ஆசை மனையாள் by முகில் நிலா

காலை காற்று சில்லெனஅவன் தேகம் தீண்ட கண்விழிகிறான்…. ஆனால் ஆசை மனையாள் அசையாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உணர்ந்து, தென்றல் அவளை தீண்ட நினைக்கும் முன்னே அவள் கன்னத்தை தன் இதழ் கொண்டு இதமாய் வருடி செல்கிறான் ஜோக்வித்… பின் மெல்ல படுக்கையை விட்டு இறங்கி தன் காலை கடன் முடித்துக்கொண்டு சமையல் அறையை நோக்கி சென்று அடுப்பை பற்ற வைத்து கொடிக்கு பிடித்த காபியை போட்டபடி படுக்கை அறைக்கு சென்று அவளை மெல்ல கொடியென்று அழைக்கிறான் ஜோக்வித்…. ஆனால் அவளோ அசைந்தப்பாடு இல்லை… காபி ஆறுவதை உணர்ந்து கொடி கொடி உரக்க அழைக்க நினைக்கையில், நேற்று அவளை திட்டியதற்கு தன்னை வம்பிழுத்ததை நினைத்து தன் மீசையை நீவியபடி தனக்குள் சிரித்துக்கொண்டே செல்லக்குட்டி காபி குடிச்சிட்டு தூங்குங்க என்றான்… அவளோ உடலை அசைத்து ஒய்யாரமாக மீண்டும் உறங்க முயன்ற போது, எரும மாடு எந்திரி டி என்று ஜோக்வித் உரக்க கத்த … Continue reading ஆசை மனையாள் by முகில் நிலா