EPT- 27 by Rosei Kajan

27. சில வருடங்களின் பின்….   ஆதவனின் உற்சாகத் தழுவல் தந்த வெட்கச்சிவப்பில் ஜொலித்துக்கொண்டிருந்தது கீழ் வானம்!   மெல்லிய தென்றல் காற்றின் ஸ்பரிசத்தால் சிலிர்த்து நின்றது இயற்கை!   மறைந்திட மனமில்லாது, தண்ணொளி மங்குவதைப் பொருட்படுத்தாது உதயத்தின் அழகில் மயங்கிக் கிடந்தது மதி!    வீட்டின் பின்புறமிருந்த கோழிக்கூட்டிலிருந்து அதிகாலையின் எழுச்சியை பறைசாற்றினார் சேவலார்! … Continue reading EPT- 27 by Rosei Kajan

EPT- 26 by Rosei Kajan

26 “என்னடா தம்பி சின்னப் பிள்ளைபோல பம்முறாய்!? என்ன விஷயம் சொல்லு?” என்றார் செல்வி. தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்த டான்ஸ் ஷோ ஒன்றில் கவனமாக இருந்த அகலின் பார்வை சட்டென்று இவனிடம் திரும்பி, அவன் பார்வை தன்னில் இருப்பதை உணர்ந்ததும், சில கணங்கள் அப்படியும் இப்படியும் தடுமாறிவிட்டு மீண்டும் தொலைக்காட்சிக்கே திரும்பியது. அதன் பிறகு அந்த டான்ஸ் … Continue reading EPT- 26 by Rosei Kajan

EPT- 25 by Rosei Kajan

25 மாடிக்குச் சென்றதும், முதல் வேலையாக ஒரு குளியலைப் போட்டு பயணக் களைப்பை விரட்டி அடித்து விட்டு வந்தவன், பசியெடுத்த வயிற்றைக் கவனிக்க மனமில்லாது அப்படியே யன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு நின்றுவிட்டான். விழிகள் தோட்டத்தின் பசுமையை ஆரத்தழுவி வலம் வர, சற்று நேரம் அவற்றை ரசித்தவனுள், ஏனோ, மிக மிக நிறைவானதொரு உணர்வின்  ஊடுருவல்! கடந்த … Continue reading EPT- 25 by Rosei Kajan

EPT- 24 by Rosei Kajan

24.     கண்ணிமைப்பொழுதென நாட்கள், கிழமைகள், மாதங்கள் என உருண்டோட, காலச்சக்கரம் தன் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தது.     அன்று, கருமைக்காதலனின் செல்லச் சில்மிஷங்களில் செக்கச் சிவந்துகிடந்தாள் வான்மகள்! அம்மயக்கத்திலும், தன்விடியலை எதிர்பார்த்துக் கிடப்போரை சற்றும் மறவாது, அதீத உரிமையோடு தன்னில் படர்ந்திருந்த கருமையை பதுமையாக விலக்க முயன்று கொண்டிருந்தாள் அவள். மெல்ல மெல்ல … Continue reading EPT- 24 by Rosei Kajan

EPT- 23 by Rosei Kajan

23.    வகுப்புகளிற்கு செல்லத் தயாராகி கீழே வந்த அனு, விடுதி வாயிலை விட்டு வெளிவர வருணிடமிருந்து அழைப்பு வந்தது. “சொல்லுங்க வருண்.” “நாளைக்கு இரவைக்கு யாழ்ப்பாணம் போக இருக்கிறன் அனு, உம்மட பாசமலருக்கு ஏதாவது தந்துவிடப் போறீரா?” கேலி! “நக்கல்! ஹ்ம்…சொன்னாலும் சொல்லாட்டியும் அவள் என் பாசமலர்தான்; அதோடு…எனக்கு மட்டுமா?” “என்ன உமக்கு மட்டுமா?” … Continue reading EPT- 23 by Rosei Kajan

EPT- 22 by Rosei Kajan

22    பல மணிநேரமாக ஆக்கிரமித்திருந்தாலும் அத்தனை இலகுவாக புறமுதுகிட்டுச் செல்வதில் இஷ்டமே இல்லைதான் இருளவனுக்கு! அதற்கென்று, பகலவனின் வருகையைத் தடுக்கும் உரிமை கொண்டவனா அவன்! முனகலோடு கருமை அகன்று கொண்டிருக்க, சரக்சரக்கென்று அங்குமிங்குமாக நகர்ந்து திரிந்த காலணியோசை நயத்தில் மெல்ல மெல்ல விழிக்க முயன்றது அவ்விடுதி! அதிகாலைப் பரபரப்பில் விடுதி உயிர்பெற்றிருந்ததை உணர்ந்தும் எழுந்து … Continue reading EPT- 22 by Rosei Kajan

EPT- 20 by Rosei Kajan

அத்தியாயம் 20. ‘விவாகரத்து என்ற பேச்சுக்கே போக  வேண்டாம் என்கிறேன், இந்த அழகில் எனக்கு அவளை…ச்சே!” ஒருபோதுமில்லாதவாறு தந்தையில் மனஸ்தாபம் கொண்டாலும், இத்தனைக்கும் காரணமான ராகவ் மீதே பலத்த கோபம் கொண்டான் வருண். விறுவிறுவென்று அகல் வீட்டுக் கடவையை(கடவு) கடந்தவன் வேலியோரமாக இருந்த கருக்குமட்டை(பனைமட்டை) முழங்காலின் கீழ் கீறிக்கிழித்ததையும் உணரவில்லை. அந்தளவு ஆத்திரத்தின் வசப்பட்டிருந்தவன், தன் … Continue reading EPT- 20 by Rosei Kajan

EPT- 19 by Rosei Kajan

19 இவ்வளவு நேரமும் நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தையை கேட்டுக் கொண்டிருந்தவளோ துவண்ட இதயமும் கால்களுமாக மெல்ல வந்து கதவோரமாக நின்றாள். பக்கத்தில் வந்து நின்ற அகல், “வருண் சொல்வதுதான் சரி, அத்தான் கோபத்தில் சொன்னதை பெரிதுபடுத்த வேண்டாமேப்பா; வேண்டுமென்றால் பாருங்க அவர் எடுத்துக் கதைப்பார்; கல்யாணமும் குறித்த நாளில் நடக்கும்.” என்றவளும் முடிவில் அழுதுவிட்டாள். மகள்களைப் பார்க்கப் … Continue reading EPT- 19 by Rosei Kajan

EPT- 18 by Rosei Kajan

அத்தியாயம் 18.    ‘இவள் கொஞ்சம் முதல் கலங்கிப்போய் நின்றதென்ன! எப்படித் தேற்றுவது என்று தடுமாறி, அகல் வரட்டும் என்று காத்திருந்தால் என்ன ஒன்றுமே நடவாத மாதிரி வந்து நிற்கிறாள்? அதுவும் கல்யாணத்துக்கு போக வேண்டுமாமே!’ அவளை உற்றுப்பார்த்தபடி மனதுள் முணுமுணுத்தான் வருண். அனு சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்த செல்வி, “அனு!” அவளை தன்புறம் திருப்பியவர், … Continue reading EPT- 18 by Rosei Kajan

EPT- 17 by Rosei Kajan

17.    “அத்தானோடு கதைத்தேன்கா, சும்மா இல்லை நல்லா கொடுத்திருக்கிறேன்.” மகிழ்வோடு சொன்னபடி, சோர்ந்திருந்த தமக்கையருகில் வந்தமர்ந்தாள் அகல். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை தன் அதிர்ந்த பார்வையால் உணர்த்திய அனுவால் சட்டென்று எதையும் கதைக்க முடியவில்லை. தங்கையின் குரலும் முகமும் பிரதிபலித்த மகிழ்விலிருந்தே, ராகவ் சுமூகமாகவே கதைத்துள்ளான் எனப் புரிந்தவளின் நெஞ்சினுள் அவன் நினைவுகள் … Continue reading EPT- 17 by Rosei Kajan