Category Archives: உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

ரோசி கஜனின் உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே  – யாழ் சத்யாவின் பார்வையில்

 

பூஜா – சமிந்த – ரஞ்சித்

 

இவர்களின் ஒரு முக்கோணக் காதல் கதை, அழகாக இலங்கைத் தமிழில் தந்திருக்கிறார் ரோசி அக்கா.

 

பூஜா! கலாச்சாரமான யாழ்ப்பாணத்து குடும்பத்திலிருந்து வேலை நிமித்தம் கொழும்பு வரும் கலகலப்பான இளம் யுவதி. தனது குறும்புப் பேச்சிலும் பழுகுவதற்கு இனிமையான சுபாவத்திலும் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் தனது நண்பிகள் வனிதா, தீப்தியுடன் சேர்ந்து அவள் அடிக்கும் லூட்டிகளால் எங்களையும் சிரிக்க வைத்து மகிழ்விக்கிறாள்.

 

அதிலும் சிங்களவனான நாயகன் சமந்தவிடம், அவன் பேசும் போதெல்லாம் அவனுக்கு முன்னால் தமிழில் அவனைப் பற்றியே அடிக்கும் கமெண்ட்டில் எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறாள்.

 

சமிந்த! காதலுக்கு இனம், மதம், மொழி எதற்கு என்று பார்வையாலேயே தன் உணர்வுகளைப் புரிய வைக்கும் அன்பன். அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகி நிற்கும் போது அவன் மேல் மரியாதை தோன்றி அவனும் பூஜாவும் சேர்ந்து வாழ மாட்டார்களா? என்று எங்களையும் ஏங்க வைக்கிறான்.  

 

ரஞ்சித்! பூஜாவின் பக்கத்து வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டியோடு வார இறுதி நாளைக் கழிக்க வரும் இவன் ஒரு நாள் தவறுதலாக பூஜாவோடு மோதுண்டதில், அவளைக் கண்ட நொடியில் இருந்து காதலால் தவிக்கிறான். அவன் தவிப்பை அவனோடு சேர்த்து எங்களையும் உணர வைத்து பூஜா இவனோடு சேர்ந்து வாழ்ந்தால் நல்லமே என்று எண்ண வைக்கிறான்.

 

ரஞ்சித்தின் தந்தை ஸ்ரீசேனாவுக்கும் மனைவிக்குமான அன்னியோன்யம், ரஞ்சித்துக்கும் தங்கைக்கும் இடையே இருக்கும் புரிதலான பாசப் பிணைப்பு, பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே இருக்கும் நட்பு என்று ரஞ்சித்தின் குடும்பம் ஒரு கவிதை.

 

தன் முரட்டு பிடிவாதங்களில் தன் முடிவே இறுதியானது என வாழும் பூஜாவின் தாத்தா குமாரசாமி, அவரது சொல் தட்டாத மகன், மருமகள். இவர்கள் குடும்பம் ஒரு சாதாரண பாரம்பரியமிக்க யாழ்ப்பாண குடும்பம்.

 

பூஜா யாரோடு இணைய வேண்டும் என்று படிக்கும் போது மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடாத்த வைத்து, இறுதியில் சந்தோசமாக எங்களை அந்த முடிவை ஏற்க வைத்து சுபம் போட்டிருப்பதில் இந்தக் கதையும் எனது மிகப் பிடித்தமான கதைகளின் பட்டியலில் இணைந்து விட்டது.

 

கதையின் கடைசிவரை யார் யாரோடு இணைவார்கள்? அவர்கள் குடும்பங்களிலிருந்த சிக்கல்கள் எவ்வாறு நீங்கும்? அவர்கள் காதலுக்கு வந்த தடை எவ்வாறு அகலும்? என்று இடியப்ப சிக்கலாய் எழுந்த சந்தேகங்களை இலகுவான கதையோட்டத்தில் ஒவ்வொரு சிக்கையும் எளிமையாய் பிரித்தது அருமை.

 

யார் நெஞ்சம் யாரில் தடுமாறியது? வெற்றி பெற்ற நெஞ்சங்கள் யாவர்? என்று அறிய கதையைப் படியுங்கள் மக்கா!

 

மேன்மேலும் இது போன்ற பல கதைகள் படைத்து எங்களை மகிழ்விக்க வேண்டி வாழ்த்துகிறேன் ரோசி அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

Advertisements

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – தேனு ராஜ்

  

பூஜா — வீட்டில் இருப்பவர்களுக்கு அமைதியானவள்…. அலுவலகத்தில்  குறும்பு பெண்… கண்டிப்பான தாத்தா, பாசமான பெற்றோர், அன்பான தங்கை வீணா அனைவரையும் விட்டு, கொழும்புவில் வேலைக்கு வந்து, தன் பெரியன்னையுடன் தங்கி இருக்கும் அழகு புயல்..


ரஞ்சித் — இடிமாடு… இதுவும் பூஜா வைத்த பெயர் தான். எதிர்பாராமல் இரு இடத்தில் அவளின் மேல் மோத… பார்த்த முதல் பார்வையிலேயே அவனின் மனக்கதவை திறந்து நுழைந்தவள். காதலித்து தான் திருமணம் செய்வேன் என்று பேசி வீட்டாரின் சம்மதத்துடன் காத்திருப்பவன்.

சமிந்த — பூஜா வேலை பார்க்கும் அலுவலகத்தில் அசிஸ்டன்ட் கமிஷனர் …. பெருச்சாளி, கல்லூலி மங்கன், கொம்பேறி மூக்கன், சிடுமூஞ்சி என இன்னும் பல பட்டப்பெயர்களால் பூஜாவால் அழைக்கப்படும் மாமனிதன்.

வேலை சம்பந்தமாக பீல்டுக்கு போக முடியாமல் பூஜாவும், அதற்கு வந்தே ஆக வேண்டும் என்று சமிந்தவும்  முறைத்துக்கொண்டு இருக்க…. அவனுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து பூஜாவும், வனியும் பேச…. ஒரு கட்டத்தில் அவன் பூஜாவிடம் தன் காதலை சொல்ல… அவளுக்கும் அவன் மேல் இருந்த நேசத்தில் வாயால் சம்மதம் சொல்லாவிட்டாலும் கூட அவளின் நேசத்தை அவனுக்கு உணர்த்த ஆனால் தன் வீட்டாருக்காக காதல் பிறந்த அதே நாளில் மரித்தும் போகிறது. 

ரஞ்சித்தின் அம்மா ரேணு முப்பது வருடங்களுக்கு முன் செய்த காதல் திருமணத்தால்  வீட்டை விட்டு பிரிந்து மனம் வருந்த… அவரின் வீட்டு மனிதர்களை தேடி கண்டுப்பிடிக்க ரஞ்சித் உறுதி கொள்ள… 

ரஞ்சித் & சமிந்த யார்….? இருவருக்கும் உள்ள தொடர்பு என்ன…??

பூஜா தன் காதலை மறைக்க என்ன காரணம்…??

பூஜா யாருடன் இணைவாள்….??


ரஞ்சித் தன் அம்மாவின் உறவுகளை தேடி கண்டுப்பிடிப்பானா…??

ரஞ்சித், சமிந்த & பூஜா மூவருக்கும் உள்ள உறவு என்ன…??

அழகான ஒரு காதல் கதையை குடும்ப பின்னணியில் … சில பல திருப்பங்களுடன் ரொம்ப இயல்பா… அழகா சொல்லி இருக்காங்க ரோசி அக்கா… கதை நல்லா இருக்கு…. படிக்காதவர்கள் படிக்கலாம்..!

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – பொன்

  பூஜா மிகவும் கட்டுப்பாடுடன் வளர்க்க படும் குடும்பத்தைச் சேர்ந்தவள் …..யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பம் ,தாத்தா குமாராசாமி பழைமையில் ஈடுபாடு ,வெளியே போகவும் ,பழகவும் அதிக கட்டுப்பாடு ……..ஆனால் கொழும்பில் வேலைக்கு மனம் இல்லாமல் பூஜா விருப்பத்திற்கு அனுப்புக்கின்றனர் பெரியம்மா தேவி வீட்டில் இருந்து செல்ல.

அங்கே மேலதிகாரியாக ஒரு மில்டரி ஆபீசர் வருவதாக பேச்சு …….எல்லோரும் பயந்து நடுங்குறாங்க ………..வந்த ஸ்ட்ரிக்ட் இங்கே பணால் பூஜாட்ட ………இவளும் அவனுக்கு தமிழ் தெரியாது என்று நல்லா வைதுட்டே இருப்பாள் ………….அது cute 

பெரியம்மாவின் வீட்டின் அருகில் உள்ள ரஞ்சன் வேற காதல் பாட்டு பாட ………..தன் குடும்ப நிலை எண்ணி விலகியே இருக்கும் பூஜா.

ரஞ்சனின் அழகு தங்கை தர்மியும் அண்ணன் காதலை அறிந்து அண்ணனை கலாய்க்கும் ………குட்டி தேவதை 

ரஞ்சனின் அம்மா ரேணு காதலித்து இனம் மாறி மணந்ததால் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு ………தினம் கண்ணீர் விடும் அன்னை.அன்னை வருத்தம் கண்டு ,அவர்கள் உறவுகளின் மேல் கோவத்தைக் காட்டும் பிள்ளைகள் …….அழகிய குடும்பம்.

சமிந்த தன் பதவி அதிகாரத்தில் field work கூட்டி சென்றும்,அவளையும் சீண்டியும் காதலில் விழ வைக்கிறான்.தன் காதலை ஒத்துக்கொள்ளும் பூஜா ,கல்யாணம் சாத்தியமில்லை என்று சொல்லி பிரிய ………….வரும் வழியில் ரஞ்சித் அவனும் காதல் சொல்ல ………யாழ் வந்து விடுகிறாள் ………

அமைதியாக இருக்கும் மகளின் கலகலப்பு திரும்ப, வயதும் ஆவதால் மாப்பிள்ளை பார்க்கின்றனர். ………எல்லா பொருத்தம் விசாரணை முடித்து ,மாப்பிள்ளை பெண் பார்க்க வருவதை சொல்ல ……..மணமே செய்ய மாட்டேன்னு சொல்கிறாள் ……….

யாருடன் அவள் கல்யாணம் நடந்தது ……….
வீட்டில் பார்த்த பையனா ………..

மேலதிகாரியா ……….?

ரஞ்சித் தா………..? என அறிய மிகவும் எளிய நடையுடன் சுவாரசியமாக அமைந்த ரோசி கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – ராதா கிருஷ்

 

காதல் ஒரு அருமையான அழகான உணர்வு,உன்னை கொடு என்னை தருவேன் என்பதல்ல காதல்,நீ எனக்கு சகலமும் என்ற சரணகதியே காதல், எப்படி சர்க்கரை நோய் வந்தால் உய்ர் ரத்த அழுத்தமும்,கொலஸ்டராலும் கூட வருமோ அதே போல் காதல் என்ற நோய வந்து விட்டால் அதனுடன் உரிமையும் உறவும் போட்டி போட்டுக் கொண்டு கூடவே குதித்து விடும்,காதலை உணரும் வரை தான் அந்த காதல் கொண்ட எதிர்பாலினத்தின் மேல் சிந்தனை இருக்கும், அந்த உண்ர்வை உணர்ந்த பின் எதிர் பாலினத்தின் &தம்முடைய வீட்டின் மீதும் உள்ள உறவும்,சுற்ற்மும்,நட்பும் கொண்டுள்ள உரிமையை எவ்வாறு உறவின் பிணைப்போடு அவர்களிடம் இருந்து தாங்கள் கை கொள்வது என்ற போராட்டம் தொடங்கி விடும்.

சிலர் தாங்கள் உணர்ந்த காதலை உறவுக்கும் உரிமைக்கும் எடுத்துசொல்ல தெரியாமல் தங்களுக்குள் உறவும் உரிமையும் முழுவதுமாய எடுத்துக்கொள்வதற்காக இது நாள் தங்கள் பிறந்தது முதல் கொண்ட உறவை பாதிலேயே அறுத்து செல்கின்றனர்.ஆனால் வெகு சிலர் தான் பிறந்தது முதல் கொண்ட உறவிற்கு தன்னுடைய காதல் எனற உணர்வினை உரிமையாய் புரிய வைத்து தன்மேல் காதல்கொண்ட இணையை உறவின் துணையோடு உறவாகவும் உரிமையாகவும் கைப்பற்றுகின்றனர்

நான் இப்பொழுது சொல்ல போவதும் உறவும் உரிமையும் இரு காதல் ஜோடிகளின் வாழ்வில் எவ்வாறு விளையாடியது என்று பார்ப்போமா?

ஒரு ஆண் ஒரு பெண்னை பார்த்து பழகியதும் அவனுக்கு தோன்றுகிறது இவ்வாறு 

அல்குபட ருழந்த அரிமதர் மழைக்கண் 

பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல் 

திருமணி புரையு மேனி மடவோள் 

யார்மகள் கொல்லிவள் தந்தை வாழியர் 

துயரம் உறீஇயினள் எம்மே

(அழகிய இளம் மலர் போல் உடல் உள்ள பெண்ணே நீ யாருடையா மகள் உன் தந்தை வாழி ,உன்னை ஈன்ற தாயும் வாழி)

காதலிக்க கூடாது என்று நினைக்கும் அந்த பெண்ணும் அந்த ஆடவனின் தூயமையான காதலின் முன் தோற்று போய் காதலிக்கிறாள் அந்த ஆண்மகனை தன மனதிற்குள்ளாகவே சொல்கிறாள்  

என் அறிவும் உள்ளமு மவர்வயிற் சென்றென 

வறிதால் இகுளையென் யாக்கை யினியவர் 

வரினும் நோய்மருந் தல்லர் வாராது 

அவண ராகுக காதலர் 

(என் அறிவும் உள்ளமும் அவரிடத்து சென்று சேர்ந்துவிட்டது,என் உடல் தான் இங்கு உள்ளது இனி அவர் வந்தாலும் அவர் என் காதல் என்னும் நோய்க்கு உரிய மருந்தாகியா காதலரே ஆவர் )

ஆனால் வெளியே எனக்கு உன்னை நான் காணும் வரை உள்ள உறவும் அது என் மீது கொண்டுள்ள உரிமையுதான் முக்கியம் என்கிறாள் காரணம் அவர்கள் குடும்பத்தில் எற்கனவே நிகழ்ந்த காதல் மணம் தான் அதற்கு காரணம் அந்த பெண்ணின் அத்தை காதல் கொண்டு அதற்காக இவர்களின் குடும்பத்திற்கு உள்ள உறவினையும் உரிமையையும் விட்டு விட்டு காதல் மணம் புரிந்து செனறு விட்டார்,அதனால் இவளின் பாட்டி இவ்வாறு புலம்பிக்கொண்டு இருக்கிறார் 

ஒருமகள் உடையேன் மன்னே; அவளுஞ் 

செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு 

பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள் 

இனியே, தாங்குநின் அவலம்என்றிர் அதுமற்று 

யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே 

உள்ளின் உள்ளம் வேமே உண்கண் 

மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன் 

அணியியற் குறுமகள் ஆடிய 

மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே

(ஒரே மகளை தானே பெற்றென்,அவளை காளை ஒருவன் காதற்கொண்டு அவனுடன் சென்றுவிட்டாளே,இந்த அவலத்தை எவ்வாறு தாங்குவேன் என்று வீட்டில் உள்ளொர் உரைக்குமாறு செய்துவிட்டு சென்றுவிட்டாளே இந்த இடத்தில் தானே அவள் நடைபயின்றாள்,இந்த தின்னையில் தானே அவள் கழல்,நொச்சி போனற விளையாட்டுகளை விளையாடினாள்)

போல் தன் தாயும்,வயோதிக காலத்தில் உள்ள பாட்டியும் மீண்டும் துயர்படக்கூடாது என்று எண்ணி தன்னுடிய நிலையை சொல்லி விலகி செல்ல 

அதனை கண்ட அந்த காதலானும் அவளின் நிலை உணர்ந்து விலகுகிறான் இது எவ்வாறு இருக்கிறது என்றால் 

கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் 

நீவிளை யாடுக சிறிதே யானே 

மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை 

மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி 

அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் 

நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே

(பெண்ணே இந்த காட்டில் உலவி திரியும் தும்பிகளை பிடித்து நீ விளையாடுக, மதங்கொண்ட யானை போல் பருத்து விரிந்து அகன்று நின்று கொண்டு இருக்கும் அந்த வேங்கை மரத்தின் பின்னே நான் ஒளிந்து இருக்கிறேன்,கள்வர்கள்,எதிரிகள் வந்தால் அவர்களோடு நேர்ருக்கு நேர் போர்யிடுவேன்,ஆனால் உன் வீட்டு ஆள்கள் வந்தால் போரிடமல் உனக்காக அடங்கி நிற்பேன்)

அவளின் உற்வுகளுக்கு அவள் மதிப்பளிப்பது இவனும் மதிப்பளித்து விலகுகிறான் இந்த காதலியின் அத்தை தான் கொண்ட காதல் வாழ்க்கையை நன்றாக வாழ்கிறாள் 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே


அதை அறிந்த காதலியின் பாட்டி உடல் நலம் குன்ற,அத்தை இவள் குடும்பத்துடன் உற்வு கொள்ள வர அங்கே அத்தை மகனுடன் திருமணம் நடகிறது ஆம் இவள் காதலித்த வேற்று இனத்துக்காரன் இவளின் அத்தை மகனாக மாறி இவளுடன் திருமணத்தை முடித்து இவள் வீட்டு ஆள்களோடு உறவுகரனகவும் தன் காதலிக்கு உரிமைகாரனாகவும் மாறுகிறான் இது எவ்வாறு?… சரி காதலான் காதலி என்கிறாய் இவர்களுக்கு பெயர் கிடையாதா?… கதையின் பெயர் என்ன?… இந்த கதையை எழுதியது யார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது அது தானே சொல்கிறேன் இருங்கள் 

நம்ம ரோசி என்கிற ரோசிக்கா எழுதிய உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதேஎன்ற கதை கதையின் நாயகி பூஜா என்கிற தமிழ்ச்சி கதைநாயகன் சமிந்த என்ற சிங்களவன் இவன் பின்பு ரஞ்சித் என்று மாறுகிறான் எவ்வாறு பெயர் மற்றும் இனம் மாறுகிறான் என்பதை நீங்கள் கதை படியுங்கள் அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் படித்து அறிந்தை நாங்கள் எவ்வாறு படித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டோமொ அதுபோல் நீங்களும் வந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! -ஹமீதா

கொழும்புவில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி…இலங்கை அரசு அலுவலகத்தில் பணி புரியும் பூஜா..சரியான துடுக்கு. இவளின் மேலதிகாரி சமிந்த. அவனுக்கு தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில்…..தோழிகளுடன் சேர்ந்து அவனை முகத்துக்கு எதிரே கலாய்க்கும் அவளின் குறும்பு அசத்தல் என்றால் ஒன்றும் புரியாதவன் போல….மாதக்கணக்கில் அதை உள்ளூர ரசிக்கும் சமிந்த….கொள்ளை அழகு போங்க….

அவனுக்கு அவள் மீதான ஈர்ப்பு…அக்கறை…அதற்கு அவளின் கோபமான பிரதிபலிப்பு…தோழிகளின் சீண்டல் என்று காட்சி அமைப்புகள் இயல்பு….அவர்களின் காதலும் வெகு இயல்பு. காதலை வாய் வார்த்தையால் அல்லாமல் செயலால் மட்டும் உணர்த்தி ….குடும்பத்தில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு…..அவனை பிரிந்து….பணி மாறுதல் வாங்கிக் கொண்டு செல்லும் அவளின் திடம்…நம்மை வசீகரிக்கிறது.

பூஜாவின் குடும்பம் தாய் தந்தை…தாத்தா பாட்டி…தங்கை என்று…அழகான குருவிக் கூடு. கண்டிப்பு நிறைந்திருந்தாலும்..அவர்களிடையே விரவி நிற்கும் அன்பு….அவளை தடம் மாறச் செய்யாமல் திடமான முடிவினை எடுக்க வைக்கிறது.

காதலை விஞ்சி நிற்கும் அவளின் குடும்ப பாசம்….ஏற்கனவே ஒரு காதலின் விளைவால் மாறா ரணத்துடன் வாழ்ந்து வரும் அவளின் குடும்பத்துக்கு….மகிழ்ச்சி அளித்ததா????

வேற்று இனத்தவனை காதல் மனம் புரிந்த ரேணு…..அதன் காரணமாக தாய் வீட்டு பந்தத்தை இழந்து….கணவன் பிள்ளைகள் என்று வளமான வாழ்வு வாழ்ந்தாலும்…அது அவருக்கு நிறைவானதாக இல்லாத காரணத்தால் வேதனையில் உழல்கிறார். இவரின் மகன் ரஞ்சித்…ஹீரோயின் பூஜா வசிக்கும் அவளின் பெரியம்மாவின் வீட்டருகில் அவனுடைய தந்தை வழி தாத்தா பாட்டியுடன் வசிக்கிறான். தங்கை தர்மியுடனான ரஞ்சித்தின் புரிதல் அழகு.

ரஞ்சித்துக்கு பூஜா மீது காதல். இவனுக்கும் சமிந்தவுக்கும் என்ன சம்பந்தம்????

ரேணு அவருடைய தாய் வீட்டுடன் இணைந்தாரா????

என்ன தான் குடும்பத்தின் மீதான பற்று என்றாலும்…கொண்ட காதலுக்கு பூஜா நியாயம் செய்தாளா???? அவன் அவள் மீது கொண்ட காதலை அங்கீகரித்தாளா…

இதில் கடைசி கேள்விக்கு மட்டும் நானே பதில் சொல்லி விடுகிறேன்….

ஏகப்பட்ட மனப் போராட்டங்களுக்கு பிறகு….அவனை தவிர வேறொருவனுக்கு தன்னுடைய வாழ்வில் இடமளிக்க இயலாது என்பதை ஐயம் திரிபர உணர்ந்த பிறகு….சூழ நிற்கும் அவளின் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை மறந்து….அவனின் காதலை அவள் கௌரவிக்கிறாள்.

தீப்தி திருமணத்துக்கு போன இடத்தில்….அவளின் அண்ணன் அறிமுகம்…sight seeing….அரசு அலுவலத்தின் பணிகள்….இன்னும் எங்கே பஸ் ஏறி…எத்தனை ஸ்டாப்பிங் கழித்து இறங்குவார்கள் போன்ற விவரிப்புகளை தவிர்த்திருந்தால் பக்கங்கள் தன்னால் குறைந்திருக்கும் ரோசி….

இது வழக்கமான காதல் கதையாக இருக்கலாம்..ஆனால் சொன்ன விதம்….அருமை. உறவுகளின் அருமை….பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுக்க வேண்டிய முன்னுரிமை..மற்றும் மரியாதை…..

அப்படியான பிள்ளைகளின் மன மகிழ்ச்சிக்கு…நிறைவான வாழ்வுக்கு பெற்றோரும் தங்கள் பிடிவாதத்தை விட்டு கீழிறங்கி வந்து தங்களின் கடமையை முழுமனதுடன் செய்வார்கள் என்பது ரொம்ப அழகா சொல்லப் பட்டிருக்கு.

ரோஸியிடம் எனக்கு பிடித்த…அழகு தமிழ்..கதை நெடுகிலும் கொஞ்சி விளையாடுகிறது. காகிதத்தில் விழுந்த இருவரின் கண்ணீர் துளிகளும் ஒன்றோடு ஒன்று கலந்து சந்தோஷத்தில் குதியாட்டம் போட்ட இடத்தை வெகுவாக ரசித்தேன்.

பெற்றோரை எதிர்த்து மணம் புரியும் பெண்களின் வாழ்வில்..என்ன தான் மகிழ்ச்சி கூத்தாடினாலும்..நிறைவு என்பது கேள்விக்குறி தான். குற்ற உணர்ச்சி குடிகொண்ட மனதில் நிறைவான மகிழ்ச்சி என்பது சாத்தியமில்லை. நாம் மகிழ்ச்சியாக வாழ்வதை…நம் பெற்றோர் பார்த்து மகிழ்வது தான் நாம் அவர்களுக்கு தரக் கூடிய மிகப் பெரிய பரிசாக இருக்கும்.

ஒரு பெண்ணின் செயல் எவ்வாறு ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறை வரை பாதிக்கிறது என்பதையும்….பிள்ளைகளின் மகிழ்ச்சியான கௌரவமான வாழ்வு…பெற்றோரின் வாழ்வின் வெற்றியாக உணரப் படும் என்பதையும் ரேணு கதாபாத்திரம் சாட்டையால் அடித்தது போல உணர்த்துகிறது.

அழகான குடும்ப உறவுகளால் பின்னப்பட்ட காதல் கதை வழங்கிய ரோசிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – சுதா ரவி

காதல் என்ற உணர்விற்காக குடும்ப உறவுகளை தூக்கி எரியும் போது அதில் ஏற்படும் வலிகளையும் அதன் பின் அக்குடும்பத்தில் ஏற்படும் துயரங்களையும்……தன் குடும்பத்திற்காக காதலையே தியாகம் செய்யும் இருவரின் காதலையும் தனக்கே உரிய பாணியில் அழகானதொரு கதையாக கொடுத்து இருக்கிறார் ரோசி………….

பூஜா மகாலிங்கம் சுமதியின் மூத்த மகள். இவர்களின் இரெண்டாவது பெண் வீணா. குமாரசாமி விசாலம் இந்த குடும்பத்தின் மூத்த தலைமுறையினர். குமாரசாமிக்கு தன் பேத்திகள் என்றாள் உயிர். யாழில் வசிக்கும் இவர்கள் மிகவும் கண்டிப்பான தமிழ் குடும்பத்தினர்..

தன் பெரியம்மா வீட்டில் தங்கி வேலைக்கு போக கொழும்பு வருகிறாள் பூஜா. பூஜா மிகவும் துருதுருப்பானவள். அதுவே அவளுக்கு அவள் வேலை செய்யும்ஆபிசில் தீப்தி, வனி இரு தோழிகளை பெற்று தருகிறது….

ஆரம்ப நாட்களில் ஆபிசில் வேலையை ரசித்துக் கொண்டும் ஆட்டம் போட்டுக் கொண்டும் தமிழ் தெரியாத சிங்களவர்களை தமிழில் கலாய்த்துக் கொண்டும் நேரம் செல்கிறது பூஜாவிற்கு. சில நாட்களுக்கு பிறகு அவளின் மேலதிகாரியாக வருகிறான் சமிந்த என்கிற சிங்களவன். மிகவும் கண்டிப்பானவன் என்று பெயர் பெற்றவன்.

நாட்கள் செல்ல செல்ல சமிந்தவிற்கு பூஜாவின் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. முதலில் அவனின் காதலை மறுத்தாலும் பின்னர் தன்னை அறியாமலேயே அவன் தன் மனதிற்குள் நுழைந்து விட்டான் என்பதை புரிந்து கொண்டு அவனிடம் காதலை ஒத்துக் கொள்கிறாள். ஆனால் காதலை ஒத்துக் கொள்ளும் அந்த நிமிடமே நான் காதலுக்காக என் குடும்பத்தை பிரிய துணிய மாட்டேன் என்று கூறி பிரியவும் செய்து விடுகிறாள்….

இதன் நடுவே ரஞ்சித் என்ற ஒருவனும் அவளை காதலிக்கிறான்……பூஜாவின் குடும்பத்தில் அவள் அத்தை ரேணு சிங்களவன் ஒருவனை மணந்ததால் ஏற்பட்ட இழப்பின் காரணமாக தானும் அதே தவறை செய்ய கூடாது என்று தன் காதலியே தனக்கு பூட்டி வைத்துக் கொள்கிறாள்…..

பூஜாவும் சமிந்தவும் சேர்ந்தார்களா???? அவர்கள் குடும்பத்தில் சிங்களவனை ஏற்றுக் கொண்டார்களா???? ரஞ்சித் யார்???? யார் பூஜாவை மணந்து கொண்டது? ரேணுவை அவள் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டார்களா???? இந்த கேள்விகளுக்கு விட உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதேவில் கிடைக்கும்……….தெரிந்து கொள்ள…..படியுங்கள் மக்களே

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – சரளா

 

பிறர் மீது நாம் கற்களை வீசினால்……. காயங்களாக நம்மீது விழும்….
பிறர் மீது நாம் பூக்களை வீசினால்….. மாலையாக தோள்களில் விழும்….
என்பதை உணர்த்துவதே இக்கதை.

பூஜா…..  தாய், தந்தை, தாத்தா, பாட்டி, தங்கை…… என்ற அன்பான குடும்பத்தின் இளவரசி…. வேலையின் காரணமாக….. குடும்பத்தைப் பிரிந்து, தன் பெரியம்மா தேவியின் வீட்டில் தங்கி…. பணிபுரிகிறாள்…. மிகவும் கலகலப்பானவள்…. தன் குடும்பத்தினரிடம் மிகுந்த பாசம் கொண்டவள்…… 

சமிந்த….. பூஜாவின் மேலதிகாரி…… வேலையில் சரியாக நடந்து கொள்ள வேண்டும்…. சிறு தவறு என்றாலும் சகித்துக் கொள்ளாதவன்….. என்று பல பட்டங்களைத் தன் அலுவலகத்தினரிடமிருந்து…. பெற்றுக் கொண்டிருப்பவன்….. ஆனாலும், பூஜாவிடம் சிறிது தன்மையாகவே நடந்து கொள்வான்…..

பூஜாவிற்கு….. வனி, தீப்தி என்ற இரு நெருங்கிய தோழியர் உண்டு…. அவர்களுடன் இணைந்து சமிந்தவை….. 
அவனுக்குத் தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில் எப்போதும் கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருக்க…… நாட்களோடு வேலையும் இலகுவாகவே சென்றது…. இந்நிலையில், சமிந்தவும் பூஜாவும் ஒருவரையொருவர் காதலித்தாலும்…… தன் குடும்பத்தை மனதில் கொண்டு சமிந்தவிடமிருந்து விலகிச் செல்ல……. சமிந்தவோ, தன் மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டு அவளை நெருங்கி வந்தான்…..

இதற்கிடையில், ரஞ்சித் என்பவன் பூஜாவைப் பார்த்துவிட்டு……. அவளைக் காதலிக்கிறான்…… பூஜாவின் பெரியம்மா தேவியோடு நட்பு ஏற்படுத்திக் கொள்கிறான்….. தங்கை, தாய், தந்தை, பாட்டி, தாத்தா என்ற அழகான குடும்பம் அவனுடையது…..

ஒரு நிலைக்கு மேல் தன் காதலை மறைத்துக் கொள்ள முடியாத பூஜாவும்……. வெளிப்படுத்த தவித்துக் கொண்டிருக்கும் சமிந்தவும்…. தத்தம் காதலை வெளிப்படுத்தும் அதே நேரம்…… பூஜா, தன் வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும்….. அவர்களை உதறிவிட்டு, தன்னால் வர முடியாது எனவும் கூறி…. பிரிந்து, தன் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டு அங்கேயே தன் வேலையைத் தொடர்கிறாள்…… சமிந்தவும், அவளைக் குடும்பத்திலிருந்து பிரிக்க மாட்டேன் எனக் கூறி…. பிரிந்து விடுகிறான்…..

நாட்களும் செல்ல…. பூஜாவின் குடும்பத்தினர் அவளது காதலை அறிய….. பலவிதமான குழப்பங்கள்…… சண்டைகள்….. விவாதங்கள்….. கோபதாபங்கள்…. என்று நீண்ட பிரச்சனைகளின் முடிவில்…. அனைவரது வாழ்விலும் சந்தோஷம் மலர்கிறதுஎப்படி…..?வாசித்து அறியுங்கள்……

அன்பு என்ற மூன்றெழுத்து மந்திரத்தைக் கொண்டு….. உறவு நட்பு காதல் …… என்ற மூன்று தளங்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்……

இழப்புகௌரவம்…. துரோகம்…. காயம்…. கோபம்என்ற எதிர்மறை உணர்வுகளுக்கும்….. பாசம்…. அன்பு…. நம்பிக்கை….. காதல்…. என்ற நேர்மறை உணர்வுகளுக்கும்இடையே பெரியவர்களையும் சிறியவர்களையும் சிக்கித் தவிக்க வைப்பதோடு….. நம்மையும் சேர்த்து தவிக்க வைக்கிறார்…….

சிற்சில இடங்களில் இலங்கைத் தமிழில் எழுதி இருந்தாலும்…… அதனையும் மீறி நம்மைக் கதையோடு ஒன்ற செய்வது…… அவருடைய சீரான எழுத்து நடையும்…. உணர்வுப் பூர்வமான வார்த்தைப் பிரயோகங்களும் தான்…….

வைரத்தால் வைரத்தை அறுப்பது போல…… காதலால் காதலை வெறுத்து ஒதுக்குவதும்….. காதலால் காதலை விரும்பி ஏற்பதும்….. அழகாக கையாண்டிருப்பது அருமை

முந்தைய கதைகளுக்கும்…… இந்த கதைக்கும்…. நிறைய வித்தியாசம்…. முந்தையக் கதைகளில், இலங்கைத் தமிழால், கதையோடு ஒன்ற முடியாது ( எனக்கு)…. ஆனால், இந்தக் கதையில்….. கதையோடு நாம் பயணம் செய்வது நம்மால் தவிர்க்க முடியாது என்பது…… மிகப்பெரிய முன்னேற்றம்ஆசிரியருக்கு வாழ்த்துகள்….

கொஞ்சம் பக்கங்கள் குறைத்திருந்தால்….. இன்னும் நன்றாக இருந்திருக்கும்…. என்பது என்னுடைய அபிப்ராயம்