவித்ரா.

“மனிதனை உசுப்பேற்றி விட்டுவிட்டு சிரிக்கிறாயா நீ?” என்றபடி, அவளை இழுத்து ஆவேசத்தோடு அவள் இதழ்களை முற்றுகையிட்டான் அவன்.

அவளோ பலமற்று அவனிடமிருந்து விடுபடப் போராட, தானாக விடுவித்து, “ஏன் பவி?” என்று கேட்டான் சத்யன்.

அணைத்தால் கரைகிறாள். அதற்குமேல் போக மட்டும் விடுகிறாள் இல்லையே! அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

பவித்ராவுக்கோ அண்ணாவும் அண்ணியும் இன்னும் சரியாகவில்லை என்று சொல்லவே பயமாக இருந்தது. திரும்பவும் அவன் முருங்கை மரம் ஏறிவிட்டால்?

எனவே, அவனது தாடையை பற்றி, “என் செல்லம் தானே.. என் கண்ணு தானே.. கொஞ்ச நாள் போகட்டும்.. ப்ளீஸ்..” என்றாள் கெஞ்சலாக.

“அந்தக் கொஞ்சநாளும் எதற்கு? என்னை இப்படித் தவிக்க வைப்பதில் உனக்கு என்ன சந்தோசம்? நான் உனக்கு செய்ததற்கு நீ பதிலுக்கு செய்கிறாயா?”

கணவனின் கேள்வியில் கண்கள் கலங்கிவிடும் போலிருந்தது அவளுக்கு. அவனது ஆசைகளை, தேவைகளை எல்லாம் தீர்த்துவிடத்தான் அவளது ஒவ்வொரு அணுவும் துடிப்பதை அவனிடம் யார் சொல்வது?

மனதை மறைத்து, “அது.. அது.. நீங்கள் முதலில் என்னை உண்மையா காதலிக்கவில்லை தானே. அதனால் கொஞ்ச நாளைக்கு என்னை காதலியுங்கள். பிறகு கணவன் மனைவியா வாழலாம்..” என்றவளை,

‘நீ என்ன லூசா?’ என்பதாகப் பார்த்தான் அவன்.

அவளுக்குமே தன் விசர் கூத்து விளங்காமல் இல்லை. வேறு வழி?

அவனோ, “என் மேல் உனக்கு ஏதாவது கோபம்.. வெறுப்பு..” என்று கேட்க, மேலே பேசவிடாமல் அவனை இழுத்து அவன் இதழ்களில் தன் இதழ்களை முதன் முதலாகப் பதித்தாள் அவனது மனையாட்டி.

மகிழ்ச்சியோடு அவள் கொடுத்த முத்தத்தில் அவன் மூழ்கிவிட, “நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று தெரிந்த நாட்களிலேயே உங்களை வெறுக்க முடியவில்லை. இப்போ மட்டும் வெறுப்பேனா? சரியான லூசு தான்டா நீ.” என்றாள் அவள்.

“பிறகு என்ன?” குழம்பிப்போய் அவன் கேட்க,

“கொஞ்ச நாள் போகட்டுமே ப்ளீஸ்.. எனக்காக ஜான்?” என்று கெஞ்சிக் கொஞ்சினாள் அவள்.

ஒரு நிமிடம் கூட அவளை விட்டு விலகியிருக்க முடியாது என்று தெரிந்தாலும், அவள் மனதையும் காயப்படுத்த விரும்பாமல், தலையை தன் இரு கைகளாலும் தாங்கியபடி, “ம்ம்..” என்றான் அவன்.

கணவனின் நிலை புரிந்தாலும் வேறு வழியின்றி நெஞ்சு கனக்க அங்கிருந்து நகர்ந்தாள் பவித்ரா.
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
அத்தியாயம்-23


அன்று அஞ்சலியின் பிறந்தநாள். இரவிரவாகத் தூக்கமில்லை மித்ராவுக்கு. அதற்குக் காரணம் அஞ்சலியின் பிறந்தநாளுக்கு அணிவதற்கு என்று முதல்நாள் கணவன் வாங்கிக் கொடுத்திருந்த சேலை!

ஒருகாலத்தில் அவன் சேலை வாங்கித் தருவதும், அதை அவள் அணிவதும், அதன் பிறகு நடக்கும் இனிமையான நிகழ்வுகளும் என்று பழைய நினைவுகள் அவளை புரட்டிப்போட்டன!

இது ஒருபக்கம் என்றால், அவளை நெருங்க நினைக்கும் கணவனிடம் விலகி நிற்பதும், அவனை சேரத் துடிக்கும் மனதை அடக்கமுடியாமல் தவிப்பதும் என்று பெரும் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

ஒழுங்கான உறக்கம் இல்லாமல் போனதில் காலையில் எழுந்ததில் இருந்தே ஒருவித சோர்வு அவளை ஆட்டிப்படைத்தது. ஆயினும், ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் கணவனின் பார்வை தன்மேல் விழுவதை கவனிக்காமலில்லை. இருந்தபோதிலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் நடமாடினாள்.

கீதனும் அதை அறிவான். தான் பார்ப்பதை அறிந்தும் அவள் ஏதும் அறியாதவள் போல் நடமாடுவதை காண்கையில் மெல்லிய கோபம் கூட உதித்தது. இப்படியே இன்னும் எத்தனை நாட்களை கடத்தப் போகிறாள்? வாயை மூடிக்கொண்டு இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா?

தானும் அவளுக்கு போதிய அவகாசம் கொடுத்துவிட்டதாகவே எண்ணியவனுக்கு, ஒருபக்கம் சலிப்பாக இருந்தது என்றால் மறுபக்கம் என்னடா வாழ்க்கை இது என்றிருந்தது.

அவனும் சாதாரண ஒரு மனிதன். எல்லோரைப் போலவும் ஆசாபாசாங்கள் நிறைந்தவன். அவனுக்கும் தான், தன் இளம் மனைவி, அழகான குழந்தை என்று சொந்தங்கள் கூட சந்தோஷ வாழ்க்கை வாழத்தான் ஆசை. ஆனால்.. ஒரு நெடிய மூச்சொன்று அவனிடத்தில் கிளம்பியது.

அவளை இரண்டாம் முறையாக மணந்தபோது, அவளும் மகனும் அருகில் இருப்பதே போதுமானதாக இருந்தது உண்மைதான். ஆனால் இன்றோ அதற்கும் மேலாக மனைவி மனைவியாக அவனுக்குத் தேவைப்பட்டாள். தாயாக! தாரமாக! அனைத்துமாக!

இப்படி மாறுபட்ட சிந்தனைகளுடன் இருவருமே அன்றைய நாளைக் கடத்த, மாலைப்பொழுதும் வந்தது. சத்யனுக்கு ஏதோ வேலை என்றதில், பவித்ரா வந்து, “அண்ணா, நானும் உங்களோடு வருகிறேன். இவர் பிறகு அர்ஜூன் அண்ணா வீட்டுக்கே நேராக வருகிறாராம்.” என்று சொல்லிவிட்டு தயாராகப் போனாள்.

கீதன் மனைவியை திரும்பிப் பார்க்க, அவள் சந்துவை அழைத்துக்கொண்டு சென்று, குளிப்பாட்டி அழகான கோர்ட் சூட்டில் கொண்டுவந்து கீதனிடம் நீட்டினாள்.

அந்த உடையில் சற்றே வளர்ந்துவிட்டது போன்ற மகனின் தோற்றத்தில் ஒருகணம் பிரமித்துத்தான் போனான் கீர்த்தனன்.

அதுவரை மனைவி மீதிருந்த அதிருப்திகள் அத்தனையும் பின்னுக்குத் தள்ளப்பட, “பெரியவன் போலிருக்கிறான் இல்லையா மித்து..” என்றபடி மகனை மடியில் வாங்கிக்கொண்டான்.

“எனக்கும் கோர்ட்டை போட்டுவிட்டு பார்த்தபோது சட்டென்று அப்படித்தான் இருந்தது..” என்று புன்னகைத்தவள், கோர்ட் பட்டனை மகன் திருகி விளையாடியபடி கழட்டவும், “சந்துக்குட்டி, அதைக் கழட்டக் கூடாது செல்லம்.” என்றபடி பட்டன்களை திரும்பவும் போட்டுவிட்டாள்.

அவனோ திரும்பவும் அதை கழட்டுவதிலேயே குறியாக இருந்தான்.

“விடு! நீ போட அவன் கழட்ட என்று இன்று முழுக்க இதுதான் நடக்கும். இதை போகும்போது பார்க்கலாம். நீ போய் தயாராகு. நேரமாகிறது!” என்று அவளை அனுப்பிவைத்தான் கீர்த்தனன்.

மகனோடு விளையாடிக்கொண்டிருந்தாலும் கீர்த்தனனின் விழிகள் ஒருவித எதிர்பார்ப்புடன் திறக்கப்போகும் மித்ராவின் அறைக் கதவையே சுற்றிச் சுற்றி வந்தது.

அவனை நிறைய நேரம் காக்கவைக்காமல் கதவும் திறந்தது. மித்ராவும் வெளியே வந்தாள்! மகனோடு சேர்ந்து ‘லேகோ’ அடுக்கிக்கொண்டிருந்த கீதன், ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்தான்.

தங்கப்பூக்கள் பூத்திருந்த சிவப்புநிற கரை கொண்ட அழகிய பச்சை நிறச் சேலை, அவளின் உடலை அழகாகத் தழுவியிருந்தது. பொன்வண்ண மேனி கொண்டவள் பாந்தமான அழகுடன் ஜொலித்தபோதும், அவள் அணிந்திருப்பது அவன் வாங்கிக்கொடுத்த சேலையாக இல்லாமல் போனதில் அந்த அழகு கீதனின் மனதை கொள்ளை கொள்ள மறுத்தது!

அதுவரை இருந்த ஆர்வமும் ஆசையும் மடிய அவன் உணர்ந்தது என்ன? அவனாலேயே கணிக்க முடியவில்லை! ஏமாற்றமா? சினமா? ஆத்திரமா? அல்ல எல்லாம் கலந்த கலவையா? ஆனால் ஒன்று! மனம் மட்டும் தன் ஆசை நிறைவேறாமல் போனதில் வாடி வதங்கிப் போனது.

அவன் வாங்கிக் கொடுத்ததை அவள் அணிவாள், அது அவளது மனமாற்றத்தை சொல்லும், இனி எல்லாம் சரியாகிவிடும், சரியாக்கவேண்டும் என்கிற அவனது எதிர்பார்ப்பை, ஆர்வத்தை, ஆசையை எல்லாம் சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருந்தாள் அவனது மனைவி!

முகம் இறுக அவளை அவன் பார்க்கவும், அதை எதிர்கொள்ள இயலாமல் மித்ராவின் பார்வை தரையை தொட்டது.

“நான் வாங்கித் தந்ததை ஏன் கட்டவில்லை?” மகன் அருகில் இருந்ததில் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்டாலும், அந்தக் குரலில் தொனித்த கடுமையில் திடுக்கிட்டுப்போய் சந்தோஷ் தகப்பனை திரும்பிப் பார்த்தான்.

“ஒன்றுமில்லைடா.. நீ விளையாடு.” என்று மகனிடம் சொல்லி, அவனை திசை திருப்பிவிட்டு எழுந்து வந்தவன், மித்ராவையும் இழுத்துக்கொண்டு அவளது அறைக்குள் நுழைந்தான்.

“எதற்கு இதைக் கட்டியிருக்கிறாய்?” அவள் அணிந்திருந்த சேலை முந்தானையை இழுத்துக் காட்டிக் கேட்டான் கீர்த்தனன்.

விட்டால் சேலையை கையோடு உருவி விடுவானோ என்கிற அளவில் இருந்தது அவனது பிடி. சட்டென்று ‘பின்’ செய்திருந்த தோளோடு சேலையை சேர்த்துப் பிடித்துக்கொண்டாள் மித்ரா.

அவளே பெரும் பாடுபட்டு அரை குறையாக பின் செய்திருந்தாள். அதைப் பிடித்து அவன் இழுத்தால் என்னாகும்?

அவளின் அந்தச் செய்கை வேறு அவனை உசுப்ப, “இதைக் கழட்டு! கழட்டிவிட்டு அதைக் கட்டு!” என்றான் பிடிவாதக் குரலில்.

அவனது கைவேறு அவன் சொன்னதை செய்ய முயல, அவனது கரத்தைப் பற்றித் தடுத்துக்கொண்டே, “இல்..லை.. இதுவே போதும்.” என்றாள் மித்ரா தடுமாற்றத்தோடு.

“எனக்குப் போதாது!” என்றான் அவன் பட்டென!

இதென்ன பேச்சு? திகைத்துப்போய் கணவனை பார்த்தாள் மித்ரா.

“என்ன பார்வை வேண்டிக் கிடக்கிறது?” என்று அதற்கும் அதட்டினான் அவன்.

“நான் வாங்கித் தந்ததைத்தான் இன்றைக்கு நீ கட்டவேண்டும்!” என்றான் முடிவாக.

அந்தப் பிடிவாதம் கொடுத்த தூண்டலில், “அன்று சுவிசில் வைத்து வாங்கித் தராதவரின் சேலை இன்று எனக்குத் தேவையில்லை..! எனக்கு நானே வாங்கிக்கொள்வேன்!” என்றாள் மித்ரா பட்டென்று!
 

NithaniPrabu

Administrator
Staff member
#4
கீதனுக்கு முதலில் புருவங்களை சுருக்கினான். “என்றைக்கு நான் வாங்கித் தரவில்லை…” என்று யோசனையோடு இழுத்தவனுக்கு, திவ்யாவின் பிறந்தநாளைச் சொல்கிறாள் என்று மெல்ல விளங்கவும் முறுவல் மலர்ந்தது. அதுவரை இருந்த கோபம் கூட ஓடிப் போயிருந்தது.

மனையவளின் கோபத்துக்கான காரணம் விளங்கவும் ஆசையோடு அவளை அணைத்துக்கொண்டான்.

“சேலை கசங்கப் போகிறது..” என்றவளின் குரல் உள்ளே போயிருந்தது.

“கசங்குமா? நன்றாகக் கசங்கட்டும்! அப்போதாவது நான் தந்ததை கட்டுவாய் இல்லையா…” என்றவன், சேலையை கசக்குகிறேன் என்கிற பெயரில் ஆசை தீர அவளை அணைத்துக்கொண்டான்.

மித்ராவும் வலுவின்றி அவனிடமிருந்து விடுபட முயல, தன் கைகளை தானாகவே தளர்த்திக்கொண்டு, “அன்றைக்கும் நான் வாங்கித் தந்தேன். நீதான் கட்டவில்லை!” என்றான் கீதன் விழிகளை அவள் முகத்திலேயே பதித்து.

“அது.. பிறகுதான் வாங்கி வந்தீர்கள்..” என்று நிமிர்ந்து பார்த்து அவள் அவனைக் குற்றம் சாட்டியபோது, ஒரு குழந்தையின் பிடிவாதம் தெரிந்தது அவளிடம்.

பார்வை கனிய, “நிச்சயமாக இல்லை! முதலே வாங்கிவிட்டேன், அதோடு நானாக பார்த்து வாங்கியது உனக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு வாங்கியது எல்லாம் அம்மாவும் கவிதாவும். அவர்கள் என்ன வாங்கினார்கள், யாருக்கு வாங்கினார்கள் என்று தெரியாமலேயே பில்லை மட்டும் நான் கொடுத்தேன்.” என்றான் கீர்த்தனன்.

அன்று அவள்மேல் கோபமாக இருந்தபோதும் அவளுக்காக அந்த மயில் நிறச் சேலையும், அதற்கு பொறுத்தமான நெக்லசும் வாங்கினானா? என்கிற வியப்போடு அவள் அவனைப் பார்க்க,

வரட்சியான சின்ன முறுவல் ஒன்றை சிந்தி, “ஆனால் ஒன்று மித்து, அம்மா உனக்கு வாங்கவில்லை என்று சொன்னதும் உன் முகத்தில் தெரிந்த வேதனையை கண்டுவிட்டுத்தான் அந்தச் சேலையை உன்னிடம் தந்தேன். இல்லாவிட்டால் அது என் பெட்டிக்குள்ளேயே இருந்திருக்கும்.” என்றான் வேதனையோடு.

குளிர்ந்த மனம் சுருண்டுவிட, கண்களில் நீர் திரளும் போலிருந்தது. பரிதாபப்பட்டு தந்திருக்கிறான். இன்றைய சேலையும் அப்படித்தானோ?

அதற்குமேல் முடியாது போல் நெஞ்சு அடைக்க, பார்வையை அவனிடமிருந்து திருப்பிக்கொண்டு, “நேரமாகிவிட்டது. பவித்ரா வரப்போகிறாள்.” என்றாள் முணுமுணுப்பாக.

“அதனால் தான் நானும் சொல்கிறேன். விரைவாக சேலையை மாற்று.” என்றான் அவன்.

“இல்லை..” என்று அவள் ஆரம்பிக்கும்போதே கைநீட்டித் தடுத்தான் கீர்த்தனன்.

“இன்றைக்கு நீ அந்தச் சேலையோடுதான் அர்ஜூன் வீட்டுக்கு வரப்போகிறாய். அதை நீயாகக் கட்டிக்கொள்கிறாயா இல்லை நான் கட்டிவிடட்டுமா?” என்று கேட்டான்.

திகைப்போடு அவனைப் பார்த்தவளுக்கு, ‘சும்மா அவளை மிரட்டுகிறானோ?’ என்கிற யோசனை ஓடியது.

அவனோ கட்டிலில் கிடந்த சேலையை எடுத்துக்கொண்டு நிதானமாக அவளை நெருங்கவும், சும்மாவல்ல மெய்யாகவே சொன்னதை செய்யப் போகிறான் என்று விளங்கவும் பதறிப்போனாள் மித்ரா.

“நானே கட்டுகிறேன்..” என்று அவனிடமிருந்து கிட்டத்தட்ட சேலையை பறித்துக்கொண்டாள்.

வெற்றிக்களிப்பு ஏதுமின்றி வேதனையோடு அவளைப் பார்த்தவனின் இதழோரம் வரட்சியான புன்னகை ஒன்று ஜனித்தது!

நாணத்தோடு அவள் தானே கட்டிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்க அவன் மனம் குளிர்ந்திருக்கும். அவள் என்னவோ அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் எண்ணத்துடன் பதறியதும், பறித்ததும் ‘நான் யார் அவளுக்கு?’ என்கிற கேள்வியை எழுப்பி அவனை வதைக்க, அதற்குமேல் எதுவும் பேசாது தானும் தயாராகச் சென்றான்.

மூவரும் தயாராகி முடித்தபோது பவித்ராவும் கீழே வந்திருந்தாள். நால்வருமாக வீட்டை விட்டு வெளியேறும்போதே தமையனின் முகம் சரியில்லாமல் இருப்பதை கவனித்துவிட்டாள் பவித்ரா.

‘என்னாயிற்று?’ என்கிற யோசனையோடு மித்ராவை ஆராய, அவளும் இயல்பாக இல்லை. என்னவென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை பவித்ராவாள்.

ஒன்றுமே கேட்காமல் கீதனின் காரில் பின்னிருக்கையில் சந்துவின் அருகில் பவித்ரா ஏறிக்கொள்ள அவளுக்கு அருகில் தானும் ஏறிக்கொண்டாள் மித்ரா.

குழப்பத்தோடு அவளை திரும்பிப் பார்த்தாள் பவித்ரா.

‘முன்னிருக்கை ப்ரீயாக இருந்தும் அண்ணி ஏன் பின்னால் ஏறினார்கள்?’ கேள்வி மண்டையை குடைய தமையனின் முகத்தை பார்த்தாள். அது இன்னும் இறுக்கிப்போய் கிடந்தது.

‘இவர்களின் பிரச்னையை எப்படி தீர்ப்பது?’ யோசனையோடு மித்ராவை பார்க்க, அவளோ தன் கலக்கத்தை இவளுக்கு மறைக்க முயன்றபடி வெளியே தன் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

எல்லோருமாக அர்ஜூன் வீட்டுக்குச் சென்று, அங்கே ஆரவாரமாக அஞ்சலியின் பிறந்தநாள் விழா நடந்தபோதும் பவித்ராவின் கவனம் மட்டும் கீதன் மித்ரா மேலேயே இருந்தது.

அவளின் அன்புக் கணவன் வந்ததையோ, அவனைக் கவனிக்காமல் ஏதோ யோசனையில் இருந்தவளைப் பார்த்து அவன் புருவங்களை சுருக்கியதையோ, “வர வர புருஷனை ஒரு பொருட்டாகவே மதிக்கிறாள் இல்லை..” என்று அவளின் காதுபட அவன் முணுமுணுத்ததையோ அவள் உணரவேயில்லை.

அவள் கவனித்தவரையில், அண்ணா அண்ணியை பார்த்துப் பார்த்து கவனிப்பதும் அண்ணி ஒதுங்கி ஒதுங்கிப் போவதும் தெரியவர மித்ராமேல் கோபம்தான் வந்தது பவித்ராவுக்கு.

தமையனின் மேல் மித்ராவுக்கு பாசம் இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. அவன் அவளைப் பாராத வேளைகளில் ஏக்கத்தோடும் ஆசையோடும் அவன் உருவத்தை அவள் விழிகளில் நிறைத்துக்கொள்வதும் தெரிந்தது.

பிறகும் என்ன பிரச்சனை? மண்டை வெடிக்கும் போலிருந்தது அவளுக்கு.

ஒரு வழியாக விழாவும் முடிய, அஞ்சலி முதற்கொண்டு எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். தான் கணவனோடு வருவதாகச் சொல்லிவிட்டு தங்களின் காரை நோக்கி சத்யனோடு நடந்தாள் பவித்ரா.

இருவரும் ஏறியதும் சத்யன் காரை இயக்கப் போக, அங்கே ஒரு நண்பரோடு கதைத்துக்கொண்டு நின்ற தமையனையும், அவனருகில் சந்தோஷோடு நின்ற மித்ராவையும் கண்டுவிட்டு, “கொஞ்சம் பொறுங்கள்.” என்றாள் பவித்ரா.

இவள் ஏன் பொறுக்கச் சொல்கிறாள் என்று அவன் அவளைப் பார்க்க, அவளோ வெளியே தமையன் குடும்பத்தின் மீதே பார்வையை பதித்திருந்தாள்.

“என்ன இது? முன்னபின்ன அக்காவையும் அத்தானையும் பார்க்காதவள் போல் பார்க்கிறாயே..” என்று கேலியாக சத்யன் சொன்னபோதும் பதிலில்லை அவளிடத்தில்.

நண்பனிடம் விடைபெற்றுக்கொண்டு வந்து கீதன் காரில் அமர, அப்போதும் மகனை பின்னால் இருத்திவிட்டு அவனருகில் மித்ரா ஏறிக்கொள்ளவும், எரிச்சல் தான் வந்தது பவித்ராவுக்கு.
 

NithaniPrabu

Administrator
Staff member
#5
‘ஆனாலும் அண்ணிக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது!’ என்று எண்ணிக்கொண்டாள்.

“என்ன பவி? அக்காவையும் அத்தானையும் ஏன் இப்படிப் பார்க்கிறாய்?”

சற்றே அழுத்தமாக கேட்ட கணவனின் குரலில், அவன் அதற்குமுதலும் அதே கேள்வியை கேட்டிருக்கிறான் என்று தெரிய. “ஒன்று...மில்லை! காரை எடுங்கள்!” என்றாள் பல்லைக் கடித்தபடி.

அண்ணியிடம் காட்டமுடியாத சினத்தை அவளின் தம்பியிடம் காட்டினாள்.

‘நான் என்ன செய்தேன்?’ என்று விழித்தான் சத்யன்.

‘வந்ததில் இருந்து என்னை கவனிக்கவே இல்லாமல் இருந்துவிட்டு கோபம் வேறா?’ அவளை முறைத்துவிட்டு காரை எடுத்தான் அவன்.

இவளுக்கோ மனம் புகைந்துகொண்டே இருந்தது.

வீட்டுக்குள் வந்ததும், அதற்குமேலும் அடக்க முடியாமல், “உங்கள் அக்காவுக்கு என்னதான் பிரச்சனை?” என்று வெடித்தாள்.

இதென்ன புதுக்கதை என்பதாக அவளை குழப்பத்தோடு பார்த்தான் சத்யன்.

“அவளுக்கு ஒன்றுமில்லை. வரவர உனக்குத்தான் என்னவோ ஆகிறது! கட்டிய புருஷனை மதிப்பதும் இல்லை அவன் மனம்போல் நடப்பதும் இல்லை.” சந்தடி சாக்கில் தன் குறையை கொட்டினான் அவன்.

அவனவனுக்கு அவனவன் விஷயம் முக்கியமில்லையா?! கணவனின் பேச்சில் கன்னங்கள் சூடாகியது பவித்ராவுக்கு.

அதை மறைத்துக்கொண்டு, “உங்களுக்கு எப்போ பார்த்தாலும் இதே தானா?” என்றாள் கண்களை உருட்டி அவனை மிரட்ட முயன்றபடி.

அணிந்திருந்த சேலையும், அது காட்டிய அழகிய வளைவுகளும், மனைவியின் விழிகள் ஆடிய நாட்டியத்திலும் தன்னை தொலைத்தவனாய் அவன் அவளை நெருங்க, இவன் பார்வையே சரியில்லையே என்று மனதுக்குள் பதறினாள் பவித்ரா.

இன்னும் அவன் நெருங்கவும் வேகமாக பல அடிகள் பின்னால் பாய்ந்தவள், “அங்கேயே நில்லுங்கள்!” என்று கைநீட்டி தடுத்தாள்.

சத்யன் அவளை முறைக்க, அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதியாமல் கிடப்பில் போட்டுவிட்டு விசயத்துக்கு வந்தாள் பவித்ரா.

“அண்ணி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் ஜான்? தனியாக இருந்தபோது அண்ணாவை நினைத்து தவியாய் தவித்தார். இப்போ அண்ணாவை தள்ளிவைத்து அவரைக் கொல்கிறார். அண்ணாவையும் வருத்தி தானும் வருந்தி.. உங்கள் அக்காவுக்கு என்னதான் வேண்டுமாம்?” என்று கொதிக்க, இதுதான் அன்று அவள் சொன்ன ‘கண்ணை திறந்து பார் விசயமா?’ என்று ஓடியது அவனுக்குள்.

அதோடு, அவள் தன்னிடமிருந்து தள்ளியிருப்பதற்கான காரணமும் விளங்கியது!

அவளை அவன் விரும்பாத நாட்களில் நாய்க்குட்டி மாதிரி காலையே சுற்றி வந்தவள், அவன் காதலை சொன்னதும் விலகி விலகிப் போகிறாளே என்பது இவ்வளவு நாட்களும் மனதில் சின்னக் குறையாகத்தான் இருந்தது! ஆனால், இப்போதோ தன்னுடைய அக்காவுக்காகவும் அவளின் அண்ணாவுக்காகவும் தான் இந்த விலகல் என்று தெரிய வந்தபோது உள்ளூர வியந்துதான் போனான் அவன். மனமும் கனிந்தது!

அவன் கூட தன்னுடைய அக்காவுக்காக மட்டும் தான் யோசித்தான். அவளோ எல்லோருக்காகவும் அல்லவா யோசிக்கிறாள்!

மனைவியை எண்ணி மனம் பெருமிதம் கொண்ட போதினிலும், தமக்கையை அவள் குற்றம் சாட்டியது பிடிக்காமல், “பவிம்மா. ப்ளீஸ் அக்காவை பற்றி எதையும் கதைக்காதே. அவள் பாவம்..” எனும்போதே அவன் குரல் தமக்கையின் நினைப்பில் கமறியது.

“எனக்கு மட்டும் அவரை குறை சொல்ல ஆசையா என்ன? அவர் என் அண்ணி ஜான். அவர் தானும் கஷ்டப்பட்டு அண்ணாவையும் நோகடிக்கிறார் என்பதுதானே என் கோபம். அதுதான் எல்லோரும் விரும்பியதுபோல் அண்ணா அவரைக் கட்டிக்கொண்டாரே. பிறகும் என்ன?” என்று பவித்ரா சற்றே கோபத்தோடு கேட்க, அந்தக் கோபம் தமக்கை மீது என்பதில் அவனுக்குள்ளும் மெல்லிய கோபம் உதித்தது.

“கல்யாணம் நடந்தால் மட்டும் எல்லாம் சரியாவிடுமா? அத்தான் முதல் செய்தவைகள் எல்லாம் இலகுவில் மறக்கக்கூடிய விஷயங்கள் இல்லை பவி. என்ன இருந்தாலும் அக்கா கர்ப்பிணியாக இருக்கும்போது நிர்கதியாக அவளை விட்டவர் தானே அவர். பிள்ளை பிறந்தபிறகும் வந்து பார்க்கவில்லை. சந்துவை தன் மகனே இல்லை என்றவர். அந்தக் கோபம் எல்லாம் இருக்கும் தானே? இவர் கட்டிக்கொண்டார் என்றதும் மறந்துவிட்டு அவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டுமோ?” என்று கேட்டபோது, அந்தக் கோபம் தன் மனதில் இருப்பதை தன்னை அறியாமலேயே மனைவிக்கு உணர்த்தினான் சத்யன்.

திகைப்போடு கணவனைப் பார்த்தாள் பவித்ரா. இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டா இவன் இவ்வளவு நாட்களும் அண்ணாவோடு பழகியிருக்கிறான்? உள்ளே கோபத்தை வைத்துக்கொண்டு வெளியே பாசக்காரன் போல் நடித்தானா?

ஆத்திரம்தான் வந்தது அவளுக்கு. “அப்படி ஏன் நடந்தார் என்று நீங்கள் அண்ணாவிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு நியாயமான காரணம் கட்டயாம் இருக்கும். ஆனால், உங்களைப்போல உங்களின் அக்காவின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க நினைத்தவர் இல்லை என் அண்ணா.” என்றாள் பட்டென்று.

மனைவியை வெறித்தான் சத்யன். “அதையெல்லாம் இன்னும் நீ மறக்கவில்லை; அப்படித்தானே? மனதில் வைத்து குத்திக் காட்டுகிறாய்!” என்றான் வறண்ட குரலில்.

"புரியாமல் பேசாதீர்கள் ஜான். அப்போ நீங்களும் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் அண்ணாவோடு பழகுகிறீர்கள் என்று நான் சொன்னால் கேட்டுக்கொள்வீர்களா? உங்கள் அக்காவால் எல்லாவற்றையும் மறந்து அண்ணாவோடு வாழ முடியுமா என்று கேட்டீர்களே.. என்னால் மட்டும் எப்படி நீங்கள் செய்த எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு உங்களோடு வாழ முடிந்தது?" என்று அவள் தெளிவாகக் கேட்டபோது, அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

“சொல்லுங்கள், உங்கள் அக்கா செய்தது பெரிய பிழையா இல்லையா? அவர் பக்கத்தில் அதற்கான நியாயமான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அது வேறு. ஆனால், கட்டிய கணவனாக ஒரு ஆணுக்கு தன் மனைவியைப் பற்றிய தவறான விசயம் தெரியவந்தால் அது இனிக்குமா? ஆனால், உங்கள் அக்காமேல் அவ்வளவு கோபம்கொண்டு விவாக ரத்து வரைக்கும் போன என் அண்ணா, அண்ணிமேல் உள்ள கோபத்தை என்றாவது ஒருநாள் உங்கள் மீது காட்டியிருப்பாரா? உங்களை பழி வாங்குகிறேன் என்று ஏதாவது செய்து இருப்பாரா? சொல்லுங்கள்.” என்று அவள் கேட்டபோது உச்சியில் அடித்ததுபோல் உண்மையும் உறைத்தது. தன் அத்தானின் அன்பின் ஆழமும் விளங்கியது.

உண்மைதானே! வித்யாவும் அவனும் எத்தனையோ தடவைகள் அலட்சியப்படுத்திய போதிலும், கோபத்தைக் கொட்டிய போதிலும் இதுநாள் வரையில் கோபத்தையோ ஆத்திரத்தையோ அத்தான் காட்டியதே இலையே!

உள்ளே குன்றிப்போனான் சத்யன்.

பவித்ராவோ தமையனைப் பற்றி கணவனிடம் விளக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாது, “அன்று சந்துவின் பிறந்தநாள் அன்று என் அண்ணா எவ்வளவு சந்தோசத்தோடு அண்ணி வீட்டுக்கு வந்தார் தெரியுமா? என்னவோ உலகத்திலேயே இல்லாத பெரிய உடன்பிறப்பு மாதிரி நல்லது செய்கிறேன் என்கிற பெயரில் அண்ணியின் சந்தோசத்தை கெடுத்ததே நீங்கள் தான். இதில் என் அண்ணா மீது கோபம் வேறா? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், நான் உங்கள் மனைவி தானே? அதுவும் காதலிக்கவே இல்லாமல், என்னை பிடிக்காதபோதும் உங்களின் அக்காவுக்காக மணந்தவர் தானே நீங்கள். நான் இதற்கு முதல் இன்னொரு ஆணுடன் பழகியிருந்தால் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று அவள் கேட்டபோது விளக்கெண்ணையை குடித்தவன் போலானது அவன் முகம்.

அந்தப் பேச்சே தனக்குப் பிடிக்கவில்லை என்பதாக முகத்தை சுளித்து அவன் அவளை முறைக்க, “உங்கள் முகம் ஏன் இந்தப் போக்கு போகிறது? சும்மா வாயால் சொன்னதற்கே தாங்க மடியவில்லையே.. அப்போ என் அண்ணா? அக்கா அக்கா என்று கண்மூடித்தனமாக இருக்காமல் கொஞ்சம் நடுநிலையில் இருந்து யோசியுங்கள்!" என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தவள், ஆத்திரமாக அவனை முறைத்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள்.

என்ன இருந்தாலும் அண்ணாமேல் மனதில் கோபத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் அவன் இருந்திருக்கிறான் என்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. சகோதரத்தின் மீது பாசம் இருக்க வேண்டியதுதான்! அதற்காக, இப்படியா? மனப் புழுக்கம் அடங்கவே இல்லை அவளுக்கு.


தொடரும்...

கமெண்ட் + லைக் பிளீஸ்..
 
#6
பவி அருமை சூப்பர் நிதா
 
#7
Blank hu irukku... Pathi padikka mudiyaleye
 
#8
Nitha நான் அனுஷா. சபாஷ் சரியான கேள்வி கேட்டாள்
 
#9
எனக்கு எப்படி சொல்றது னு தெரியல... இரண்டாம் பாகம் னு நீங்க போட்டப்போ... இதுக்கு மேல மிஞ்சி போனா 5 எபி தானே போகும் எதுக்கு இரண்டாம் பாகம் னு தான் நினைச்சேன்... ஆனா உங்களாள மட்டுமே இப்படி இவ்வளவு short and sweet aa னு சொல்ல முடியாது வள வள னு இருக்கும் னு சொல்ல வே முடியாது... ரொம்ப சரியான அளவு ல‌ இருக்கு... நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் அந்த கதை ல தான் நான் உங்க எழுத்துக்கு ரசிகை ஆனேன்... இந்த கதை ல இன்னும் இன்னும் உங்க எழுத்துக்கு எனக்கு பிடிச்சிருக்கு... உங்களாள இப்படி‌ எல்லோர் நிலை ல இருந்து யோசிக்க முடியுது... வியப்பாக இருக்கிறது... love u nitha... நிறைய எழுதனும்..
 
#10
Blank hu irukku... Pathi padikka mudiyaleye
Don't use Google browser. Use someother browser. It will work
 

ugina

New member
#11
superrrrrrrrrrrr
 
#12
Superb episodes sis💐💐💐
 
#13
Hi Mam, sorry to say this again I can't read this episode. So can you please send other link.
 
#14
Super
 
#15
Simply super ud mam.
 

NithaniPrabu

Administrator
Staff member
#16
Hi Mam, sorry to say this again I can't read this episode. So can you please send other link.
எதற்கு சாரி சொல்லுறீங்க மா. ஹிஸ்ட்றி ஒருமுறை கிளீன் பண்ணிட்டு பாருங்கோ. இல்ல வேற ப்ரௌசர் யூஸ் செய்து பாருங்கோ. என்ன பிழை எண்டு கண்டு பிடிக்க முடியேல்லமா. அடுத்த எபி போடும்போது ரெண்டுக்கும் சேர்த்து கூகிள் லிங்க் போடுறேன்
 
#17
பவி நீயும் சக்தி மாதிரி இருக்கியே
 
#18
வாழ்த்துக்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை. எல்லோர் மனநிலையில் இருந்து எழுதும் திறமை மிகவும் அருமை.
 
#19
Super nitha mam rompa alaga kondu poreenga story ah adutha episode irukumnu thaan naa ovoru naalum yosichutu irukaen rompa rompa arumai mam
 
#20
Aha.. pavi chellam ivallo pesivalah... Sathyan pavi pesiyathai fulla unaravillai.... (Geethan mithravudan vala munnamemudivu eduthathai.)... nice going sis....
 
Top