அத்தியாயம்- 12

K.Thanu

Active member
#1
இராவணனே என் இராமனாய்..........
பகுதி – 12


அவளின் கண்ணீர் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று தனஞ்சயனே சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் முதன் முதலாக அவன் முன்பு சிந்திய கண்ணீர் அவனை அசைத்துத்தான்விட்டிருந்தது.

அவளை அவன் கடத்தி வந்த நாளில் இருந்து அவன் அவளிடம் அவளின் கோபத்தினையும் அலட்சியத்தினையும் மட்டும் தான் கண்டிருக்கிறான்.அதனால் தானோ என்னவோ தான் செய்தது தவறு என்று தெரிந்தே இருந்தாலும் அவன் அதற்காக சிறிது கூட வருத்தப்பட்டதில்லை. அதற்கு அவனுக்கு அதுவரை நேரமும் இருந்ததில்லை.

வீட்டில் அவளை காணும் போது மட்டும் உள்ளே சிறிது உறுத்தும்..ச்ச்சே...ஒரு சிறு பெண்ணின் வாழ்வோடு அநியாயமாக விளையாடி விட்டோமோ என்று...ஆனால் கூடிய விரைவிலேயே சுபாங்கியின் கோப வார்த்தைகளோ அல்லது ஏதோ ஒரு அலட்சிய செயலோ அவளின் தந்தையின் நினைவை கிளப்பிவிட அது அவனின் அந்த உறுத்தலை அடியோடு துடைத்து எறிந்துவிடும்.

ஆனால் இன்றோ எல்லாம் நேர்மாறாய் இருந்தது. அவளின் கண்ணீர் மனதை ஏதோ செய்ய உடனே புறப்பட்டு தன்னுடைய கரும்பு தொழிற்சாலைக்கு வந்தவன் அங்கும் எதிலும் மனம் பதியாமல் தன்னுடைய அலுவல் அறைக்குள் வந்து முடங்கி விட்டான். அவன் கண் முன்பு சுபியின் கண்ணீர் முகமே வந்து வந்து போனது.

“நானும் மனிதப்பிறவி தான் அத்தான்.”

அவள் கண்ணீர்க்குரல் காதுக்குள் ரீங்காரமிட இரு கைகளாலும் தலையை தாங்கிய படி அமர்ந்தான் தனஞ்சயன்.


மிகப்பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று முதன் முதலாய் மனது கலங்கியது. அவளே கூறியது போல இதில் அவள் செய்த தவறு தான் என்ன ? அவளுக்கு எதற்கு இந்த தண்டனை?

தன் போக்கில் எண்ணமிட்டுக் கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்து அமர்ந்தான்.

அவனை திருமணம் செய்வது ஒரு பெண்ணுக்கு தண்டனையாகுமா? அந்த நிலையிலா அவன் இருக்கிறான். அவன் ஒரு திகைப்புடன் தனக்குள்ளே கேள்வி எழுப்பும் போதே அவன் மனசாட்சி பின்னே இல்லையா...?? என கெக்கலி கொட்டியது. சுபி போன்ற ஒரு பெண் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருத்தி..... அவளுக்கு நீ எந்த விதத்தில் ஏற்றவன்.... நீ இப்படி ஒரு முட்டாள்த்தனமான காரியத்தினை செய்திருக்காவிட்டால் இந்நேரம் அவள் தந்தை கூறியது போல அவளுக்கு ரிஷியுடன் திருமணம் நடந்திருக்க கூடும். அவளும் ஒரு மருத்துவரின் மனைவியாய் சமூக அந்தஸ்தோடு வாழ்ந்திருப்பாள்.

அதைவிட்டு ஒரு காட்டுமிராண்டியை போல அவளை கடத்தி வந்து அவள் சம்மதம் இன்றியே அவளை மணம் முடித்து ஒரு சிறைக் கைதியைப் போல் அல்லவா அவளை வைத்திருக்கிறான் இந்த வாழ்வு நிச்சயம் அவளுக்கு தண்டனையாகத்தானே இருக்கும்.

அத்தோடு நானும் மனிதப்பிறவி தான் அத்தான் என்று சொல்லி அழுதாளே...அவள் மனதில் என்ன என்ன ஆசைகள் இருந்தனவோ... ஒ...ஒருவேளை அ...அந்த ரிஷியை அவள் மனமும் விரும்பி இருந்தால்.....

சட்டென மூச்சடைக்க இருக்கையில் இருந்து எழுந்தான் தனா... ஏன் அவன் இதை முன்பே யோசித்துப் பார்க்கவில்லை.... ஒருவேளை அப்படி இருந்தால் அவன் அவளுக்கு எவ்வளவு பெரிய அநீதியை இளைத்திருக்கிறான்..... எண்ணும் போதே உள்ளே வலித்தது அவனுக்கு.... சும்மாவே அவன் வாழ்வில் உள்ள சிக்கல்கள் போதாது என்று இதில் ஒரு சிறு பெண்ணின் வாழ்வையும் அல்லவா தன்னுடன் பிணைத்து சிக்கலாக்கி வைத்திருக்கிறான்... பனை மரத்தில் தேள் கொட்டிய கதையைப் போல எங்கோ யார் யார் மேலோ உள்ள கோபத்தை எல்லாம் இந்த பெண்ணின் மீது காட்டி....ச்சே.....மனம் ஒரேயடியாக குழம்பித்தவித்தது தனாவிற்கு.


அன்று சுபாங்கிக்குமே மனநிலை அவ்வளவு எளிதில் சரியாகவில்லை. வழக்கம் போல அவளால் தனா கூறிய விடயத்தை அவ்வளவு இலகுவில் மறக்க முடியவில்லை. தனா கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவள் காதினுள் ரீங்காரமிட்டது. அவன் அவளை பற்றி என்னதான் எண்ணிக்கொண்டிருகிறான். அவள் மீது சிறு சாதாரண ஈர்ப்புக் கூடவின்றி பழிவாங்க வெறுமே அவள் தந்தையை பழிவாங்க மட்டுமே அவளை மணம் முடித்தேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் பொது ஒரு பெண்ணாய் அவள் மனம் எவ்வளவு வேதனை கொள்ளும் என்பதை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்க மாட்டானா..?? அவள் என்ன எந்த உணர்வும் அற்ற ஜடமா??? ஜஸ்ட் ஒரு பலியாடு போல அவளை பயன்படுத்தியிருக்கிறான்.

ஹ்ம்ம்...அவள் தான் லூசு போல எப்போதோ நடந்த சிறு விடயத்தை மனதில் வைத்து என்னென்னவோ கற்பனைக் கோட்டைகளை கட்டிக்கொண்டிருந்திருக்கிறாள். எந்த அர்த்தமுமே இன்றி... எண்ணும்போதே சூடான கண்ணீர் குபுக்கென பொங்கி கரகரவென கன்னத்தில் வழிந்தது. ஆத்திரத்துடன் கண்ணீரைத் துடைத்தாள். உள்ளே இருந்த வலி சற்றாவது மட்டுப்பட்டால் அல்லவோ கண்ணீர் நிற்பதற்கு....

ச்சு....என்று தன்மேலே எழுந்த கோபத்துடன் இருந்த இடத்தை விட்டு எழுந்தவள் மனதை மாற்றும் முயற்சியாக சுற்றுப்புறத்தில் பார்வையை அலையவிட்டாள். வழக்கம் போல மன அமைதி தேடி மாட்டுக் கொட்டகைப் பக்கம்தான் வந்திருந்தாள். அவளின் பார்வை வட்டத்தில் சிவப்பியும் அதன் கன்றுக்குட்டியும் பட... வைக்கோல் கட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு கவனமாக சிவப்பியைத் தாண்டி அதன் கன்றை நெருங்கினாள். அந்த இளங்கன்றின் ஸ்பரிசம் மனதை ஏதோ ஒருவிதத்தில் சற்று அமைதியாக்க அதற்கு வைக்கோலை உண்ணக் கொடுத்தவாறே திரும்பியவள் பார்வையில் சிவப்பி பட்டது. அவளையே நோக்கியிருந்த அதன் பார்வை என்னைக் கொஞ்ச மாட்டாயா என்று கேட்பது போல் இருக்க.... சாமிநாதனின் எச்சரிப்பினையும் மறந்து மெல்ல அதனை நெருங்கி அதன் தலையை தடவிக்கொடுத்தாள் சுபாங்கி. முதல் இரண்டு வருடலுக்கு பேசாமல் நின்ற மாடு திடீரென துள்ளிப் பாய்ந்து அவளை முட்ட வரவும் சுபி அதிர்ச்சியில் உறைந்தே போனாள். முட்ட வரும் மாட்டிடம் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் அப்படியே உறைந்து நின்றவளை ஒரு வலிய கரம் திடீரென பற்றி பின்னால் இழுக்க .... இழுபட்ட வேகத்தில் தடுமாறிச் சாய்ந்தவளை அக்கரங்கள் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டது. .....
 

K.Thanu

Active member
#2
சற்று நேரம் என்ன நடக்கிறதென்றே சுபிக்கு புரியவில்லை....படபடத்த அவள் இதயத் துடிப்புடன் சேர்ந்து இன்னொரு இதயத்துடிப்பின் ஓசையையும் அவள் உணர்ந்த சமயம்...

சாமிநாதா...... என்ற அழுத்தமான கோபக்குரல் அவள் காதோரம் மோதிச்செல்ல....திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் சுபாங்கி ....இவன் எப்போது வந்தான்...???

அவளின் பார்வையைக் கவனிக்கும் நிலையில் தனஞ்சயன் அப்போது இல்லை... அவன் போட்ட சத்தத்தில் ஓடி வந்து நின்ற சாமியைப் பார்த்து இனி இந்த மாடு இங்கே இருக்க கூடாது...விலை பேசிவிடு என்றான் உத்தரவிடும் தொனியில்...

சாமிநாதனைக் கண்டதும் தான் தான் நிற்கும் நிலை உறைக்க அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள் சுபாங்கி... ஆனால் அவன் கரங்கள் விலகினால் அல்லவோ...திகைப்புடன் அவன் முகத்தைப் பார்த்தால் அவன் பார்வை சாமிநாதனிடமே இருந்தது.

ஐயா....என்று ஏதோ சொல்ல வந்தவனிடம் இது தான் முடிவு சாமி...இனியும் இந்த மாடு இங்கே நிற்பதற்கு இல்லை...சீக்கிரம் பேசி முடி என்றவன்..... அவளை அணைத்தவாறே திரும்பி வீடு நோக்கி நடந்தான்... முதல் சில அடிகள் ஏதோ ஒரு பிரமிப்பில் எடுத்து வைத்தவளுக்கு அதன் பிறகு தான் சுய நினைவு வந்தது.

மிகவும் அக்கறை தான்... கோபத்துடன் அவன் கரங்களைத் தட்டி விட்டவள்...

சுகி....என்று ஏதோ சொல்ல வந்தவனிடம்...எதுவும் பேசாமல் பேச மனமற்று வீடு நோக்கி விரைந்தாள். முகம் இறுக சற்று நேரம் அந்த இடத்திலேயே தேங்கி நின்றவன் பின் ஏதோ ஒரு முடிவெடுத்தவனாய் வீடு நோக்கி நடந்தான்.

சுபியின் கண்ணீரைக் கண்டவனுக்கு அன்று முழுதும் மனது சரி இல்லாமல் போக உடனுமே அவளைப் பார்த்துப் பேச வேண்டும் என்று ஏதோ ஓர் உந்துதலில் வந்தவனுக்கு அவள் இங்கிருப்பது தெரிய தேடி வந்தவன் பார்வையில் பட்டது அவளை முட்டத் தயாராகும் மாடும் அதைக் கண்டு அதிர்ந்து போய் அசையாமல் நின்ற சுபியும் தான்... அப்போது அந்தக் கணம் அவன் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும் ஏதோ உயிரே உறைந்தது போல்... இன்னும் கூட அவன் இதயத்துடிப்பு சீராகவில்லை....அந்த பதட்டத்தில் அவளைக் காக்க வேண்டும் என்ற வேகத்தில் ஏதோ செய்தால்.....

வாப்பா...தனா....மோர் குடிக்கிறாயா.....அல்லது பழச்சாறு ஏதாவது கொண்டு வரச் சொல்லவா..??

இப்போது எதுவும் வேணாம்மா......என்றவன். சிறு யோசனையுடன் சுபி எங்கே? என்று வினவினான்.
சிறு வியப்பு விழிகளில் பிரதிபலித்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல்....காலையில் இருந்து ஒரு மாதிரித்தான் இருக்கிறாள். இப்பொழுது தான் மாட்டுக் கொட்டகைப் பக்கம் இருந்து வந்தவள் மேலே உங்கள் அறைக்கு தான் போனாள். பாவம் குழந்தை முகமே கலங்கி இருக்கிறது... என்னத்தை மனதில் வைத்து மருகுகிறதோ என்று பெருமூச்செறிந்தார் அன்னை.

அது ஒரு வகையில் தனாவிற்கான மறைமுக குற்றச்சாட்டு... உன்னால் தான் அவள் மன வேதனைப்படுகிறாள் என்று....முன்பானால் அவன் அதைக் கண்டு கொண்டிருக்க மாட்டான். ஆனால் அன்று காலைக்கு பின்னர் அதுவும் அவளின் கண்ணீரைக் கண்ட பிறகு அவனால் அப்படி இருக்க முடியவில்லை..

சிறு பெருமூச்சினை வெளியிட்டவன் ‘இதோ வருகிறேன் அம்மா’ என்றுவிட்டு தன் அறை நோக்கி விரைந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே சுபி அவன் அறையில் தான் இருந்தாள். ஆனால் அறையைப் பார்த்ததும் அது அவன் அறை தானா என்றுதான் அவனுக்கு சந்தேகம் வந்தது. அந்தளவிற்கு அவனது அறை மாறியிருந்தது. அறை முழுதும் சுத்தப்படுத்தப்பட்டு திரைசீலைகள் எல்லாம் புதிது மாற்றப்பட்டு.... அவன் சொன்ன ஒரு வார்த்தைக்காகவா .....மனம் நெகிழ

அவள் அமர்ந்திருந்த பால்கனிக்கு வந்தவன் சுகி என்று அழைத்தான். அவன் குரல் கேட்டதும் அவசரமாய் மறுபுறம் திரும்பி கண்களை அழுந்தத் துடைத்தவள் என்ன?? என்பது போல் பார்த்தாள். அவள் அழுதிருப்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. ஆனாலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ள மாட்டாளாம். முன்பு அதை திமிர் என கருதியவனுக்கு இப்போது அதுவே அவள் நிமிர்வாய் தோன்றியது.அதை மனதினுள் ரசித்தவன்... பேச்சை எப்படி ஆரம்பிப்பது என ஒருகணம் தயங்கி பின் தன் அறையில் இருந்தே ஆரம்பித்தான்...


அறை மிகவும் நேர்த்தியாய் அழகாய் இருக்கிறது. இது என் அறை தானா என்றே சந்தேகம் வருகிறது. ரொம்ப நன்றி சுகி.....நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இவ்வளவு சிரமமெடுத்து என் அறையை சுத்தப்படுத்தி இருக்கிறாய்...அதற்கு...

ஹலோ ஹலோ ....ஒரு நிமிஷம் ....நான் ஒன்றும் உங்களுக்காகவோ நீங்கள் சொன்னதற்காகவோ எதுவும் செய்யவில்லை. இனி இது என் அறையும் கூட...காலையில் அத்தை சொன்னது நினைவிருக்கு தானே?? என் ரூம் எனக்கு எப்போதும் சுத்தமாய் இருக்க வேண்டும்..அந்த ஒரு காரணத்திற்காகதான் சுத்தப்படுத்தினேன்....மற்றும்படி நீங்கள் சொன்னது போல உங்கள் வார்த்தைக்கு மதிப்புகொடுத்து அதற்காகவெல்லாம் இல்லை.... புரிந்ததா..??
 

K.Thanu

Active member
#3
ஒரு கணம் அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..... இவள் திமிர் இருகிறதே திமிர்... என்று பல்லைக் கடித்தான். இவ்ளோ திமிர் உள்ளவள் பின் என்ன டாஸ்..க்கு காலையில் அப்படி அழுது சீன் போட்டாள். இதேபோல திமிராய் இருந்திருந்தால் அவன் மனச்சாட்சியும் அவனைக் குத்திக் கிழித்திருக்காது. அவனும் நிம்மதியாய் இருந்திருப்பான். அதை விட்டு நானும் மனிதப்பிறவி தான் அத்தான் அது இது என்று மனுசனை மண்டை காயப்பண்ணிவிட்டு இப்போது பேசும் பேச்சைப்பார்.மனதுக்குள் அவளைத் திட்டித் தீர்த்தாலும் அவளின் கலங்கிய முகம் அவனை ஏனோ அங்கிருந்து நகர விடாமல் செய்தது.

சிறு பெருமூச்சுடன் அவன் அவளையே அமைதியாகப் பார்த்திருக்கவும் சிறிது நேரம் அவனின் கடுப்பான பதிலுக்காக காத்திருந்தவள் எதுவும் வராது போகவும் மெல்ல இமை தூக்கிப் பார்த்தாள். அவன் கைகளை கட்டியபடி அவளையே அமைதியுடன் பார்த்திருக்கவும் சிறு வியப்புடன் ‘ என்ன எதுவும் சொல்லவில்லை... வழக்கமாக எடுத்துவிடும் உன் அப்பனின் திமிர்டி என்ற சாதாரண டயலாக்கை கூட காணோமே....? என்றாள் விழிவிரித்து....

அவள் கேட்ட விதத்தில் அவன் இதழோரம் சிறு முறுவல் மலர்ந்தது. அதை கண்டு அவள் விழிகளை மேலும் விரிக்கும் போதே

சாரி சுகி...உன்னை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேனில்லையா....மிகவும் சாரிம்மா... என்றான் தனா தன்மையாகவே...

அவனின் திடீர் மாற்றத்தினை சற்றும் நம்ப முடியாமல் சுபாங்கி வாயடைத்து நிக்கும் போதே உன்னிடம் சற்றுப் பேச வேண்டும் சுகி உட்கார் என்றவன் தானும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

சற்று நேரம் ஒரு கனத்த மௌனம் நிலவ சிறு செருமலுடன் அந்த மௌனத்தினைக் கலைத்தவன் ‘எனக்கு எப்போதுமே உன்மீது தனிப்பட்ட கோபம் என்று எதுவும் இருந்தது இல்லை சுகி... உன் அப்பா மீது தான்....அந்த கோபத்தில் நான் செய்த காரியம்.... இப்போது தான்...அதுவும் காலையில் உன் கண்ணீரைக் கண்ட பின்பு தான் நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிகிறது...நீ சொன்னாயே நானும் உயிரும் உணர்வும் உள்ள மனுஷி தான் அத்தான்னு......யாரோ முகத்தில் அறைந்தாற் போல் இருந்தது தெரியுமா?........


பேசுவது தனா தானா?? தனாவே தானா..??? ஒருகணம் உறைந்து போயிருந்தவள் சட்டென தன் கையையே கிள்ளிப் பார்த்துவிட்டு வலி தாங்க முடியாமல் ஆவ்வ்... என்று அலறினாள்... மிகவும் உணர்ந்து பேசிக்கொண்டிருந்தவன் திடுக்குற்று பார்க்கவும்...

ஒரு அசட்டுச் சிரிப்புடன் பேசுவது நீங்கள் தானா நடப்பது நிஜம் தானா..? என்று சந்தேகம் வந்துவிட்டது....அது தான் கிள்ளிப் பார்த்தேன் என்று உரைக்கவும்... அவனின் இதழ்களிலும் புன்னகை மலர்ந்தது.


நீ எப்பவுமே இப்படித்தானா சுகி..?? எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளவே மாட்டாயா..?? என்றான் தனஞ்சயன் சிறு வியப்புடன்..

அவள் புரியாது பார்க்கவும்...இல்லை உன்னை இங்கு அழைச்சுட்டு வந்த நாள்ல இருந்தே எனக்கு இந்த கேள்வி மனசுக்க ஓடிட்டே இருக்கு... அப்போ நான் உன்ன கடத்திட்டு வரும் போது அப்படி ஒரு சூழ்நிலையிலும் நீ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை... அதன் பின்பு நம்ம கல்யாணம் முடிஞ்சு இங்கே வந்த பின்பும் நீ நான் எதிர்பார்த்த அளவுக்கு எந்த ரியாக்சனுமே கொடுக்கல...ஏதோ மாமன் வீட்டுக்கு வக்கேசனுக்கு வந்தது போலவே நடமாடிட்டு இருந்தாய்.... ஆரம்பத்தில அதை திமிர்னு நினைத்தேன்...ஆனால் நேற்றைய உன் கண்ணீருக்கு பிறகு அப்படி நினைக்க தோணல.... அதோட இன்னைக்கு காலைல அப்படி அழுத இப்போ நான் வந்து இவ்ளோ தீவிரமாய் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் போது இப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கிறாய்.. உன் மனதில் என்னதான் நினைக்கிறாய் என்று சத்தியமாக புரிந்துகொள்ளவே முடியவில்லையே. என்றான் சிறு வியப்பும் குழப்பமுமாக.சற்றும் எதிர்பாராத தனாவின் அந்த மன மாற்றமும் , மன்னிப்பும் ஏதோ ஒரு விதத்தில் சுபியின் மனதினை அமைதிப்படுத்தியிருந்தது. அவளின் கண்ணீர் அவனை இந்தளவு தூரம் பாதித்திருக்கிறது என்றால் அவன் மனதில் அவள் மீதான அன்பு சற்றேனும் இருக்கிறது என்று தானே அர்த்தம். இப்போதைக்கு அவளுக்கு அதுவே போதும். அதுவரை மனதில் இருந்த பாரம் சட்டென விலக மனம் லேசாகியது போன்ற உணர்வில் அவள் இதழ்களில் இயல்பாய் சிறு புன்னகை அரும்பியது.

தனா தன் பதிலுக்காக காத்திருப்பது புரிய என்ன சொல்வதென ஒரு நிமிடம் சிந்தித்தவள் சட்டெனத் தோன்றிய குறும்புடன் “பெண்களின் மனம் புரியாத புதிர் என்று கேள்விப்பட்டதில்லையா அத்தான்?? என்று கூறி முறுவலித்தவளின் விழிகளில் எதுவோ இருப்பது போலப்பட்டது தனாவிற்கு...ஆனாலும் அப்போதைய மனநிலையில் அதற்கு மேல் வேறு எதையும் கேட்க விரும்பாமல்....வேறு பேச்சுக்கு தாவினான்.இப்போது சொல் சுகி.. இந்த நம் திருமணம் நடக்காமல் விட்டிருந்தால் இப்போது நீ என்ன செய்துகொண்டிருந்திருப்பாய்?? மேலே படிக்க வேண்டும் என்று ஏதேனும் ஆசை இருந்ததா?? என்று வினவினான் அவளைப்பற்றி அவள் கனவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலில்.

அந்தளவு தூரம் அவன் தன் மேல் அக்கறை கொண்டு தன்னைப் பற்றி வினவியது மனதிற்கு பெரிதுமே மகிழ்ச்சியளிக்க அவளும் உற்சாகமாகவே விபரம் சொன்னாள்.

ம்ஹும்....நான் மாஸ்டரும் முடித்துவிட்டேன் அத்தான். அதற்கு மேல் படிக்க வேண்டும் என்று எந்த எண்ணமும் இருந்ததில்லை... இப்படி ஒரு துன்பியல் சம்பவம் நடந்திராவிட்டால் இப்போது நான் ஜாலியாக வேலைக்கு போய்க்கொண்டு இருந்திருப்பேன். உங்களுக்கு தெரியுமா நீங்கள் என்னை கடத்தி வந்த அன்று நான் ஒரு இன்டர்வியூ முடித்துவிட்டு தான் வந்து கொண்டிருந்தேன். நல்ல கம்பெனி...நல்ல சம்பளம்.. வெளிநாடு போகும் வாய்ப்பும் இருந்தது........ ப்ச்...

ஒஹ்... என்ற தனஞ்சயனின் முகம் சற்று கருத்தது.... அவளுக்கு மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை ஏதேனும் இருந்தால் அதை நிறைவேற்றலாம் என்று எண்ணியிருந்தான்... இவள் என்னடாவென்றால் வேலைக்கு போக வேண்டும் என்ற கனவு என்றல்லவா சொல்கிறாள்.. அதுவும் வெளிநாட்டு ஆசை வேறு ‘’ இங்கு அதுவும் அவனின் மனைவி என்ற நிலையில் இருக்கும் போது அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையே.....

சற்று நேரம் அவனிடம் இருந்து பேச்சு வராமல் போகவும் நிமிர்ந்து பார்த்தவள் அவனின் யோசனையான முகம் கண்டு என்ன அத்தான்...??? என்று வினவினாள்.

ப்ச்... சாரி சுகி உனக்கு படிக்க வேண்டும் என்று ஏதேனும் ஆசை இருந்தால் அதை நிறைவேற்றலாம் என்று எண்ணியிருந்தேன்..ஆனால் இங்கிருந்து கொண்டு என் மனைவி என்ற நிலையில் நீ வேலைக்கு போவது சாத்தியம் இல்லை. உனக்கு வேறு ஏதேனும் ஆசை இருந்தால் கூறு என்னால் முடிந்தால் நிச்சயம் நிறைவேற்றுகிறேன்...என்றான் உறுதியான குரலில்.

வாய் பிளந்து அவனைப் பார்த்தாள் சுபாங்கி.
 

K.Thanu

Active member
#4
அட....சுகி உன் கண்ணீருக்கு இவ்வளவு வலிமையா அவனிடத்தில் ....மனதுக்குள் சாரல் அடிக்க உள்ளே பொங்கிப் பெருகிய மகிழ்ச்சி விழிகளில் பிரதிபலிக்க தன் வீட்டினரோடு பேச வேண்டும் என்று கேட்கலாமா என்று எண்ணியபடி அவனைப் பார்த்தவளுக்கு அப்போது தான் அவனின் ‘முடிந்தால்’ என்ற அடைமொழி மனதில் பட்டது.

அவன் விழிகளை நேரே பார்த்தவள் முடிந்தால் என்ற அந்த அடைமொழி எதற்காக அத்தான்?? என்று வினவினாள்

தனஞ்சயனின் முகம் லேசாகக் கன்றியது ஆனாலும் ஒரு பிடிவாதத்துடன் அவள் முகத்தினைப் பார்த்து அது ஏன் என்று உனக்கே தெரியும் சுகி எனக்கு உன் மேல் தான் எதுவித கோபமும் இல்லை என்று சொன்னேன் அதற்காக மற்ற அனைத்தையும் மறந்து விட்டேன் என்று அர்த்தமல்ல.அது எப்போதும் நடக்காது. உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.... என்றான் இறுகிய குரலில்


உள்ளே வலித்த போதும் அப்போதைய சுமூக உறவினை கெடுத்துக்கொள்ள விரும்பாதவள் வலிய வரவழைத்த உற்சாகத்தோடு


‘’இப்போதைக்கு ஒரே ஒரு ஆசை தான் அத்தான்...இந்த ஊர் முழுக்க சுத்தி பார்க்க வேண்டும்... அழைத்துப் போவீர்களா.... ?’’ என்றாள் சிறு பிள்ளை போல் தலை சரித்து...


அவனுக்கு உள்ளே எதுவோ உருகியது.....ச்சே....இவ்வளவு குழந்தை உள்ளம் கொண்டவளைப் போய்..... கண்கள் தானாகக் கனிய கண்டிப்பாய்... என்று கூறி முறுவலித்தவன்

இப்போது சாப்பிடப் போகலாமா..?? என்றபடி எழ தானும் எழுந்து அவன் கூட நடந்தாள் சுபாங்கி.

இருவர் மனதிலும் அதுநாள் வரையும் அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் விடைபெற்ற நிம்மதியில் இருவர் முகங்களும் மலர்ந்து இருக்க மாடியில் இருந்து ஜோடியாக இறங்கி வந்த மகனையும் மருகளையும் கண்ட பிரபாவதியின் விழிகளில் நீர் துளிர்த்தது. இனிமேல் அனைத்தும் சரியாகிவிடும் என்று மனதில் எதுவோ சொல்ல இதழ்களில் புன்னகையுடனே எழுந்து உணவு பரிமாறச் சென்றார்..
 

K.Thanu

Active member
#5
வணக்கம் மக்களே
நீண்ட காலமாக இடையில் நிறுத்தியிருந்த இந்த நாவலினை மீண்டும் தொடங்கியுள்ளேன்.....உங்க ஆதரவே என் பலம்.... பின்னூட்டம் எனும் கரம் தந்து உதவுங்கள் தோழமைகளே ....

என்றும் அன்புடன்
உங்கள் தோழி
k தனு
 
#6
:love::love::LOL: super sis... Dhana than Subi mel ulla priyam unrum nal arukil .. Maman Dhanavai unarum nal endro?.... நல்ல பதிவு சகோ.....
 
#7
Super episode sis. Next update yeppo
 
#8
இப்படி அடிக்கடி ud கொடுத்துக்கிட்டே இருங்க sis ரொம்ப அருமையா இருக்கு.
 

sumiram

Active member
#9
Lovely ud.:love::love:. Ava kaneeruku avanidam ivlo mathippa, avanukkum ava mel kathal irunthatho.
 
#10
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
 
Top