மதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்

ஆரம்பிக்கும் போது நான் ஒரு பெண்ணை ஏமாற்றி கல்யாணம் பண்ணி கொடுமை படுத்தும் கதை என்று நினைத்துக் கொண்டே படித்தேன்.. காப்பாற்ற போனவன் கணவன் ஆவான் என்று எதிர் பார்க்கவில்லை..இனிமையான அதிர்ச்சிதான்! இனி வரும் காலங்களில் இப்படி திருமணங்கள் நிறைய எதிர் பார்க்கலாம்.காலத்தின் மாற்றம்! கார்த்தியின் அக்கா, சித்தி என யாருமே ஒத்துக்க கொள்ளவே இல்லியே??!! அழகா வாழை பழத்தில் ஊசி ஏத்துற மாதிரி எங்களின் மனதை அப்படியே கதையோடு ஒன்ற வச்சுட்டிங்க!! ஒரு உறுத்தும் விதமாவே முடிவு தெரியாதது உங்க திறமை… நித்தி என்ன ஒரு அருமையான தங்கை!! நம் குடும்பங்களில் இருக்கும் பாசம் …ஒட்டுதலை அழகா பிரதி பலிக்கும் பாத்திரம்!!! அண்ணி அண்ணி என்று சொல்லவும் முடியாமல் அவள் படும் பாடு! ஏஞ்சல்ஸ் பிறந்து அவள் கொஞ்சுவது அழகு!!! மதுரா கணேசனிடம் மாட்டிக் கொண்டு படும் பாடுகளும் கொடுமைகளும் அப்பப்பா…இந்த காலத்திலும் இப்படி ஆட்கள் இருக்காங்களே! இதே உலகில் … Continue reading மதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்

மதுரா – ஸ்ரீமதி கோபாலன்

  பெண்ணைப் பெற்ற அனைவருக்குமே வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை அமையவேண்டும் என்ற ஆசை இருக்கிறது இந்நாளில் …… அப்படி பார்க்கும் மாப்பிள்ளை தவரானவனாக இருந்துவிட்டால் அந்தப் பெண்ணின் கதி …..அதை மைய்யப்படுத்தித் தான் இந்தக் கதை ….. ஏமாந்துவிட்டோம் என்று புரிந்ததும் கலங்காமல் பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்ளும் மதுரா என்ற பெண்ணை …..வயிற்றுப் பிள்ளையாடு வெளிநாட்டில் அநாதரவாக நின்றாலும் ….அவளின் துணிவை அவளின் உணர்வுகளை அவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் ரோஸி …. அவளின் நிலை அறிந்தும் அவளை நேசித்து ஏற்க காத்திருக்கும் கார்த்திக் ……அவனை ஏற்க முடியாமல் அவளின் மனதின் போராட்டம் …..என்று முழுக் கதையும் இப்படி வாழ்கையில் அடிபடும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் …..என்னதான் காயங்கள் ஆறினாலும் அதன் வடுக்கள் மறையாதே ……இது தான் யதார்த்தம் என்று சொல்லி ……கடைசியில் கதையை சுபமாக முடித்தற்கு பாராட்டுக்கள் ரோஸி ….. அழகான இலங்கைத் தமிழில் நகர்கிறது கதை … Continue reading மதுரா – ஸ்ரீமதி கோபாலன்

மதுரா – வெரோனிகா

திருமணம் பந்தம் உறவுகளில் முதன்மையானது. அதுவும் இங்கு ஏமாற்றப்படுகிறது . உறவுகள் அற்று ஊர் அறியா மொழி தெரியாத சூழ்நிலையிலும் நம்ம மதுரா பாரதி கண்ட பெண்ணாய் நிற்பது பெருமை………. கார்த்தி கள் உலகில் அரிது என்றால் நித்தி கள் அரிதிலும் அரிது எவரும் தன்னை சகோதரருக்கு ready made familyஐaccept பண்ணமாட்டார்கள்………. ஆனாலும் இந்த கதையை நான் சொந்த மண்ணின் நிஜங்களுடன் பார்க்கும் போது இங்கு மதுராக்கள் பல பல. அதிலும் கவலை என்னவென்றால் தம் சொந்த இடத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் .ஆனாலும் தலை நிமிர்ந்து வாழ்க்கை வாழ்வது இல்லை . உங்கள் எழுத்து இவர்களை அடைய வேண்டும். மிகவும் உயிரோட்டமான கருத்து கதைக்கு சிறப்பு. …..உணர்வுகளை மிக இலகுவாக தட்டி எழுப்பும் நிகழ்வுகள் கதைக்கு மெருகு.. கதாபாத்திரங்களாக மாறச் செய்து திரைப்படம் பார்த்த திருப்தி கதையின் ப்ளஸ்…… கிளைமாஸ் அருமை நித்தி தான் மிஸ்ஸிங். ….மொத்தத்தில் சுகந்தம்👍👍👍👍👌👌👌👌 Continue reading மதுரா – வெரோனிகா

மதுரா – உஷாந்தி கௌதமன்

  இப்போது நேரம் இரண்டு மணி எட்டு நிமிடம். தேவதைகள் உலாவரும் இந்த நேரத்துக்கும் இருந்து comment எழுதுவது அடிக்கடி நடப்பதில்லை 😀 சுவர்ப்பக்கமாக உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேனாக்கும்! ஹி ஹி ரோசி அக்கா.. ஒரு மூண்டு எபி தொடர்ந்து படித்துவிட்டு அப்படியே பிசியாய்ட்டேன். இன்றைக்கு தான் முழுக்க படித்து முடித்தேன், என்ன சொல்ல லவ் யூ மட்டும் தான்.. சீரியல் போல உணர்ச்சிகர டிராமாக்கள், விகார மனம் கொண்ட கதாப்பாத்திரங்கள் இந்த மாதிரி கதைகளுக்கிடையில் முழுக்க முழுக்க மெல்லிய உணர்வுகளின் நூலிழையில் வெகு சாதாரணமான சம்பவங்கள் மனிதர்களோடு பயணித்திருந்த இந்த மதுரா எனக்கு ரொம்பவும் பிடித்தது. ஏஞ்சல்ஸ் ஏஞ்சல்ஸ் என்று குழந்தைகளை சொல்லிட்டிருந்தாங்க. ஆனா உண்மையில் ஏஞ்சல் கார்த்திகேயன் தான். மதுராவுக்கான வரம்.. அவளை கேர் பண்ண ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் லவ்வுல விழுந்து அவளுக்காக சண்டை பிடிச்சு, கடைசியில் குழந்தைகளுக்கு அப்பாவாவே மாறிப்போய் அவள் விட்டுட்டு போயும் அந்த நினைவில் … Continue reading மதுரா – உஷாந்தி கௌதமன்

மதுரா- நிதனி பிரபு

  கார்த்திகேயனும் நித்யாவும் பெற்றவர்களை சமீபத்தில் இழந்த அன்பான சகோதரர்கள். சிற்றன்னையின் ஏவளின் பெயரில், ஒரு பெண்ணை பார்க்கச் செல்கிறார்கள். அவள் மதுரா! இந்தக் கதையின் நாயகி. எனக்கு என்னவோ கதையின் நாயகியாக மட்டுமே அவளை பார்க்க இயலவில்லை. பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்டு, முன்பின் அறிமுகம் அற்று, ஒருநாள் இலங்கை வரும் அந்த ஆண்மகனை முழுமையாக நம்பி கழுத்தை நீட்டும் பல பெண்களின் பிரதிநிதியாகவே அவள் தெரிந்தாள். கடவுளின் அருளால் பலரின் வாழ்க்கை வளமாக அமைந்தாலும், இந்த மதுராவை போன்றே வெளிநாடுகளில் பாதிக்கப்படும் பெண்களும் சற்றே அதிகளவில் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை! மதுரா, துணிந்து கட்டியவனை சட்ட ரீதியாக விலத்தினாள். அப்படி எத்தனை பெண்கள் துணிகிறார்கள் என்றால், அது கேள்விக்குறி தான். அதன் பிறகான வாழ்க்கை ஒன்று இருக்கு, அதற்கிடையில் அவன் மூலம் உருவாகிவிட்ட வாரிசுகளின் நிலை, ஏன்.. ஊரில் மகளை வெளிநாட்டில் கட்டிக் கொடுத்திருக்கிறோம், அவள் நன்றாக வாழ்கிறாள் என்று … Continue reading மதுரா- நிதனி பிரபு