நெஞ்சினில் நேச ராகமாய்! தேவி பிரபாவின் பார்வையில்

முதலில் காலங்கடந்த கருத்திடலுக்கான எனது மன்னிப்பை வேண்டி கொள்கிறேன். நெஞ்சினில் நேச ராகமாய் கதையை மறுபடி வாசிக்கத் தந்தமைக்கு ரோசிக்காவிற்கு நன்றிகள் பல! ஒவ்வொரு பதிவாக வாசித்து கருத்திட்ட காலம் இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாக நிற்கிறதுக்கா. குடும்ப உறவுகளை முதன்மைப்படுத்தி கதைகளை புனையும் ரோசிக்கா இந்த படைப்பில் கணவன்- மனைவி உறவினை மையப்படுத்தி கதையை அமைத்திருக்கிறார். பலமும்,பலவீனமும் கொண்ட மனிதனின் பலத்தை மட்டுமே பிரதானப்படுத்தாமல் பலவீன குணங்கொண்ட இருவரை பிரதானப் பாத்திரங்களாக்கி கதையை அமைத்தமைக்கு பாராட்டுகள் அக்கா. ஹேப்பி எண்டிங் ஸ்டோரியில் பலவீனமான,எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட இருவரை பிரதானமாக்கி கதையை புனைவது அபூர்வமே.பிரதான கதாபாத்திரங்களின் வாழ்வியலை ஒப்புமைப் படுத்தி மனதில் நிறுத்தும்படி கதையை அமைத்திருக்கிறார் ரோசி அக்கா. இரு ஜோடிகளை மையப்படுத்தி கதையை கொண்டு செல்லும் ரோசிக்கா,மகிழ்- உதய் ஜோடிக்கு பிரதான இடத்தை தந்து ஆனந்த்- மங்கை ஜோடியை பின்னுக்கு தள்ளியிருப்பதாக வாசிப்பவர் கருத்திலமையும் வண்ணம் அமைத்திருப்பார்.ஆனால் பிரதான இடம் ஆனந்த்- … Continue reading நெஞ்சினில் நேச ராகமாய்! தேவி பிரபாவின் பார்வையில்

நெஞ்சினில் நேச ராகமாய்!- தேனு ராஜ்

காதல் — இரு பெண்களுக்கும், ஒரு குடும்பத்திற்கும் ஏற்படுத்தும் விளைவே கதை. அழகான காதல் யாரையும் பார்க்காது, சற்று சுயநலத்தோடு தான் இருக்கும். ஆனால் அது படுத்தும் பாடுகளை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும், அது தரும் வலி சுகமா சோகமா என்று…! குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து செல்கிறது கதை…!  இலங்கை பளையில் உள்ள பெரும் வசதி படைத்த வீட்டின் செல்லப்பெண் மங்கை, அழகு, படிப்பு, அந்தஸ்து எல்லாம் நிறைந்து, அம்மா சரசு, அண்ணன் ராசன், அண்ணி கோகிலாவுடன் பாசமான கூட்டில் வாழ்பவள். அவர்களின் தோப்பில் டிரைவராக வேலை செய்யும் ஆனந்த், படிப்பறிவில்லாதவன், வசதியும் இல்லை… நோயாளி தந்தை, பேராசை பிடித்த தாய், மூன்று தங்கைகள் என வாழ்பவன். மங்கை ஆனந்திடம் காதலில் விழ…. அவளின் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணமும் நிச்சயிக்க போகும் நேரத்தில், வீட்டைவிட்டு வந்து ஆனந்தை நம்பி தன் வாழ்க்கையை … Continue reading நெஞ்சினில் நேச ராகமாய்!- தேனு ராஜ்

நெஞ்சினில் நேச ராகமாய்!- வேதா கௌரி

  ஒரு சாதாரண, நாம் அக்கம்பக்கத்தில் கேட்க ,பார்க்க கூடிய கதைகரு. ஆனால் தந்தவிதம் மிகவும் அசாதாரணம் நெஞ்சினில் நேச ராகமாய் என்னும் கதை காதல் கடலில் முழ்கி அருமை பெருமையாய் வளர்த்த அன்னை ,தன் தமையன் எல்லோருடைய நம்பிக்கையை சிதைத்து சேர்ந்த ஆனந்த் &மங்கை சேர்ந்த வேகத்தில் வருட கணக்கில் வெறுப்போடு பிரிந்து பட்ட துன்பம்  அவசரத்தில் முடிவு எடுத்து ஆகாசத்தில் உட்கார்ந்து அழு என்று சொல்லும் பழமொழிக்கு ஏற்ப நடப்பது என பல நிகழ்வுகள் ….. காதல் மணமோ ,பெற்றோர் பார்த்து வைத்த மணமோ இதில் எது நடந்தாலும் அவசர முடிவால் ஏற்படும் பிரிவால் அவர்களின் குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டம் அவர்கள் படும் வேதனை எப்போதும் மாறாது என்பதை மகிழின் உணர்வுகள் முலம் அருமையாக சொல்லி இருக்கிறார் ‘’ உதய் பற்றி சொல்லியே ஆக வேண்டும்,,,,அழகான மகனாக ,கணவனாக அவன் வெளிபடுத்தும் நேசம் குறும்புகள் எல்லாமே அருமை … Continue reading நெஞ்சினில் நேச ராகமாய்!- வேதா கௌரி