Tag Archives: ரோசிகஜன்/ நாவல்கள்

‘என் பூக்களின் தீவே!’ ஹரிதாரணி சோமசுந்தரம் அவர்களின் பார்வையில்…

 

 

என் பூக்களின் தீவே – ரோசி கஜன்.

அகல்யா மண்டைக் கொழுப்பா என்று ஆரம்பித்த இடத்தில் இருந்து படபட பட்டாசாய் பொரிந்து தள்ளி உற்சாகப் படுத்துகிறாள்.

அறிவும் சுட்டித்தனமும் கொண்ட அழகுப்பெண்.

வருண் வார்த்தையால் எல்லாம் அவனை வர்ணிக்க முடியாது. உண்மையிலேயே பொறுமையின் மறுஉருவம்.. அகலை கொன்னு புதைக்காம பார்த்திருந்தானே.. 
ஒரு வேளை அவனுள் புதைந்திருந்த அந்த அன்புதான் காரணமோ என்னவோ..

அனு – ராகவ் ஆக்கப் பொறுத்தார்கள் ஆறப் பொறுக்கலை கதையாக ராகவ் சூழ்நிலையை புரியாமல் தனக்கு மட்டுமே உரிமை என நினைப்பதும் அதற்கு அமைதியாக அலசி ஆராயமல் வார்த்தைகளால் அனுவை கூறுபோடுவதும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல பாடம்.
அகல்யா அங்கேயும் சிறந்த எடுத்துக்காட்டு.

சந்திரன் பாசத்தால் பக்குவத்தை இழந்து பேசும்போதும் வருண் தீர்மானமாக சொன்ன நேரம் வாயடைத்து நிற்கிறார். அவரது கோபம் நியாயமானது ஆனால் கோபத்தால் எதையும் சாதிக்க முடியாதே..

அமைதியும் அன்பும் விவேகமும் உதவும் அளவில் கோபமும் அதனால் ஏற்பட்ட வேகமும் உதவாது என்பதை அழகாய் காட்டியுள்ளீர்கள். சுகந்தன் அருமையான பாத்திரம். அவனது பெற்றோர் அதைவிட அழகு பிள்ளையை நீங்கள் சரியாய் வளர்க்கலை என்று அவர்களும் சந்திரனைப் போல எகிறியிருந்தால் அந்த குடும்பமே சிதைந்து இருவரின் வாழ்க்கை அதில் சிதிலமாகியிருக்கும்.

அகல்யா மீதான செல்வி-சந்திரனின் பாசம் வருணை மட்டுமல்ல என்னையும் பொறாமை கொள்ள வைத்தது. ஆனால் வருண் பொய்யாக பொறாமை காட்டினான். நான் மெய்யாகவே பொறாமைப் பட்டேன். இப்படியொரு மாமியார் கிடைக்கணுமே என்று..

சிவா நண்பனை குறை கூறும் நிலை வந்தும் அமைதி காப்பது.

ராகவன் தயக்கமின்றி தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவது,

அகல்யா வருணை அலையவிடுவதாய் நினைத்து அவனது விளையாட்டில் காயப்படுவது,

தேங்காய் துருவல் சண்டை முதல் நண்டுக்கறி சண்டை வரை அருமையோ அருமை..

இயல்பான இலங்கைத்தமிழில் இருந்த கதையை படித்துத் தான் நிறைய வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.

ஐயனார் கோவில், நாமகள், அனலைத்தீவு, கொழும்பு என எல்லாம் கதையின் முக்கியப் புள்ளிகள்..

மிக சுட்டித்தனமான பெண்ணொருத்தி காதலொருவனோடு சுட்டித்தனம் மாறாமல் குடும்பம் நடத்துவது அருமை.

பெண்களின் திருமணத்திற்கடுத்த வாழ்வில் புகுந்த வீட்டாரின் உறுதுணையும் அன்பும் எவ்வளவு முக்கியம் என்றும், பெண் என்பவள் இடத்திற்கு இடம் மாறும் பொருளல்ல, அவளது உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அழகாக வடித்துள்ளீர்கள்.

மொத்தத்தில் என் பூக்களின் தீவே என்னை அதற்குள் அழைத்துக் கொண்டது….

Advertisements

மெல்லிசையாய் என் வசமானாய்!- 1- ரோசி கஜன்

அன்பு வாசகர்களே!

இலங்கையில் வெளிவரும் ஒளிஅரசி மாத இதழில் வெளிவரும் என் தொடரின் முதல் அத்தியாயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகிறேன். 

மிக்க நன்றி ஒளி அரசி

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் . 

இந்த அத்தியாயம் கூகிள் டாக்கில் …

அத்தியாயம் 1 

 

26857149_1981451788775479_187412104_n20121004_1981451792108812_1741760870_n26855751_1981451782108813_450248935_n

12. உன் வாசமே என் சுவாசமாய்!

பெண் என்பவள் மென்மையானவள், உடலளவில்! 

மனதளவில் எஃகுவிற்குச் சமமானவள் அல்லவா?

எத்தனை எத்தனையோ இடர்களையும் கஷ்டங்களையும் உடலளவில் ஏற்கத் தடுமாறினாலும், மனதளவில் ….அவ்வளவு இலகுவில் தடுமாறுவதா ?

எதிர்த்து நிமிர்ந்து நிற்க வேண்டாமா?

சந்திக்கும் இடர் எத்தகைய கொடியதாயினும், ஒருத்தி, எதிர்த்து நிமிர்ந்து நின்றால் ?

இக்கேள்விக்கான விடையாய் …அழகிய காதலும் , அழியாத பாசமும் கலந்து நகரும்  கதை…உங்கள்  மனங்களில்  நிலையான இடத்தையும் பிடித்துக் கொள்ளும் .

 

11. என் பூக்களின் தீவே!

6

 

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

காதல்.. அது எப்போதுமே அழகுதான் இல்லையா?

அதே காதல், அதிரடியாக முட்டி மோதிக்கொள்ளும் நட்புக்குள் மென்னடை போட்டு நுழைந்தால்?

காணும் நேரமெல்லாம் முட்டிக்கொள்ளும் எதிரெதிர் துருவங்களான இருவருக்குள்ளும் நுழைந்த காதல் அவர்களை என்னவெல்லாம் செய்கிறது என்பதையும்,

கண்டதும் ஆழ்மனதில் அழுந்த வித்திட்டாலும், அதீத உரிமையுணர்வும் கோபமும், கலந்து பேசாத பொறுமையின்மையும் குறுக்கிட்டால் அந்த அழகிய காதல் வித்தும் ஆட்டம் காணலாம் என்பதுக்கு எடுத்துக்காட்டாக இருவருமாக,

ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பும் கலகலப்புமாக நகரும் இக்கதை  உங்களையும் தன் பயணத்தில் அரவணைத்துக் கொள்ளும் எனும் மிகையான நம்பிக்கையுடன் உள்ளேன் .

கதை மாந்தர்கள் விரைவில் உங்களைக் காண வருவார்கள் 

10. காவ்யா/ காதல் செய்த மாயமோ!

3

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

கல்லூரிக்காலம்… எல்லோருக்குமே அது ஒரு கனாக்காலம் தான்!

அங்கே ஒர் அழகிய காதலும் பூக்குமானால், வானவில்லின் வர்ணங்கள் அத்தனையும் நம் வாழ்வில் வந்துவிடாதா?

அப்படித்தான் இங்கேயும்!

‘இளம் நெஞ்சங்களில் பூக்கிறது நேசம்!

அந்நேசம் காதலை மட்டுமல்ல காயத்தையும் சேர்த்தே பரிசளிக்கிறது.

காரணம் விளங்காமல் தவிக்கிறாள் நாயகி!

நேசம் இருந்தும் நெஞ்சை மறைக்கிறான் நாயகன்!

ஏன் என்பதை அறிந்துகொள்ள, அழகான உறவுகளின் சங்கமத்தோடு மிக மென்மையான காதலையும் கலந்து, கடைசிவரை சுவாரஸ்சியம் குன்றாமல் பயணிக்கும் கதையோடு நீங்களும் பயணித்துப் பாருங்களேன்!

 

8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் !)

“மதுரா, மணவாழ்வில் வஞ்சனையை சந்திக்கிறாள்,  அதன் உக்கிரத்தை ருசிபார்க்கிறாள் . மூச்சு முட்டித் தவித்தும் போகிறாள்.

 அதன் பின்னர் , அவள் வாழ்வு கேள்விக்குறியானதா ? மற்றவர் கேலிக்குரியதானதா ?

 ஒன்றுக்கு இரண்டாக பெண் குழந்தைகளோடு தன்னைத்தான் நிலைநிறுத்திக்கொண்டாளா?  நிலை தடுமாறிப் போனாளா?”

7 . நெஞ்சினில் நேச ராகமாய் !

5

   

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

காதல், மிக அற்புதமான அழகிய நுண்ணிய உணர்வு !

   ஆனால் , அது படுத்தும் பாடுகளை அனுப்பவிப்பவர்களுக்குத்தான் தெரியும், அது தரும் வலி சுகமா சோகமா என்று!

  இக்கதையிலும் காதல் நிமிர்வாகவே தலை காட்டுகின்றது .

  இதேகாதல், இரு பெண்களுக்கும் , ஒரு குடும்பத்திற்கும் ஏற்படுத்தும்  விளைவே கதையாக நகர்கின்றது.

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து செல்கின்ற கதை , உங்களையும் தன்னுள் இழுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.