மௌன ராகம் – யத்தனபூடி சுலோச்சனராணி

ஆனந்த் – தீட்சிதரின் பாசமிகு பேரன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன்.கலகலப்பான குணம் கொண்டவன். ஆனால் பிடிவாதக்காரன். ஆஸ்த்மா வியாதியால் அடிக்கடி பாதிக்கப்படுகிறான். தீட்சிதர் ஆனந்திற்கு துணையாக இருப்பதற்காக பெற்றோரை இழந்த தூரத்து உறவான விஜய்யை வீட்டிற்கு அழைத்து வருகிறார். விஜய் ஆனந்தை விட இரு வயது பெரியவன். சிறுவயதிலிருந்து இருவரும் ஒன்றாக நட்புடன் வளர்ந்து வருகின்றனர். விஜய், ஆரோக்கியமாக, பொறுப்பானவனாக எல்லோருக்கும் பிடித்தவனாக முக்கியமாக ஆனந்தின் அன்புக்குரியவனாக இருப்பதால் தீட்சிதரிற்கு அவனின் மேல் வெறுப்பு ஏற்படுகிறது. விஜய் தன்னுடைய பேரனை மிஞ்சிவிடுவானோ என்று பயப்படுகிறார். அவனை வீட்டை விட்டு வெளியேற்ற அவர் செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. விஜய்க்கு ஹேமாவின் அறிமுகம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் ஏற்பட்டு இருவருக்கிடையிலும் காதல் மலர்கிறது. ஆனால் விஜய் ஹேமாவை திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். அதே சமயம் தீட்சிதர், ஹேமா ஆனந்திற்கு மனைவியாக வந்தால் அவனுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நினைத்து … Continue reading மௌன ராகம் – யத்தனபூடி சுலோச்சனராணி

கரையை தொடும் கனவுகள் – எண்டமூரி வீரேந்தரநாத்

விஷ்ணுவர்த்தன் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமனின் ஒரே புதல்வன். தான் நினைத்ததையே செய்யும் பிடிவாத குணம் கொண்டவன், கலகலப்பானவன்.விமானப் படைப்பிரிவில் விமானியாக பணியாற்றுகிறான். அரவிந்த் – விஷ்ணுவின் சித்தி மகன், நண்பன். அமைதியான குணம் கொண்டவன். சுவாதி, வெங்கட்ராமனின் நெருங்கிய நண்பன் வேணுகோபாலனின் ஒரே புதல்வி.விஷ்ணு சுவாதியை விரும்பி மணந்துகொள்கிறான். சுவாதி அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறாள். ஆனால் விஷ்ணு, நாகரிகமான கேளிக்கை வாழ்க்கை வாழ விரும்புகிறான். அதற்கு ஏற்ற மாதிரி சுவாதியை மாற்றுகிறான். திருமணமான ஒரு வருடத்தில் பாகிஸ்தான் இந்தியாவின் மீது போர் தொடுக்கிறது.விஷ்ணுவும் போரிற்கு செல்கிறான். போர் முடியும் தருவாயில் விஷ்ணு வீர மரணம் எய்தியதாக இராணுவத்திலிருந்து தந்தி வருகிறது. இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். கதையை வழக்கம் போல ஆசிரியர் சுவையாக வாசிப்பவர் மனதை தொடும் வகையில் சொல்லியிருக்கிறார். குறிப்பு: இது முற்றுமுழுதான சோகமான கதையல்ல. முடிவு சந்தோசமானது. பலர் சோகமான … Continue reading கரையை தொடும் கனவுகள் – எண்டமூரி வீரேந்தரநாத்

NNES Final

வணக்கம் உறவுகளே,   உங்கள் பொறுமையை நிறையவே சோதித்துவிட்டேன் என்று தெரியும். என்னளவில் கதையை ஒருவழியாக முடித்துவிட்டேன் என்கிற சந்தோசம் தான். ஆமாம், எனக்கே அதிர்ச்சியாத்தான் இருக்கு. ஹாஹா… ஆனால் உண்மையாகவே கதையை முடித்துவிட்டேன். இனி நீங்கள்தான் குறை நிறைகளை சொல்லவேண்டும். மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். இதுநாள் வரை என்னோடு பயணித்த எல்லோருக்கும் மிக்க நன்றி!   நட்புடன் நிதா.   Continue reading NNES Final

Mudivurai

Anbu natpugalukku, Indrodu “Pillaikaniyamudhe” mudindhadhu. Ithanai naatkalaaga en kadhaiyai paditha anaivarukkum mikka nandri. Rasithirupeergal ena nambugiren. Ippodhaanum kadhaiyai patriya kurai niraigalai enakku ungal karuthukkal moolam theriyapaduthinal udhaviyaga irukkum. ennudan payanitha anaivarukkum nandri. meendum viraivil sandhippom. vanakkam. Continue reading Mudivurai