அனிதாவின் காதல்கள் – சுஜாதா

கல்லூரியில் படிக்கும் அனிதாவுக்கு வைரவன் என்ற இளைஞன் ஒருவனின் அறிமுகம் விபத்து ஒன்றில் அவனுக்கு உதவி செய்வதன் மூலம் கிடைக்கிறது. அவன் பெரிய பணக்காரன் என்றும் பின்னர் அறிந்துகொள்கிறாள். அதன்பின்னரும் சிலமுறை அவர்கள் சந்திப்பு தொடர்ந்து வைரவன் அவளை ஒருதலையாக காதலிக்கத் தொடங்குகிறான். வைரவன் அவள் மீதான தன் காதலை அவளிடம் தெரிவுக்கும் போது பெற்றோர் தெரிவுசெய்பவரையே தான் திருமணம் செய்வேன் என்று சொல்கிறாள். அனிதாவின் பெற்றோர் அமெரிக்காவில் வேலை பார்க்கும் சுரேஷை அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். அப்போது திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாததாலும் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாலும் சுரேஷை திருமணம் செய்ய தயங்கும் அனிதாவுக்கு எப்போதும் பெற்றோரின் பேச்சுக்கு மறுத்து பழக்கமில்லாத காரணத்தால் தனது விருப்பமின்மையை சொல்லமுடியவில்லை. அவர்களது நிச்சயதார்த்தமும் முடிந்துவிடுகிறது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி சுரேஷ் – அனிதாவின் திருமணத்தை நிறுத்தி பண பலத்தினால் அனிதாவின் குடும்பத்தினரையும் சம்மதிக்க வைத்து அனிதாவின் … Continue reading அனிதாவின் காதல்கள் – சுஜாதா

தொடுவானம் – யத்தனபூடி சுலோச்சனராணி

ஹேமா, தனது அண்ணன் சேஷாத்ரியின் மகன் மதுவுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்கும் ரமேஷின் மீது காதல் கொள்கிறாள். அவனும் தன்னை காதலிப்பதை அறிந்து கொள்கிறாள். ரமேஷ், கல்யாணமானதும் கணவனை இழந்துவிட்ட அவனது தாயின் முறை தவறிய வாழ்வின் மூலம் பிறந்தவன் என்பதால் ஊராரின் உதாசீனத்துக்கு உள்ளாகின்றான். அவனது பிறப்பைப் பற்றி அறிந்திருந்த போதும் சேஷாத்ரி , ரமேஷுக்கு வேலை வாங்கிக்கொடுத்து தமது குடும்பத்தில் ஒருவனாக பார்த்துக்கொள்கிறார். ஹேமாவைத் திருமணம் செய்ய மகன் சுதாகர் விருப்பப்பட்டதால் அவர்கள் ஊரின் செல்வந்தரான நாகபூஷணம் ஹேமாவைப் பெண் கேட்டு வரும் போது சேஷாத்ரி ஹேமாவின் அபிப்ராயத்தைக் கேட்காமல் சம்மதம் சொல்லி நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்கிறார். இது தெரியாமல் தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று மட்டும் அறிந்து அவசரமாக ரமேஷை வற்புறுத்தி ஹேமா பதிவுத் திருமணம் செய்கிறாள். அன்றைய தினமே ஹேமாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் சேஷாத்ரி அவமானத்துக்காளாகின்றான். ஹேமாவை ரமேஷுடன் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு சேஷாத்ரி குடும்பத்துடன் … Continue reading தொடுவானம் – யத்தனபூடி சுலோச்சனராணி

உள்ளம் வருடும் தென்றல் – வத்சலா

விஷ்வாவும் அபர்ணாவும் உயிர் தோழர்கள். கல்லூரியில் தொடங்கிய அவர்களது நட்பு பலரின் கேலி கிண்டல் எதிர்ப்புக்கு மத்தியிலும் வலுப்பெற்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஷ்வா அவனது குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளாலும் பாசமிகு தந்தையின் இழப்பினாலும் கலங்கித் தவித்திருக்கும் வேளைகளில் தனது அன்பின் மூலம் அவனது வலிகளுக்கு மருந்திட்டு உறுதுணையாக இருக்கிறாள் அபர்ணா. அபர்ணாவின் நட்புக்கு முன் தனது நட்பு குறைந்தது இல்லை என்பது போல அவனது காதலி, தானா அல்லது அவனது நண்பி அபர்ணாவா என்று இருவரில் ஒருவரை தெரிவு செய்யும் இறுதி வாய்ப்பை அவனுக்கு கொடுக்கும் போது கொஞ்சமும் தயங்காமல் அபர்ணாவை தெரிவு செய்யும் உற்ற தோழன் விஷ்வா. ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் அபர்ணா அதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும், யாருடனும் கலகலப்பாக பழகாமல் இறுக்கமாக இருக்கும் பரத்வாஜை ஒருதலையாக காதலித்து பின்னர் அவனையும் காதலிக்க வைக்கிறாள். நான் இதுவரை சொன்னதிலிருந்தே கதை எதை நோக்கி பயணிக்கப்போகிறது என்று … Continue reading உள்ளம் வருடும் தென்றல் – வத்சலா

இனியவளே – விஜி மீனா

கலகலப்பான சுபாவம் கொண்ட பெண்ணான இனியா, அவளுடைய கல்லூரித் தோழி ஆனந்தியின் காதலுக்கு ஆதரவாக இருந்து அவள் காதலன் சுந்தரை வீட்டினரின் விருப்பமின்றி திருமணம் செய்வதற்கு உதவி செய்கிறாள். அவர்களது பதிவுத் திருமணத்திற்கு சென்றிருந்த போது நண்பன் சந்துருவின் பதிவுத் திருமணத்திற்கு வந்திருந்த அரவிந்தைப் பார்த்து காதல் கொள்கிறாள். அதன் பின்னர் அரவிந்தை சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. பல நாட்கள் சென்ற பின்னர் இனியாவின் பெற்றோர் அவளுடைய திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்தபோது அரவிந்தின் நினைவில் கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த இனியா, இறுதியில் மாப்பிள்ளை அரவிந்த் என்பதை அறிந்து தனது காதல் கை கூடப்போகிறது என்ற நினைவில் மகிழ்கிறாள். கல்யாணம் வரை அரவிந்துடன் மனம் திறந்து பேசும் வாய்ப்பு இனியாவுக்கு அமையவில்லை. அரவிந்துக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றும், காதல் என்றால் வெறுப்பு என்றும் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக தன்னை மணந்து கொண்டான் என்றும் முதல் இரவில் அவனை சந்திக்கும் போது … Continue reading இனியவளே – விஜி மீனா

சங்கமம் – யத்தனபூடி சுலோச்சன ராணி

சிறிய வயதிலேயே தந்தையை இழந்து, நோய்வாய்ப்பட்ட தாயுடனும் தம்பியுடனும் தனது தாய் மாமாவின் வீட்டில் அத்தையின் விருப்பமின்றி வாழ்ந்து வரும் ரோஜா, துணிச்சலானவள். புத்திசாலியாக இருந்த போதும் வசதியின்மையால் தொடர்ந்து படிக்க முடியாமல் சூழ்நிலையின் காரணமாக அவள் தம்பி தவறான வழியில் போகத் தொடங்குகிறான். ரோஜாவுடன் நண்பனாக அறிமுகமாகி அவளை ஒரு தலையாக காதலிக்கும் ஆனந்த், பணக்காரன். ஆனந்தின் சொத்துக்களுக்கு பாதுகாவலனான இருக்கும் அவன் அப்பாவின் முதல் மனைவியின் மகனான பிடிவாதக்காரனான விஜய், ரோஜா – ஆனந்தின் உறவை அறிந்து ஆனந்தை விட்டு விலகி விடும்படி ரோஜாவிடம் சொல்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் விஜய்யினால் அவமானப்படுத்தப்படும் ரோஜா ஆனந்தைக் காதலிக்காத போதும் அவனை திருமணம் செய்வதற்கு சம்மதம் சொல்கிறாள். ரோஜா – ஆனந்தின் திருமணம் நடந்ததா? அல்லது விஜய்யினால் நிறுத்தப்பட்டதா? வறுமையின் காரணமாக ஆனந்தின் உதவியுடன் அவனின் தந்தையின் நண்பரும் அவன் வீட்டிற்கு அருகில் வசிப்பவருமான வேணுகோபாலனின் வீட்டிற்கு வேலைக்கு செல்கிறாள் ரோஜா. … Continue reading சங்கமம் – யத்தனபூடி சுலோச்சன ராணி

அவள் முகம் காண – வித்யா சுப்ரமணியம்

சஞ்சனா – மும்பையில் வசிக்கும் பெற்றோரின் செல்ல மகள். அவள் அப்பாவிற்கு அவள் மேல் அன்பு அதிகம். ஹைதராபாத்தின் ஐஎஸ்பி யில் மேல்படிப்புக்கு இடம் கிடைத்த போது அவளை பிரிய முடியாமல் அவள் அப்பா மறுக்க அவள் அம்மாவும் அவளும் அவரை சம்மதிக்க வைத்து அங்கே வந்து விடுதியில் தங்குகிறாள். முதல் நாளே வினீத் கிருஷ்ணனுடன் அவளுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அவன் பிறந்தது நியூ ஜெர்சியில். மூன்று வயசு வரை அங்கேயே வளர வர்களின் நாட்டு கலாச்சாரத்துடன் வளர வேண்டும் என்று அவன் பெற்றோர் விரும்ப அதன் பின்னர் சென்னையில் இருக்கும் பாட்டியுடன் வளர்ந்தவன். முதலில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறுகிறது. அவர்கள் இரண்டு குடும்பமும் காதலை ஏற்றுகொள்ள எல்லாம் சுபமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் சஞ்சனா வினீத்தின் முதல் வயது பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை பார்க்க நேரிடுகிறது. அதில் அவளது அப்பாவை போல இருக்கும் ஒருவரை காண்கிறாள். அந்த நபரின் … Continue reading அவள் முகம் காண – வித்யா சுப்ரமணியம்

வாராயோ வெண்ணிலவே – ஹேமா

இந்த கதையை பற்றிய அறிமுகம் தந்த உமா மனோஜிற்கு முதலில் நன்றி. பெற்றோரை இழந்த நிலா சித்தி கலைச்செல்வியுடன் வசித்து வருகிறாள். அவளுடைய அண்ணா லண்டனில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நிலா அவளுடைய நண்பிகள் சைந்தவி மற்றும் மஹதியுடன் பல்கலைகழகத்தில் படித்துவருகிறாள். சைந்தவியுடன் பள்ளி பருவத்திலிருந்தும் மஹதியுடன் கல்லூரி முதல் ஆண்டிலிருந்தும் நட்பாக பழகுகிறாள். மஹதியின் அண்ணா சித்தார்த் இவர்கள் படிக்கும் பல்கலைகழகத்தில் வேதியியல் விரிவுரையாளராக பணிபுரிகிறார். நண்பிகள் மட்டுமன்றி அவர்களுடைய மூன்று குடும்பங்கள் கூட ஒற்றுமையாக பழகுகிறார்கள். இந்த மூன்று நண்பிகளுக்கும் ஜோடி இந்த கதையில் உண்டு. மூன்று ஜோடிகளும் வித்தியாசமான முறைகளில் இணைகிறார்கள். எளிமையான, யதார்த்தமான கதை. பல சுவையான சம்பவங்களின் கோர்வையே கதை என்பதால் அதிகம் சொல்லவில்லை. நிலா தனது நண்பிகளுடன் சேர்ந்து செய்யும் கலாட்டாக்களே கதையின் முக்கிய அம்சம். ஆசிரியரின் முதல் கதை என்பதால் சில தவறுகளை தவிர்த்துப் பார்த்தால் கதையின் ஆரம்பம் முதல் இறுதி … Continue reading வாராயோ வெண்ணிலவே – ஹேமா

வாரிசு – கமலா சடகோபன்

தீபா, ஜனார்த்தன் மற்றும் சுந்தரியின் மகள். சுந்தரியின் தந்தை சந்திரசேகர் புகழ்பெற்ற தொழிலதிபர். சுந்தரி ஜனார்த்தனை காதலித்து சந்திரசேகரின் விருப்பத்துக்கு மாறாக கல்யாணம் செய்து கொண்டதால் தனது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாக நினைத்து சந்திரசேகர் அவர்களை மன்னிப்பு கேட்க வைப்பதற்காக பல இன்னல்களை அவர்களுக்கு ஏற்படுத்துகிறார். இதனால் ஒவ்வொரு ஊராக மாறவேண்டியிருந்த காரணத்தால் தீபா விடுதியில் சேர்க்கப்பட்டாள். இதன் காரணமாக தாத்தா சந்திரசேகர் மீது தீபா கோபமாக இருக்கிறாள். ஒருமுறை சந்திரசேகரை எதிர்பாராதவிதமாக சந்தித்தபோது சந்திரசேகர் தீபாவை இனம்கண்டு அவளுடன் கொஞ்சம் கடுமையாக பேச அவளும் பதிலடி கொடுக்க சந்திரசேகர் தீபாவுடன் ஒரு சவால் விடுகிறார். சந்திரசேகருக்கு சுந்தரியை தவிர வேறு பிள்ளைகள் இல்லாததால் சந்திரசேகரின் தம்பி மணிசேகரின் மகன் ராஜசேகர் கடந்த இரண்டு வருடங்களாக சந்திரசேகரின் தொழிலை நிர்வகித்துவரும்போது சந்திரசேகர் காலமாகிவிடுகிறார். மரணச்செய்தியையும் சுந்தரியை மீண்டும் திரும்பி வருமாறும் ராஜசேகர் செய்திதாளில் அறிவித்த போதிலும் சுந்தரி தனது தந்தையின் மரணசடங்கில் … Continue reading வாரிசு – கமலா சடகோபன்

பாலங்கள் – சிவசங்கரி

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் மூன்று கதைகளை பற்றியது. 1907-1931 சிவகாமுவின் ஏழாவது வயதில் பதினொன்று வயது சுப்புனியுடன் திருமணம் நடக்கிறது. பெரியவளாகும் வரை பெற்றோருடன் வசிக்கிறாள். பதின்மூன்று வயதில் பெரியவளானதும் கணவனுடன் வாழ முறைப்படி புகுந்த வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அடுத்த வருடமே முதல் குழந்தையை பிரசவிக்கிறாள். அந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட சம்பிரதாயங்களை சிவகாமுவின் பால்ய விவாகம், பெரியவளாகும் சடங்கு, பிரசவம் ஆகியவை மூலம் ஆசிரியரால் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காலத்தில் ஒரு பெண் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யும் வேலைகளை வாசிக்கும் போது பிரம்மிப்பு ஏற்படுகிறது. 1940-1964 மைதிலி, சுந்தரம்-ராஜத்தின் மூத்த பெண். அவளின் நடனம் பயிலும் ஆசை உட்பட பல ஆசைகள் சுந்தரத்தின் கட்டுக்கோப்பான தாயினால் தடைப்பட்ட போதிலும் ஒருவாறு பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் வக்கீல் வெங்கட் ராமனுடன் திருமணம் நடக்கிறது. வெங்கட் அவளுடன் அன்பாக இருக்கிறான். நாகரிகமாக வாழ விரும்பும் வெங்கட் சில … Continue reading பாலங்கள் – சிவசங்கரி

படிகள் – கமலா சடகோபன்

ஹரிணியின் தந்தை மகாதேவன் கோவிலில் மணி அடிக்கும் பரம்பரையை சேர்ந்தவர், தாய் சிவகாமி. அவர்கள் ஊரின் பஞ்சாயத்து காரியாலய குமாஸ்தாவும் நூலக நிர்வாகியுமான சந்தானம் அவளை கல்யாணம் செய்ய விரும்பிக்கேட்க ஹரிணியும் சம்மதித்து இருக்கும் சமயத்தில் சிவகாமி தான் ஐந்து மாதம் கர்ப்பம் என்பதை அறிந்து வெட்கி கவலை கொள்கிறார். ஹரிணி அவரை அக்கறையாக பார்த்துக்கொண்ட போதிலும் பிரசவத்தில் ஆண் குழந்தையை ஈன்றதும் சிவகாமி இறைவனடி சேர்வதை தடுக்க முடியவில்லை. மனைவி இறந்தது தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சியினாலும் கவலையினாலும் மகாதேவனும் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த நேரத்தில் மகாதேவனின் நண்பன் ஈஸ்வரன் மகாதேவன் இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தின் காரணமாக அங்கு வருகிறார். ஹரிணியை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தானத்தை கேட்கும் போது குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்த்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற அவனது நிபந்தனையை ஹரிணி ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஹரிணியையும் குழந்தையையும் தன்னுடைய ஊரான சென்னைக்கு … Continue reading படிகள் – கமலா சடகோபன்