அத்தியாயம் 18,19,20

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம்-18


அன்று வேலை முடிந்து வந்த கீர்த்தனனின் விழிகள் மனைவியை தேடின. எப்போதும் கதவு திறக்கும் ஒலி கேட்டு வராந்தாவுக்கு வருகிறவளை காணவில்லை என்றதும், “மித்ரா!” என்று அழைத்தான்.

பதிலில்லை!

‘எங்கே போனாள்?’ வந்த அவனைக் கவனிக்காது, கவலை அப்பிய முகத்தோடு எங்கோ பார்வையை பதித்து ஹாலில் அமர்ந்திருந்தாள்.

அவள் தோளைத் தொட்டு, “ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்? உடம்புக்கு ஏதும் முடியவில்லையா?” என்று கேட்டான்.

திடுக்கிட்டுத் நிமிர்ந்தாள் மித்ரா. அதன் பிறகே அவன் கேட்டது உறைக்க, “அப்பாவுக்குத்தான்.. என்னவோ வயிற்றில் கட்டியாம்.” என்றாள் கவலையோடு.

“வெறும் கட்டிதானே. அந்தாளுக்கு அதெல்லாம் போதாது!” என்றான் அவன்.

யோசனையில் புருவங்கள் சுருங்க, “அந்தளவுக்கு அவர் என்ன பாவம் செய்தார்?” என்று வினாவினாள் மித்ரா.

உடை மாற்றுவதற்காக அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தவனின் நடை நிற்க, திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் கோப அலைகள்.

‘ஏன் இப்படிப் பார்க்கிறான்?’

அவனோ திரும்பி வந்து, அவளின் தோள்கள் இரண்டையும் பற்றி, “இப்போ கூட உன்னால் எதையுமே என்னிடம் பகிர முடியவில்லை இல்லையா?” என்றான் கசப்போடு.

“கீதன்..” என்றாள் தீனமாக.

மறுபடியும் அவளின் இறந்தகாலமா? நெஞ்சுக்குள் பகீர் என்று திகில் பரவியது. வாழ்க்கையில் தவறியவள் அல்லவா. கணவன் எதையோ கேட்க, அவள் செய்த குற்றம் அவளைக் குத்தியது சடாரென்று.

“கீதனே தான்! உன் கீதனே தான். அவனிடம் எதையும் சொல்ல இன்னும் நீ தயாரில்லை; அப்படித்தானே?” அவன் குரல் சற்றே உயர, அச்சத்தில் உறைந்தாள் மித்ரா.

அவன் கேட்கும் கடந்த காலத்தின் நினைவு வந்ததுமே நெஞ்சமெல்லாம் கிடுகிடு என்று ஆட்டம் கண்டது.

கீர்த்தனனோ அன்று ஒரு முடிவுக்கே வந்திருந்தான். “இன்றைக்கு உன்னை விடமாட்டேன். சொல்லு! உன் மனதில் என்ன இருக்கிறது? ஏன் இப்படி என்னை ஒதுக்கி வைக்கிறாய்? சொல்லாமல் விடமாட்டேன்!” என்று அவளைப் பிடித்து உலுக்கினான்.

அவளுக்கோ தொண்டை வறண்டு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. அவன் சொல்லு சொல்லு என்கிறான். அவளால் எப்படிச் சொல்ல முடியும்?

கண்ணியமான ஒரு கனவானின், அவள் கணவனின் முகத்தைப் பார்த்து தன் வாழ்க்கையில் தான் தவறியதை எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்வது?

இதுவே அவனை முதன் முதலாக சந்தித்த மித்ராவாக இருந்திருக்க, அவன் கண்களை நேராக நோக்கி என் வாழ்வில் இப்படி நடந்தது என்று சொல்லியிருப்பாள். அன்றைய மித்ரா ஜெர்மனிய பழக்க வழக்கங்களில் ஊறி வளர்ந்தவள். வாழ்க்கை இதுதான் என்று தனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு வகுத்துக்கொண்டு வாழ்ந்தவள். இன்றைய மித்ராவோ, கீர்த்தனனினால் செதுக்கப்பட்டவள். வாழ்க்கை என்றால் என்ன, ஒரு பெண் எப்படி வாழவேண்டும், அவள் வாழ்வில் உயிரை கொடுத்தாயினும் எதையெல்லாம் காக்கவேண்டும் என்பதை தெரிந்தவள்.

இந்த மித்ராவுக்கு அவன் முன்னால் நிற்கும் அருகதை கூட இல்லையே!

கூனிக் குறுகிப்போய் நின்றாள். மொத்த உடலும் தொய்ந்து, சுருங்கிப் போனது. அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தவளின் நிலை கட்டியவனின் நெஞ்சத்தைப் பிளந்தது.

அதே நேரம் அவன் அவ்வளவு கேட்டும் வாயை திறக்காதவளின் செயல் சினத்தையும் மூட்ட, “நிமிர்ந்து என்னைப் பார் மித்ரா! வாயை திறந்து கதை!” என்று அதட்டியபடி, அவளின் முகத்தை தன் கரம்கொண்டு நிமிர்த்தினான்.

தாங்கொணா துயரை சுமந்து கணவனை பார்த்தாள் மித்ரா. அந்த அழகிய நயனங்களில் தெரிந்த அச்சமே அவனைக் கொன்றது.

“என்மேல் உனக்கு இவ்வளவு தானாடி நம்பிக்கை? அன்றைக்கு உன்னைப்பற்றி முழுவதும் அறியாமல் என்னென்னவோ செய்தேன் தான். கதைத்தேன் தான். அதற்காக இன்னும் அப்படியே இருப்பேன் என்று நினைத்தாயா? மாறியிருக்க மாட்டேனா? ஏன் இப்படி என்னைப் பார்வையாலேயே கொல்கிறாய்?

“என் பக்க விளக்கத்தை சொல்ல ஒரு சந்தர்ப்பம் தா மித்து! இப்படியே காலம் முழுக்க நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் என்றுதான் இருக்க வேண்டுமா? வயதும் வாழ்க்கையும் போய்க்கொண்டே இருக்கே, அது தெரியுதா உன் கண்ணுக்கு? உனக்காக ஒவ்வொரு நொடியும் ஏங்கி ஏங்கி சாகிறேனே.. அதுவாவது தெரியுதா? உன்னைப் பற்றியும், உன் மனதை பற்றியும் தெரியாமல் இவ்வளவு நாட்களையும் நான் நாசமாக்கினேன் என்றால், என் மனதையும் அதில் இருப்பதையும் அறியாமல் இனி வரும் காலத்தை நீ நாசமாக்கப் போகிறாயா?”

அவன் வார்த்தைகளில் தெரிந்த அன்பை தாண்டிக்கொண்டு அவன் முகத்தில் தெரிந்த கோபமே மித்ராவை வேகமாகத் தாக்கியது. ஏற்கனவே அவனின் உக்கிரத்துக்கு அகப்பட்டு உருக்குலைந்தவள் இல்லையா! தேகமெல்லாம் நடுங்க, அச்சத்தில் இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள, அதிர்ந்த விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அதில் தெரிந்த மருட்சியில் கம்பீரமான அந்த ஆண்மகனும் உடைந்தான்.

அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து, “இப்படிப் பார்க்காதடி! அன்றைக்கு எனக்கு எதுவுமே தெரியாதே! நீங்கள் யாருமே சொல்லவே இல்லையே. சொல்லியிருக்க நான் அப்படியெல்லாம் நடந்தே இருக்க மாட்டேனே. ஆளாளுக்கு உன்னை வதைத்தார்கள் என்றால் நானும் உன்னைப் போட்டுப் பாடாய் படுத்திவிட்டேனே. என்னை மன்னிக்கவே மாட்டாயா?” என்று கேட்டவனின் விழியோரங்களிலும் நீர்ப்படலம்.

அவனுடைய இறுகிய அணைப்புக்குள் அடங்கிப்போயிருந்த மித்ராவின் கண்ணோரங்களிலும் நீர் கசிந்தது.

யார் யாரிடம் மன்னிப்புக் கேட்பது?! அவனது இதழ்களை தன் தளிர் விரல்களினால் மூடினாள்.

“என்னம்மா?”உருகிப்போய் அவன் கேட்க, “எப்போதுமே நீங்கள் எந்தப் பிழையுமே செய்தது இல்லை கீதன். உங்களால் செய்யவும் முடியாது. நான்.. நான்தான்..” என்றவளுக்கு மளுக்கென்று விழிகளில் நீர் கோர்த்தது.

மன்னவனோ துடித்துப் போனான். மீண்டும் அவளைத் தன் மார்போடு சேர்த்தணைக்க முயல, அதிலிருந்து விடுபட முயன்றவாறே, “உங்களோடு வாழும் தகுதி எனக்குத்தான் இல்லை.” என்றாள் உடைந்தவளாய்.

கீர்த்தனனுக்கு அவள் மனநிலை அப்போதுதான் பிடிபட்டது.

“ஒருவரோடு ஒருவர் வாழ அன்புதான் தேவை. அதை விட்டுவிட்டு சும்மா கண்டதையும் பேசி என் கோபத்தை கிளறாதே. எனக்கு நீதான். உனக்கு நான்தான்.” என்றவன் அவள் விழிகளையே கூர்ந்து பார்த்து, “சொல்லு? நான் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா?” என்று கேட்டான்.

அந்தக் தகுதி உனக்கில்லை என்று மனம் அறைந்து சொன்னாலும் தலை மறுப்பாக அசைய, அந்த அசைவில் அவள் விழிகளில் இருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.
 

NithaniPrabu

Administrator
Staff member
#2
அதை தன் கைகள் இரண்டாலும் துடைத்தபடி, “பிறகு என்னம்மா? என்னாலும் நீயில்லாமல் வாழமுடியாது. நான் சாகும் வரைக்கும்.. ஏன் அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் அப்போதும் எனக்கு நீதான் வேண்டும். நீ மட்டும்தான்!” என்றான் கரகரத்த குரலில்.

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சுக்குள் மழைச் சாரலாய் வீசினாலும், இந்த அன்பு கடைசிவரை நிலைக்குமா என்கிற கேள்வி எழுந்து அவளை சுருட்டி அடித்தது.

தன் நிலையை எண்ணி அவள் துடிக்க, அதை அவளின் நயனங்கள் அவனுக்கு உணர்த்த, “மித்தும்மா, இங்கே பாருடா… எனக்கு எல்லாமே தெரியும்…” என்று கீர்த்தனன் ஆரம்பிக்கும் போதே,

“அண்ணா…!” என்கிற அழைப்பும், அதை தொடர்ந்து பவித்ரா வீட்டுக் கதவை திறந்துகொண்டு வருவதும் கேட்க, சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு விழிகளை ஒருதடவை இறுக மூடித் திறந்தான் கீர்த்தனன்.

மித்ராவோ தவித்துப் போனாள். என்னவோ எனக்கு தெரியும் என்றானே… என்ன தெரியும் இவனுக்கு?

அலைபாய்ந்த விழிகளோடு அவள் அவனைப் பார்க்க, “நாம் பிறகு பேசலாம். நீ முகத்தை கழுவித் துடைத்துக்கொண்டு வா..” என்றவன், வெளியே சென்றான்.

அவனை தடுக்கவும் இயலாமல், மறித்து, ‘உங்களுக்கு என்ன தெரியும்?’ என்று கேட்கவும் துணிவில்லாமல் உள்ளம் தவிக்க அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் மித்ரா.

“என்ன பவி?” என்று வெளியே வந்த கீர்த்தனன் கேட்க,

“இரவுக்கு கவிதா அக்கா வருகிறாராம்.” என்றாள் பவித்ரா.

“இரவுக்கா?” என்றவன், கேள்வியோடு தன் கைக் கடிகாரத்தை நோக்கினான். அப்போதே நேரம் இரவு ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.

“இன்னும் நான்கு மணித்தியாலத்தில் வந்து விடுவார்களாம் அண்ணா. இப்போதுதான் அக்கா சொன்னாள்.”

“திடீரென்று ஏன்?”புருவங்கள் சுருங்கக் கேட்டவனுக்கோ, கவிதா ஏன் தனக்கு அழைக்கவில்லை என்கிற கேள்வி எழுந்தது. சேகரனும் ஒருவார்த்தை சொல்லவில்லையே?

“அதைத்தான் நானும் கேட்டேன் அண்ணா. யமுனாக்காவுக்கு நிச்சயதார்த்தமாம். அதற்கு வருகிறார்களாம்.”

நிச்சயதார்த்தம் திடீர் என்று முடிவாகி இருக்காது. அதேபோல, இந்தப் பயணமும் திடீரென்று முடிவாகியிருக்காது. பிறகும் ஏன் சொல்லவில்லை? கேள்வி மனதில் எழுந்தாலும், வீட்டுக்கு வருகிறவர்களிடம் அதையெல்லாம் கேட்க முடியாமல், சேகரனுக்கு அழைத்து அவர்கள் வருவதை மட்டும் உறுதிப்படுத்தினான் கீர்த்தனன்.
அடுத்தநாள் காலை சமையலறையில் வேக வேகமாக சுழன்று கொண்டிருந்தாள் மித்ரா. கண்களோ கையில் கட்டியிருந்த மணிக்கூட்டுக்கே ஓடியது.

‘ஒன்பது மணிக்கு முதலே பைலை கொடுக்கவேண்டுமே..’ அவள் மனமும் சேர்ந்து அவதிப்பட்டது.

அப்போது, “மித்து!” என்று கணவன் அழைக்கும் குரல் கேட்டது.

“இதோ வருகிறேன்.” என்று இங்கிருந்தே குரல் கொடுத்தவள் வேக வேகமாக வேலையை தான் பார்த்தாள்.

திரும்பவும் அவன் அழைத்தபோதும் பதில்தான் வந்ததே ஒழிய ஆளைக் காணோம். மகனோ தூக்கம் கலைவதற்கு அறிகுறியாக சிணுங்கிக் கொண்டிருந்தான்.

‘எப்போதும் கூப்பிட்டதும் ஓடி வருவாள். இன்று என்ன ஆயிற்று? ஆபீசுக்கு வேறு ஏதோ பைல் கொடுக்க நேரத்துக்கே போகவேண்டும் என்றாளே..’ சந்துவின் அழுகையும் பெருக்க, ‘பிள்ளையை கவனிக்காமல் என்னதான் செய்கிறாள்?’ என்று கோபமும் வந்தது அவனுக்கு.

மகனை கையில் தூக்கிக்கொண்டு அவனை தட்டிக்கொடுத்து சமாதானப் படுத்தியபடி அடுப்படிக்கு வந்தவன், “தம்பியை கவனிக்காமல் இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.

வேகமாக மகன்மீது ஒரு பார்வையை பதித்துவிட்டு, “அதற்குள் எழுந்துவிட்டானா? குட்டிக்கண்ணா.. அழக்கூடாது செல்லம். அம்மா இதோ வருகிறேன். கொஞ்சம் பொறு.” என்றவள் வேக வேகமாக இடியப்பத்தை பிழிந்தாள்.

“இதென்ன? இப்போ போய் இடியப்பம் அவிக்கிறாய். அதுதான் எல்லோருக்கும் பிட்டு இருக்கே..” என்று கேட்டான் கீர்த்தனன்.

“கவி இடியப்பம் தான் சாப்பிடுவாளாம். அதுதான், கொஞ்சமாக அவிக்கிறேன்.” அவனைப் பாராமலேயே சொன்னவளின் கைகள் வேகமாக இயங்கின.

தங்கையின் குணம் அறியாதவனா அவன்? அவள் கேட்டாள் என்று மெனக்கெட்டு செய்யும் மனைவி மீதும் கோபம் வந்தது. “அவள் பிட்டும் சாப்பிடுவாள். நீ தம்பியை கவனி.” என்றான் அழுத்தமாக.

அந்தக் குரல் கைவேலையை நிறுத்தச் செய்ய, அவனை நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா.

மகனைக் கவனிக்கவில்லை என்பதால் உண்டானோ கோபமோ என்று தோன்ற, “அவனுக்கு பாலை முதலே கரைத்து வைத்துவிட்டேன். இன்றைக்கு மட்டும் நீங்களே அவனுக்கு கொடுத்துவிடுங்களேன்.” என்றவள், பாலை எடுத்து கணவனிடம் நீட்டிவிட்டு மீண்டும் வேலையை தொடங்க, ஒரு பொறுமை இழந்த மூச்சுடன் அவளின் கையை பிடித்து தடுத்தான் கீர்த்தனன்.

“சந்துவை நான் பார்க்கிறேன். நீ போய் வேலைக்கு தேவையானதுகளை எடுத்துவை. ஒன்பது மணிக்குமுதல் போகவேண்டும் என்றாயே.” என்றான் அவன்.

“பைலை இரவே எடுத்து வைத்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தான் கீதன். இல்லையானால் மா காய்ந்துவிடும்.”

அவள் சொன்னது உண்மையாக இருந்தாலும், கவிதா கேட்டதை செய்துகொடுக்க விடுகிறான் இல்லையே என்று தவிப்பாக இருந்தது அவளுக்கு. நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது.

“அதை பவி பார்ப்பாள். இல்லை என்றால் கவிதாவே அவித்துச் சாப்பிடட்டும். இதொன்றும் பிறத்தியார் வீடில்லையே. அவளின் அண்ணாவின் வீடுதான்.” என்றவன் கைப்பிடியாக அவளை அழைத்துக்கொண்டு போனான்.

மகனை கவனித்து, கணவனுக்கு தேவையானவைகளை பார்த்து, தானும் வேகமாகத் தயாராகி வந்தவள் சேகரனை கண்டதும், “சாரிண்ணா. இன்று கட்டாயம் ஒரு பைலை கொடுக்கவேண்டும். இல்லையானால் லீவு எடுத்திருப்பேன். நீங்கள் வருகிறீர்கள் என்று இரவுதானே சொன்னீர்கள். அதில் ஒன்றும் செய்ய முடியவில்லை.” என்றாள் மன்னிப்புக் கோரும் குரலில்.

சாதாரணமாக புன்னகைத்து, “அதற்கு என்னம்மா? நீ போய்விட்டு வா.” என்ற சேகரன், “ஆனால்.. இரவுதான் தெரியுமா? ஒருவாரத்துக்கு முதலே திட்டமிட்ட பயணமாச்சே இது? கவிதா சொல்லவில்லை?” என்று கீர்த்தனனையும் கவிதாவையும் மாறி மாறிப் பார்த்தான்.

ஒருவாரத்துக்கு முதல் திட்டமிட்ட பயணத்தை இவள் ஏன் முதலே சொல்லவில்லை என்கிற யோசனை ஓடினாலும் காட்டிக்கொள்ளவில்லை கீர்த்தனன்.

மனமோ, ‘இதெல்லாம் திருந்தாத கேஸ்..’ என்று சினந்துகொண்டது.

கவிதாவோ தமையன் தன்னை கணவனிடம் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்கிற அச்சத்தோடு வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஆனால், அங்கே வந்த பவித்ரா எதைப் பற்றியுமே யோசிக்காது, “அத்தான், அக்கா எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் நீங்கள் திடீர் என்று வந்து நிற்கிறீர்களே என்றுதான் யோசித்துக்கொண்டு இருந்தோம். இவருக்கும் இன்று லீவு எடுக்க முடியாதாம்.” என்று விஷயத்தை போட்டுடைத்தாள்.

“ப்ச்! என்ன கவிதா இது? நீயேன் முதலே சொல்லவில்லை?” என்று மனைவியிடம் விசாரித்தான் அவன்.

கவிதாவோ ‘எல்லாம் உன்னால்தான்!’ என்று மித்ராவை முறைத்துவிட்டு, “அது.. அது ஒரு எதிர்பாராத ஆச்சரியம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.” என்று சமாளித்தாள்.

பின்னே, இந்த மித்ராவும் சத்யனும் ஒரு ஆட்களா என்கிற ஆத்திரத்திலும், அவர்களை மதித்து நான் நடப்பதா என்கிற அகங்காரத்திலும் சொல்லவில்லை என்றா சொல்ல முடியும்?

“என்ன எதிர்பாராத ஆச்சரியம்? எல்லோரும் வேலைக்குப் போகும் வீட்டில் திடீர் என்று வந்து நின்றால் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும் என்று யோசிக்க மாட்டாயா?” என்று கடிந்தான் சேகரன்.

கவிதாவின் முகம் கோபத்திலும் அவமானத்திலும் சிவக்க, பிரச்சனை பெருக்கப் போகிறதோ என்றஞ்சிய மித்ரா, ‘இதை எப்படியாவது நிறுத்துங்கள்..’ என்று கணவனிடம் விழிகளால் கெஞ்சினாள்.

அவளின் விழிகள் வேறு தவிப்போடு நொடிக்கொரு தரம் கடிகாரத்தை நோக்கி ஓடியது.

அதைக் கவனித்துவிட்டு, “விடு சேகரன். நம் வீடுதானே. நீ கிளம்பு மித்து. நீ வந்ததும் நானும் கொஞ்சம் வெளியே போகவேண்டும்.” என்றான்.

“வருகிறேன்..” என்று பொதுவாக எல்லோரிடமும் சொன்னவள், அவளை தொற்றிக்கொண்ட பரபரப்போடு அங்கே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தன் மெல்லிய கோர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு, ஷூக்களையும் வேகமாக மாட்டிக்கொண்டு வெளியே கிட்டத்தட்ட ஓடினாள்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
மனைவியையே பார்த்துக்கொண்டிருந்த கீதனுக்கு, இவள் போகிற போக்கைப் பார்த்தால் காரில் பறப்பாள் போலிருக்கே என்று தோன்றியது.

அவளின் காரோட்டத்தைப் பற்றித்தான் அவன் அறிவானே. உடனேயே அவளின் பின்னால் தானும் விரைந்தான்.

கராஜை திறந்து வேகமாக காருக்குள் ஏறப்போனவள், “மித்து!” என்ற கணவனின் அழைப்பில், நின்று திரும்பிப் பார்த்தாள்.

“நேரம் இருக்கிறது. அதனால் மெதுவாகவே போ.” என்றான் அவள் விழிகளையே பார்த்து.

அதுவரை இருந்த பரபரப்பு தன் பாட்டுக்கு அடங்க, புன்னகை அரும்பியது அவளுக்கு.

“சரி..” என்று தலையாட்டிவிட்டு அவள் காருக்குள் அமரப்போக, இளம் நீலத்திலான ‘ஜெகின்ஸ்’உம் அதற்கு பொறுத்தமாய் சற்றே லூசான வெள்ளை நிற ஷர்ட் ஒன்றும் அணிந்து, பக்க உச்சி பிரித்து லூசாக விட்டிருந்த கூந்தலோடு தலையசைத்த மனைவியின் அழகை கண்களால் விழுங்கிக்கொண்டே, “இங்கே தலையாட்டிவிட்டு என் கண் மறைந்ததும் வேகமாக ஓடக்கூடாது!” என்றான் அவளை நம்பமாட்டாமல்.

அரும்பிய புன்னகை சிரிப்பாக மலர, “நானே நினைத்தால் கூட என்னால் இப்போதெல்லாம் வேகமாக ஓடமுடிவதில்லை கீதன். கை கால்கள் எல்லாம் நடுங்கும்.” என்றாள் அவள்.

அவள் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னாள். கீர்த்தனனோ நின்ற இடத்திலேயே உறைந்தான்.

“ஏ..ன்?” குரல் திக்கியது அவனுக்கு.

“தெரியவில்லை கீதன். வேகத்தை நினைத்தாலே பயம்மா இருக்கும்.” என்றாள் அவள் புன்னகையோடு.

அந்தப் புன்னகையே அவனை வாள்கொண்டு அறுக்க, அவளுக்குத் தெரியாதது அவனுக்குத் தெரிந்தது. அந்தளவு தூரத்துக்கு வாழ்க்கையில் அடிவாங்கி இருக்கிறாள். அடித்திருக்கிறார்கள்! அதில் அவனுக்கும் பெரும் பங்குண்டு.

நெஞ்சில் வலித்தது.

அதை அறியாதவளோ, “வரவா கீதன்.” என்றபடி காருக்குள் ஏற, பதிலற்று தலையை மட்டும் அசைத்தவனுக்கோ இப்போது அவளைத் தனியாக காரில் அனுப்பவே மனமில்லை.

நேரம் போகிறது என்று அவசரமாக அவள் ஓட்டி, ஏதாவது நடந்துவிட்டால்? நெஞ்சம் குலுங்கியது.

கூடப் போக மனம் துடிக்க, வீட்டுக்கு வந்திருக்கும் தங்கை குடும்பம் அதை தடுத்தது.

அவள் சொன்ன, ‘கை கால்கள் எல்லாம் நடுங்கும்’ என்றது நெஞ்சுக்குள் கிடந்து பிசைந்துகொண்டே இருக்க, என்ன செய்யலாம் என்று யோசித்தான். அந்த நேரம் சத்யனும் இறங்கி வந்தான்.

அவனைக் கண்டதும், “உனக்கு இப்போதே வேலைக்கு போகவேண்டுமா?” என்று கேட்டான் கீர்த்தனன்.

கேள்வி புரியாமல், தலையை மேலும் கீழுமாக அசைத்தவன், “ஏன் அத்தான்?” என்று கேட்டான்.

“மித்துவை ஆபீஸ் வரைக்கும் கூடிக்கொண்டு போய்விட்டு கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகிறாயா?” என்றவனின் கேள்வி, கேள்வியின் தொனியில் இருந்தாலும் அதைச் செய் என்கிற கட்டளை வெளிப்படையாகவே தெரிந்தது.

ஏன்? அக்கா காரில் போனால் என்ன?’ என்று மனதில் தோன்றினாலும், “சரித்தான்.” என்றது சத்யனது வாய்.

“அவனுக்கும் நேரமாகப் போகிறது கீதன். நான் மெதுவாகவே போய்விட்டு வருவேன்.” என்றாள் மித்ரா.

கீதனோ அவளை முறைத்தான். “என் பேச்சை இதிலாவது கேள்!” என்று அதட்டியவன், “அவனோடேயே போ!” என்றான் முடிவாக.

தமக்கையை நெருங்கி, “உன் புருசனுக்கு வரவர பிடிவாதம் கூடிக்கொண்டு போகுது அக்கா. பூ மாதிரி இருக்கிற என் அக்காவுக்கு இப்படி ஒரு புருஷன்! அவரை கொஞ்சம் கவனமாக இருக்கச் சொல். இப்போ நீ வா!” என்றவன், அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போக, கணவனின் மறைமுகப் பேச்சில் சங்கடப்பட்டு நின்ற மித்ராவுக்கு சிரிப்புத்தான் வந்தது.

கீர்த்தனனுக்கும் மித்ராவின் பேச்சினால் கனத்துப்போயிருந்த மனதும், அவளை தனியே விடமுடியாமல் இருந்த தவிப்பும் சத்தியினால் தீர்ந்ததில் அவனாலும் அந்தக் கேலிக்கு இலகுவாக சிரிக்க முடிந்தது.

அதுமட்டுமின்றி, “நானாடா பிடிவாதக்காரன்? யார் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உன் அக்காவை கேள். நான் என்ன பாடு படுகிறேன் என்று எனக்குத்தானே தெரியும்!” என்றவனின் பேச்சு புரியாமல் சத்யன் முழிக்க, மித்ராவின் கன்னங்களோ சூடானது.

நடந்துகொண்டிருந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தவன் குறும்புப் புன்னகை மின்ன சட்டெனக் கண்ணைச் சிமிட்டினான்.

ஆனந்தமாய் அதிர்ந்தவள் வேகமாக சத்யனை தான் திரும்பிப் பார்த்தாள், அவன் பார்த்தானா என்று. இல்லை என்று தெரிந்ததும் திரும்பவும் பின்னால் திரும்பி முறைத்தவளின் வதனத்தில் புன்னகைதான் மலர்ந்திருந்தது.
 

NithaniPrabu

Administrator
Staff member
#4
அத்தியாயம்-19


சேகரனும் கீதனும் பேச்சில் ஆழ்ந்துவிட, மேலே தங்கை வீட்டுக்கு மகளோடு சென்றாள் கவிதா.

அப்போதுதான் குளித்துவிட்டு வந்த பவித்ரா, “வாக்கா. நான் கீழே வர நினைக்க நீ மேலே வந்துவிட்டாய்.” என்று ஈரக் கூந்தலை துவட்டியபடி வரவேற்றாள்.

அவளின் அடர்ந்த கூந்தலை பார்த்துவிட்டு, “அடிக்கடி தலைக்குக் குளிக்காதே பவி; முடி கொட்டிவிடும். என் முடியை பார். எலிவால் மாதிரி ஆகிவிட்டது.” என்றாள் கவிதா தன் முடியை காட்டி.

“அப்படித்தான் அண்ணியும் சொன்னார்.” என்றவள், தன் முடியை டவலால் சுற்றிக்கொண்டு, “திவிக்குட்டி, சித்தியிடம் வாங்க செல்லம்.” என்று கொஞ்சியபடி பெறாமகளை வாங்கக் கையை நீட்டினாள்.

அவளும் தாவி வந்தாள். “வளர்ந்துவிட்டாள் இல்லையாக்கா..” என்று கேட்டுக்கொண்டே வாங்கினாள் பவித்ரா.

“ம்ம்..” என்றவள், “அம்மாவோடு கதைத்தாயா?” என்று கேட்டாள்.

“போனவாரம் பேசினேன். அம்மாவுக்குத்தான் என் மீது இன்னும் கோபம் போகவில்லை போல.” என்றாள் கவலையோடு.

“எப்படிப் போகும்? நீ செய்த வேலைக்கு எனக்கும் தான் உன் மீது கோபம்.”

“அப்படி என்னக்கா பிழை செய்தேன் நான்? பிடித்தவரை மணப்பது ஒரு தப்பா?” என்றவளின் குரல் மெலிதாகக் கரகரத்தது.

“அதற்காக யார் என்ன என்று இல்லையா. போயும் போயும் அவளின்..” என்று கவிதா வெறுப்போடு சொல்லும்போதே, “போதும் அக்கா! அண்ணியைப் பற்றி தேவையில்லாமல் கதைக்காதே! ஒருவரின் நல்ல மனதை அறியாமல் கண்டபடி பேசாதே.” என்று கண்டிப்பான குரலில் தடுத்தாள் பவித்ரா.

தங்கையை கூட அவளை எதிர்த்துப் பேசும்படிக்கு ஆக்கிவிட்டாளே அந்த மித்ரா.

உள்ளம் கொதிக்க, “என்னடி நல்ல மனது? அண்ணா திரும்ப அவளை கட்டிக்கொண்டதுமே அம்மாவுக்கு அனுப்பும் காசு அரைவாசியாக குறைத்துவிட்டாளாம் அவள். அம்மா, அங்கே செலவுக்குக் காசில்லை என்று கத்திக் கொண்டிருக்கிறார். இவள்தான் நல்லவளா?” என்று கேட்டாள்.

“காசு அனுப்புவது அண்ணா. அது குறைந்தால் அண்ணாவைத்தான் கேட்கவேண்டும். அதை விட்டுவிட்டு அண்ணியை ஏன் நீ குறை சொல்கிறாய். அதோடு, இப்போ நானும் அங்கில்லை. இனி அவர்களின் சாப்பாட்டுச் செலவுக்கு மட்டும் தானே என்றெண்ணி அண்ணா குறைத்து அனுப்பி இருக்கலாம். இதையெல்லாம் ஒரு விஷயம் என்று நீயும் அம்மாவும் தூக்கிப் பிடிப்பதை நிறுத்து அக்கா.” என்றாள் பவித்ரா, திவிக்குட்டிக்கு ஒரு வாழைப்பழத்தை உரித்து உண்ணக் கொடுத்தபடியே.

“நீயும் நல்லாவே மாறிட்டடி. மாற்றிவிட்டார்கள்!” என்றாள் கவிதா குமுறலாக.

“இங்கே யாருமே மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறோம். ஆனால், நீயும் அம்மாவும் தான் மாறவேண்டியவர்கள். எப்போ பார் அண்ணாவையும் அண்ணியையும் கரித்துக் கொட்டிக்கொண்டு! அண்ணா பாவம் அக்கா. அவர் உனக்கோ எனக்கோ ஏதாவது குறை வைத்திருக்கிறாரா? அம்மா அப்பாவுக்கு? இல்லை தானே. பிறகும் ஏன் அவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழ விடுகிறீர்கள் இல்லை?” என்று கவலையோடு கேட்டவளின் மனதில், தங்களுக்குப் பிடித்ததை எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்யும் அண்ணாவுக்கு நாம் என்ன செய்தோம் என்கிற கேள்வி எழுந்தது.

அவரின் மனதை முடிந்தவரை காயப்படுத்தியிருக்கிறோம் என்பதை தவிர வேறு எதுவும் பதிலாய் கிடைக்காமல் போனதில் குன்றிப்போனாள் பவித்ரா.

தாயாய் தந்தையாய் தங்களை காத்தவனுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று யோசித்தவளுக்கு ஓர் எண்ணம் உதிக்கவும் தமக்கையையும் இழுத்துக்கொண்டு தமையனிடம் சென்றாள்.

அக்காவும் தங்கையும் ஒன்றாக சேர்ந்து வரவும், ஆண்கள் இருவரும் அவர்களை ஒருங்கே திரும்பிப் பார்த்தனர்.

“அண்ணா, உங்களிடம் ஒரு விஷயம் கதைக்கவேண்டும்.” என்றாள் பவித்ரா கீர்த்தனனிடம்.

‘இவள் எதைக் கதைக்கப் போகிறாள்?’ என்பதாக கவிதா பார்க்க, “என்னம்மா? சொல்லு!” என்றான் அவன் புன்னகையோடு.

“அத்தான், நீங்கள் நான் சொல்வதைக் கேட்டு கோபிக்கக் கூடாது..” என்று சேகரனிடமும் பீடிகை போட்டாள்.

“நீ ஆரம்பிப்பதை பார்த்தாலே எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது. என்றாலும் பரவாயில்லை, சொல்!” என்று அவனும் இலகுவாகவே ஊக்கினான்.

“அதுவந்து.. அண்ணா.. அத்தான்..” என்று தடுமாறியவள், சட்டென முடிவு எடுத்தவளாக, “அண்ணா, இனிமேல் அம்மாவையும் அப்பாவையும் நானும் அக்காவும் பார்த்துக் கொள்வது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.” என்றாள் வேகமாக.

‘இதென்னடி அநியாயம்? நான் எப்போ சொன்னேன்?’ என்பதாக தங்கையை பார்த்து விழித்தாள் கவிதா.

“இது நல்ல விஷயம் தானே. இதற்கா அப்படி பீடிகை போட்டாய்?” என்றான் சேகரன்.

“புதிதாக ஏன் இந்த முடிவு?” என்று விசாரித்தான் தமையன்.

“அதுவாண்ணா.. இவ்வளவு காலமும் எங்களுக்காக நீங்கள் வாழ்ந்தது போதும். இனியாவது நீங்கள் உங்கள் குடும்பம், மனைவி, மகன் என்று மட்டும் வாழுங்கள். அக்காவும் நானும் என்ன ஊரிலா இருக்கிறோம்? வெளிநாட்டில் தானே. அம்மாவையும் அப்பாவையும் நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்கிறோம்.” என்றாள் பவித்ரா தெளிவாக.

அதைக்கேட்டுவிட்டு அவளைப் பாராட்டினான் சேகரன். “பார்த்தாயா கவி? உன்னைவிட சின்னவளாக இருந்தாலும் அவள் எப்படி யோசிக்கிறாள் என்று. இந்த எண்ணம் நமக்கே வரவில்லையே. இதை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்.” என்றான் அவன்.

கவிதாவோ ‘இவளும் எனக்குத்தானே குழிபறிக்க நிற்கிறாள்’ என்று பல்லைக் கடித்தாள்.

“அவள்தான் சின்னப்பிள்ளை என்னவோ சொல்கிறாள் என்றால், நீயுமா சேகரன்?” என்று சேகரனிடம் கேட்டுச் சிரித்த கீர்த்தனன் பவித்ராவிடம் திரும்பி, “அதெல்லாம் வேண்டாம். நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்தோடு சந்தோசமாக வாழுங்கள். அதுவே எனக்குப் போதும். அம்மாவையும் அப்பாவையும் கடைசிவரை பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு.” என்றான்.

“அதை நீங்கள் எப்போதே செய்துவிட்டீர்கள் அண்ணா. அங்கே இருக்கிற காணி நிலபுலன்களே போதும் அம்மாவும் அப்பாவும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ. என்ன, அவர்களுக்கு வேலை செய்து வாழ முடியாது. சொகுசாக வாழ்ந்து பழகிவிட்டார்கள். கேட்டபோதெல்லாம் காசை அனுப்பி நீங்கள் அப்படிப் பழக்கிவிட்டீர்கள். அதனால், மாதச்செலவுக்கு மட்டும் தானே காசு தேவை. அதை நாங்களே பார்க்கிறோம்.” என்று பிடிவாதமாகச் சொன்னவள்,

“எங்களால் நீங்கள் பட்டதெல்லாம் போதும் அண்ணா. இனியாவது சந்தோசமாக இருங்கள்.” என்றபோது அவளையும் மீறி குரல் தழுதழுத்தது.

சத்யனை காதலித்து, தனக்கு கஷ்டம் தந்துவிட்டதாக நினைக்கும் தங்கையின் உள்ளம் புரிந்தது அவனுக்கு. அந்தக் குற்றவுணர்ச்சி நல்லதல்லவே அவளுடைய வாழ்க்கைக்கு.

அதோடு, தைரியமாக எல்லோர் முன்னாலும் பேசும் அவளின் மனதை உடைக்க விரும்பாமலும், அவள் என்றென்றும் தன்னருகில் தானே இருக்கப் போகிறாள், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று எண்ணியவன், “சரிம்மா..” என்று சம்மதித்தான்.


அன்று மாலை கணவன் வந்ததும், “எனக்குக் கொஞ்சம் காசு வேண்டும்?” என்று கேட்டாள் பவித்ரா.

‘இதென்ன புதிதாக என்னிடம் கேட்கிறாள்?’ என்று உள்ளே தோன்றினாலும், உரிமையோடு எந்தவித தயக்கமும் இன்றி அவள் அவனை நாடிவந்து கேட்டது மனதுக்குப் பிடிக்க, ஜீன்சின் பின் பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்தவரே, “எவ்வளவு?” என்று கேட்டான் சத்யன்.

“500 யூரோ.”

“அவ்வளவு ஏன்?” பணத்தை எடுத்து எண்ணிக்கொண்டே கேட்டான் அவன்.

“அம்மாக்கு அனுப்ப..”

காசை அவளிடம் கொடுக்க நீண்ட கையை சட்டென்று மீண்டும் இழுத்துக்கொண்டான் சத்யன். “உன் தேவைக்கு என்றால் சொல்; எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால், அந்த பொம்..” என்றவன், அவள் முறைத்த தீ முறைப்பில் ஒருகணம் பேச்சை நிறுத்தினாலும், அடுத்தகணமே அலட்சியமாக அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அந்த பொம்பளைக்கு எல்லாம் என்னால் தரமுடியாது.” என்று முடித்துவைத்தான்.

“ஏன் தரமுடியாது. என் அம்மாவுக்கு நான் அனுப்பவேண்டும். முதலில் அதென்ன ‘பொம்பளை’? அவர் உங்கள் மாமியார். மரியாதையாகக் கதையுங்கள்!” என்று அதட்டினாள் மனையவள்.

அந்த நேரத்திலும் அந்த அதட்டலை மனம் ரசிக்க, “அதை நான் மனுசியாகவே மதிக்கவில்லை. இதில் மாமியாராக மதிப்பதா?” எள்ளலாகக் கேட்டான் அவன்.

‘அதை’யா?

என்னதான் தாய் தமையனின் வாழ்க்கையில் தீங்கிழைத்தார் என்றாலும், தாயை விட்டுக்கொடுக்க முடியாதே! அன்னையின் செல்ல மகளாக வளர்ந்தவளுக்கு கணவனின் பேச்சு வலித்தது.

“அவர் என்னுடைய அம்மா ஜான். வயதில் பெரியவர். வயதுக்கேற்ற மரியாதையை கொடுக்கப் பழகுங்கள். ஒரு மாமியாரை பார்த்து இப்படியா கதைப்பது?” என்று அவள் கேட்க, அன்று கடையில் வைத்து தமக்கையை இதே வயதில் பெரியவர் தானே மகா கேவலமாக பேசினார் என்கிற நினைவு வந்ததும் மனம் கொதித்தது அவனுக்கு.

அப்படியான ஒரு மனுசிக்காக மனைவி வக்காலத்து வாங்குகிறாள் என்பது இன்னும் ஆத்திரத்தை கிளப்ப, “உன்னையே என் மனைவியாக நான் நினைக்கவில்லை. இதில் அவர் என் மாமியாரா?அக்காவுக்காக என்றாலும் எதற்கடா இந்தக் கல்யாணத்தை கட்டினேன் என்று நான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.” என்றான் அவன் ஏளனமாக.

அதிர்ந்துபோய் நின்ற இடத்திலேயே உறைந்தாள் பவித்ரா. அவள் என்னவோ காசைத்தான் கேட்டாள். அவனோ அவளுடைய அடி நெஞ்சிலேயே வேலைப் பாய்ச்சி விட்டானே!

மளுக்கென்று விழிகள் குளமாகியது. மூக்கு விடைக்க, கண்ணீர் நிறைந்த விழிகளால் அவனை வெறித்தாள். அவன் விட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் தீப்பந்தந்களாய் மாறி இதயத்தை சுட்டுப் பொசுக்கின!

அதுநாள் வரையிலும் அவன் எத்தனையோ தடவைகள் மனம் நோகப் பேசியிருக்கிறான் தான். அப்போதெல்லாம் நிமிர்ந்து நின்றவளால், அவன் மனதில் தான் வந்துவிட்டோம் என்று அறிந்தபிறகான இன்றைய பேச்சு மனதை முற்றாக உலுக்கித்தான் போட்டது!
 

NithaniPrabu

Administrator
Staff member
#5
நெஞ்சம் இரண்டாகப் பிளக்க, அழுகை அங்கிருந்து வேகமாக வெடித்தது.
அதை அவனுக்குக் காட்டப் பிடிக்காது, கையினால் வாயை இறுக்கிப் பொத்தியபடி அங்கிருந்து ஓடினாள். அதிர்ந்துபோய் மனைவியை பார்த்தான் சத்யன். இந்தளவு தூரத்துக்கு தன் வார்த்தைகள் அவளை நோகடிக்கும் என்று அவன் யோசிக்கவேயில்லை!

சட்டென தன் தலையில் தானே அடித்துக்கொண்டான் சத்யன். ‘மடையன்டா நீ!’

‘அறிவிருக்காடா உனக்கு!’ தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கு, எப்போதும் எதிர்த்து நிற்பவளின் கண்ணீர் நெஞ்சை சுட்டது.

அவளின் அன்னையின்மேல் இருந்த கோபத்தில் தான் அப்படிச் சொன்னான். உண்மையிலேயே அந்த மனுசிக்கு ஒரு ரூபாயும் கொடுக்க அவனுக்கு மனமே இல்லைதான். இப்போதும்! ஆனால்.. அதற்காக அவன் சொன்னது சரிதானா? இந்தக் கல்யாணத்தை ஏன் கட்டினோம் என்று அவன் என்றைக்குமே நினைத்ததே இல்லையே..!

அவளை அவன் மனைவியாக பார்க்கவே இல்லையா.. ? பிறகு எப்படி அவளை ரகசியமாக ரசித்தான்? அவள் பார்க்காதபோது அவளைக் கவனித்தான்? எதற்கும் சட்டெனக் கோபம் கொள்கிறவன் எதற்காக அவளின் அடாவடிகளை, வாயடிப்புக்களை, அவனோடான மல்லுக் கட்டல்களை கண்டும் காணாததுபோல் விட்டான்?

அதற்கெல்லாம் காரணம் அவளை தன் மனைவியாக, தன் உறவாக நினைப்பதால் தானே! பிறகு ஏன்டா வாயை விட்டாய்? தன்னைத் தானே திட்டிக் கொண்டவனின் மனமோ தவியாய் தவித்தது.

‘அழுகிறாளே..’ அவளை எப்படிச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் இரண்டு கைகளாலும் தலையை கோதிவிட்டவனுக்கு அவள் மீதும் கோபம் வந்தது. எப்போதும்போல் என்னோடு சண்டை பிடிப்பதை விட்டுட்டு எதற்கு சும்மா கண்ணைக் கசக்குகிறாள்?

அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் அவளை சமாதானப் படுத்த எண்ணி அறைக்குள் சென்றவனின் நடை, கைகளால் முகத்தை மூடியபடி அழுகையில் உடல் குலுங்கியவளைக் கண்டதும் ஒருகணம் நின்றது.

அடுத்த கணமே இரண்டெட்டில் அவளை அணுகி, “பவிம்மா.. சாரிடா..” என்றபடி அவளைப் பற்றித் தன்புறமாக திருப்ப, வெடுக்கென்று அவன் கையை ஆத்திரத்தோடு தட்டிவிட்டாள் அவள்.

“என்னைத் தொடாதீர்கள். நான்தான் உங்கள் பெண்டாட்டியே இல்லையே. பிறகு எதற்கு தொடுகிறீர்கள்? நீங்கள் ஒன்றும் உங்கள் அக்காவுக்காக என்னோடு வாழத் தேவையில்லை. இனியும் அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம். போங்கள்.. எங்காவது போய்த் தொலையுங்கள்.” என்றவள், அவன் அவளை நெருங்க நெருங்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

தன் வார்த்தைகள் அவளை எவ்வளவு தூரத்துக்குக் காயப்படுத்தி இருக்கிறது என்று விளங்க, வலுக்கட்டாயமாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் சத்யன்.

“உன் அம்மாமேல் இருந்த கோபத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன். தெரியாமல் வாயில் வந்துவிட்டது..” என்று கெஞ்சினான் அவன்.

ஆமாம்! பழக்கமற்ற பழக்கமாக கெஞ்சினான்!

அவளோ அவனிடமிருந்து திமிறத் தொடங்கினாள். அழுகையும் பெரிதாக வெடித்தது. “கோபம் வந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்வீர்களோ? மனதில் இருப்பதுதான் வாயில் வரும். உங்களுக்கு எப்போதுமே என்னைப் பிடிக்காது. நான்தான் விசரி மாதிரி உங்கள் பின்னாலேயே சுற்றினேன். எல்லாம் வீண்!” என்றபடி, அவனிடம் இருந்து அவள் விடுபடப் போராட,

“அப்படியில்லை பவி. எனக்கு உன்னை நிரம்பவும் பிடிக்கும். என் செல்லம் தானே. அதுதான் சாரி சொல்லிவிட்டேனே. இனிமேல் இப்படிக் கதைக்கவே மாட்டேன். என்னை நம்ப மாட்டியா?” என்றான் அவன்.

அவளோ அவனது கெஞ்சல்களை கேட்கும் நிலையில் இல்லவே இல்லை!

“நீங்களும் வேண்டாம். உங்கள் சாரியும் வேண்டாம். விடுங்கள் என்னை!” என்று அவனிடமிருந்து விடுபடுவதிலேயே குறியாக இருந்தாள்.

அன்று, காதலே இல்லாமல் திட்டம் போட்டு அவளைத் தன்னிடம் வரவைத்தவன் இன்று நெஞ்சுமுட்ட நேசத்தை சுமந்துகொண்டா அவளை விடுவான்?

இன்னும் வாகாக, வலுக்கட்டாயமாக அவளைத் தனக்குள் கொண்டுவந்து, “எங்கே? என் முகத்தை பார்த்துச் சொல். நான் வேண்டாமா?” என்று அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டான்.

நனைந்த இமைகளும், சிவந்த விழிகளும், கண்ணீர் தடத்தை சுமந்த கன்னங்களுமாக அவனை அதிர்வோடு நோக்கினாள் பவித்ரா. அதுநாள் வரை அவள் தேடிய காதலை, ஏங்கித் தவித்த நேசத்தை, சாகும்வரை அனுபவிக்கத் துடித்த அன்பையெல்லாம் விழிகளில் தேக்கி பார்த்தவனின் பார்வையில் ஒருகணம் கட்டுண்டுதான் போனாள்.

அடுத்த கணமே, ‘உன்னை என் மனைவியாகவே நினைக்கவில்லை’ என்ற அவனுடைய வார்த்தைகள் செவிப்பறையில் வந்து மோத, அதுகொடுத்த ஆக்ரோஷத்தோடு, “நீ எனக்கு வேண்டாம். போடா!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

அவளின் செயலை எதிர்பாராததில் இரண்டடி பின்னால் நகர்ந்தாலும் மனையவளின் செல்லக் கோபத்தை ரசித்துச் சிரித்தவன், அவளின் கரங்களைப் பற்றி இழுத்தான். அதை எதிர்பாராதவள் அவனோடு வந்து மோத, “நம் முதல் சந்திப்பு ஞாபம் இருக்கா?” என்று அவள் காதருகில் குனிந்து கிசுகிசுத்தான்.

பவித்ராவுக்கோ இரத்த நாளங்கள் எல்லாம் சிலிர்த்தது!

கன்னங்கள் செம்மையுற, அன்று அவனுடன் மோதியதையும், அதனால் தான் அனுபவித்த அவஸ்தைகளையும் எண்ணி இன்றும் வெட்கம் கொண்டாள். அந்த அழகு அவனை ஈர்க்க, தன்னை மறந்து சிவந்த அவளின் கன்னத்துக்குள் தன் இதழ்களை புதைத்தான் சத்யன்.

சொக்கிப்போனாள் பவித்ரா. அதுவரை அவளைப் போட்டு ஆட்டிப்படைத்த ஏமாற்றம், தோற்றுவிட்ட உணர்வு, துயர் அத்தனையும் வடிய அப்படியே அவன் தோளிலேயே பூங்கொடியென சரிந்தவளை தேக்குமரத் தேகம் கொண்டவன் வாகாக வாரியணைத்துக் கொண்டான்.

இருவருக்குள்ளும் சொர்க்கசுகம்! கடந்த கணத்துளிகளை காமமின்றி காதலோடு கடந்துகொண்டிருந்தனர்!

பெண்மையின் வனப்பையும் அதன் மென்மையையும் அவன் தேகம் உணர்ந்துகொண்டிருக்க, ஆண்மையின் திடகாத்திரத்தையும் திண்மையையும் அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

கடந்தது எவ்வளவு நேரமோ? கலைந்துகிடந்த அவளின் முடிக்கற்றைகளை அவன் உதடுகள் ஊதித் தள்ளிவிட, கண்மூடிக் கிடந்தவள் புருவங்கள் சுழித்துச் சிணுங்கினாள்.

சுழித்த புருவங்களை நீவி விட்டவனின் விரல்கள் மூடிக்கிடந்த அஞ்சனங்களை தடவி, மல்லிகை மொட்டு நாசியை வருடி செவ்விதழ்களை தொட, அதுவரை குறுகுறுத்துக் கொண்டிருந்தவள் பட்டென அவன் விரலை தட்டிவிட்டாள்.

“கையால் தொடவேண்டாமா?” என்று குறும்போடு கேட்டான் சத்யன்.

“ம்ஹூம்!” என்று அவள் மறுக்கும்போதே, தன் உதடுகளால் தொட்டிருந்தான் அவன்.

ஆனந்தமாய் அதிர்ந்தவளின் விழிகள் விரிய, அதற்காகவே காத்திருந்தவன் அழுத்தமாய் அவளது இதழ்களை முற்றுகையிட்டபடி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்!

‘ராஸ்கல்! முத்தமிட்டுக்கொண்டே கண்ணடிக்கிறான்!’ என்று மனதில் செல்லமாய் வைதவளின் விழிகள் அவன் உதடுகள் செய்த அடாவடியில் மயங்கிக் கிறங்கின!

நிமிடத் துளிகள் பலதைக் கடந்து சென்றபின் அவளை விடுவித்தபோது, நெஞ்சின்மேலே கை வைத்தபடி வேக வேகமாக மூச்சுக்களை இழுத்துவிட்டாள் பவித்ரா.

அவனைப்பார்த்து அவள் முறைக்க அவனோ, “தொட்டவிதம் பிடித்திருக்கா?” என்றான் குறுஞ்சிரிப்போடு.

“இன்னும் கொஞ்சம் என்றால் மூச்சுக் காற்றில்லாமல் நான் செத்தே போயிருப்பேன். இதில் தொட்டவிதம் பிடித்திருக்காவா? ராஸ்கல்!” என்றவள் அவனை மொத்தத் தொடங்கவும், சத்தமாக வாய்விட்டுச் சிரித்தபடி,
சந்தோசமாக மனைவியின் அடியை வாங்கிக்கொண்டான் சத்யன்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#6
அத்தியாயம்-20


ஆத்திரம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அனைத்தும் அடங்க ,இருவராய் இருந்தவர் மனதளவில் ஒருவராய் மாறிவிட்ட அந்த நிமிடங்களை அணுவணுவாக அனுபவித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தனர் சத்யனும் பவித்ராவும்.

கணவனின் கைவளைவுக்குள் கிடந்த பவித்ராவுக்கு அதற்குமேல் தேவை என்று ஒன்றுமே இருக்கவில்லை. எதைப்பற்றியும் யோசிக்காது, யோசிக்கத் தோன்றாது அமர்ந்திருந்தாள்.

சத்யனோ மனைவியின் அருகாமையை சுகமாக உணர்ந்துகொண்டே அவளின் தளிர் விரல்களைப் பற்றி வருடிக் கொண்டிருந்தான். மனதுக்குள் மட்டும் பலமான யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தது.

சற்றுநேரம் அப்படியே கழிய, “பவி…” என்று மெல்ல அழைத்தான்.

“ம்ம்…” மோனநிலை கலையாமலே ராகமிழுத்தாள் அவனவள்.

“கோபம் போய்விட்டதா?”

முதலில், ‘இவன் ஏன் இப்படிக் கேட்கிறான்?’ என்றுதான் யோசித்தாள் பவித்ரா. அதன்பிறகே பிடித்த சண்டை நினைவில் வர, சட்டென்று அவனிடமிருந்து விலகி அவனைப் பார்த்து முறைத்தாள்.

‘ஆகா.. சும்மா இருந்தவளை சீண்டி விட்டுவிட்டோமோ..’

உள்ளே அப்படி எண்ணினாலும், “அதுதான் சாரி கேட்டுவிட்டேனே.. பிறகும் என்ன?” என்றவன், அவளை மீண்டும் தன்னோடு சேர்த்தணைத்தான். அவளின் கோபத்தை குறைக்கும் விதமாக முதுகை வருடிக்கொடுத்தான்!

அதோடு, அதுநாள் வரை அவளின் அருகாமை தரும் சுகத்தை அறியாமல் இருந்தவனுக்கு, அறிந்தபிறகு விலக முடியவில்லை. மனதுக்குள்ளோ தான் தானா இப்படியெல்லாம் தழைந்து போவது என்கிற ஆச்சரியம் அவனுக்குள்! ஒரு காதல் ஒருவனை எப்படியெல்லாம் மாற்றுகிறது?

அவளோ, “செய்வதை எல்லாம் செய்துவிட்டு சாரி சொன்னால் ஆயிற்றா? எதற்காக அம்மாவை அப்படியெல்லாம் சொன்னீர்கள்?” என்று கோபத்தோடு கேட்டாள்.

மனைவியின் அன்பில் நெகிழ்ந்துபோய் இருந்த அந்த நேரத்திலும் அவன் உடல் விறைத்தது. முகம் கடினமுற, “சற்றுமுன் உன்னைப் பற்றி நான் சொன்னது தப்புத்தான். ஆனால்.. உன் அம்மா.. அந்தப் பொம்.. அவரை மன்னிக்கவும் முடியாது. மதிக்கவும் முடியாது!” என்றான் அவன்.

பவித்ராவுக்கோ அப்போதுபோல் இப்போது கோபம் வரவில்லை. மாறாக அவனுடைய கோபத்துக்கான காரணத்தை அறியத்தான் தோன்றியது. எனவே, “ஏன் ஜான்? அம்மா உங்களுக்கு அப்படி என்ன செய்தார்?” என்று கேட்டாள்.

“எனக்கு என்ன செய்திருந்தாலும் அதை தூக்கிப் போட்டுவிட்டு போயிருப்பேனே.” என்றவன், அன்று கடையில் வைத்து நடந்தவைகளை சொன்னபோது, பவித்ரா அதிர்ந்துதான் போனாள்.

அம்மாவின் குணம் அவள் அறிந்ததுதான். ஆனாலும் இவ்வளவு தூரத்துக்கு கீழிறங்கிப் போவாரா? அவன் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல குன்றிப்போனாள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அம்மாவுக்காக மன்னிப்புக் கேட்பது?

இதெல்லாம் தெரியாது அவனிடம் சண்டை வேறு போட்டோமே என்று எண்ணியவள், இறுக மூடியிருந்த அவன் கைகளை தன் கரங்களால் பற்றி, “இதெல்லாம் எனக்குத் தெரியாது ஜான். அந்த நேரம் அண்ணியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும், உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று விளங்குது. சாரிப்பா.. மெய்யாகவே சாரிப்பா..” என்றவளின் குரல் தழுதழுத்தது.

அவளை தன் தோளோடு சேர்த்தணைத்து, “விடு! அவர் பேசியதற்கு நீ என்ன செய்வாய்? ஆனால், அன்று அக்கா பட்ட வேதனையை என்றைக்குமே என்னால் மறக்க முடியாது பவி. மனதிலிருப்பதை எப்போதும் காட்டிக்கொள்கிறவள் இல்லை அவள். அன்று உன் அம்மா பேசிய பேச்சுக்களாலும், யமுனாவைப் பற்றி அறிந்ததாலும் அக்கா பட்ட பாடு இருக்கே..” என்றவனின் முகம் இன்றைக்கும் வேதனையில் கசங்கியது.

அவன் துயரை தன்னதாய் உணர்ந்தவள், அவன் கன்னத்தை ஆறுதலாக தடவிக்கொடுத்தாள். அவள் கரத்தை தன் கரத்தால் பற்றி கன்னத்தோடு சேர்த்து அழுத்தியபடி மனைவியை பார்த்தான் சத்யன்.

அவன் விழிகளில் தெரிந்த தவிப்பில் இவள் கலங்கத் தொடங்கும்போதே, “அன்றுதான் அத்தான்மேல் இன்னுமே கோபம் வந்தது. அந்தக் கோபத்தில் தான்..” என்றவனுக்கு இப்போது தொண்டை அடைத்துக்கொள்ள வலியோடு மனைவியை பார்த்தான்.

அவளுக்கும் கண்ணைக் கரித்தது. தன் தாயின் பேச்சுக்கு ஒரு பாசமுள்ள தம்பியாய் அவனது கோபத்தில் உள்ள நியாயம் புரிந்தாலும், அதற்காக அவளை பகடைக்காயாக அவன் பயன்படுத்தியதும், அவனை நம்பித் தான் ஏமாந்ததும் கண்முன்னால் வந்துபோக இப்போதும் நெஞ்சடைத்தது.

அதுநாள் வரை அவன்மீது தேக்கிவைத்திருந்த கோபத்தைக் காட்டும் சக்தியற்றவளாக அவன் தோளிலேயே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். ஆயினும், வேதனை தாங்காமல் அதிவேகமாகத் துடித்த அவளது இதயமே அவனுக்கு அவள் நிலையை உணர்த்த, அதுவே போதுமாக இருந்தது சத்யனை வதைக்க. அவள் கோபத்தைக் காட்டியிருந்தால் கூட தங்கியிருப்பான் போல.

மனதை சஞ்சலமும் சங்கடமும் சூழ்ந்தாலும் தன்னை விளக்குகிறவனாக, “உனக்கு நான் செய்தது எல்லாமே பெரும் பிழைதான். இன்றைக்கு அது விளங்குகிறது. ஆனால் அன்று..” என்றவன் அவள் விழிகளை நேராகப் பார்த்து, “அதெல்லாம் சரியாத்தான் தெரிந்தது.” என்றான்.

அதிர்ந்துபோய் அவள் பார்க்க, அப்போதும் அவளிடமிருந்து தன் பார்வையை விலக்காது, “அந்தளவு தூரத்துக்கு அக்கா நிலைகுலைந்து போயிருந்தாள். அவளுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் நான். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அத்தான் மாறிவிடுவார். அவரின் கோபம் இன்றைக்கு போய்விடும், நாளைக்கு போய்விடும் என்று குறையாத நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

“யமுனா வந்ததும் அக்கா கூட முற்றிலுமாக உடைந்துபோனாள். எனக்கும் கோபம் தான். ஆனாலும் ஒரு நம்பிக்கை! அத்தானை முழுதாக அறிந்தவனாக காத்திருந்தேன். ஆனால், அக்காவைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்ட பிறகும் கூட அத்தான் அக்காவுடன் சேர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றதும் எனக்கு பெருத்த ஏமாற்றம். இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை என்று நான் நினைத்த அந்த நேரத்தில்தான் துருப்புச்சீட்டாய் நீ கிடைத்தாய். உடனேயே உன்னை பயன்படுத்திக்கொண்டேன். அப்போ எனக்கு வேறு வழி இருக்கவுமில்லை; தெரியவுமில்லை. அந்தநேரம் அது பிழையாகவும் படவில்லை!” என்றவனை விழிகள் விரியப் பார்த்தாள் பவித்ரா.

எவ்வளவு துணிவாக, செய்த தவறுகளை அவளின் முகம் பார்த்து நிமிர்ந்து சொல்கிறான்?

“அதுவரை அப்படி ஒரு எண்ணம் என் மனதில் சத்தியமாக இருக்கவே இல்லை. உன்னைக் கண்டதும்.. எப்படியோ கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடவும் நான் தயாராயில்லை பவி. உன் அம்மாமேலும் அத்தான்மேலும் இருந்த கோபம் உன்னைப் பற்றி சிந்திக்க விடவில்லை. அக்கா மட்டும் தான் என் கண்களுக்குத் தெரிந்தாள்.” என்று அவன் சொன்னபோது கணவனை நிமிர்ந்து பார்த்தாள் பவித்ரா.

அவள் விழிகளில் தெரிந்த வேதனையில் துடித்துப்போய், “என்னடாம்மா?” என்று கேட்டு அவன் உருகியபோது,

கண்கள் கலங்க, “அண்ணிக்காக என்னைக் காதலிப்பதுபோல் நடித்தீர்கள் சரி. ஆனால்.. அன்றைக்கு பௌலிங்கில் வைத்து ஏன் அப்படியெல்லாம் சொன்னீர்கள் ஜான்? அண்ணா என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்? அண்ணி, வித்யா, அஞ்சலி எல்லோரும் எவ்வளவு கேவலமாக என்னை எடை போட்டிருப்பார்கள்..” என்று கேட்டபோது, அவளையும் மீறி இரண்டு கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டன.

துடித்துப்போய் அதைத் தன் விரல்களால் துடைத்துவிட்டான். “அழாத பவிம்மா. என்னுடைய மோசமான செயல்களுக்காக பெறுமதிமிக்க உன் கண்ணீரை வீணாக்காதே!” என்றவனுக்கு அவளின் கேள்விக்கு எதை எப்படி என்று சொல்லி விளக்குவது என்றுதான் புரியவில்லை.

“அன்று பௌலிங்க்கு நீ வருவாய் என்று எனக்கு எப்படித் தெரியும் பவி? அப்படி நீ வருவாய் என்றோ வந்ததும் இப்படிக் கதைக்க வேண்டும் என்றோ நான் யோசிக்கவே இல்லை. ஆனால் உன்னைக் கண்ட அந்த நிமிஷம், எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடவும் நான் தயாரில்லை. அந்த சந்தர்ப்பத்தை, உன்னை பயன்படுத்திக்கொண்டேன். அந்த இடத்தில் என் குறி இரண்டே விஷயம் தான். ஒன்று அத்தானை காயப்படுத்த வேண்டும். இரண்டாவது என் அக்காவின் வாழ்க்கை. பவித்ரா என்கிற பெண் எனக்கு அன்றைக்கு மூன்றாம் பட்சம் தான். அவளைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை..” என்று அவள் முகம் பார்த்துக் கம்பீரமாக உரைத்தபோது திரு திரு என்று முழிக்கத்தான் முடிந்தது அவளால்.

“நான் மூன்றாம் பட்சமா?” என்று அவள் கண்களை உருட்ட, அவளை சமாதானப் படுத்தும் விதமாக அவளின் கையை பற்றி மென்மையாக வருடிக்கொடுத்தான்.

“அது அப்படா! இப்போ.. இந்த மனதுக்குள் நீ மட்டும் தான்..” என்றவன் தொடர்ந்தான்.

“நீ என்னோடு கோப்லென்ஸ் வரைக்கும் வந்தாய் என்று அத்தானிடம் சொல்வதற்காகவே திட்டம் போட்டு உன்னை அங்கு கூட்டிக்கொண்டு போனேன்..” என்று அவன் சொன்னபோது, நம்ப முடியாத அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள் பவித்ரா.

“நீ என்னைக் காதலிக்கிறாய் என்று தெரிந்த பிறகும் அத்தான் உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டால் என்ன செய்வது?” என்று அவளிடமே கேட்டான் சத்யன்.

“உனக்கும் என்மேல் காதல் இருந்தாலும், அதற்கு மேலாக அத்தான்மேல் பாசம் உண்டு. அந்தப் பாசத்தில் நீயும் வேறு மாப்பிள்ளைக்கு தலையாட்டி விட்டாய் என்றால் என் திட்டம் எல்லாமே பாழாகிவிடுமே?” என்றவனை, வாயடைத்துப்போய் பார்த்தாள் பவித்ரா.

“அத்தான் ஒழுக்கத்தை பெரிதாக நினைப்பவர். அவருக்கு நீ என்னோடு அவ்வளவு தூரம் வந்தாய் என்று தெரியவந்தால், அதன்பிறகு கடைசிவந்தாலும் உனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்க்கமாட்டார். என்மேல் உள்ள கோபத்தில் நீயாக மறுத்தால் கூட அத்தான் எனக்கே உன்னைக் கட்டித்தருவார் என்றுதான் நீ கோப்லென்ஸ் வரை வந்ததை அவரிடம் சொன்னேன்.” என்று அவன் வேதனையோடு சொன்னபோது அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
 

NithaniPrabu

Administrator
Staff member
#7
வாய் வார்த்தைகளை மறந்து அவனையே பார்க்க, அவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து, “ஆனால், எந்தளவு தூரத்துக்கு உன்னை காயப்படுத்தினேனோ அதற்கெல்லாம் சேர்த்து இனி உன்னை சந்தோசமா வைத்திருப்பேன் பவி. என்னை நீ நம்பவேண்டும். அன்றைக்கு வேண்டுமானால் நீ என் மனதில் இல்லாமல் இருந்திருக்கலாம்…” என்றவன் தன் நெஞ்சில் கைவைத்து,

“இன்றைக்கு இங்க நீ மட்டும் தான் நிறைந்துபோய் இருக்கிறாய்.” என்றபோதும் பவித்ராவுக்கு பேச்சு வர மறுத்தது.

அவளின் கையைப் பற்றி, “இன்றைக்கு உனக்கு ஒரு வாக்குத் தருகிறேன் பவி. நன்றாகக் கேட்டுக்கொள்! இவ்வளவு நாட்களும் என்னால் நீ பட்ட வேதனைகள் எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வேன். அத்தான் அளவுக்கெல்லாம் எனக்கு பொறுப்பா நடந்துகொள்ளத் தெரியுமா தெரியாது. அந்தளவுக்கு இல்லையென்றாலும் நிச்சயம் உன்னை சந்தோசமாக வைத்திருப்பேன் பவி. எப்படி ஒரு காதல் வாழ்க்கையை நீ வாழ ஆசைப்பட்டாயோ அதைவிட பலமடங்கு மேலாக வாழவைப்பேன். உன்னைக் காதலிப்பதாக நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்த போதே இது நான் நினைத்ததுதான். ஆனால், அதை கடமையாக நினைத்தேன். இன்றைக்கு காதலோடு என் மனதிலிருந்து சொல்கிறேன், இனியும் உன் மனம் நோகிற அளவுக்கு நான் நடப்பேனா என்கிற சந்தேகமே உனக்கு வரவே கூடாது! உன்னை எனக்கு அந்தளவுக்கு பிடிக்கும்டா.”என்று உயிரை உருக்கும் குரலில் அவன் சொன்னபோது, பவித்ராவும் உருகித்தான் போனாள்.

அப்போதும் பேச்சு வர மறுத்தது. ஆனால் அது ஆனந்தத்தில்!

சத்யனோ, மனதிலிருந்த அத்தனையையும் கொட்டிவிட்டு ஏக்கத்தோடு, அவள் முகத்திலேயே பார்வையை பதித்திருந்தான். தன்னை, தன் மனதை சரியாகப் புரிந்துகொண்டாளா என்று!

பவித்ராவோ வாய் வார்த்தைகள் எதையும் உதிர்க்காது, அவன் மார்பில் கிடந்த கற்றை முடிகளை வருடிக் கொடுத்தவள் அப்படியே தன் இதழ்களையும் அங்கே ஆழமாகப் பதித்தாள். தன் மனதை உணர்த்தும் விதமாக!

இனிமையாய் அதிர்ந்தான் சத்யன். அவனது தேகம் சிலிர்த்தது. அடுத்த நொடியே அவளின் எலும்புகள் அத்தனையும் நோருங்கிவிடுமோ என்கிற அளவுக்கு அவளை இறுக்கி அணைத்திருந்தான்!

ஒற்றை முத்தம் அவனுக்குள் நெருப்பை மூட்டிவிட்டிருந்தது!

சூடான மூச்சுக்காற்று அவளின் கன்னத்தில் மோதி அவளுக்குள் அனலை பரப்பியபோது, தன்னுடைய சின்னச் செயல் அவனுக்குள் இவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாகுமா? அந்தளவு தூரத்துக்கு தான் அவனைப் பாதிக்கிறோமா என்றெண்ணியவளுக்கு அந்த நினைப்பே தித்தித்தது.

அந்தத் தித்திப்போடு, “என்னை எந்தளவுக்குப் பிடிக்கும் ஜான்?” என்று ஆவலோடு கேட்க,

தன் அணைப்பிலிருந்து அவளைப் பிரிக்காமல், மாம்பழக் கன்னங்களை வருடிக் கொடுத்தபடி, “எனக்கு என் அம்மாவை பிடிக்கும். தங்கையை பிடிக்கும். அக்காவை மிக மிக பிடிக்கும். ஆனால் உன்னை..” என்றவன் கள்ளச் சிரிப்போடு, “அதையெல்லாம் தாண்டிடா..” என்றான் கண்ணைச் சிமிட்டி.

“அதையும் தாண்டி என்றால்?” தலையை சரித்து அவள் கேட்க, “கிட்டவா..” என்றவன், பேசிய ரகசியத்தில் அவள் செங்கொழுந்ந்தாகிப் போனாள்.

“சீச்சீ ஜான். வெட்கமே இல்லையா உங்களுக்கு?” என்று அவள் கேட்க,

“இதையெல்லாம் கதைக்கிற அளவுக்கு!” என்றான் அவன் அவளையே விழிகளால் விழுங்கிக்கொண்டு

பவித்ராவுக்கோ இவனா இவ்வளவு நாட்களும் சாமியார் வேஷம் போட்டான் என்று ஆச்சரியமாக இருந்தது.

கண்களில் நேசம் மின்ன அவள் பார்க்கவும், அதில் தன்னைத் தொலைத்தவன் தன் இதழ்களை அவளின் விழி மலர்களின் மீது மென்மையாகப் பதித்தான்! அப்படியே கீழிறங்கிய உதடுகள் கன்னத்தில் அழுந்தப் பதிந்து கழுத்தோரமாய் நகர்ந்தது. அணைப்பும் இன்னுமின்னும் இறுகிக்கொண்டே போனது!

அந்த அணைப்புக் கொடுத்த இன்பமான வலியை சுகமாய் தாங்கியவளுக்கு, சொர்க்க சுகமாய் இருந்தது கணவனின் கைகளில் கிடக்கும் அந்த நொடிகள்!

அப்படியே அவள் இருக்க, “என் மேலிருந்த கோபம் போய்விட்டதா?” என்று அவள் முகம் நிமிர்த்தி மெல்லக் கேட்டான் சத்யன்.

சட்டென்று அவன் கழுத்துக்கு தன் கைகளை மாலையாக்கி, “தண்டனை கொடுக்கத்தான் விருப்பமா இருக்கிறது. இவனை விடாதடி பவி; மண்டையில் ஓங்கிக் குட்டுடி என்றுதான் மூளை சொல்கிறது. ஆனால், பாழாய் போன இந்த மனது இந்த முரடனிடம் மயங்கிப்போய் கிடக்கிறதே. நான் என்ன செய்யட்டும் ஜான்?” என்று அவனிடமே கேட்டாள் அந்த கொள்ளை அன்புக்குச் சொந்தக்காரி.

“என்னவாவது செய்டா!” என்று உருகினான் அவன்.

நெஞ்சமெல்லாம் அப்படியொரு அமைதி அவனுக்கு! பரமசுகம் என்பார்களே அதை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவளும் அவனது அணைப்புக்குள் அடங்கிப்போய் கிடக்க, அவனது கைகளும் உதடுகளும் மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கிற்று!

அதில் கிறங்கிக் கிடந்தவள் திடீரென்று, “ஆனாலும் எவ்வளவு திருகுதாளம்? ஜான் என்று பொய்யான பெயரை சொல்லி ஏமாற்றி.. நடித்து.. இந்த வீட்டுக்கு பாதை தெரியாதாடா உனக்கு? என் அண்ணி யார் என்று தெரியாதா உனக்கு? இதில் எங்கள் குடும்ப விசயத்தில் இவர் தலையிட மாட்டாராம். என்னமா நடிச்சடா கள்ளா!” என்று கேட்டு அவனை மொத்தத் தொடங்கினாள் அவள்.

திடீரென்று விழுந்த அடிகளில் முதலில் திக்குமுக்காடியவன், “கட்டின புருஷனை அடிக்காதடி..” என்று சிரித்தபடி அவளிடம் வாங்கிக் கட்டினான்.

போதாக்குறைக்கு, “எப்படி நான் நல்லா நடித்தேனா?” என்று வேறு குறும்போடு கேட்டான்.

கொலை வெறியோடு அவனை முறைத்தாள் பவித்ரா. “என்னை எமாற்றினதும் இல்லாமல் நல்லா நடித்தேனா என்று கேள்வி வேறயா.. இந்தக் கொழுப்புக்கு இருடா உனக்கு..” என்றபடி ஆவேசமாக அவன் மீது பாய்ந்தவளை பூப்பந்தாக தனக்குள் அடக்கிக்கொண்டான் அவன்.

“விடுடா என்னை! இன்னும் உனக்கு நாலு போட்டாத்தான் என் கோபம் அடங்கும்!” என்று மூச்சிரைத்தபடி அவள் விடுபடப் போராட,

“கை வலிக்கப்போகிறது..” என்றவன், அவளின் கரங்களை பற்றி உள்ளங்கைகளில் முத்தமிட்டான்.

உள்ளங்கையில் இருந்து உடல் முழுவதும் சிலிர்க்கத் தொடங்க, கண்மூடிக் கிறங்கியவளை தன்மேல் கொண்டுவந்தான் சத்யன். தனக்குள் பற்றிக்கொண்ட மோகத்தீயை அவளுக்குள்ளும் பற்றவைக்கும் எண்ணத்துடன் தன் தேவைகளை அவளுக்குள் தேடத் தொடங்கினான்.

பவித்ராவோ திடீரென்று நினைவு வந்தவளாக,“அஞ்சலிக்கு நீங்கள் அண்ணியின் தம்பி என்று தெரியாதா?” என்று கேட்டாள்.

அவனோ அவளின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை. ஆழ்கடலுக்குள் முத்துக்குளிப்பவன் போல் அவளது பெண்மை எனும் கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தான்.

“ஜான்! நான் கேட்டதற்கு பதிலைச் சொல்லுங்கள்.” என்றவள் அவனது கைகளுக்கும் உதடுகளுக்கும் தடைபோட, கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையிலிருந்தான் சத்யன்.

“இப்போ அதுவா முக்கியம்?” என்று கேட்டவன், தன்னுடைய முக்கியமான அலுவலில் மீண்டும் மூழ்க, அவன் கன்னத்திலேயே ஒன்று போட்டாள் அவனது பாதி.

“நான் ஏமாந்த கதை எனக்கு முக்கியமில்லையா?” என்றாள் முறைப்போடு.

“அவளை எனக்கு பள்ளிக்கூடத்தில் தான் தெரியும். அர்ஜூன் அண்ணாவை அத்தானின் நண்பனாகத் தெரியும். அர்ஜூன் அண்ணாவின் தங்கைதான் அஞ்சலி என்று எனக்கு எப்படித் தெரியாதோ அப்படித்தான் அவளுக்கும் நான் அக்காவின் தம்பி என்று தெரியாது. போதுமா?” என்று வேக வேகமாக ஒப்பித்தவன், “கிட்ட வா பவி..” என்று அவளை இழுத்தான்.

அவனின் இழுப்புக்கு இசைந்தபோதும்,“இன்னொரு சந்தேகம் ஜான்..” என்றாள் அவன் கையை சுரண்டி.

இப்போது சத்யன் முறைத்தான். “உன் சந்தேகத்தை எல்லாம் பிறகு கேள். முதலில் என் சந்தேகங்களை தீர்க்க விடு!” என்றவனின் கைகள் அவளின் அழகு மேனிக்குள் புதையல் தேடி அலைந்தது.

அவன் கைகளை பிடித்துத் தடுத்தபடி, “உங்களுக்கு யார் ஜான் என்று பெயர் வைத்தது?எல்லோரும் சத்தி என்றுதானே கூப்பிடுகிறார்கள்.” என்றவளை இதெல்லாம் ஒரு சந்தேகமா என்பதாக முறைத்தான் சத்யன்.

அந்தப் பார்வையை உணர்ந்து, “கேள்வி கொஞ்சம் கேவலமா இருக்குத்தானே..” என்று அசடு வழிந்தாள் அவள்.

“கொஞ்சமில்லை.. நிறைய!” என்றான் அவன் கடுப்புடன்.

“கொஞ்சமோ நிறையவோ பதிலை சொல்லுங்கள் ஜான்…” என்று சிணுங்கினாள் அவள்.

அந்தச் சினுங்கல் கூட அவனை அவஸ்தைக்குள் உள்ளாக்க, “ஜேர்மன்காரர்களுக்கு சத்யன் என்கிற பெயர் வாய்க்குள் நுழையாது. என் பெயரின் கடைசியில் வரும் ‘யன்’ ஐ அவர்களுக்கு வசதியாக ஜான் என்று மாற்றிவிட்டார்கள். கல்லூரி, பாடசாலை மூலம் என்னை தெரிந்தவர்களுக்கு நான் ஜான். இப்போவாவது உன் சந்தேகம் தீர்ந்ததா?” என்று கேட்டவன் மீண்டும் தன் தேடலை ஆரம்பிக்க, “பவித்ரா..” என்று கவிதா அழைக்கும் குரல் கேட்டது.

சத்யனின் காதை அது எட்டாத போதும் பவித்ராவின் காதில் எட்டியது. “ஜான், அக்கா கூப்பிடுகிறார்..” என்றாள்.

“இப்போ வரமுடியாது என்று சொல்.” அவளின் கழுத்து வளைவுக்குள் இருந்து பதில் வந்தது.
 

NithaniPrabu

Administrator
Staff member
#8
அதெப்படி சொல்ல முடியும்? நாளைக்கு காலையில் யமுனா வீட்டு விசேசத்துக்கு கிளம்புகிறவளிடம் இன்றைக்கு நேரமில்லை என்று சொல்ல முடியுமா?

“என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேனே. ஏதாவது முக்கிமாக இருக்கப் போகிறது.” என்றாள் அவள்.

“அதைவிட இது முக்கியம்.” என்றவன் அவளுக்குள் இன்னுமின்னும் புதைய, கவிதா திரும்பவும் அழைத்தபடி மேலே வருவது கேட்க பவித்ராவுக்குள் பதட்டம் தொற்றிக்கொண்டது.

“ப்ளீஸ்பா. அக்கா மேலே வருகிறாள். இப்போது என்னை விடுங்கள். பிறகு வருகிறேன். என் செல்லம் தானே..” என்று அவள் கெஞ்சிக் கொஞ்ச, அவனோ அவளது நிலை புரிந்தாலும் மோகம் கொடுத்த முறுக்கிலிருந்து மீள முடியாமல் அவளை முறைத்தான்.

“என்னடா முறைப்பு இது? என்னவோ என்னை விட்டு பிரிந்தே இருக்காதவன் மாதிரி. இவ்வளவு நாளும் நான் ஒருத்தி இருக்கிற நினைப்பே இல்லாமல் இருந்துவிட்டு.. அதுவும் அன்றைக்கு இதே கட்டிலில் நான் படுத்திருக்க, எங்கேயோ முகத்தை திருப்பிக்கொண்டு நின்றுவிட்டு இன்றுமட்டும் என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு?” என்றாள் கடுப்புடன்.

அவனோ “அன்றைக்கா.. அது இங்கே.. இங்கே..” என்று, அன்று எங்கெல்லாம் அவளின் உடலின் பாகங்கள் தெரிகிறது என்று அவள் வெட்கினாளோ அங்கெல்லாம் தாராளமாக தன் கையால் தொட்டுக் காட்டி அவளை நெளியச் செய்தவன், “அதையெல்லாம் பார்த்தால் நல்ல பிள்ளையாக இருக்கிற நான் கெட்டபிள்ளை ஆகிவிடுவேனோ என்கிற பயத்தில் பார்க்கவில்லை.” என்றான்.

அப்போ.. அன்றைக்கே கணவன் அவளிடம் தடுமாறி இருக்கிறான். உள்ளம் துள்ளினாலும், “நீயாடா நல்லவன்? மகா கள்ளன்!” என்றவள், அவன் அசந்த நேரம் பார்த்து அவனைத் தள்ளிவிட்டு எழுந்து ஓடினாள்.

ஒருகணம் ஏமாற்றத்தோடு அவளை பார்த்தாலும், “மாட்டுவாய் தானே. அப்போ இருக்கு உனக்கு!” என்று பொய்யாக கருவியவனின் உள்ளம் எல்லாம் துள்ளலே நிறைந்திருந்தது.

பவித்ரா கவிதாவோடு சென்றுவிட, தனியே இறங்கி வந்த சத்யனிடம், “உங்கள் எல்லோராலும் நான் கஷ்டப்பட்டதாக பவி நினைக்கிறாள் போல சத்தி. அதனால் தான் அம்மா அப்பாவுக்கு காசு அனுப்புவதாகச் சொல்கிறாள். எனக்கு அப்படி எதுவும் கிடையாது. உங்கள் எல்லோரினதும் சந்தோசத்தில் தான் என் சந்தோசம் அடங்கியிருக்கிறது. நானே அம்மா அப்பாவை பார்த்துக் கொள்வேன். நீ இதைப்பற்றி எதுவும் யோசிக்காதே.” என்றான் கீர்த்தனன்.

தங்களையும் தன் கூடப் பிறந்தவர்களையும் வேறாக நினைக்காத அவனின் அன்பில் உள்ளம் நெகிழ, “அத்தான், உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டான் சத்யன்.

கீத்னுக்கு சிரிப்புத்தான் வந்தது. “இதே வாய் தானேடா என்மேல் என்னென்னவோ பழியெல்லாம் போட்டது?” அவனை சகஜமாக்க கீர்த்தனன் வேண்டுமென்றே சொன்னான்.

“அது நாறவாய் அத்தான். இது நல்லவாய்.” என்றான் சத்யனும் சளைக்காமல்.

“நன்றாக சமாளிக்கிறாய்டா..” என்று கீர்த்தனன் நகைக்க, “உண்மையாகவே உங்கள் அம்மாவுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவும் எனக்கு விருப்பமில்லை அத்தான். ஆனால்.. என் பவிக்காக..” என்றவனின் முகம் சட்டெனச் சிவந்துபோயிற்று.

சின்னச் சிரிப்போடு சமாளித்துக்கொண்டு, “உங்கள் தங்கைக்காக அவளின் சந்தோசத்துக்காக, அவர்கள் அவளின் அம்மா அப்பா என்பதற்காக இனிமேல் அவர்களை நான் பார்த்துக் கொள்வேன். அதனால் பவி சொன்னதுதான் என் பதிலும்.” என்றான் சத்யன்.

ஒன்றுமே சொல்லவில்லை கீர்த்தனன். சொல்ல வாய் வரவில்லை என்பதுதான் உண்மை. காசு விஷயத்தை மீறிக்கொண்டு ‘என் பவி’ என்று சொல்லிவிட்டு ‘உங்கள் தங்கை’ என்று அவன் மாற்றியதிலேயே மகிழ்ந்தது அவன் உள்ளம். தங்கை சத்யனின் மனதில் வந்துவிட்டாள். அதுவே போதுமே!

அதற்குமுன்னால் பணமெல்லாம் ஒரு விசயமா என்ன?

பாசத்தோடு சத்யனை அணைத்துக்கொண்டவன், “எதையாவது செய்ங்கடா..” என்று முடித்தான்.


அடுத்தநாள் காலை கீதன் வெளியே சென்றிருந்தான். சேகரன் சற்று நேரத்தில் யமுனா வீட்டுக்கு புறப்படுவதால் காருக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றிருந்தான்.

சூட்கேசில் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த கவிதா, அன்று மாலை நடக்கவிருக்கும் யமுனாவின் நிச்சயதார்த்தத்துக்கு கட்டவிருந்த புடவையை எடுத்து பவித்ராவுக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் கொஞ்சம் நல்ல சேலையாக எடுத்திருக்கலாம். எங்கே இந்த திவி விட்டால் தானே. ஒரே சிணுங்கிக்கொண்டே இருந்தாள். உன் அத்தானும் கெதியாக எடுத்துக்கொண்டு வா என்று கத்த, கண்ணில் பட்டதை தூக்கிக்கொண்டு வந்துவிட்டேன்.” என்று புலம்பினாள் கவிதா.

பவித்ராவுக்கும் இன்னும் கொஞ்சம் நல்லதாக இருக்கலாமோ என்று தோன்ற, “பொறுக்கா. என்னிடம் ஒரு சாரி இருக்கிறது. அது பிடித்திருந்தால், அதையே கட்டு..” என்றவள் கதவைத் திறந்துகொண்டு தன் வீட்டுக்கு மேலே சென்றாள்.

மித்ராவும், தன்னிடம் இருக்கும் சேலைகள் நினைவு வர உள்ளே சென்று தன்னதுகளை எடுத்துக்கொண்டு வந்து கவிதாவிடம் நீட்டி, “இதில் இருக்கும் எந்த சேலையாவது உனக்குப் பிடித்திருந்தால் அதை எடு கவிதா..” என்றாள்.

கவிதாவோ நிமிர்ந்து மித்ராவை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு வீட்டுக்குள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று அவசரமாக பார்வையை சுழற்றினாள். யாருமில்லை என்றதும் மித்ராவை முறைத்தாள்.

முதல்நாள் சொல்லாமல் வந்ததற்கு கணவன் கண்டித்ததும், பவித்ரா பணம் அனுப்பும் விசயத்தில் தன்னை இழுத்ததும், ஏற்கனவே அவள் மீதிருந்த வெறுப்பும் சேர, முறையாக மித்ராவும் தனிமையில் அகப்படவும், “சீ! நீ கட்டிய சேலை எல்லாம் கட்டும் அளவுக்கு என்னையும் என்ன உன்னை மாதிரி ஒழுக்கம் கெட்டவள் என்று நினைத்தாயா?” என்று வார்த்தைகளை விசமென வீசியவள், மித்ராவின் கையிலிருந்த சேலைகளை தட்டிவிட்டாள்.

அடுத்த நொடியே, “கவிதா..!!” என்ற கணவனின் கர்ஜனையில் திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் தேகமெல்லாம் ஆடிப்போனது.

பவித்ரா கதவை திறந்து விட்டுவிட்டுப் போனதில் சேகரன் வந்ததை அவள் கவனிக்கவில்லை.

எதிர்பாராமல் கிடைத்த சாட்டையடியில் திகைத்து, அவமானத்தில் குன்றி, மளுக்கென்று வெடித்துக்கொண்டு வந்த அழுகையை அடக்க முடியாமல், பேச்சு மூச்சற்று நின்ற மித்ராவும் அங்கே திடீரென்று சேகரனைக் கண்டதில் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள்.

கவிதாவோ கணவனை அச்சத்தோடு பார்த்தாள். சிவந்த விழிகளால் மனைவியை உறுத்தவன், “அறிவிருக்கா உனக்கு? எங்கே நின்று என்ன கதைக்கிறாய்? அவள் யாரு முதலில்? உன் அண்ணி!” என்றான் கடுமையாக.

காதலோடு கொஞ்சும் கணவனின் வெறுப்பில் அழுகை பொத்துக்கொண்டு வந்தது கவிதாவுக்கு.

“உன் அம்மாவோடு சேர்ந்து சேர்ந்து உனக்கும் அவர் குணம் வந்துவிட்டது போல!”

தாயை சொன்னதும் பொறுக்க மாட்டாமல், “இல்லையப்பா அது..” என்றபடி நிமிர்ந்தவளை, கணவனின் தீப்பார்வை அடக்கியது.

“இனிமேல் மித்ராவைப் பற்றி என்ன பேசுவதாக இருந்தாலும் அவள் என் உடன்பிறவாத தங்கை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பேசு!” என்று விரல் நீட்டி எச்சரித்தான் சேகரன்.

“உன் குணமும் பேச்சும் எனக்கு எப்போதோ தெரியும். இருந்தாலும் நீயாக மாறுவாய், அவசரப்பட்டு இதில் தலையிட்டு உன் வெறுப்பை இன்னுமின்னும் வளர்த்துவிடக் கூடாது என்றுதான் கண்டும் காணாமல் இருந்தேன். நீயானால் திருந்துகிற மாதிரி தெரியவில்லை. இனியாவது திருந்தவேண்டும், இல்லையோ..” என்று உறுமியவனிடம்,

“அண்ணா ப்ளீஸ்..” என்று சிரமப்பட்டுக் கெஞ்சினாள் மித்ரா.

கவிதாவின் பேச்சு அவளை ஆழமாக காயப்படுத்தினாலும், அவர்களுக்குள் தன்னால் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்றெண்ணி மித்ரா இடையில் புக, “நீ கொஞ்சம் பேசாமல் இரு மித்ரா!” என்று அவளை அடக்கிவிட்டு மனைவியிடம் திரும்பினான் சேகரன்.

“இதுதான் மித்ராவைப் பற்றி நீ பிழையாக கதைத்தது கடைசியாக இருக்கவேண்டும். இல்லையோ.. உன் கணவனின் இன்னொரு முகத்தை பார்ப்பாய். நீ மட்டுமில்லை, உன் அம்மாவிடமும் சொல்லிவை. மித்ராவை பாதிக்கும் விதமாக ஏதாவது நடந்தால் அது உன்னில் தான் வந்து முடியும் என்று. அவள் என் தங்கை. அதற்கு ஏற்ற மாதிரித்தான் இருக்கவேண்டும் உன் பேச்சுக்களும் செயல்களும். புரிந்ததா?”

சேகரன் கர்ஜித்ததில், புரிந்ததோ இல்லையோ.. வேக வேகமாக தலையை ஆட்டினாள் கவிதா.

“முதலில் மித்ராவிடம் மன்னிப்புக் கேள்!” என்றான் அப்போதும் அதட்டலாக.

“ஐயோ அண்ணா. அதெல்லாம் வேண்டாம்..” என்றவளை சேகரனின் பார்வை அடக்கியது.

மனைவியிடம் திரும்பி, “ம்..!” என்று தலையை அசைத்தான் கட்டளையாக.

கவிதா கண்களில் இருந்து கண்ணீர் வழிய மித்ராவிடம் திரும்ப, “அதெல்லாம் வேண்டாம் கவிதா..” என்று அவளை வந்து அணைத்துகொண்டாள் மித்ரா.
 

NithaniPrabu

Administrator
Staff member
#9
இவள் எல்லாம் சமாதானப் படுத்தும் இடத்திலா நாம் இருக்கிறோம் என்று மனம் புகைய, அவளிடம் இருந்து நாசுக்காக விடுபட்டு, “சாரி..” என்றாள் உள்ளே போன குரலில்.

“அதென்ன வெறும் சாரி? அவள் யார் உனக்கு?” என்று அப்போதும் கடுமையான குரலி கேட்டான் சேகரன்.

“சாரி அண்ணி!”

“இந்த ‘அண்ணி’யை மறந்துவிடாதே! உன் அண்ணனின் மனைவி அவள்!” என்ற சேகரன் அங்கிருந்து சென்றுவிட, சங்கடமான அமைதி அந்த இடத்தை சூழ்ந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் மித்ரா நிற்க, தன் சேலையோடு சேகரனின் பின்னாலேயே வந்திருந்த பவித்ராவும் அக்காவுக்கு இது வேண்டும் என்பதாக அமைதியாகவே நின்றாள். தங்கையும் தனக்கு ஆதரவாக நிற்காமல் போனதில் அவமானம் பிடுங்கித் தின்ன அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் அறைக்குள் ஓடினாள் கவிதா.

மித்ராவும் காலம் முழுக்க தன்னைத் தொடரும் இந்த அவப்பெயருக்கு முடிவே இல்லையா என்று கதறிய நெஞ்சத்தையும், பெரிதாக வெடித்த அழுகையையும் அடக்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் கீர்த்தனன் வந்துவிட, மித்ராவின் விழிகளில் தெரிந்த வலியையும், முகச் சிவப்பையும் கண்டுவிட்டு அவன் எவ்வளவோ விசாரித்தும் ஒன்றுமில்லை என்று சாதித்துவிட்டாள் அவள்.

அதை நம்பாதபோதும், வீட்டில் ஆட்களை வைத்துக்கொண்டு அதற்கு மேலும் அவளை தூண்டித் துருவ முடியாமல் விட்டுவிட்டான் கீர்த்தனன்.

சற்று நேரத்தில் தயாராகி வந்த சேகரன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு மகளோடு காருக்குச் செல்ல, தயங்கித் தயங்கி வந்த கவிதா, கீர்த்தனனின் கண்ணைப் பாராமல், “வருகிறேன் அண்ணா..” என்று விடைபெற்றாள்.

“போ! ஆனால் இனிமேல் இங்கு வராதே!” என்றான் கீர்த்தனன்.

“அண்ணா..!” அதிர்ச்சியோடு தமையனைப் பார்த்தவளின் விழிகள் குளம் கட்டியது. அதோடு அங்கே மித்ரா, சத்யன், பவித்ரா எல்லோரும் நின்றதில் அவமானமாக வேறு உணர்ந்தாள்.

“அப்படிக் கூப்பிடாதே என்னை. என்னை அண்ணாவாக மதித்திருந்தால் இவளை அண்ணியாக மதித்திருப்பாய்!” என்று மித்ராவின் கையைப் பிடித்துச் சொன்னவன், “இனிமேல் என் மனைவியை உன் அண்ணியாக ஏற்று வருவதாக இருந்தால் இங்கே வா. இல்லையானால் வராதே.” என்றான் அப்போதும் ஈவு இரக்கமற்று.

“மற்றவர்களின் முன்னால் வைத்து என்னை அவமானப் படுத்துகிறீர்களா அண்ணா?” அழுகையும் ஆத்திரமும் போட்டிபோடக் கேட்டாள் கவிதா.

“நீ இன்னும் திருந்தவில்லை!” என்றான் கசப்புடன். “இது என் குடும்பம் கவி. மற்றவர்கள் இல்லை! முதலில் அதை நன்றாக விளங்கிக்கொள். அதை விளங்கி, இவர்களை எல்லாம் உன் உறவாக ஏற்றால் மட்டும் தான் உனக்கு அண்ணா வீடு. இல்லையோ இனி அப்படியொரு வீடு என்றைக்கும் உனக்கில்லை!” என்றான் தாட்சண்யம் ஏதுமற்ற குரலில்.

கன்னங்களில் கண்ணீர் கரகரவென்று இறங்க, அங்கிருந்து ஓடிய தங்கையைப் பார்த்து சற்றும் இரங்கவில்லை கீர்த்தனன்.

“ஏன் கீதன் அப்படியெல்லாம் சொன்னீர்கள்? அவள் அழுதுகொண்டு போகிறாள்.” என்று கேட்ட மனைவியை தீப்பார்வை பார்த்தான் அவன். அதோடு அவளும் அடங்கிப்போனாள்.

அன்று தன் மனதை, அதில் உள்ளதை அவ்வளவு தூரம் சொல்லியும் இன்று நடந்ததைப் பற்றி அவள் மூச்சே விடவில்லையே! தான் வாய்விட்டுக் கேட்டும் சொல்லவில்லை என்பது அவனை மிகவுமே பாதித்திருந்தது.

சத்யனும் பவித்ராவுமோ கவிதாவுக்கு ‘இவளுக்கு இது வேண்டும்’ என்று ஒருமனதாக நினைத்தனர்.


அழுகையோடு காரில் வந்து ஏறிய மனைவியின் முகத்தை வைத்தே ஏதோ நடந்திருப்பதை ஊகித்தான் சேகரன். ஆனாலும் அமைதியாகவே அவன் காரைச் செலுத்த, இவளும் மூக்கை உறிஞ்சி, முந்தானையால் கண்களை துடைத்து என்று தான் அழுவதை விதம் விதமாக அவனுக்குக் காட்டித்தான் பார்த்தாள். அவனோ அசையவே இல்லை. வீதியில் பார்வையை பதித்து காரை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டே இருந்தான்.

கவிதாவின் பொறுமை பறக்க அவளின் எல்லாக் கோபமும் கணவனின் பக்கம் திரும்பியது.

“கட்டிய மனைவி அழுகிறாளே என்ன ஏது என்று கேட்டீர்களா நீங்கள்? உங்களை எல்லாம் நல்லவர் என்று நம்பி என்னைக் கட்டிக் கொடுத்த அம்மாவை சொல்லவேண்டும்! எல்லாம் என் தலையெழுத்து! கட்டியவரும் சரியில்லை, கூடப் பிறந்தவர்களும் சரியில்லை!” என்று தமையன் மேலிருந்த கோபத்தை கணவன் மீது காட்டினாள்.

“காரணம் தெரியாவிட்டால் தானே ஏன் என்று கேட்க?” என்றான் சேகரன் அசட்டையாக.

“என்ன தெரியும் உங்களுக்கு? அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?” என்றவளுக்கு தமையனின் பேச்சில் இப்போதும் அழுகை வந்தது.

“என்ன சொல்லியிருப்பான்? மித்ராவைப் பற்றி இனியும் தேவையில்லாமல் கதைப்பதாக இருந்தால் இங்கே வராதே என்று சொல்லியிருப்பான்.” என்ற கணவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் கவிதா.

“எப்படித் தெரியும் உங்களுக்கு?”

“இது தெரிய என்ன பெரிதாக வேண்டிக் கிடக்கிறது? அவன் உனக்கு ஏதாவது குறை வைத்தானா? இன்று வரைக்கும் நல்ல அண்ணனாகத் தானே நடந்துகொள்கிறான். அப்படியானவனின் மனைவியை நீ குத்திக் குத்திப் பேசினால் யார்தான் பொறுத்துப் போவார்கள்? எந்த நல்ல ஆண்மகனும் இதைத்தான் சொல்வான்.” என்றான் சேகரன்.

“உனக்கு வாய் சரியில்லை. அதனால் இது உனக்குத் தேவைதான். ஆனால், தனா உன் அண்ணா என்றாலும் அவன் எனக்கு நல்ல நண்பன். உன் சரியில்லாத வாயால் அவனையும் அவன் நட்பையும் இழக்க நான் தயாரில்லை. இனியும் நீ திருந்தவில்லை என்றால் நான் மட்டும்தான் இனி இங்கே வருவேன். நீ ஜெர்மனியையும் உன் அண்ணா தங்கையையும் இந்த முறையோடு மறந்துவிடு. உன்னைக் கட்டிய பாவத்துக்கு உன்னோடு சேர்ந்து நானும் அவர்கள் முன்னால் கூனிக்குறுகி நிற்க முடியாது.” என்றான் சேகரன் கடுமையான குரலில்.

மீண்டும் கண்களில் கண்ணீர் தளும்பியது அவளுக்கு. அதுவும் கணவன் சொன்ன, ‘உன்னை கட்டிய பாவத்துக்கு’ என்ற வார்த்தைகள் மனதில் வலித்தது. அதற்குமேல் வாயே திறக்க முடியவில்லை அவளால். சேகரனும் அவளிடம் பேச்சுக் கொடுக்கவில்லை.

இனியாவது அவள் திருந்தவேண்டும்! என்று எண்ணிக்கொண்டான்.தொடரும்..


கமெண்டுவீர்களாக.

கூகிள் லிங்க் பின்னேரமா போடுறேன்..

 
#10
Super nitha 👌👌👌👌👌நன்றி சீக்கிரமா mithuva சிரிக்க வைங்க 3எபி போட்டதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்
 
#11
நன்றி... நன்றி ....sema sis...3epi sernthu padikka arumaiyaha irunthathu.... pavikaha illai virumbiye than vanthan endru theriyum bothu Mithra jollippal....
 
#12
Google drive link ma'am.
 
#13
சூப்பர் மேம். ஒரே நேரத்தில் மூணு எபிசோட்.
 
#15
Super sis
 
#16
Face book la podunga mam
 
#17
Very nice story.
 
#18
Very nice and super epi.(y)
 
#19
epi is going nicely. looking forward for the next epis. Best wishes for the exceptional writing Nitha!
 
#20
thank you for the 3 epi at same time
very nice story line
 
Top